கீழக்கரை, இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் 74வது சுதந்திர தின விழா இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி கடைபிடிடக்கப்பட்டு நடைபெற்றது. இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபெல் ஜஸ்டஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவியும், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக மருத்துவம் பார்த்துவரும் டாக்டர் இந்துஜா தேசியக்கொடி ஏற்றினார். இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முஹம்மது முஸ்தபா நன்றியுரை நல்கினார் […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரையில் உள்ள புதுக்கிழக்கு தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் 3வது வார்டுக்கு உட்பட்ட புது கிழக்குத் தெருபகுதியில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் குப்பை மறுசுழற்சி உரம் தயாரிக்கும் அரசு கிடங்கை அகற்ற கோரியும் மீண்டும் கீழக்கரை பகுதிகளில் மதுபான கடை திறக்கக்கூடாது என்று கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது தலைமையில் மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். உடனடியாக […]
கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொடர் இரத்த தான முகாம்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சர்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கொரோனா பேரிடர்கால 25 வது இரத்ததான முகாம் 15.8.2020 அன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் துவக்கிவைத்தார். மாவட்ட செயலாளர் J.M.ஆரிப்கான் மற்றும் கீழக்கரை ஐந்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 30 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததை தானமாக வழங்கினார்கள். கீழக்கரை தெற்குகிளை மருத்துவ அணி செயலாளர் சிஹாப் […]
கீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின விழா..
இந்திய தேசத்தின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் மேற்குத் தொகுதி கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் வள்ளல் சீதக்காதி சாலை ஜூம்-ஆ பள்ளி முன்புறம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் கீழக்கரை நகர் தலைவர் அஹமது நதீர் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர் இணைச் செயலாளர் தாஜூல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய தேசத்தின் மூவர்ணக் தேசியக் […]
கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுதந்திர தின விழா..
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் சுதந்திரதின விழா சிறப்பாக எளிய முறையில் கொண்டாடப்பட்டது. கொடியினை ஜமாத் தலைவர் ஏற்றி வைத்து சிறப்புறை ஆற்றினார்.
கீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா..
கீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் A.அஸ்கர் அவர்கள் மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியில் N.முகம்மது ஹனிபா தேசிய கொடியினை ஏற்றினார். மஹ்தூமியா தொடக்க பள்ளி தாளாளர் மீரா சாகிபு மஹ்தூமியாமேல் நிலைப்பள்ளியின் தாளாளர் S.இப்திஹார் ஹசன், மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. முகம்மது ரிஸ்வானா,மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.கிருஷ்ணவேணி மற்றும் ஜமா அத் தலைவர் S.செய்யது அபுதாஹிர், ஜமா அத் பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன் மற்றும் ஜமா […]
கீழக்கரை MASA அமைப்பு சார்பாக சுதந்திரதின விழா..
ஆகஸ்ட் 15 நமது தாய் திருநாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை MASA சமுக நல அமைப்பு சார்பாக மாசாவின் தலைவர் அகமது முகைதீன் தேசிய கொடியை ஏற்றினார். அரசு வழிகாட்டுதலின்படி தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து இந்த நிகழ்வு நடைபெற்றது.மாசாவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராஜபாளையத்தின் அடையாளங்களில் ஒன்றான பண்ணையார் ஆர்ச் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது….
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாகவும், ஊரின் அடையாளமாகவும் இருந்து வந்தது பண்ணையார் ஆர்ச் என்ற சுதந்திர நினைவு சின்னம். கடந்த ஆண்டு கனரக வாகனம் மோதி, இந்த நினைவு வளைவு சேதமடைந்தது. சேதமடைந்த நினைவுச்சின்னத்தை ராஜபாளையம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். பல மாதங்களாக நடந்த பணிகள், பல லட்ச ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த பண்ணையார் ஆர்ச் என்ற சுதந்திர […]
கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இரத்த தான முகாம்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் வழிக்காட்டுதலின் படி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் கொரோனா பேரிடர் கால இரத்ததான முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு இரத்ததான முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]
தீடீரென தீப்பற்றிய சாலையில் சென்ற கார்..
சிவகங்கையை சேர்ந்த ராஜசேகரன் இவருக்கு சொந்தமான ஹூண்டாய் I .10 காரில் காளவாசலில் இருந்து புது ஜெயில் ரோடு வழியாக வந்து கொண்டிருந்த பொழுது கரிமேடு மீன் மார்க்கெட் அருகே வரும்போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்து காரை மளமளவென எரிய ஆரம்பித்தது. உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் நி்லைய தீயணைப்பு குழுவினர் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். […]
கீழக்கரையில் நாளை (13/08/2020) – வியாழக்கிழமை மின் தடை..
