ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிபதியை அவமதித்த காவல்துறையினரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்…..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் காவல்துறையை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த வாரம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறைச்சாலையில் இறந்த வணிகர்கள் ஜெயராஜ் ,பீனிக்ஸ் ஆகிய தந்தை-மகன் வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தலைமையிலான நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அவமதிக்கப்பட்ட தாக விசாரணைக்கு சென்ற நீதிபதி பாரதிதாசன் அறிக்கை சமர்பித்தார். நீதிபதியை […]

உடுமலை சங்கர் படுகொலை வழக்கை முறையாக நடத்தாத அதிமுக அரசை கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

உடுமலை சங்கர் படுகொலை வழக்கை முறையாக நடத்தாத அதிமுக அரசை கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. சாதி மாறி திருமணம் செய்த உடுமலை சங்கர் என்பவரை ஆணவப்படுகொலை செய்த வழக்கில் சங்கர் மணைவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கை முறையாக அதிமுக அரசு நடத்தவில்லை என பல்வேறு கட்சி தலைவர்கள் அதிமுக […]

கீழக்கரை ரோட்டரி சங்கம்சார்பில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் கரோணா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…..

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் கரோணா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பொருட்கள் ரோட்டரி சங்க தலைவர்  மூர் ஹசனுதீன் தலைமையிலும் சங்க பட்டயத்தலைவர் டாக்டர் அ.அலாவுதீன் முன்னிலையிலும் கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் பொருட்கள் கீழக்கரை தலைமை அரசு மருத்தவர் டாக்டர் ஜவாஹிர் ஹீசைன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலும் , முகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்திலும் மரம் நடும் விழா […]

இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான் குளம் சம்பவத்தை கொலைவழக்கில் பதிவு செய்ய கண்டன ஆர்பாட்டம்..

இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான் குளம் சம்பவத்தை கொலைவழக்கில் பதிவு செய்ய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர்  கண் இளங்கோவன்  தலைமையில் சாத்தான் குளம் இரட்டை கொலைவழக்கில் பதிவு செய்ய கண்டன ஆர்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல சமூக ஆர்வமுடையவர்களுடன் நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோரை இரட்டை கொலையை செய்த சாத்தான் குளம் கொடூர காவல்துறை கண்டித்து அனைத்து சனநாயக கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோரை இரட்டை கொலையை செய்த சாத்தான் குளம் கொடூர காவல்துறை கண்டித்து அனைத்து சனநாயக கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம்  எஸ்.முருகபூபதி, மாவட்ட செயலாளர்,   இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 1) ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலைக்கு காரணமான காவலர்களும் மீது கொலை வழக்கு பதிவு செய்து நிரந்தர பணி நீக்கம் செய்து சிறை படுத்த வேண்டும். 2) ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு நிவாரணம் […]

சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 1கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 1கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக அரசுக்கு ஸ்டாலின் கொடுக்கும் அறிக்கைகள் அனைத்துமே அக்கப்போறானதாகத்தான் உள்ளது என்று அமைச்சர் குற்றச்சாட்டு.. கொரானா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்ற கே.எஸ்.அழகிரி குற்றசசாட்டிற்கு, குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். கொரானா […]

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பின்னோக்கி நடந்து 1000கி.மீ நடைபயணம்…

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் கொரானாவை முற்றிலும் ஒழித்து நாடு வளம் பெற வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும் வைகை பட்டாள ராணுவ வீரர்கள் சார்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பின்னோக்கி நடந்து 1000கி.மீ நடைபயணம். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பொதுமக்களிடையே தோற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பாலமுருகன் என்பவர் வைகை பட்டாள ராணுவ வீரர்கள் […]

கிணற்றில் விழுந்த கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…

மதுரை மாவட்டம் பறவை காளியம்மன் கோவில் அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கொடிய விஷத்தன்மை உள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருப்பதாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு தீயணைப்புத்துறையினர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி கொடிய விஷத்தன்மை மிக்க கண்ணாடி விரியன் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

மதுரையில் சோப்பு விற்பனை குடோனில் பதுக்கி வைத்திருந்த 135 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது..!!! மேலும் ஒருவர் தலைமறைவு..!!!

மதுரை திருமங்கலம் டவுன் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சோப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பொருட்களின் ஏஜென்சி நடத்தி வருகிறார் ,இந்த நிலையில் இவர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்வதாக மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து அதிரடியாக அந்த ஏஜென்சிக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது குடோனில் சுமார் 135 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது, […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் கிராமம். இக்கிராமத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு கடையை திறக்க முடிவு செய்த மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மம்சாபுரம் பிரதான சாலையில் இன்று கடையைத் திறந்தது. இந்நிலையில் இன்று காலை மம்சாபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காந்தி நகரில் இருந்து நடைபயணமாக வந்து புதிதாக […]

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு மூடல்..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் எதிரே மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது.இச்சிகிச்சைப் பிரிவில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்ற 8 கர்ப்பிணிகள் பிரசவம் பார்த்த 2 பெண் மருத்துவர்கள் மற்றும் 4 […]

இராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு..

