இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர்கள் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு உதவி…

அரசு உதவிபெறும் கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் பயின்று. அரசு சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக அரிசி மற்றும் பருப்பு உணவு வகைகள் 150 மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது. இதில் மாணவர்களின் ஒரு மாத தேவையான அரிசி 3 கிலோ மற்றும் பருப்பு வகை வழங்கப்பட்டது. அத்த்துடன்  இஸ்லாமியா துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி தனலட்சுமி ஏற்பாட்டில், ஆசிரியர்கள் சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் உணவு பொருட்களுடன் தலா 100 ரூபாய் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் […]

தமிழக பாஜக தலைவரை கண்டித்து ராமேஸ்வரம் தீவு வெள்ளாளர் இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்..

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கடந்த சில தினங்களுக்கு முன் குறிப்பிட்ட சில சமூகத்தை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழகம் முழுவதும் வெள்ளாளர் சமூகத்தினர் இடையே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக., தலைவர் முருகனை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  பாஜக தலைவர் முருகனை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ராமேஸ்வரம் தீவு வ.உ.சி. வெள்ளாளர் […]

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் 600 கிலோ பறிமுதல்.. படகு உரிமையாளர் உள்பட 3 பேர் கைது.. வேன் டிரைவருக்கு வலை..

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற சமையல் மஞ்சள் 600 கிலோவை பறிமுதல் செய்த போலீசார் படகு உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்து தப்பியோடிய ஆம்னி வேன் டிரைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மிளகு, மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்கள் கடத்த இருப்பதாக மாவட்ட எஸ்பி., யின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722க்கு தகவல் கிடைத்தது. இதன்படி ராமேஸ்வரம் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் தனிப்பிரிவு […]

கீழக்கரை நகர் கேம்பஸ் ஃப்ரண்ட்‌ ஆஃப் இந்தியா சார்பாக +2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு வாழ்த்து சான்றிதழ்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் கேம்பஸ் ஃப்ரண்ட்‌ ஆஃப் இந்தியா சார்பாக 2019-2020 கல்வியாண்டில் நடத்தப்பட்ட +2 CBSE பொதுத்தேர்வில் 478/500 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியை சார்ந்த நூர் குளோபல் அகாடமி பள்ளியில் பயின்ற நஜிமுல் ஹுசைன் மகன் செய்யது ஃபயாஸ்  என்ற மாணவரை ஊக்குவிக்கும் விதமாக கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த நிகழ்வில்  நகர் தலைவர் காதர் […]

கீழக்கரை வடக்குத் தெரு BA-சகோதரர்கள் குழு சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி..

கீழக்கரையில் பல்வேறு அமைப்புகள் மார்க்கம் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றானர். இந்நிலையில் கீழக்கரை  வடக்குத் தெருவில்  BA-சகோதரர்கள் குழு ஒன்று உதயமாகியுள்ளது. இக்குழு சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக முதலாம் ஆண்டு கேள்வி-பதில் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழே உள்ள GOOGLE FORM LINK மூலம் கலந்து கொள்ளலாம்.  Link: https://forms.gle/zExSaRrnJeZSr9fF9 இந்த கேள்விகளுக்கான பதில்களை  27−07−2020* அன்று இந்திய நேரப்படி இரவு 10மணிக்குள் அனுப்ப வேண்டும். இதில் அனைத்து […]

சிவகாசியில் இரண்டு குழந்தைகள் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்தவர் காளீராஜ் (30), இவரது மனைவி தங்கபுஷ்பம் (25). இவர்களுக்கு மாரீஸ்வரன் (5), காயத்ரி (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவி இருவரும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். காளீஸ்வரன் மது போதைக்கு அடிமையானவர் எனக்கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்து வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பட்டாசு ஆலைகளிலும் சரிவர வேலையில்லாததால், குழந்தைகளுடன் தங்கபுஷ்பம் கடுமையான கஷ்டத்தில் இருந்து […]

கீழக்கரையில் மின்சார உயர்வை கண்டித்து திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்…..

தமிழகம் முழுவதும் மின்சாரம் உயர்வை கண்டித்து திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர கழக செயலாளர் பசீர் அகமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் தலைமையில் 21-வார்டு கிளைச் செயலாளர்கள் முன்னிலையிலும் தமிழகசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்து வார்டு வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவைத்தலைவர் மணிகண்டன், துணைச் செயலாளர் ஜமால் பாரூக்,மற்றும் கென்னடி, பொருளாளர் […]

தென்காசி மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி -மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்…

தமிழகம் முழுவதும் இந்த மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மருந்துக் கடைகள், மருத்துவப் பணி, பால் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, இறைச்சிக் கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தேவையின்றி வாகனங்களில் பயணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. நாளை (20/07/2020) காலை ஆறு மணி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், முக்கிய இடங்களில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு […]

விருதுநகரில் மருந்துக்கடை உரிமையாளரை வெட்டி, பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டை…..

