மதுரையில் டிரோன் கேமரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… காவல் ஆணையர் உத்தரவு… மக்களிடையே வரவேற்பு..

இன்று 14.07.2020ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவுப்படி மதுரை மாநகரில் தீவிர கண்காணிப்பில் உள்ள 54 பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 3 டிரோன் கேமராக்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் மதுரை மாநகர் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எளிதில் கிடைக்கவும் மக்கள் அவற்றை தவறாது கடைபிடிக்கவும், பொதுமக்களின் நடமாட்டங்களை கண்காணித்து அவர்களை பாதுகாக்கவும் […]

காளையார்கோவில் அருகே ராணுவ வீரர் வீட்டில், மாமியார், மருமகள் இரண்டு பேர் கம்பியால் தாக்கி கொலை. போலீஸார் விசாரணை…

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முக்கூரணி கிராமத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தியாகு, தனது மகன் ஸ்டீபன் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி, மருமகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்தியாகு நேற்று இரவு தோட்டத்திற்கு காவல் காக்க சென்ற நிலையில், வீட்டில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள், தூங்கி கொண்டிருந்த மாமியார் ராஜ குமாரி (60), மருமகள் சினேகா (30) ஆகிய இருவரையும், இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, பணம் நகைகளை கொள்ளை […]

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் !..

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் கலை அரங்கம் முன்பு ஏழைகளுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முகைதீன் இஸ்மாயில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்க பட்டது இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாதுஷா, இப்றாஹிம், அர்சத்கனி, மகாராஜன், ஜெபராஜ் , நாசிக்கா , மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு மற்றும் நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் ஜமாத், கீழக்கரை அனைத்து ஜமாத் இனைந்து நடத்திய பொது மருத்துவ முகாம்..

கீழக்கரையில் நேற்று (13/07/2020) மற்றும் இன்று (14/07/2020)  தமிழ்நாடு அரசு மற்றும் நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் ஜமாத், கீழக்கரை அனைத்து ஜமாத் இனைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடுத் தெரு ஜும்ஆ மஸ்ஜித் சங்கம் வளாகத்தில் நடைபெற்றது. கீழக்கரை டவுன் காஜி மௌலவி Dr.A.M.M காதர் பக்ஸ் ஹுஸைன் சித்திக்கி தலைமையில், நடுத் தெரு ஜும்ஆ மஸ்ஜித் துணைத் தலைவர் A.M.S சாகுல் ஹமீது ஹாஜியார், செயலாளர் S.M.K முகைதீன் ஃபாருக், துணை செயலாளர் A.M.S […]

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைய, கோயிலில் மொட்டையடித்து வேண்டுதல்..

மதுரை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ மனைவிக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியானதில் பேரில் அமைச்சரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரையும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ பூரண குணமடைய மதுரை அதிமுக தொண்டர்கள் கோயில்களில் வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் போன்றவை செய்து வருகின்றனர். மதுரை அடுத்துள்ள கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பன் கோயிலில் மதுரை மாவட்ட […]

பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்-குஜராத் கான்ஸ்டபிள் சுனிதா பேச்சு சமூக வலை தளங்களில் வைரல்…

குஜராத் மாநிலத்தில் ஊரடங்கை மீறிய அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் போலீஸ் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தில் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுனிதா யாதவ், இவர் கடந்த புதன்கிழமை இரவு சூரத்தின் மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் முகக்கவசம் கூட அணியாமல் காரில் வந்துள்ளனர். சுனிதா அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ” PYTHON BASICS FOR DATA ANALYSIS ” சர்வதேச இணையவழி கருத்தரங்கு நிகழ்வு..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி பேராசிரியர்களுக்கான ஓர் நாள் சர்வதேச இணையவழிக் கருத்தரங்கம் “PYTHON BASICS FOR DATA ANALYSIS” என்ற தலைப்பில் இன்று (13/07/2020) காலை  11.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் Dr. A. R. நாதிராபானு கமால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கி கருத்தரங்கிணை தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து […]

தடிக்காரன்கோணம் வனசோதனை சாவடி முன்பு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் ஆர்பாட்டம்…

