விருதுநகரில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் தொழிலாளர்களை நசுக்கி பன்னாட்டு முதலாளிகளை வாழவைக்கும் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றக்கூடாது, வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 12,500 வழங்க வேண்டும் எனக் கூறியும், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என […]
Category: கீழக்கரை செய்திகள்
நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவலர்கள் அச்சம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதுவரை பொதுமக்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் […]
கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்..
கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக இன்று 03/07/2020 இலவச கபசுர குடிநீர் முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 10 மற்றும் 11வது வார்டுக்குட்பட்ட பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, மதார் அம்பலம் தெரு, அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லப்பை தெரு, ஆடருத்தான் தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த முகாமை சங்கத்தின் செயலாளர் அஜ்மல் கான் தலைமையேற்று நடத்தினார், […]
குற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..
குற்றாலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் வசிக்கின்ற பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் குற்றாலம் காவல் நிலையம் மூடப்பட்டது. காவல் நிலையம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் குற்றாலம் […]
கீழக்கரை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்..
கீழக்கரையில் இன்று 3.7.20202 வெள்ளிக்கிழமை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் இலவச முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு கீழக்கரை காவல் துறை ஆய்வாளர் ராமச்சந்திரன் முதல் முக கவசம் பெற்று தொடங்கி வைத்தார், அதனை தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாகமுக கவசங்கள் வழங்கப்பட்டன. திண்ணைத் தோழர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் மக்கள் சேவையாகும். மேலும் இந்த சேவை ஒற்றுமையுடன் மென் மேலும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்யப்படும் என திண்ணைத் தோழர்கள் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இன்று (03/07/2020) கீழக்கரை நாடார் பேட்டை சுப்பிரமணி ஜெயலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளிய வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை சார்பிலும் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து சமுதாய சங்கங்கள் சார்பிலும் கேட்டு கொண்டுள்ளப்பட்னது. கீழக்கரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள் […]
கன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்..
கன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காணியாள மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அரசு இலவச வீட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பொருட்கள் வனத்துறையினர் தடுத்ததால். ஐம்பதிற்கும் மேற்பட்ட காணியாள மக்கள் குடும்பத்துடன் நாகர்கோயில் நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் தடிக்காரன்கோணம் வனத்துறை சோதனை சாவடி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் மலைகிராமங்களில் முதலமைச்சரின் பசுமை வீடு இத்திட்டத்தில் வீடுகளில் பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல […]
100 நாட்களுக்கு பிறகு பூஜைகள் தொடங்கியது கிராம்புற கோவில்களில்….
100 நாட்களுக்கு பிறகு கிராமப்புற கோயில்களில் வழக்கம்போல் பூஜைகள் சமூக இடைவெளிவிட்டு திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி நாகம்மா கோவிலில் பிரோதச விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி நாகம்மாள் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது இங்கு 12 ராசிக்குரிய 27 நட்சத்திர லிங்க கோவில் உள்ளது ஆனி மாத வளர்பிறை பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற பிரதோஷ விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பொது ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக […]
ஊடகங்களில் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் அருகே காய்கறி விற்ற சிறுமிக்கு லயன்ஸ் கிளப் சார்பாக நிவாரணம்..
ஊடகங்களில் செய்தி எதிரொலியாகதிருப்பரங்குன்றம் அருகே காய்கறி விற்ற சிறுமி மகேஸ்வரிக்கு லயன்ஸ் கிளப் சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டது. சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பி விக்னேஸ் ஆகியோருக்கு பொறுப்பேற்று கல்லூரி வரை ஏற்படும் கல்வி செலவையும் ஏற்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரத்தில் ஆறாவது படிக்கும் சிறுமி முருகேஸ்வரி காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள் சிறுமி முருகேஸ்வரிக்கு உதவி செய்ய முன்வந்தனர். […]
ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் அறிவிப்பு. மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை வெளியீடு..
151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நித்தி அயோக் அறிவித்த அதே வழித்தடங்களில் இந்த 151 ரயில்கள் தனியாருக்கு விடப்படும் .35 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். டிரைவரும் கார்டும் மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களும் தனியார் ஊழியர்களாக மாற்றப்படுவார்கள். இந்த வண்டிகள் நவீன தொடர் வண்டிகள் ஆக […]
தென்காசி மாவட்டத்தில் கோவிட்-19 நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம்-விரைந்து வழங்கிட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை….
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே சென்று வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்தும் அதன் நகலினை தங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் வீடுகளுக்கு வரும்போது சமர்பித்து அரசின் நிவாரணத்தொகை ரூ.1000-ஐ பெற்றுக் கொள்ளலாம். விநியோகப்படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்கவேண்டும். கிராம நிர்வாக […]
குடிதாங்கி குளத்தில் மீன்சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்- அரசியல் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்பு..
