கொரோனா தயவால் பணத்தில் புரளும் தனியார் மருத்துவமனை…அதிகமில்லை 11 நாளுக்கு 6.50 லட்சம்…

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் நிலையில் தற்போது வரை அதற்கான தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சில தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் தினமும் கோடிக்கணாக்கான வருவாய் பார்த்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதற்கு மதுரையில் 11 நாள் கொரோனா சிகிச்சைக்கு 6.50லட்சம் வரை வசூலித்துள்றனர்.  கொரோனாவின் விபரீதம் உயிரிழப்பு என்பதால் நோயாளிகளும் தேவையான பணத்தை தயக்கமின்றி கொடுத்துவருவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மனம் […]

திருப்பரங்குன்றத்தில் சமூக இடைவெளி காற்றில் பறந்த கந்தசஷ்டி கவசம் பாடல் நிகழ்ச்சி..

திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வேல் பூஜை கற்தசஷ்டி கவசம் பாடிய நிகழ்சியில் சமூக இடைவெளியின்றி 500 பேருக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட  மாநில நிர்வாகி சீனிவாசன் தற்போது கொரானா தொற்றிவிருந்து விடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து திருப்பரங்குன்றம் கோவில் முன்பு பாஜக சார்பில் வேல் பூஜை நடத்தி , பெண்கள் கந்த சஷ்டி கவசம் பாடி விளக்கு ஏற்றி வழிபாடு […]

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் அனைத்துத்துறை போராளிகளையும் கௌரவிக்கும் வகையில் போலீஸ் பேண்டு வாத்திய நிகழ்ச்சி..

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்திலின்படி மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சம் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து சுதந்திர தின முன்னோட்ட நிகழ்வாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் அனைத்து துறை போராளிகளை கௌரவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் இந்திய சுதந்திர போராட்டத்தில் இடம் பெற்ற பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நேரடி ஒளிபரப்பாக இந்திய ராணுவம்,  கப்பல் படை,  விமானப்படை மற்றும் காவல் துறையினர் பங்குகொள்ளும் […]

பல வருட குப்பை கிடங்கை அகற்றும் முயற்சியில் கீழக்கரை SDPI கட்சி..

கீழக்கரை  கிழக்குத் தெரு 3வது வார்டில் உள்ள குப்பை கிடங்கில் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு, இதனால் அருகில் உள்ள இடங்கள் மாசுபட்டு மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு குப்பைகளை முற்றிலுமாக அகற்றி விட்டு பூங்கா கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதி சிறிது சுத்தம்  செய்யப்பட்டது, […]

கீழக்கரை அருகே மதுபோதையில் இளைஞர் கொடூர கொலை…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்ன மாயாகுளத்தை சேர்ந்த அருள்மணி மகன் எடிசன் 23 என்பவர்  இரவு நண்பர்களுடன் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் உள்ள கருவை காட்டிற்குள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். பின்பு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் காரணமாக எடிசன் என்பவரை அவரது கூட்டாளிகள் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடியுள்ளனர். இது சம்பந்தமாக காலை 9 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து கீழக்கரை துணை கண்காணிப்பாளர் […]

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்..

சோழவந்தான்  பகுதியில் கஞ்சா  விற்பனையாகி வருவதாகவும், இதனால்  சிறார்கள் சீரழிந்து வருவதாக  இப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதன்பேரில் போலீசார்  நடவடிக்கை எடுத்து வந்தனர் சோழவந்தான் பகுதிஅருகே  கஞ்சா மொத்தமாக விற்பனை பரிமாற்றம் நடப்பதாக  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோழவந்தான் பகுதியில் போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியதில் திருவேடகம் புதுப்பாலம் டாஸ்மார்க் கடை முன்பாக கஞ்சா மொத்தமாக விற்பனை பரிமாற்றம் செய்தபோது சோழவந்தான் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் அவர்களிடமிருந்து […]

