மதுரையிலிருந்து ஈ-பாஸ் இல்லாமல் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. அமோக வியாபாரம்… ஆடியோ ஆதாரம்..

மதுரையிலிருந்து சென்னை போகணுமா கவலைய விடுங்க ஆதார் கார்டு எல்லாம் வேண்டாம் 2000 ரூபாய் பணம் கொடுத்தால் போதும் இ பாஸ் இல்லாமல் சென்னை சென்று விடலாம். கொரோனா வைரஸ் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருப்பது அனைவரும் அறிந்த விசயம்.  ஆனால் மதுரையில் பல தளங்களில் அலைபேசி எண்களுடன் வெளியூர் செல்ல விளம்பரம் செய்து அமோகமாக தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தினசரி சென்னை,  பெங்களூர் கோவை […]

கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியினர் நவாஸ்கனி எம்.பி சந்திப்பு…

கீழக்கரை சிறுத்தை கட்சியினர் மரியாதை நிமித்தமாக K.NavasKani MPஐ சந்தித்து பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, கீழக்கரை நிலவரங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது கீழக்கரை  நகர் செயலாளர் பாசித் இல்யாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பலர் உடனிருந்தனர்.

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஹஜ் பெருநாள்…

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். அதைத் தொடர்ந்தது துல்ஹஜ் 10 பிறையில் தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (01/08/2019) இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்று காரணமாக பொதுமக்கள் கூடுதலுக்கு தடையிருப்பதால், பொதுமக்கள் தன் குடும்பத்தாருடன் வீடுகளில் நண்பர்களுடன் சேர்ந்து பெருநாள் தொழுகை நடத்தினர்.

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக தேவையுடையோருக்கு பெருநாள் பொருட்கள்..

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக வடக்குத்தெருவில் மிகவும் வறுமையான குடும்பங்களைக் கண்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் முறையே “ரமலான் பெருநாளில் ஆட்டிறைச்சியும்”,  பக்ரீத் பெருநாளில் மளிகைப்பொருள்கள் அடங்கிய  தொகுப்புகள்  வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஹஜ் பெருநாளைக்கு  13 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  மளிகை பொருட்கள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல் இன்று (31/07/2020) அரஃபா தினத்தையொட்டி மாசா, நாசா போன்ற அமைப்பினர் நோன்பு கஞ்சி வினியோகம் செய்தது குறிப்பிடதக்கது.

வளைகுடா நாடுகளில் ஹஜ் பெருநாள்..

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையான ஹஜ் பெருநாள் இஸ்லாமிய மக்களால்ன்று (31/07/2020) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தர், பஹ்ரைன் மற்றும் பல வளைகுடா நாடுகளில் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியா ரியாத், தம்மாம் மாநகரிலும் கீழக்கரை மக்கள் பெருநாளை கொண்டாடினர். அதே போல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் கீழக்கரை மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் தொழுகையை நிறைவேற்றினர்.

கீழக்கரை மாணவர்களுக்கு ஒரு படிக்கட்டு “Centre For Career Enrichment”..

கீழக்கரை பள்ளி மாணவர்கள் அடுத்த கட்ட படிப்பை தொடர சரியான பாதையை தேர்ந்தெடுத்து செல்ல Centre For Carrer Enrichment என்ற திட்டத்தை துவங்கி அதன் மூலம் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு  மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 5ம் தேதி 04.30 மணி முதல் 06.00 மணி வரை ONLINE PSYCHOMETRIC & TALENT HUNT […]

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மாசா சமூகநல அமைப்பு இணைந்து கபசுர குடிநீர் விநியோகம்…

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மாசா சமூக நல சங்கம் இணைந்து கீழக்கரை நகர் பகுதியில் கபசரகுடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ரோட்டரி சங்கத்தின் பட்டயத்தலைவர் டாக்டர் அலாவுதீன் முன்னிலையில், ரோட்டரி சங்கம் தலைவர் மூர் ஹசனுதீன்,  மாஸா சங்கத்தலைவர் அகமது முகைதீன் தலைமையில் நடைபெற்றது.. இதில் ரோட்டரி சங்கம் செயலாளர் ஜெ.எபன் பிரவின் குமார், பொருளாளர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசீக்தீன், டாக்டர் சுந்தரம், முன்னாள் செயலாளர் ஹஸன், செல்வநாரயணன், பிர்தோஸ்கான், தவமணி, சிவகார்த்திக், மாஸா […]

