ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றினார்.! இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 76-வது குடியரசு […]
Category: கீழக்கரை செய்திகள்
ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு: குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புனித தளமாக அறியப்படும் ஏர்வாடி தர்கா அமைந்துள்ள ஏர்வாடி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதைத் தொடர்ந்து பொங்கலுக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் எதுவும் முழுமையாக கிராமங்களுக்கு வரவில்லை எனவும் கிராம சபை கூட்டத்தில் கண்டம் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது ஊராட்சி அந்தஸ்து உள்ள […]
கீழக்கரையில் ரத்த தான முகாம் .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்க தலைவர் முகமது நசுருதீன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் காளீஸ்வரன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி , மருத்துவர் அனீஸ் பாத்திமா, அஹமது பசீர்தீன் , கஃபார்கான் ஆகியோர் […]
ராமநாதபுரத்தில் சிறப்பாக பணியாற்றிய சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுச் சான்றிதழ்.!
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ், ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா, அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், தொண்டி காவல் நிலைய […]
தென்காசியில் இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா..
தென்காசி தலைமை மருத்துவ மனையில் இந்திய தேசத்தின் 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். அவர் பேசும் போது, தென்காசி மருத்துவ மனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு […]
சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் கீழச் சுரண்டை பகுதியில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப மையத்தில் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் மாலை நேர வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை ஞான சிகாமணி தலைமை வகித்தார். பகத்சிங் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜெசி வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், இலஞ்சி […]
சூரியன் காணப்படாத தென் மாவட்டங்கள்..
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப் பகுதியில் சற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் வெயில் இல்லாத குளிர்ந்த சூழல், வானம் எப்போதும் மேக […]
தாது உப்புகள் அதிகம் நிறைந்த கடற்பாசிகளுக்கு ஏற்றுமதி தேவை அதிகரிப்பால் இத்தகைய பாசிகள் சந்தைகளில் நல்ல வரவேற்பு : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு.!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் கடற்பாசி வளர்ப்போர் (ம) உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பதற்கான கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆட்சியர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தொழில் மூலம் வருவாய் கிடைக்கிறது. இக்கருத்தரங்கு மூலம் தாங்கள் செய்யும் உற்பத்தியை கடற்பாசியை விற்பனை செய்து தொழில் புரிய முடியும் என அறிந்து கொள்ளலாம். கடற்பாசி சாகுபடியாளர்களுக்கு கடனுதவி […]
அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் பயணிகளை பைபாஸில் இறக்குவதால் அவதி.! மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!!
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு கமுதி அருப்புக்கோட்டை பெருநாழி பசும்பொன் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான அரசு பேருந்துகள் வந்து செல்கின்றது. அவ்வூர்களுக்கு செல்லக்கூடிய கிராம மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் ராமநாதபுரம் வழியாகவும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு […]
பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்; VAO கைது..
தென்காசி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் S.குமாரவேல் (52), த.பெ.சுப்பையா. தனக்கு பூர்வீக பாத்தியமான தனது தந்தையின் பெயரில் உள்ள இராஜ கோபாலப்பேரி கிராம நத்தம் சர்வே எண்.30-ல் உள்ள 1.27 ஏர் பரப்பில் உள்ள வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக 06.01.2025 ஆம் தேதி அன்று குமாரவேல் இராஜகோபாலப் பேரி […]
கடம்பன்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரக் கூடிய மாவட்ட ஆட்சியரிடம் மனு .!
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த கடம்பன்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அதுமட்டுமல்லாது தங்களது கிராமத்தில் உயிரிழந்த நபர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மயான சாலை வசதி இல்லாததால் தனியார் வயல்களுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குறிப்பாக தற்போது விவசாயக் காலம் இறுதி கட்டத்தை எட்டி பயிர்கள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த […]
ராமநாதபுரத்தில் கேண்டி கஃபே திறப்பு விழா.! ராமநாதபுரம் எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு .!!
ராமநாதபுரம் மாவட்டம் பட்டின காத்தான் பகுதியில் திருச்சி செல்லும் இ சி ஆர் சாலை அருகே கேண்டி கஃபே மற்றும் கேண்டி ஆட்டோ மொபைல் சர்வீஸ் திறப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் அபுதாஹிர் ஃபைஜி , முகம்மது அபூபக்கர், ஹசன், ஆரிஃப் , அஹமது அப்துல் காதர் , சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் […]
சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி .!எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு .!!
சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி: எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு, காவல்துறையின் பணியை செய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியின் தலையீடே காரணமாக உள்ளது. பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இன்றைய தமிழ்நாடு மாறியுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதிலும், மக்களை பாதுகாப்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் பல இடங்களில், பெண்களுக்கு […]
அரசு பஸ் டெப்போ அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு பஸ் டெப்போ அமைத்திட வேண்டும் என நீண்ட காலமாக பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தென்காசி தொகுதியின் 10 முக்கிய கோரிக்கைகளில் “சுரண்டையில் பஸ் டெப்போ” என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுரண்டை பகுதியில் பஸ் டெப்போ அமைத்திட ஏதுவாக சுரண்டை அரசு கல்லூரி சாலையில் போதிய அரசு புறம்போக்கு நிலம் உள்ளது எனவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் […]
சுரண்டையில் இருந்து சிறப்பு பேருந்து..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 18.01.2025 அன்று சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பி செல்ல வசதியாக சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நவீன (பக்கெட் சீட்) அரசு போக்குவரத்து […]
சிறந்த மருத்துவ சேவைக்கான விருது பெற்ற தென்காசி தலைமை மருத்துவமனை..
தென்காசி தலைமை மருத்துவ மனைக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சேவைகளில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில், தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து தமிழகத்தில் சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்றாக தென்காசி தலைமை மருத்துவ மனை உள்ளது. இந்நிலையில், கடந்த […]
தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும்; வெதர்மேன் ராஜா தகவல்..
தமிழ்நாட்டில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த வானிலை அறிக்கையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் சாரல் மழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்யும். வறண்ட வாடைக் காற்றின் ஊடுறுவல் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் அதிகரிக்கும். வேலூர், […]
அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) 18வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி துவக்கம்..
இராமநாதபுரம் கீழக்கரையை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும்அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) சார்பாக நடத்துப்ஙனும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி இன்று (14/01/2025) கீழக்கரையில் உற்சாகமாக தொடங்கியது. இந்த போட்டியில் பல் வேறு இடங்களில் இருந்து போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பல விதமான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளையும், தற்காலிக பணியாளர்களுக்கு மஞ்சள் பையில் பொங்கல் பரிசு தொகுப்பினையும் மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் வழங்கினார். மஞ்சள் பை பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் […]
இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம்.!
இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆதித்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் வரவேற்புரை […]