நெல்லை மாவட்டம் களக்காட்டில் குடிதாங்கி குளத்தில் மீன் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. களக்காடு மக்கள் போராட்டக்குழு அலுவலக வளாகத்தில் A.K.நெல்சன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிர போராட்டத்திற்கு மக்கள் போராட்டக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் சித்திக், வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி […]
மத்திய ஆளும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியதை கண்டித்து கன்னியாகுமரி பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்..
மத்திய ஆளும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியதை கண்டித்து கன்னியாகுமரி இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய முறையில் தடிக்காரன்கோணம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தள்ளுவண்டியில் கட்சி தொண்டரை அமர்த்தி வைத்து தள்ளிக் கொண்டு போகி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சுமார் கிலோமீட்டர் தூரம் தள்ளி […]
கன்னியாகுமரி பகுதியில் தமிழக விவசாய பிரிவு சார்பாக ராகுல்காந்தி பிறந்த தின விழா..
தமிழக விவசாய பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் G.ஜோஸ் மைக்கிள் ராபின்(JMR) ஏற்பாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் எழுச்சித்தலைவர் ராகுல்காந்தி 50ஆவது பிறந்தநாள் விழாவை “விவசாயிகள்பாதுகாப்பு தினம்” ஆக 50 நாட்கள் கொண்டாடிடதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநில தலைவர், S. பவன்குமார் வழிகாட்டுதலின்படியும், விவசாய பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் . G.ஜோஸ் மைக்கிள் ராபின் (JMR) ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் தலைமையில் […]
தெற்குத்தெரு ஜமாத் சார்பாக புதுத்தெரு நூரானியா ஸ்கூல் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம்…
இராமநாதபுரம் ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் கீழக்கரையில் அனைத்து ஜமாத் சார்பாக கொரோனோ விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்று (02|07|2020) தெற்குத்தெரு ஜமாத் சார்பாக புதுத்தெரு நூரானியா ஸ்கூல் வளாகத்தில் கொரோனா சம்பந்தமான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளி பொறுப்பாளர் மற்றும் MYFA உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மக்கள் திளாக வந்து பயனடைந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லும் இடங்களில் சமூக […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி கீழக்கரை நகரில் புதிய உறுப்பினர்கள் இணைப்பு.. நகர் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்பட அறிவுறுத்தல்..
கீழக்கரையில் பல இளைஞர்கள் இன்று (01/07/2020) விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் பாசித் இலியாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பட்டாணி அப்பா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். மேலும் தமிழகத்தில் பல் வேறு சமுதாய பிரச்சினைகள், சமூக சேவை பணிகள் மற்றும் கொரோனோ நோயால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகளை ஒற்றுமையுடன் செயல்படும் வண்ணம், இராமநாதபுரம் மாவட்ட நகர் நிர்வாகிகள மற்றும் உறுப்பினர்கள்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கட்சியின் கட்டுபாடு மற்றும் […]
ரோட்டரி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மரக்கன்று நடும் திட்டம் தொடக்க விழா …
lகன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3212ல் 104 ரோட்டரி சங்கங்கள், 4,464 ரோட்டரி உறுப்பினர்கள் உள்ளனர். ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்று ஓராண்டிற்கான சேவைகளை செய்துவருகின்றனர். இந்த ஆண்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை பிரதான நோக்கமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 104 ரோட்டரி சங்கங்களிலும் இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடந்த ராமநாதபுரம் ரோட்டரி சங்க […]
சுரண்டை பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்-கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்…
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம் ஆகியோரின் அறிவுரையின் அடிப்படையிலும், சுரண்டை பேரூராட்சி பகுதியில் நிர்வாக அதிகாரி அரசப்பன், வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் இசக்கியப்பா, தூய்மை மேற்ப்பார்வையாளர் ராமர் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பு […]
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தேசிய மனித உரிமை பாதுகாப்பு நாளை முன்னிட்டு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தேசிய மனித உரிமை பாதுகாப்பு நாளை முன்னிட்டு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத துவேசத்தை பரப்பி மனித குலத்தை சிரிப்பதை கண்டித்தும். அவதூறு வழக்கில் தப்லீக் ஜமாத்தை கைது செய்வதை கண்டித்தும். CAA,NRC,NPA சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய அறிஞர்ர்கள் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை கொடுமையான UAPA சட்டத்தில் கைது செய்வதை கண்டித்தும் கீழக்கரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இன்று சமூக […]
இராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்..
இராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோழபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆசிலாபுரம் கிராமத்தில் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகே புதிதாக டாஸ்மார்க் கடை திறப்பதற்காக நேற்று (30/06/2020) டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில் பெட்டிகளை கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இன்று (01/07/2020) திறக்க […]
You must be logged in to post a comment.