கவுன்சிலர் வீட்டில் 6அடி மலைப்பாம்பு மீட்ட வனத்துறையினர்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் அப்பாஸ் என்பவர் வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உள்ளது என வனத்துறை இருக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த மதுரை மாவட்ட மேலூர் வனவர் கம்பக் குடியான் தலைமையிலான வனத்துறையினர் கவுன்சிலர் அப்பாஸ் என்பவர் வீட்டில் உள்ள சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து  கிளூவமலை காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. சுமார் 6 அடி […]

திருப்பத்தூர் அருகே மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரைக்குடி சாலையில் தனியார் அறக்கட்டளைக்கான தோட்டம் உள்ளது. அதில் ஏராளமான புள்ளிமான்கள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. இப்பகுதியில் புள்ளிமான்கள் ரோட்டை கடக்கும் போது வாகனங்களில் அவ்வப்போது அடிபடுகிறது. இந்நிலையில் தனியார் தோட்ட காவலர் புள்ளிமான் கதறல் சப்தம் கேட்டு பார்த்த போது புள்ளி மான்குட்டி ஒன்றை மாலைப்பாம்பு பிடித்து இருப்பதை பார்த்து காப்பாற்ற முயன்றார். இதனையடுத்து திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மானைமலைப்பாம்பிடம் இருந்து […]

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளுக்கு மாசா சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து..

கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி மாசா சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மக்தூமியா மேல்நிலைப்பள்ளியின் சார்பாக தாளாளர் இப்திகார்ஹசன் மற்றும்   மாசாவின் செயலாளர் சிராஜ்தின் ரோட்டரி சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹசனுதீனுக்கு பொன்னாடை போர்த்து கவுரவித்தனர். அதை தொடர்ந்து மாசாவின் தலைவர் அகமது முகைதீன் ரோட்டரி செய்லாளர் எபன் பிரவின் குமாருக்கு பொன்னாடை போர்த்து கவுரவித்தார். இதில் நிர்வாக குழு உறுப்பினர் ஹாஜா அலாவுதீன் மற்றும் […]

கீழக்கரை ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் (2020-21)புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசாங்கத்தின் விதிமுறையின் படி நடைபெற்றது. ரோட்டரி சங்கத்தின் பட்டயத்தலைவர் டாக்டர் அலாவுதீன் முன்னிலையில் முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா புதிய நிர்வாகிகள்  தலைவராக மூர் ஹசனுதீனும், செயலாளராக எபன் பிரவீன் குமாரும் மற்றும் நிர்வாகிகளை  பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். துணை ஆளுநர் டாக்டர் பாலசந்திரன் புதிய உறுப்பினரை அறிமுகம் செய்து வைத்தார்கள்.சிறப்பு அழைப்பாளாராக […]

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தமுமுக.. மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்..

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களின் உத்தரவின் அடிப்படையில் கொரோனா தொற்றல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை சாதகமாக பயன்படுத்தி ஏழை எளிய நாட்டு மக்களுக்கும்  விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவர முயல்கிறது. மின்சார திருத்த சட்டம் , அத்தியாவசிய  பொருட்கள் திருத்த சட்டம்,  வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர […]

பெரியபட்டினத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்..

கொரோனா தொற்றின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தைச் சேர்ந்த 50 வயது நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்தனர். அடக்கதின்போது பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்களுடன் பெரியபட்டினம் வளர்ச்சி குழுவின்(PDT) நண்பர்களும் உடனிருந்தனர்.

ஆன்லைன் வியாபாரம்… டெலிவரி ப்ளாட்ஃபார்ம்…. குழப்பமும்… விளக்கமும்..