இராஜபாளையம் அருகே முகவூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் காலனி தொண்டைமான் குளம் உள்ளது இதன் அருகே குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கண்மாயில் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதைப் பார்த்த பொதுமக்கள் முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தகவல் கொடுத்துள்ளனர். அவர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். வனத்துறையினர் வருவதற்க்கு முன்பாகவே அப்பகுதி பொதுமக்கள் பாம்பை […]

கொரோனா தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது மகப்பேறு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் அச்சம்..

இராஜபாளையம் அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது மகப்பேறு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் PACRஅரசு மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனை என இரண்டு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் PACR மருத்துவமனையில் புறநோயாளிகள் உள்நோயாளிகள் விபத்து இது போன்ற அனைத்து நோய்க்கும் வைத்தியம் பார்க்கப்பட்டு வந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து விருதுநகர் சிவகாசி அருப்புக்கோட்டை அடுத்து இராஜபாளையம் மருத்துவமனையில் தொற்று பாதித்தவர்களை அனுமதித்து […]

கீழக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயக பேரவை சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இசுலாமிய சனநாயக பேரவை சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர் அமைப்பாளர் யாசின் தலைமையில், நெய்னா அசாருதீன், இஞ்ஜினியர் பாஸித், ஆரிபின் முன்னிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ராமசந்திரன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மரினா அசோசியேட் நிறுவனர் கபீர், சிந்தியா ஜோன் நிறுவனர் அப்துல் முஸ்ஸவிர், சர்வதேச […]

தனியார் நிறுவனங்கள் தனிநபர்கள் கட்டாய வட்டி வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்-தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை..

நெல்லை, தென்காசி மாவட்ட பொது மக்கள் சிறு வணிகர்கள் தமிழக அரசுக்கும்,காவல் துறைக்கும் ஓர் வேண்டுகோளை முன் வைக்கின்றனர். உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கண்ணுக்கு தெரியாத கொரனா நோய்த்தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அவ்வப் போது முழு ஊரடங்கினை தமிழக அரசு ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்ட காலகட்டம் முதல் இன்று வரை பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் சிறு வணிகர்கள் பொதுமக்கள் அன்றாட வேலைக்கு […]

இன்னர் வீல் சார்பில் மீனவப் பெண்களுக்கு சுகாதார பொருட்கள் விநியோகம்..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் முத்துப்பேட்டை இந்திரா நகரில் மீனவப் பெண்கள் 100 பேருக்கு ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் சுமார் 1,300 சானிட்டரி நாப்கின் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் அண்ணா நகர் பெண்களுக்கு இன்னர் வீல் சங்கம் சார்பாக  650 சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டது. இதில், மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து  சங்கத் தலைவர் கவிதா செந்தில்குமார்,  கொரானா பரவலை தடுக்க பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து  செயலர் கிருத்திகா […]

படகு பழுதால் 3 நாளாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள்: இலங்கை கடற்படை மீட்டு சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைப்பு..

ராமேஸ்வரம் கிருஷ்ணவேணி என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் செல்வகுமார், பசீர், அண்ணாதுரை, சீனி ஆகியோர் 27.6.2020 காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். அன்று இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு இன்ஜின் நடுக்கடலில் பழுதாகியது. இதனால், படகிலிருந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். கடல் சீற்றத்தால் படகு, இலங்கை மன்னார் கடல் பகுதிக்குள் சென்றது. இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் […]

பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் பதினோராம் வகுப்பில் பயின்ற பள்ளியிலேயே சேர்க்கை படிவத்தை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை…

பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் பதினோராம் வகுப்பில் சேருவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே சேர்க்கை படிவத்தை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதாமலேயே ஏற்கனவே பள்ளியில் நடந்த காலாண்டு […]

ஜித்தாவிலிருந்து கோவை புறப்பட்ட வந்தே பாரத் விமானம்.. 173 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்..

கடந்த (ஜூன் 28) வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இரண்டாவது விமானம் ஜித்தாவிலிருந்து கோவைக்கு மாலை 5 மணியளவில் 26 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 173 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஜித்தா தமுமுக நிர்வாகிகள் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சகோ. சிராஜ் ஆகியோர்கள் பயணிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தனர். மேலும் கோவை இறங்கியவுடன் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கோவை மாவட்ட தமுமுக -மமக நிர்வாகிகள் ரஃபீக், ஜெம் பாபு, முஜீப் […]

கீழக்கரையில் மாற்று திறனாளிகளுக்கு தமிழக அரசு பொருளாதார உதவி துவக்கம்..

மாற்று திறனாளி நபர்களுக்கு தமிழக அரசு பொருளாதார உதவி வழங்க உள்ளது. இந்த உதவியானது ₹1000/ – ரொக்கமாக வழங்க இருப்பதாக கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து தெரிவித்துள்ளார. இதுகுறித்து அவர் கூறிகையில் “கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நபர்கள் அரசு உதவி பெற விரும்பினால் தங்களது மாற்றுத் திறனாளி அட்டை நகல், (ஒரிஜினலை காண்பிக்க வேண்டும்.), குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் ஒரு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!