பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மோடி அரசை கண்டித்தும் மதுரை அவனியாபுரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..

கொரானா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அவனியாபுரம் தொகுதி தலைவர் ராமசாமி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் […]

போலி போலீசுக்கு திருப்பரங்குன்றம் போலீசார் காப்பு…

பெருங்குடி அருகே சார்பு – ஆய்வாளர் போல் நடித்து ரூபாய் 2500 பறிமுதல் செய்த வாலிபரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு எஸ்.ஐ. போல் உடையணிந்து பொது மக்களிடம் பணம் வசூல் செய்வதாக வந்த தகவலையடுத்து. திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் உத்திரவின் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர், இன்று (29/06/2020)  காலை தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கப்பலூர் பகுதியில் […]

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு-மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து பிற பொருட்களின் விலைகளும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரியும், இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பொது மக்களை நேரடியாக பாதிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு “சிறந்த மக்கள் சேவர்” விருது..

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி. ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப நவாஸ் கனி தொடர்ந்து உதவி வருகிறார். சர்வதேச அளவில் கொரானா காலத்தில் சிறந்த சேவை ஆற்றினார். இந்நிலையில், கோவிட் 19 ஸ்டார்ஸ் உலகளாவிய மனித நேய விருதாளர் பட்டியலை,  லண்டன் வேர்ல்டு ஹியுமனிட்டேரியன் டிரைவ்  என்ற சர்வதேச தொண்டு அமைப்பு  நேபாள் முன்னாள் பிரதமர் மாதவ் குமார்,  கொசோவோ நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஃபத்மீர் […]

இராமநாதபுரத்தில் மறைந்த செய்தியாளர் குடும்பத்திற்கு நிவாரணம்..

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் கணேசன், 45. பட்டதாரியான இவர் காட்சி ஊடகங்களில் கடந்த 13 ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றினார். ராஜ் , மதிமுகம் டிவி., யில் ஒளிப்பதிவாளராகவும், மூன் டிவி. செய்தியாளராகவும் பணியாற்றினார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதித்த இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூன் 21ஆம் தேதி மறைந்தார் . இவரது குடும்பத்திற்கு ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.27 ஆயிரம் நிவாரண நிதியை ராமநாதபுரம் செய்தியாளர்கள் […]

மதுரையில் லாட்ஜ் ஊழியர் மயங்கி விழுந்து சாவு…

மதுரை இளமனூர் முத்து தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவர் மதுரை தனியார் லாட்ஜ் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விஜயகுமார் நேற்று திடீர்நகர் பகுதியில் உள்ள கிளாஸ் கார தெருவில் நடந்து சென்றார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் உண்டாம். இதன் காரணமாக அவர் இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு […]

தற்கொலை முயற்சி செய்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

திருப்பரங்குன்றம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்கியிருந்த முதியவர் மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்தவர்சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்டேர் தங்கி உள்ளனர். இங்கு சேர்க்கப்பட்டிருந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கொரானா தனிமை படுத்துதல் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் தங்க வைக்கப்பட்ட மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்ற 63 வயது முதியவர் மன உளைச்சல் காரணமாக […]

ரோட்டில் செல்பவர்களை எல்லாம் இழுத்து, பிடித்து வந்து டெஸ்ட் செய்ய முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி…

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான நிதியை கருவூலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மதுரையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி. கொரோனா பாதிப்பு சம்பந்தமான மன நல ஆலோசனை மையம் துவக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கொரோனா தொற்றுடன் […]

மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்-தென்காசி மாவட்ட காங்கிரஸ் அறிவிப்பு…

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தலின் படி 29ம்தேதி நாளை மாவட்ட முழுமைக்கும் மத்திய மாநில அரசை கண்டித்தும், பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் கொடுரமான விலை ஏற்றத்தை கண்டித்தும், வட்டார நகர பகுதிகளில் கொரனா சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தென்காசி மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் கூடும் மக்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கையெழுத்து படிவங்களை […]

மன உளைச்சலில் கொரோனா நோயாளி.. மருத்துவமனையில் அடிப்படை வசதியில்லை என கூறி தற்கொலை முயற்சி..

மன உளைச்சல் காரணமாக கொரோனா நோயாளி முதலாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் காலில் எலும்பு முறிவு. அடிப்படை வசதிகள் இல்லை பல கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு செல்ல முடிவு. மதுரை மாவட்டம் பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய பட்டதால் அவரை வீட்டிலிருந்து மகன் மற்றும் மகள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் சாலையில் திரிந்த முதியவரை சமூக ஆர்வலர்கள் இணைந்து சுகாதார துறை மூலம் […]

வீ.கே.புதூரில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி பொது மக்கள் சாலை மறியல்;போலீஸ் குவிப்பு..