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நகர கழக செயலாளர் பசீர் அகமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் தலைமையிலும் 21-வார்டு கிளைச் செயலாளர்கள் முன்னிலையிலும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மேலும் 7வது வார்டு கிழை கழக சார்பில் நகர் பொருளாளர் சித்திக் தலைமையிலும் நகர மாணவரணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன் முன்னிலையிலும் ஏழாவது வார்டு குறிப்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப்பள்ளி அருகில் கலைஞரின் நினைவஞ்சலி […]

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விநியோகம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் யூத் லீக் சார்பாக கீழக்கரை நகர்அலுவலகம் முன்பு நகர் தலைவர் எஸ். சேகு ஜமாலுதீன் ஏற்பாட்டில். முன்னாள் நகர செயலாளர் A.Q.செய்யது இபுராஹிம், தலைமையில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டன. இதில் துணைத்தலைவர் கமர்சமான், நகர செயலாளர் ஏ.எம்.எஸ் ஹபீப் முஹம்மது தம்பி, துணைச் செயலாளர் முஹம்மது ஹஸன், நகர பொருளாளர் முஸ்தபல் அமீன், யூத் லீக் மாவட்ட செயலாளர் N.நெய்னா […]

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே மலையடிவார கால்வாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிம்போ பறிமுதல்… ஓட்டுநர் தப்பி ஓட்டம்…

கன்னியாகுமரி மாவட்டம் வனத்துறைக்கு உட்பட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் மருங்கூர் அருகே வனத்துறை எல்லைக்கு உட்பட பகுதிகளில் சமூக விரோதிகள் கால்வாயிகளில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து மருங்கூர் கால்வாய் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் கால்வாயில் சட்டவிரோதமாக டிம்போவில் மணல் அள்ளி கொண்டு இருந்த டிம்போவை மடக்கி பிடித்தார்கள். ஆனால் வனத்துறையினரை கண்டதும் டிம்போ […]

கன்னியாகுமரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபசாரம். பெண் உள்பட இருவர் கைது..

சர்வதேச சுற்றுலா ஸ்தலமான  கன்னியாகுமரியில் ஏராளமான மசாஜ் செண்டர்கள் உள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி அருகே தெற்குகுண்டல் பகுதியில் பொது மக்கள் அதிகம் வசிக்கும் பிஸ்மி நகரில் பிளாக் மூன் என்ற பெயரில் ஒரு மசாஜ் செண்டர் இயங்கிவருகிறது ஊரடங்கு காலத்தில் அணைத்து ஹோட்டல்கள் தங்கும் விடுதிகள் செயல் படகூடாது என அரசு அறிவிப்பு இருக்கும்நிலையில் அதை பொருட்படுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக இந்த மசாஜ் பாலியல் தொழில் நடைபெறுவதாக அந்த ஊர்பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில் போலீசார் […]

கண்டெடுத்த பணத்தை நல்லுள்ளத்துடன் திருப்பியளித்த அன்புள்ளம்..

கடந்த இரு நாட்களுக்கு முன் கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ₹50564/ பணத்தை செலுத்த இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சம்பந்தப்பட்ட நபர் அத்தொகையை தொலைத்து விட்டார். இந்நிலையில் அய்யூப் கனி என்பவர் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் பணத்தின் உரிமையாளரை கண்டறிந்ததில் அப்பணம் யூசூப் சுலைஹா மருத்துவமனைக்கு சொந்தமான பணம் என்பது உறுதியானது. உடன் அய்யூப் கனி அவர்களுக்கு தகவல் தந்ததின் பேரில் பணம் எவ்வளவு, என்னென்ன ரூபாய் நோட்டுகள் என்பதை அறிந்து பணம் ₹54,564/த்தை யூசுப் […]

நெல்லையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறவழி ஆர்ப்பாட்டம்…

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (05/08/2020) தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ▪️பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். ▪️காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும். ▪️முத்தலாக் தடைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். ▪️பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட […]

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஒபுளாபடித்துறை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்!

