சுரண்டையில் எடை அளவைகள் முத்திரையிடும் முகாம்-சமூக விலகலை கடைபிடித்து வியாபாரிகள் பயன்பெற அறிவுறுத்தல்…

சுரண்டை மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் நலன் கருதி சுரண்டையில் எடை அளவைகள் முத்திரை முகாம் ஓவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்த வருட முத்திரை முகாம் 08-ஆம் தேதி புதன் கிழமை துவங்கி வரும் 14-08-2020 வெள்ளிக் கிழமை வரை சுரண்டை ஆலடிப்பட்டி வாடியூர் சாலையில், காமராஜர் ஷட்டில் விளையாட்டு அரங்கம் கீழ்புறம்,  உள்ள எஸ்பிஎன் வளாகத்தில் தென்காசி எடை அளவைகள் முத்திரை ஆய்வாளர் சரவண முருகன் தலைமையில் நடக்கிறது. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அரசு வழிகாட்டுதல் படி தினமும் […]

அம்பாசமுத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-அரசு மருத்துவமனை மூடல்…

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரையில் இப்பகுதியில் இன்றுவரை மொத்தம் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மருத்துவப் பிரிவு மற்றும் அதை சார்ந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் கோரோனா தொற்றால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அம்பாசமுத்திரம் அம்மையப்பர் சன்னதி தெருவில் கிளினிக் வைத்திருக்கும் இளம் பல் டாக்டர், அவர் உதவியாளர், தனியார் மருத்துவமனையின் பெண் டாக்டரின் தந்தை அவரது மகன் மற்றும் அங்குள்ள ஒரு மெடிக்கல் […]

இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் தொடரும் உயிர் பலி… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…….

இராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறிகளால் வருபவர்களுக்கு கூட கொரோனா பரிசோதனை செய்யாமல் அலைகழிப்பு செய்யப்பட்டு உயிர்கள் பழிவாங்கப்பட்டு வரும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல், இருமல் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் சென்ற இராமநாதபுரத்தில் தொழில் புரியும்  கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கு  எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் அவர் மூச்சு விட சிரமப்படுவதையும் கவனித்தில் கொள்ளாமல் அலைகழித்ர […]

மதுரையில் விதிமுறை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள்… செய்தி எதிரொலி… காவல் துறையுடன் இணைந்து விதி மீறும் வாகங்களை பறிமுதல் செய்யும் வருவாய்த் துறையினர்…

மதுரையில் கொரானா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு ஜூலை 12ஆம் தேதி வரை முழு ஊரடங்கை மதுரை மாநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பிறப்பித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையல் அதை கண்டு கொள்ளாமலும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் மற்ற கவலைப்படாமல் மக்கள் வாகனங்களில் உலா வந்த வண்ணம் இருந்தனர். இது சம்பந்தமாக செய்தியும் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை நகரில்  ஊரடங்கு நேரங்களில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் வாகனங்கள் […]

மதுரையில் வீட்டு வாசலில் அடிக்கடி சத்தம் போட்டதால்.. பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!..

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து கனி, இவர் அதே பகுதியில் சொந்தமாக பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த பசுமாடு ஒன்று நீண்ட நேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர் முத்துகனி அங்கிருந்த கட்டையால் எடுத்து பசு மாட்டினை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததுள்ளது, இந்த காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த சிசிடிவி […]

கீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கல்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ தொற்று பெருகி வரும் வேளையில் கட்டுபடுத்த அரசு சார்ரபாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் பல் வேறு நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக மக்களின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசூர குடிநீரும், நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.. இதில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ஆசிக், துணைத்தலைவர் வாசிம், துணைச்செயலாளர் அல்காசிம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்..

விருதுநகரில் மின்சாரம் தாக்கி அஇஅதிமுக ஒன்றிய கவுன்சிலர் பலி…

விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் தற்போது விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 12வது வார்டு கவுன்சிலராகவும் முருகேசன் இருந்து வருகிறார். இவர் விருதுநகர் அருகே நல்லமநாயக்கன் பட்டியில் வீட்டு தரையில் பதிக்கும் கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். வழக்கம்போல தொழிற்சாலைக்கு சென்றவர் அங்கு உள்ள மோட்டார் பழுது காரணமாக பழுது பார்ப்பதற்காக சென்றுள்ளார். மோட்டார் பழுது பார்த்து பின்பு மின்னிணைப்பு செய்யும்பொழுது மோட்டாரின் பாகங்கள் சரியாக இணைக்கப் படாததால் அதிகப்படியான மின்சாரத்தின் காரணமாக திடீரென பழுதான […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று.. காவல்நிலையம் மூடல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் பூட்டப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதுவரை பொதுமக்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காவலர்கள் […]

சிவகாசி பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் – வர்த்தக சங்கம் அறிவிப்பு..

சிவகாசி பகுதியில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் என்று அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் எந்த ஒரு அச்சம் இல்லாமல் முகக் கவசம் அணியாமல் வெளியே சென்று வருகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி சிவகாசி பகுதிகளில் உள்ள அனைத்து […]

சிவகாசி நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரானா தொற்று உறுதி… காவல்நிலையம் மூடல்..