சுரண்டை அருகே போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி இரண்டாவது நாளாக பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் என்பவர் மகன் குமரேசன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து இவர் கடந்த மே 10 ம்தேதி வழக்கு விசாரணைக்கு வீ.கே.புதூர் காவல் நிலையம் வந்த போது எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் ஏட்டு குமார் ஆகியோர் தாக்கியதாகவும், […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணாலயத்திற்க்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி விலங்குகள் வேட்டை.. ஒருவர் கைது… இருவர் தப்பி ஓட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரணாலயத்திற்க்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசி மான் மற்றும் பன்றிகளை வேட்டையாடிய வாலிபர் கைது….தப்பியோடிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்கள் மற்றும் பன்றியை வேட்டையாடிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி ,மான், காட்டெருமை ,சாம்பல் நிற அணில்கள், உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியானது சாம்பல் […]

இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவில் மற்றும் தொழிற்சாலை அருகே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்..மக்களை திரட்டி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு..

இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவில் மற்றும் தொழிற்சாலை அருகே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மூடவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே கோவில் மற்றும் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வந்தது மக்களின் போராட்டத்தை அடுத்து இந்த கடை அகற்றப்பட்டது. மீண்டும் இன்று […]

தொற்று பாதித்த இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் அதன் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் சமூக தொற்று ஏற்படும் என அச்சம்..

இராஜபாளையத்தில் கொரோனா தொற்று பாதித்த இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் அதன் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் சமூக தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான காமராஜர் நகர், கவிமணி தேசிய விநாயகம் தெரு, சிதம்பரபுரம் தெரு, மலையடிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் கிராம பகுதிகளான  மேலவரகுணராம புரம், தளவாய்புரம் ,உள்ளிட்ட பகுதிகளில் நான்கு பேருக்கும் மொத்தம் […]

ராமேஸ்வரத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை ஆறு பேர் கைது.. 155 மது பாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் திருட்டுத்தனமாக மது பாட்டில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இராமநாதபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண்ணிற்கு (94899 19722) தொடர் புகார்கள் வந்தன. இதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தல் படி தனிப்படையினர் ராமேஸ்வரம் நகர் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் தனிப்படையினர் இன்று (28.6.2020) சோதனை நடத்தினர். இதில்  திட்டகுடியைச் சேர்ந்த நாகராஜ் – 58, கே. பர்வதம் பகுதியைச் சேர்ந்த  குமார் 29, தம்பியான் கொல்லையைச் சேர்ந்த […]

கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவரே காவல் நிலையத்தில் இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று (28/06/2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. SKV.சுஐபு, கீழை நியூஸ்

மதுரையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனோ.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊடகத்துறையினருக்கும் சோதனை…

மதுரையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  சில தினங்களுக்கு முன்பு மதுரை பிரபல தொலைக்காட்சி நிருபர்,  செய்தித்தாள் நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று (28/06/2020) மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தொலைகாட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் பொதுச் செயலாளர் காசிலிங்கம்,  தலைவர் ஜெகநாதன் பொருளாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் அண்ணாநகர் […]

கைவண்டியில் ஏற்றி கொண்டு வரப்பட்ட முதியவர்.. அலைகழித்த இ.எஸ்.ஐ மருத்துவமனை…

மதுரை பாலரங்கபுரத்தை சார்ந்த 75வயது மதிக்கத்தக்க முதியவர் கடுமையான காய்ச்சலுடன் பாலரங்கபுரம் இஎஸ்ஐ மருத்துவமனையை அனுகியுள்ளார், ஆனால் அங்குருந்த பணியாளர்களோ வந்தானவர் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல்  தத்தனேரி உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்கள். மேலும் ஊரடங்கு காரணத்தினால்  வாகனம் ஏதும் கிடைக்காத காரணத்தினால் ட்ரை சைக்கிளில் மதுரை தத்தநேரி உள்ள தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளனர், ஆனால் அங்கும் இங்கே பார்க்க முடியாது என கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என […]

தென்காசி மாவட்டத்தில் 13 தனிப்பிரிவு போலீசார் பணியிட மாற்றம்-எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா உத்தரவு..

தென்காசி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் தனிப்பிரிவு போலீசார் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவின் படி செங்கோட்டை காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ்காரர் திருமலை இலத்தூர் காவல் நிலையத்திற்கும், இலத்தூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆய்க்குடி காவல் நிலையத்திற்கும், சுரண்டை ஏட்டு ரவிக்குமார் குற்றாலம் காவல் நிலையத்திற்கும் , வாசுதேவநல்லூர் ஏட்டு வேலுச்சாமி கடையநல்லூர் காவல் நிலையத்திற்கும், புளியங்குடி போலீஸ்காரர் தட்சிணாமூர்த்தி […]

புதுமண தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

சுரண்டையை சேர்ந்த புதுமண தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையம் அருகில் வசித்து வருபவர் 30 வயது வாலிபர். இவருக்கும் பாண்டிச்சேரியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி பாண்டிச்சேரியில் வைத்து திருமணம் நடந்தது. தம்பதிகள் தங்கள் உறவினர்களுடன் சுரண்டைக்கு வந்து தங்கி தங்களுக்கு தேவையான பொருட்களை சுரண்டை மற்றும் தென்காசி பகுதி கடைகளில் தினமும் வாங்கி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!