விருதுநகர் கீழக்கடைத் தெருவில் மருந்துக்கடை நடத்திவருபவர் ரமேஷ்(62). மருந்துக்கடையுடன் நோட்டுகள், பேனா, பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்து வருகிறார். தற்சமயம் விருதுநகர் மாவட்டத்தில் மூன்று மணி வரை மட்டுமே கடைகள் திறப்பது என்ற வணிகர் சங்க அறிவிப்பின்படி ரமேஷ், மதியம் கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த நபர் நோட்புக் வேண்டும் என்று கேட்டுள்ளார். பூட்டிய கடையை ரமேஷ் திறந்து கொண்டிருந்த போது, அந்த மர்ம நபர் ரமேஷின் பின்பக்கமாக நின்று கொண்டு, அவரின் தலையின் பின் […]

ஆடி அமாவாசை முன்னிட்டு வைகை, காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் பொதுமக்கள் கூடினால் நடவடிக்கை..

சிவகங்கை மற்றும் திருச்சியில் அமாவாசையையொட்டி .காவிரி வைகை கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னோர்களுக்கு, தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது எனவும் கூறினார். இதேபோல், மதுரை மாவட்டம் திருவேடகம் வைகை ஆற்றங்கரையிலும், ஆடி அமாவாசையன்று பொதுமக்கள் கூடக்கூடாது எனவும், போலீஸார் எச்சரிகை அடங்கிய பதாதகைகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். இதேபோல், சிவகங்கை மாவட்டம், திருபுவனத்திலும் வைகை ஆற்றில் தர்ப்பணங்கள் […]

மதுரையில் இன்று முழு ஊரடங்கு, இறைச்சிக்கடை, கடைகள், பெட்ரோல் பங்க் வரை விடுமுறையால் வெறிச்சோடியது….

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 24-ஆம் தேதி 14.7 – 20 முதல்வரை ஊரடங்கு அமலில் இருந்தது 15-7-20 தேதி முதல் சில தளர்வுகள் மதுரை மாவட்டத்திற்கு அறிவித்துள்ளது சில இந்திலையில், இந்த நோய் ஒரளவு குறைந்திருந்தாலும் நோய்த்தொற்று முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் மேலும் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு […]

இப்படியும் நல்லுள்ளங்கள்… தேவையுடையோரை கண்டறிந்து உதவும் பெண் காவல் ஆய்வாளர்..

பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்களை வழங்கி கவனித்து வரும் மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கலைவாணிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்ளனர். அப்பெண் காவல் ஆய்வாளர் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு பகல் பாராது செய்து வருகிறார். பார்வையற்றோர்களுக்கு மட்டுமல்லாமல்  மாற்றுத்திறனாளிகள்,  மிகவும் ஏழ்மையான அப்பகுதியில் வாழும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். மேலும் இவரது காவல் […]

நெல்லையில் கொரோனா தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு..

நெல்லையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார்.நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு […]

செக்கானூரணி அருகே கிணற்றில் விழுந்த காளை..2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்பு துறையினர்..

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கிண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், இவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து வருகிறார். வெற்றிவேல் வயலில் இன்று (18/07/2020) மதியம் கிணற்றின் அருகே காளைக்கு உணவு வைத்துவிட்டு காளையின் கயிற்றை சரியாக கட்டாமல் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் காளை அருகே இருந்த 60 அடி கிணற்றில் 20 அடி தண்ணீரில் தவறி விழுந்துள்ளது, காளையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திருமங்கலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருமங்கலம் தீயணைப்பு […]

கொரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு அதிமுக சார்பில் உதவி..

கொரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வெள்ளம்பி மலை கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அதிமுக சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் ஊரடங்கால் ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்படையாமல் இருக்கும் […]

கொரோனாவால் உயிரிழ்ந்த ராஜ் டிவின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் நினைவஞ்சலி மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்வு..

கொரோனாவால் உயிரிழ்ந்த ராஜ் டிவின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் நினைவஞ்சலி மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்வு 16/7/2020 அன்று தேனாம்பேட்டையில் உள்ள ராஜ் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. வேல்முருகன் குடும்பத்தினர் சார்பாக அவரது மனைவி சண்முகசுந்தரி, மகன் ஜீவா, மாமனார் சிவா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த வேல்முருகன் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ராஜ் குழுமத்தின் […]

புறநகர்ப் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பேரூந்து பணிமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்..

புறநகர்ப் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பேரூந்து பணிமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு பெட்ரோல் குண்டு அல்லது வெடிகுண்டு வீசக்கூடும் என மர்மநபர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், […]

கீழடி அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆயுத்த பணிகள் தீவிரம்..

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று அகழாய்வுகள் இந்திய தொல்லியல் துறை மூலமாக நடைபெற்று வந்த நிலையில் 4, 5 ஆம் கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல் துறையால் நடத்தப்பட்டது. தற்போது பிப்ரவரி 19ம் தேதி முதல் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கொந்தகை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, […]

திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் மேலும் எலும்பு கூடுகள்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகையில் நடைபெற்று வரக்கூடிய அகழாய்வுப் பணிகளில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளின் எலும்பு கண்டறியப்பட்டன, இந்த நிலையில் தற்போது கூடுதலாக மூன்று குழந்தைகளுடைய எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை சார்பாக  கீழடி ,கொந்தகை, மணலூர் , அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகை யில் நடைபெற்ற வரக்கூடிய அகழாய்வுப் பணிகளில் ஏற்கனவே முதுமக்கள் தாழிகள் எலும்புக்கூடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இரண்டு குழந்தைகளின் எலும்புக் […]

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலருக்கு கொரோனா.. 3 நாள் விடுமுறை..

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழகம் 3 நாட்கள் முழு விடுமுறை அறிவித்து சுற்றறிக்கை. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் முழு அரங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடித்த போதிலும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!