சிவகாசி நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெருமளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கும் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு சிவகாசி நகர் காவல் போலீசார் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து நேற்று அதே காவல் நிலைய ஆய்வாளருக்கு […]

சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக்காவலர் கொரோனாவுக்கு உயிரிழப்பு டிஐஜி மலர் தூவி அஞ்சலி..

இராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக்காவலர் கொரோனாவுக்கு உயிரிழப்பு டிஐஜி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் அய்யனார் இவர் கொரோனாவிற்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துமனையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவர் உடல் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதையடுத்து இன்று சேத்தூர் காவல் நிலைய […]

விருதுநகரில் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள காவலர்களுக்கு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

விருதுநகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள காவலர்களுக்கு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவது போல பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இயந்திரங்கள் கொண்டு முறையாக கிருமிநாசினி அளிக்கப்பட வேண்டும்,, விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை கருவியின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். […]

ஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…

சிறுநீரக பிரச்சினையால் அவதியுற்றுவரும் ஏழை பெண்ணுக்கு கோவை மாவட்ட ஆட்சியர், தமது நிவாரண நிதியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.மனித நேயமிக்க இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கோவை, வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி(36). இவரது தந்தை 20 வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். சகோதரர், சகோதரி ஆகியோர் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில், தனது வயதான தாய் ராஜம்மாள் (80) உடன் ஜோதிமணி மாதம்பட்டியில் வசித்து வருகிறார். பிறவியிலேயே இவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருந்துள்ளது. […]

மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து பலி..

மதுரையில் மாடியில் விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்துள்ளார். மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அபிஷோசுவா வயது 4. இவர் சம்பவதன்று வீட்டின் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக திடீரென மாடியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமுற்று, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே, இறந்துள்ளார். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது குறித்து செல்லூர் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்தியாளர் […]

வங்கியில் இருந்து வரும் அழைப்பு.. ஈமெயில் மூலம் உங்கள் சேமிப்பு தொகை.. நிலையான வைப்பு தொகையாக மாறலாம்.. ஏமாந்த கீழக்கரை நபர்..

சமீப காலமாக டிஜிட்டல் மயம் என்ற பெயரில் வங்கி பரிவர்த்தனை மொபைல், ஈமெயில் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.  இதன் காரணமாக வங்கிகளிடம் இருந்து தினமும் பல ஈமெயில் மற்றும் அழைப்பு வங்கிகளிடம் இருந்து வந்த வண்ணம் இருப்பதை காண முடியும்.  சில ஈமெயில்களுக்கு நாம் அளிக்கும் பதிலையே ஒப்புதலாக ஏற்று நிரந்தர வைப்பு தொகையாக வங்கியால் மாற்ற முடியும். இந்நிலையில் கீழக்கரையிலும் இது போல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.  இது போன்ற சம்பவங்கள் அதிக நாட்கள் வங்கி […]

மதுரையில் திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பார்வை..

மதுரை தோப்பூரில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட திறந்தவெளி கொரோனா சிறப்பு மையம் அமைவிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு. மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,000த்தை தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட 28 கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 3,000 படுக்கை வசதிகள் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா […]

கீழக்கரையில் அனைத்து ஜமாத் ஏற்பாட்டில் கொரோனோ விழிப்புணர்வு மருத்துவ முகாம் வடக்குத் தெரு ஐமாத் சார்பாக நடைபெற்றது..

இராமநாதபுரம் ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் கீழக்கரையில் அனைத்து ஜமாத் சார்பாக கொரோனோ விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக  இன்று (07/07|2020) வடக்கு்தெரு ஜமாத் சார்பாக தைக்கா வளாகத்தில் கொரோனா சம்பந்தமான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஜமாத் பொறுப்பாளர்கள மற்றும் NASA உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மக்கள் திளாக வந்து பயனடைந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக […]

சிவகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

தென்காசி மாவட்டம் சிவகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பயணப்படி, சரண்டர், பழைய ஓய்வூதியம், கொரோனா நோய் தடுப்பு பணி சிறப்பு ஊதியம் மற்றும் அரசு ஊழியர் கொரோனா நோயின் காரணமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கல், வாரிசு வேலை உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகிரி வட்ட ஒருங்கிணைப்பு குழு […]

இராஜபாளையம் அருகே கூனங்குளம் பகுதியில் கடந்த 29.06.20 நடந்த கொலை சம்மந்தமாக வடமாநில தொழிலாளி கைது…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கூனங்குளம் பகுதியை சேர்ந்த வேலுமணி சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார் வேலுமணி கடந்த 29.06.2020 நீட்ட நேரம் வீட்டுக்கு வரத நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில் ஊரின் எல்லையில் தலையில் கல்லை போட்டு படு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு […]

இராஜபாளையம் அருகே கொரோனா தொற்றுக்கு காவலர் உயிரிழப்பு மாவட்டத்தில் முதல் காவலர் உயிரிழப்பால் என்பதால் காவல்துறையினர் அச்சம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (வயது 42) பணியாற்றிவருகிறார் இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இந்நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்தார், இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு இரண்டாம் தேதி அனுப்பிவைக்கபட்டனர் இந்த […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!