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 5 நாடு தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பாபரி மஸ்ஜிதை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது உலகளவில் இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்பதால், மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை […]

கீழக்கரை SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஆளும் கட்சியினரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த்ஆர்ப்பாட்டத்தில்  470 ஆண்டுகால பாபரி மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நடுவதை கண்டித்தும்,  முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டியும்,  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க கோரியும்,  கொரனாவை பயன்படுத்தி பொருளாதார சீரழிவை மறைப்பதை கண்டித்தும்  கீழக்கரையில் 11 கிளைகளிலும் 500 பிளாட் எண் 12 கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப் பள்ளியில் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள் 1முதல் 8 ஆம் வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்கப்பட்டன. இதில் மஹ்தூமிய கல்விக்குழு தலைவர் ஆடிட்டர் பஷீர்,பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் அபுதாஹிர், மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் S.இப்திகார் ஹசன், தொடக்கப் பள்ளியின் தாளாளர் மீராசாஹிப், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் மூர் ஹசனுதீன், பழைய குத்பா ஜமாஅத் பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன், மேல்நிலைப்பள்ளி […]

இராமநாதபுரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம்.. வருவாய் ஆய்வாளர் கைது ..

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பூந்தோண்டியை சேர்ந்த விவசாயி சோமு. இவர் சமீபத்தில் இறந்தார். உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளியான சோமுவின் இறப்பிற்கு  அரசு வழங்கும் ஈமச்சடங்கு ரூ.20 ஆயிரம் பெற சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை சோமு மனைவி சேது, அவரது உறவினர் தனசேகரன் அணுகினர். நிவாரணத்திற்காக சேது சமர்ப்பித்த விண்ணப்பத்தை அலுவலக இளநிலை வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரன் ஏற்றுக்கொண்ட நிலையில். விண்ணப்பத்தை தாசில்தாருக்கு அனுப்பி நிவாரணம் பெற்றுத் தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டு […]

தொடர் மணல் கொள்ளை.. கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்… விழும் அபாயத்தின் உயர்மின் அழுத்த கம்பிகள்..

மதுரை மாவட்டம் விளாச்சேரி முனியாண்டி புரம். மாடக்குளம் செல்லும் சாலையில் கபாலி அம்மன் கோவில் மலையின் கீழே தினசரி இரவு நேரங்களில் ஜேசிபி எந்திரம் கொண்டு மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் வருவாய் துறை மற்றும் வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் மணல் எடுக்கப்பட்டு வரும்  பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடம் எனவும், இந்த பகுதியில் அதிக அளவில் முயல் மற்றும் மயில்கள் […]

தியாகத் திருநாள் கொண்டாட்டத்தை தியாகம் செய்து சமூக பணியில் ஈடுபட்ட SDPI கட்சியினர்..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர் கொரானா பரிசோதனை உறுதி செய்யப்படாத நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மரணமடைந்தார்.  எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இறந்தவரின் உறவினர்கள் உதவி கோரினர். எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி உடலை பெற்றுக்கொண்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, வடக்கு தொகுதி இணை […]

மதுரையில் கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..

கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரையில்  நாளை (02/09/2020) முழு ஊரடங்கு பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுதப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாத்ம் உள்ள  5  ஞாயிறகளும் எவ்வித தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் நாளை (02/08/2020) முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வுகள் இன்றி  உத்தரவை […]

கன்னியாகுமரி பகுதியில் கொரோனா தடையினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தனியார் மருத்துவமனை சார்பாக நிவாரணம்..

கொரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வெள்ளாந்தி மலை கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300 க்கும் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தெரிசனங்கோப்பு சந்திரா மருத்துவமனை நிர்வாகம் சார்பாக டாக்டர் மகாதேவன் பிள்ளை, அவரது மனைவி அட்வகேட் ரூபா மற்றும் மூன்று குழந்தைகளுடன் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான 5 கிலோ அரிசி மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!