இராஜபாளையம் அருகே கொரோனா தொற்றுக்கு காவலர் உயிரிழப்பு மாவட்டத்தில் முதல் காவலர் உயிரிழப்பால் என்பதால் காவல்துறையினர் அச்சம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (வயது 42) பணியாற்றிவருகிறார் இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இந்நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்தார், இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு இரண்டாம் தேதி அனுப்பிவைக்கபட்டனர் இந்த […]

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் வெடியில் சிக்கி உயிரிழந்த மிளா (மான்)…

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் மிளாவானது காட்டு பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியினை கடித்ததில் வாய் பகுதி சிதறியது. இந்நிலையில் பொய்கை அணையில் இருந்து தண்ணீர் வருகின்ற பொய்கை ஓடையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி வனசரக அலுவலகத்திற்கு அப்பகுதி வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பூதப்பாண்டி வனசரகர் திலிபன், தலைமையில் வனவர் சக்திவேல், வன ஊழியர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர் ஜெகன், சபரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். […]

விவசாயி மகன் கண்டுபிடித்த முதல் கொரோனா தடுப்பு மருந்து-தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் கிருஷ்ணா எல்லா…

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை (கோவாக்சின்) கண்டுபிடித்து பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ணா எல்லா தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கோவாக்சின்’ (COVAXIN) என்ற அந்த மருந்துக்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்தியாவின் மருத்துவ ஆய்வுக் கவுன்சில் […]

சுரண்டை அருகே பழங்கால சிலை கண்டுபிடிப்பு-நூறு நாள் வேலை திட்ட பணியின் போது கிடைத்ததால் பரபரப்பு..

சுரண்டை அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பழம் பெரும் சிலைகளும் ஓடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை போன்று சிலையின் தலைப்பகுதி கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மருக்களங்குளம் ஊராட்சி சீவலசமுத்திரம் கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்ட‌ பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல பணிகள் நடந்து வந்த நிலையில் ஓடை ஓரத்தில் தோண்டும் போது கல் […]

மனிதநேயம் வீழ்கிறதா??.. மீள்கிறதா??.. இரண்டு நாட்களாக கவனிப்பாரற்று சாலையில் கிடந்த மனிதர்… உதவிய சமூக ஆர்வலர்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் மேம்பாலம் கீழே,  மாடக்குளம் செல்லும் சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடும் மூச்சுத் திணறலுடன் இரண்டு நாட்களாக கவனிப்பாரற்று இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று (05/07/2020) காலை இதைப்பற்றி அப்பகுதி மக்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து  அப்பகுதியை சேர்ந்த கீழை நியூஸ் மதுரை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் காளமேகத்தை […]

இன்று (05/07/2020) கீழக்கரையிலும் முழு ஊரடங்கு அமல்..

இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசால் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருந்தது, அதே இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று பல பகுதிகளில் கடைகள் திறக்காமலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமலும் இருந்தன. அவசர தேவையான மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனையும் நோயாளிகள் இல்லாமல் காணப்பட்டது. கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

கொரோனாவிலிருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம்-பிரமிக்க வைக்கும் வீடியோ…

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பாதுகாக்க ரூ.3 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ஆன முகக்கவசம் அணிந்து கொண்டு வலம் வரும் நகை பிரியர் ஒருவரின் செயல் அனைவரையும் பிரமிக்க செய்துள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் குராடே. இவர் தங்க […]

கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் கவனிப்பாரற்று சாலையில் கிடந்த அவலம்-வைரல் வீடியோ…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வந்தாலும், நோய் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பலர் சிகிச்சை பலனின்றியும் சிலர் சிகிச்சையே கிடைக்காமலும் உயிரிழக்கும் பரிதாபங்களும் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடுரோட்டிலேயே மழையில் நனைந்தபடி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் ஹனுமந்தா நகரில் உள்ள 63 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா […]

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரை பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குலத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவர்களை தாக்கி கொடுமைப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் […]

இலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா?? தற்கொலையா??…

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவில் உள்ள இலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சேலத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் வயது 22 வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை பிரேத உடலை மீட்டு கொலையா தற்கொலையா என புதூர் போலீசார் தீவிர விசாரணை. மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவில் உள்ள இலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தில் கிளையில் சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து […]

கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…

கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஆரால்வாய்மொழி சந்திப்பில் கழிவறை வசதி வேண்டும் என பொதுமக்கள் H வசந்தகுமார் MP யிடம் கோரிக்கை வைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நவீன கழிப்பறை வசதி கட்ட 9. லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜையை H வசந்தகுமார் MP தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் […]

மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய அரசின் கீழ் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைத்திட பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுஷாதி மருந்து கடை திறக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர பாஐ தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். மருந்தக உரிமையாளர்கள் சேர்மன், ஜவஹர் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பாஐ நிர்வாகிகள் துணை தலைவர் மாரியப்பன், பொது செயலாளர் தீபம் செந்தில் குமார், செயலாளர் ராயல் ராமசாமி, பொருளாளர் சுந்தர் குமார், மண்டல் பிரபாரி முருகேசன், மாவட்ட […]

எனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரயில்களை தனியார் மயமாக்கினால் ரயில் மறியல் செய்து இரயிலை நிறுத்துவேன்.. எம்பி மாணிக்கம் தாகூர்…

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் எந்த ஒரு தனியார் மயமாக்கப்பட்ட ரயில்களை அனுமதிக்க மாட்டோம். மேலும் திருப்பரங்குன்றம், விருதுநகர் சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் தனியார் ரயில்கள் நிறுத்தினால் அந்த அந்த ரயில் நிலையத்தில் மக்களை திரட்டி ரயில் மறியலில் ஈடுபடுவேன் என்று இன்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியிருப்பதாவது, மத்திய அரசு சாமானிய பொதுமக்கள் பயணிக்கும் ரயில்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்.கடந்த இரண்டு […]

பாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை…

விருதுநகர் அருகில் உள்ள பாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலவனநத்தம் ஊராட்சியில் நூறு நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி வழங்கிட வேண்டும், பாலவனநத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும்,  கூலி ரூ 256 தினசரி வழங்க வேண்டும்   உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100 […]

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்பாக தண்டோரா..

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (05/07/2020) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினால் அனைத்து கடைகளும் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூடும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பழையகால வழக்கப்படி தண்டோரா போட்டு அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்க நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் […]

இராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை..

இராஜபாளையத்தில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் இடம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் தேவையான இடங்களை விட அதிகமாக கையகப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் 42 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது மேம்பால பணிகள் பாதியில் நிற்பதால் பாலம் அமைப்பதற்கு இடம் கையகப்படுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு தற்போது இடம் கையகப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. […]

இராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின் கொரோனா உறுதி செய்ய பட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பார்வதி (வயது 45) என்ற பெண் உடல் நிலை சரியில்லாத நிலையில் கடந்த 26ம் தேதி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் அங்கு மருத்துவர்கள் சாதரன காய்ச்சல் என கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டு சென்ற பார்வதிக்கு மூச்சு தினறல் அதிகமாக ஏற்பட்டதை அடுத்து மீண்டும் மருத்துவமணைக்கு சென்றுள்னர். அங்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுத்த பின் கிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு […]

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி நிவாரணத் தொகை..மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே சென்று வழங்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்தும் அதன் நகலினை தங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் வீடுகளுக்கு வரும்போது சமர்பித்து அரசின் நிவாரணத்தொகை ரூ.1000-ஐ பெற்றுக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. […]

தனியார் நிறுவனத்தில் மின்தூக்கியில் சிக்கிய ஊழியரை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர்..

 மதுரை பைபாஸ் சாலையில் நேரு நகரில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் உள்ளது.  அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் வேலை நிமித்தமாக மேல்மாடிக்கு மின்தூக்கியில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக முதல் தளத்தில் மின்தூக்கி பழுதாகி நடுவழியில் நின்று உள்ளது. பின்னர் அதிர்ஷ்டவசமாக மொபைல் போணில் சிக்னல் இருந்ததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு அழைத்து கூறியுள்ளார்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீன்தூக்கி உள்ளே சிக்கியிருந்து […]

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி..எண்ணிக்கை 8 ஆக உயர்வு..

விருதுநகர் உள்ள  சின்ன மூப்பன் பட்டி கிராமத்தில் தலையாரியாக இருந்த 60 வயது முதியோர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மாதம் 30 ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக்க அனுமதிக்கப்பட்டர் அவருக்கு கோரோனோ பரிசோதனை செய்யபபட்டது பரிசோதனை முடிவில் அவருக்கு கோரோனோ தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து முதியவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  அரசு மருத்துவமனையில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். விருதுநகர் மாவட்டத்தில் கோரோனோ தொற்றல் உயிர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!