உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. உலக மக்கள்தொகை வளர்ச்சியானது கிபி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது. 1840இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில் […]
Category: கீழக்கரை செய்திகள்
எங்கே சமூக இடைவெளி??.. நிவாரணம் கட்டுபடுத்தவா??.. பரப்பவா..??..
ரேசன் கடையில் ரூ 1000 பணம் பெறுவதற்காக முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக வந்து வாங்கி சென்ற மக்கள், விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட ரேசன் கடை ஊழியர்கள். கொரானா வைரஸ் காரணமாக மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம், பரவை, மதுரை கிழக்கு மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ 1000 வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் […]
கொரானா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த ராமநாதபுரம் ஆட்சியரிடம் , நாடாளுமன்ற உறுப்பினர் மனு..
மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை இன்று (10.7.2020) சந்தித்து அளித்த மனு அளித்தார். அம்மனுவில் மாவட்ட முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும், ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிகளில் கொரானா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கொரானா வார்டு செவிலியருக்கு முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரானா […]
சாத்தான்குளம் கைப்பேசி வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்க டெல்லியிலிருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்..
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கைபேசி கடை நடத்தி வரும் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதியப்பட்டு பத்து நபர்கள் கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது மதுரை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி சிபிஐ க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக டெல்லி சிபிஐ […]
அலங்காநல்லூர் அருகே அய்யூர் ஊராட்சியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய விவசாயி ஜெயராஜ் அமிர்தம் தம்பதியர்.. பாராட்டும் பொதுமக்கள்..
மதுரை அலங்காநல்லூர் அருகே அய்யூர் ஊராட்சியில் சுமார் 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய விவசாயி ஜெயராஜ் அமிர்தம் தம்பதியர்னரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சுமார் 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் அமிர்தம் தம்பதியர் தனது சொந்த கிராம […]
அலங்காநல்லூரில் பெய்த கன மழைக்கு இடிந்து விழுந்த அரசு மருத்துவமனை சுற்று சுவர்.. விரைந்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
மதுரை, அலங்காநல்லூரில் இரவு பெய்த 1மணி நேர கன மழையில் அரசாங்க மருத்துவமனை சுற்று சுவர் இடிந்து விழுந்தது இச்சுவரை விரைந்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் ஆலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பழைமையான உடை கற்களால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. இடிந்து விழுந்த சுவர் 40 ஆண்டுகள் பழைமையான செம் மண்ணால் கட்டப்பட்டது என்பது தெரிகிறது. இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் […]
தகவல் தொழில்நுட்பத்தின் வசதி வாய்ப்புகள் நம்மிடம் இல்லை… அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு…
தகவல் தொழில்நுட்பத்தின் வசதி வாய்ப்புகள் நம்மிடம் இல்லை – தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது நமக்கு சவாலாக உள்ளது – அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு. CII சார்பாக கனெக்ட் என்ற தலைப்பில் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது இதில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்து கொண்டார். மேலும் இந்த கருத்தரங்கில் தியாகராஜ் மில்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி […]
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா..
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது. கொரோனா உறுதியான அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாயில் குடியேறும் போராட்டம்-விவசாயிகள் சங்கம்,அரசியல் கட்சிகள் திரளாக பங்கேற்பு…
சேரன்மகாதேவியில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கால்வாயில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவின் பிரதான கால்வாய் கன்னடியன் கால்வாய் ஆகும். இதன் மூலம் கல்லிடைகுறிச்சி முதல் கோபாலசமுத்திரம் வரை சுமார் 13,000 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன. இங்கு ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் […]
மதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன், வே.சத்திரப்பட்டி கண்மாய் பகுதியில் கள ஆய்வு செய்தபோது கலைநுட்பத்துடன் கூடிய மூன்று வகையான சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, “சதி வழக்கம்” என்பது இறந்துபோன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்த பின் அவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் சதிக்கல் எனப்படுகிறது. இதில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக […]
பிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…
கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைபடுத்தலுக்கு அச்சப்பட்டு கேரளா முகவரிகளை கொடுத்து கொரோனா பரிசோதனை இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் நுழைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதில் அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், கொரோனா பரவும் அபாயமும் எற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலி ஈ-பஸ் மூலமாகவும், உரிய ஆவணம் இன்றியும் வெளிமாநிலத்தவர்களையும், வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்களையும் சில தனியார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் இருந்து ரூபாய் இரண்டாயிரம் முதல் 20,000 வரை பயண கட்டணமாக பெற்று […]
மதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. மதுரை சுற்று வட்டார பகுதியில் 20க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகிறார்கள். காவல்துறையினரின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வர கூடிய வேலையில், இன்று (09/07/2020) காலை முதல் வாட்ஸ்அப் குழுக்களிலும் முகநூலிலும் சில விஷமிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அந்த குறுந்தகவலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து […]
கொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கொரோனா தொற்று மனிதருக்கு இருக்கிறதா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு எந்த அளவு கொரோனா வைரஸ் உடலில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கக்கூடிய கருவியை உருவாக்கி வருகின்றனர். இந்த கண்டுபிடிப்பில் 3துறைகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவின் தலைமையாக இயற்பியல் துறை பேராசிரியர் ஆரோக்கியதாஸ் மற்றும் அவருடன் இணைந்து உயிரியல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் அசோக்குமார் மற்றும் வரலட்சுமி ஈடுபட்டுள்ளனர். இந்தக் கருவி கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய வெளிநாட்டில் இருந்து […]
கருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புதிய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..
மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், அஸ்திரேலியா ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக “தமிழகக் கிராமியக் கலைகளும் பண்பாடும்” என்ற தலைப்பில் 21 நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று (09/07/2020) காலை 11 மணிக்கு தொடங்கியது. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி செய்துள்ளனர். […]
கீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக ஏர்வடி கண்மாய் கரையோரம் வந்துள்ளது அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் புள்ளிமானே கடித்து குதறியதால் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து காலை 7 மணி அளவில் கீழக்கரை சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அதிகாரி சிக்கந்தர் பாஷா தலைமையில் வனத்துறையினர் இறந்த புள்ளிமானை மீட்டு புதைத்தனர். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..
தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று (09/07/2020) கிழக்குத் தெரு சார்பாக 4,5,வார்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் காலை 10மணி முதல் பகல் 1 மணி வரையில் ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் கொரானாவை எதிர் கொள்ள உடலில் சத்து குறைவானவர்களுக்கு Vitamin Tablets (சத்து மாத்திரைகள்) வழங்கப்பட்டது. இத்தகவலை முகம்மது அஜிஹர். கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமா அத் துணை தலைவர் […]
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல் நிகழ்வு இன்று 9.7.2020 பிசா பேக்கரி அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு வழங்கியதுடன் கபசுர குடிநீர், இலவச முககவசம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுநகர் செயலாளர் பாசித் இலியாஸ் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வை காவல் துறை சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து முக கவசம், சோப்புகள் மற்றும் கபசுர குடிநீரை பொது […]
MASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா…
MASA நடத்திய கிராத் மற்றும் மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா 8/07/2020 அன்று தனிநபர் இடைவெளியுடன், முக கவசம் அணிந்து அரசாங்கம் வகுத்த வழிமுறைகளுக்கு உட்பட்டு நணைபெற்றது மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சுகாதார அடிப்படையில் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வலியுறுத்தப்பட்டது. இந்த பரிசளிப்பு விழாவை பழைய குத்பா பள்ளி ஜமாத்தின் தலைவர் செய்யது அப்தாஹிர் தொடங்கி வைத்தார், மக்தூமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் தலைமை தாங்கினார். பழைய குத்பா பள்ளியின் […]
கொரோனோ ஊரடங்கு பயனுள்ளதாக கழித்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள்..
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்த பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். என்ன தான் டிவி பார்த்து விளையாடி பொழுதை போக்கினாலும் அதிலிலும் மன நிறைவு இல்லை என்பதால் சில பயனுள்ள நடவடிக்கையை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தை அடுத்து உள்ள அனந்தபத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த பேராசிரியர் சுரேஷ் குமார் என்பவர் குடும்பத்தில் […]
குமரி மாவட்ட பாஜக சார்பில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி கொட்டும் மழையில் வாழை மரம் நடும் போராட்டம்…
குமரி மாவட்டம் வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு செல்லும் பொருட்களும் இந்த சாலை வழியாகச் செல்லும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மயிலாடிபுதூர் பகுதியில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. மேலும், இந்த சாலையில் பல்வேறு விபத்துக்களும் நடந்துள்ள நிலையில் […]
You must be logged in to post a comment.