கீழக்கரையில் (13/08/2020) – வியாக்ழகிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கீழக்கரை நகர், பாலிடெக்னிக், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய முறையில் சீரமைப்புப் பணிகள் – முழுவீச்சில் தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..
மன்னர் காலத்துப் பாரம்பரிய முறையில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. சில மாதங்களில் அரண்மனை மிகப் பொலிவுடன் தயாராகிவிடும். மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த தலமாகும். ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் அடிப்படையில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் ரூபாய் 3கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகின்றன. இந்தோ சாராசானிக் என்று சொல்லப்படுகின்ற இந்திய, […]
74வது சுதந்திரதினத்தை ஒட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாளை (13/08/2020) இரத்த தான முகாம்..
ஆகஸ்ட் 15ம் தேதி, 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக 20வது இரத்த தான முகாம் கொரோனோ பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது. தவ்ஹீத் ஜமாத் சார்மாக தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம் நாளை (13/08/2020) கீழக்கரை கிளை சார்பாக காலை 10.00 மணி முதல் மாலை 01.00 மணி வரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் சக்தியுள்ள அனைவரும் கலந்து கொண்டு தேவையுடையோருக்கு உதவும் வகையில் […]
International Sports Star Award விருதை வென்ற மதுரை மாணவன் ஜெ. அதீஸ்ராம்..
2020ம் National Sports & Physical Fitness Board “International Sports Star Award” விருதை மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஜெ.அதீஸ்ராம் (10வயது) வென்றுள்ளார். இந்த விருதை ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்ட National Sports & Physical Fitness Board அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தேசிய, சர்வதேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறார்கள். பல பிரிவுகளை உள்ளடக்கிய விருது பிரிவு பட்டியலில் சர்வதேசிய விருதுக்கான பிரிவில் தமிழகத்தை […]
கீழக்கரை கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் நாட்டுப்படகு தொழிலாளர் சங்கம் இணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் சங்கம் இணைந்து அனைவருக்கும் கொரோணா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும். தொழிலாளர் நல சங்கத்தை முடக்குவது கண்டித்தும் பொதுத்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து கீழக்கரை இந்து பஜார் மற்றும் முஸ்லிம் பஜார் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கருப்பசாமி, மகாலிங்கம், மாரியப்பன், வரகுண சேகரன், முகைதீன் அப்துல் காதர், முருகன், சுப்புராம், அழகர்சாமி, ராமு, […]
கீழக்கரை நகராட்சியில் மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு சகாயம் IAS வழிகாட்டுதலின் படி இயங்கும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர் மூவிந்தராஜ் தொடங்கி வைத்தார், வாகன ஓட்டுனர் நலச்சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், மக்கள் பாதை கீழக்கரை நகர் பொறுப்பாளர் மணிகண்டன் முன்னிலையில் மக்கள் பாதை உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
இராமநாதபுரத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் EIA 2020 போன்ற கருப்புச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரத்தில் இன்று (11/08/2020) பாரதி நகரில் பகல் 11 மணி அளவில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் EIA2020 போன்ற கருப்புச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் பேரவைத் தலைவர் நாகேசுவரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். முருகபூபதி , திமுக மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கே.ஜே. பிரவீன், வீரகுல தமிழர் […]
இன்று (11/08/2020) கிருஷ்ணஜெயந்தி… குழந்தைகளுக்கு கிருஷ்ண வேடமிட்டு கொண்டாட்டம்..
இன்று 11/08/2010 நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணனாக அலங்கரித்து வீட்டிலேயே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு, அழகு பார்க்க, அலங்காரப் பொருட்களை வாங்க பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், […]
கொலை நடந்து 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை…..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த எடிசன் 23 என்பவரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள கருவை காட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் IPS உத்தரவின் படி கீழக்கரை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் சின்ன மாயா குளத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் தேவகுமார் ஆகிய இரு குற்றவாளிகளை 5 மணி நேரத்தில் கைது […]
கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “Energy Hub Engineering”..
07-08-2020 அன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள அனஸ் காம்ப்ளக்சில் Energy Hub Engineering என்ற புதிய கட்டிட கலை சம்பந்தமான நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி செயலாளர் முஹைதீன் ஃபாருக் தலைமையில் கீழக்கரை டவுன் காஜி மௌலவி டாக்டர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜும்ஆ பள்ளி இமாம்கள் மௌலவி முஹம்மது பஷீர் ஆலிம், மௌலவி செய்யது முஸ்தபா ஆலிம், திருச்சி […]
You must be logged in to post a comment.