வளர்ந்து வரும் வியாபார உலகில் மின்வணிகம் (E-commerce) என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம்.  பொதுவாகவே எந்த ஒரு புதுவகையான விஞ்ஞான வளர்ச்சி அறிமுகம் ஆகும் பொழுது அதன் நன்மைகளை வைத்து நன்மையடைவதை விட, தவிர்க்க கூடிய பாதகங்களை முன்னிருத்தி எதிர்ப்புகள் வந்து பிறகு அதே ஒரு தவிர்க்க முடியாத விசயமாக மாறுவதை நாம் பார்த்து வருகிறோம். அதற்கு உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு திரைப்படங்கள் திரையரங்குகள் தவிர்த்து OTT என்ற அடிப்படையில் ஒளிபரப்பும் முறையை […]

மதுரையில் அண்ணன் தம்பி இருவரையும் முன் விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை..

மதுரை போடி லயன் பழைய காலனி பகுதியில் வெள்ளி கண் செந்தில், முருகன் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் இதே பகுதியில் வசித்து வருகின்றனர் இருவரும் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தத்தனேரி பகுதிக்கு சென்று மீண்டும் இவர் குடியிருக்கும் போடி லயன் பழைய காலனி பகுதிக்கு வரும் பொழுது பத்து பேர் சூழ்ந்து கொண்டு இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் அறிந்த எஸ்எஸ் காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

கீழக்கரை நியாய விலை கடைகளில் பச்சரிசி வழங்காததால் பொதுமக்கள் அவதி..

கீழக்கரை நகராட்சி பகுதியில் சுமார் ஒன்பது நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் அரசின் நியாய விலை பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் கடைசி தேதி ஆகியும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி வழங்கப்படாததால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றார்கள். இது சம்பந்தமாக பழைய குத்பா பள்ளி தெருவைச்சேர்ந்த முகம்மது இஸ்மாயில் கூறுகையில் தற்போது கொரோனா தொற்று பிரச்சினையில் பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில் கீழக்கரையில் இருக்கும் நியாய […]

கொரோனா நிவாரண நிதி பெறாத மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் பெற சிறப்பு முகாம்…

தமிழக அரசின் ஆணைப்படி, தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை அசல் வைத்துள்ள நபர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. பணம் வழங்கும் பட்டியலில் பெயர் இருந்தும், ஆனால் அடையாள அட்டை அசல் இல்லாத நபர்கள் இந்த நிவாரண தொகையை பெற முடியாத நிலை இருப்பதால், அவர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில், மருத்துவர் மூலம் மருத்துவ சான்றிதழ் வழங்கி […]

நான்கு மாதங்களாக சீரமைப்பு செய்யப்படாத கால்வாய் பள்ளங்கள்….மெத்தன போக்கில் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள்…

கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா அருகில் பிரதான சாலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு இந்த பகுதியில் இருக்கும் கழிவு நீர் அடைப்பை சீரமைப்பு செய்ய இந்த இடத்தில் நான்கு மாதங்களுக்கு முன் கீழக்கரை நகராட்சி ஊழியர்களால் பள்ளங்கள் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்கள் இது வரை சீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதால் அடிக்கடி இந்த பள்ளங்களில் இருந்து கழிவு நீர் வழிந்து ஓடி இந்த பகுதி சுகாதார இன்றி காணப்படுகின்றது. இந்த பள்ளத்தில் கடந்த […]

ரயில் இன்ஜின் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி …..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் அருகே இன்று காலை 11.30 மணி அளவில் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடப்பதாக மதுரை ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவரின் அடையாளங்கள் கண்டறியப்படவில்லை. விபத்தில் […]

கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் இஸ்லாமிய நூலகம் திறப்பு விழா..

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கடந்த 7ஆண்டுகளாக அவசர இரத்த தான சேவை, இலவச முகாம்கள், கல்வி உதவி திட்டம், மருத்துவ உதவி திட்டம் போன்ற பல சமுதாய மற்றும் மார்க்கப் பணிகளை சிறப்பாக செய்து வரும் இஸ்லாமிய கல்விச் சங்கம், தற்போது கீழக்கரை பகுதியில் உள்ள மதரசா மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இஸ்லாமிய நூலகம் சங்க அலுவலகத்தில் இன்று (23/07/2020) வியாழக் கிழமை 04:30 மணி அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!