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் வனசோதனை சாவடி முன்பு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 2006 வன உரிமை சட்டத்தை நடைமுறைபடுத்த கேட்டும், பொதுமக்களிடம் அத்துமீறும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், புதுநகர் பகுதியில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து அகற்றவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க நினைக்கும் வனத்துறையினரை கண்டித்தும் இன்று மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மலைகிராம விவசாயிகளின் பேரவைத்தலைவர் ஜியோ தலைவர், […]

வளைனேந்தல் மீனவர் நல அறக்கட்டளை சார்பாக ஊழியர் கூட்டம்….

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் செயல்பட்டுவரும் வளைனேந்தல் மீனவர் நல அறக்கட்டளை சார்பாக திருப்புல்லாணி வெள்ளையன் சேதுபதி மண்டபத்தில் இன்று (13/07/2020) தலைவர் கார்மேகம் தலைமையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறக்கட்டளை மூலம் முதியோர் மறுவாழ்வு இல்லம் கட்ட அரசு இடம் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதில் செயலாளர் அன்பழகன், பொருளாலர் முருகேசன், இலங்காமணி மற்றும் நிர்வாகிகள் பால்ச்சாமி, ராதாகிருஷ்ணன், விஜயரூபன், வினோத்குமார், சுந்தர், சண்முகராஜன், விஜயரஜ்,ரவி, ரமேஷ்கண்ணா, […]

கீழக்கரையில் அதிகளவு உலா வரும் சொறி நாய்கள்…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் சொறி பிடித்த வெறி நாய்கள் கீழக்கரை நகர் பகுதியில் முழுவதும் உலா வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிலவி வரும் கரோனா வைரஸ் அச்சத்தை தாண்டி இந்த சொறி நாய்கள் மூலம் வேறு ஏதாவது நோய் தொற்று பரவி விடுமோ என அச்சமும், அதனால் உண்டாகும் அபாயமும், சொறி நாய் கடியினால் உயிர் சேதம் ஏற்படும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால […]

மதுரை மக்கள் நேரடியாக புகார் அளிக்க 94981 12113.. புதிய காவல் கண்காணிப்பாளாரக சுஜித் குமார் பேட்டி..

மதுரை மாவட்ட மக்களுக்கு எனது வாட்ஸ் அப் எண் கொடுக்கப்படும் பொது மக்கள் அதில் புகார் கொடுத்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பொது மக்கள் என்னுடைய 94981 12113 என்ற எண்ணில் தகவல் கொடுக்கலாம். மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளாரக சுஜித் குமார் பேட்டி. மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளரக ( S.P.) சுஜித் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை […]

மதுரையில் காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு தேவை உள்ளது.. அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி…

மதுரையில் காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு தேவை உள்ளது என முதல்வரிடம் அறிக்கை கொடுத்துள்ளோம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி. வட பழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அனைத்து துறைகளையும் […]

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேங்காய் ஏற்றி வந்த டிராக்டர் கண்மாய் கரையில் இருந்து கவிழ்ந்து 8 பேர் படுகாயம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேங்காய் ஏற்றி வந்த டிராக்டர் கண்மாய் கரையில் இருந்து கவிழ்ந்து விழுந்து விபத்து. டிராக்டரில் அமைந்திருந்த 8 பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் கூமாப்பட்டியில் சொந்தமாக தென்னந்தோப்பு வைத்துள்ளார். இவர் இன்று (12/07/2020) காலை தனது தோப்பில் தேங்காய் வெட்டி விட்டு தன் சொந்த டிராக்டரில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு குணவந்தனேரி கண்மாய் கரையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக டிராக்டர் கவிழ்ந்து கண்மாய்க்குள் […]

சிட்டுக்குருவிக்கு கூடு அமைத்து வரும் குடும்பத்தினர்…

சிட்டுக்குருவி சராசரியாக 16 cm நீளமுள்ளதாக இருக்கும். இப்பறவை இனம் 14 முதல் 18 cm வரை நீளமுள்ளதாகக் காணப்படுகிற ஒரு சிறிய பறவையாகும். பெண் குருவிகள் பொதுவாக ஆண் குருவிகளைவிடச் சற்றே சிறியவையாக இருக்கும். உலகின் பல பகுதிகளிலும் சிட்டுக்குருவி எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் சிட்டுக்குருவி ஒரு ஆபத்தின் விளிம்பில் இருக்கும் இனமாகக் கூடக் கருதப்படுகிறது. கைபேசிகளில் இருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு உட்பட சிட்டுக்குருவிகளின் இன குறைவுக்கான பல்வேறு காரணங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. நகர்ப்புற கட்டட […]

இராஜபாளையத்தில் இரண்டாவது ஞாயிறு முழு ஊரடங்கு… மருந்துக்கடைகள் (மெடிக்கல்) உட்பட அனைத்து கடைகளும் அடைப்பு..

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிறும் தளர்வற்ற முழு ஊரடங்கு என தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் மற்றும் கிராமப்பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது .அதில் இன்று மருந்துக்கடைகள் (மெடிக்கல்) சங்கத்தின் சார்பில் இன்று (12/07/2020) அனைத்து  மருந்துக்கடைகளையும் அடைக்க முடிவு எடுக்கப்பட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கின் பொழுது மருந்து வாங்க செல்வதாகக் கூறி சிலர் வெளியே சுற்றி […]

மிரட்டும் கொரொனா மீள உதவும் மூச்சுப்பயிற்சி…

மிரட்டும் கொரொனா மீள உதவும் மூச்சுப்பயிற்சி வகுப்பானது திருச்சி, சண்முகா நகரில் உள்ள இனியன் கார்டன் நலச் சங்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இனியன் கார்டன் நலச்சங்க தலைவர் ஷேக் முகமது அலி தலைமை வகித்தார். அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ஆயுஷ் அமைச்சகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் ஹோமியோபதியில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மருத்துவர் அறிவுரைப்படி […]

கொரோனா தடுப்பு நடவடிக்கை; 3 நாட்கள் தொடர் கடை அடைப்பு-சுரண்டை தொழில் நகரம் வெறிச்சோடியது…

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய நகரங்களில் வியாபாரிகள் தாமாகவே முன்வந்து முழு கடையடைப்பு நடத்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஓத்துழைப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்கள் அதிகமாக நடமாடுவதை தவிர்க்க தென்காசி மாவட்டம் சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர் […]

மண்டபம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதமாக உபகரணங்கள் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலம் இன்று வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து மண்டபம் பேரூராட்சிக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம், கை கழுவுதல் இயந்திரம் வழங்கப்பட்டது. பேரூராட்சி கணக்கு அப்புச்சாமி தெருவில் வசிக்கும் மக்களிடம் வீடு வீடாக […]

கொரோனா..ஊரடங்கினாலும்… பசி அடங்காது… குழந்தைகள் பசி தீர்க்க தேனீர் விற்கும் பெண்…

கொரோனா ஊரடங்கால் தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் வாழ்வாதரத்திற்காக பல்வேறு மாற்று தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன்  ஒரு பகுதியாக மதுரை கரும்பாலை அருகேயுள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்த 26வயதுடைய உம்மசல்மா என்ற பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக வசித்துவரும் நிலையில் கொரோனாவிற்கு முன்பாக வீட்டுவேலைக்கு சென்று மாதந்தோறும் 4ஆயிரம் ஊதியம் பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் 3மாதமாக […]

கீழக்கரை MASA அமைப்பின் தொடரும் சமூக பணி…

கீழக்கரையில் கொரோனோ தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர். இதன் வரிசையில் தொடர்ச்சியாக MASA அமைப்பு பல்வேறு சமூக நலன் சார்ந்த சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (11/07/2020) MASA அமைப்பு சார்பாக மீன்கடை, தச்சர் தெரு, பரதர் தெரு, கஸ்டம்ஸ் ரோடு, sn தெரு, சங்கு குளிக்கார தெரு ஆகிய் தெருக்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வு MASA துணை தலைவர் லுக்மான் தலைமையில் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!