மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் ,பாலமேடு, மற்றும் கொடைரோடு பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு துவங்கி கனமழை பெய்து வருகிறது. இடி மின்னலுடனும். பலத்த காற்றுடனும் கனமழை பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் இன்றியும், கடைவீதிகள் வெறிச்சோடியும் காணப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சிறிதும் குறைவின்றி இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 7 20 மணி அளவில் மதுரை நகர் பகுதிகளிலும் பைபாஸ் ரோடு காளவாசல் […]
Category: கீழக்கரை செய்திகள்
கருப்பாநதி அணையில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தண்ணீர் திறந்து வைத்தார். கருப்பாநதி அணையில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை, கடனாநதி அணை, இராம நதி அணை ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க […]
கீழக்கரையில் உதயமான உயர்தர இருபாலருக்கான அழகு நிலையம்..
இராமநாதபுரம் கீழக்கரையில் இன்று 21.8.2020 infinitee பியூட்டி பார்லர் கீழக்கரை DSP முருகேசன் திறந்துவைத்தார். பியூட்டி பார்லர் உரிமையாளர் ஹாரிஸ் அனைவரையும் வரவேற்றார். இதில் கீழக்கரை முன்னாள் சேர்மன் பஷீர் அஹமது, கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் பாசித் இல்யாஸ் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மஹ்தூமிய பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் அசனுதீன், அசரப், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இத்திறப்பு விழாவில் நண்பர்கள் மற்றும் வியாபார நண்பர்கள் என […]
கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பாக 12ம் வகுப்பு வரை முதல் பருவ சமசீர் கல்வி புத்தகம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது..
கொரோனா கிருமி பாதிப்பினால் உலகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்கள் நிறுவனங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப, மாணவ, மாணவிகளின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையில் உள்ள பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்கும் கல்வி நிர்வாகத்திடம் சலுகைகள் வழங்க கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதை தொடர்ந்து கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் ஒண்டி வீரன் நினைவு தினம்-அமைச்சர், ஆட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை..
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்சுந்தர் தயாளன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவல் பச்சேரியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவிடம் உள்ளது. ஒண்டிவீரனின் 249வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் சென்று ஒண்டிவீரன் […]
கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை.. 31 விவசாயிகளுக்கு மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்…
கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த வட்டியில் கறவை பசு வாங்குதல், ஆட்டுக் கொட்டகை அமைத்தல், கோழிப்பண்ணை அமைத்தல், மாடுகளுக்கு தீவனம் வாங்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் இராஜ திலகன், துணை இயக்குனர் இரவிச்சந்திரன், மதுரை கோட்ட உதவி இயக்குனர் சரவணன், ஆகியோர் தலைமையில் வலையங்குளம் கால்நடை மருந்தகத்தில் 31 […]
ராஜபாளையம் அருகே AlTUC கைத்தறி நெசவாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்…
ராஜபாளையம் அருகே ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் நெசவாளர்களுக்கு உடனடியாக கூலி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி AlTUC கைத்தறி நெசவாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் சந்தை கடை முக்கு பகுதியில் ஏஐடியூசி கைத்தறி நெசவாளர் சம்மேளனம் சார்பில் ராஜகுரு தலைமையில் கூட்டுறவு சங்க நெசவாளர் பட்டினி அபாயத்தை தடுத்திட பெரு நிறுவனங்கள் மூலம் ஊடைக்கு நூல் வழங்கும் மாநில டெண்டர் முறையை ரத்துசெய்து உற்பத்திக்குத் தேவையான நூலை உடனே வழங்க வேண்டும் […]
ஈரானில் சிறை பிடிக்கப்பட்ட குமரி மாவட்த்தை சேர்ந்த 4 மீனவர்கள் விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தனர்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர் . குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி அடிமை மற்றும் ,லீ புறம் பகுதியைச் சேர்ந்த அட்லீ ஜெபா, அட் லின் கௌதம் முள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த சாமி அய்யா ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் மீன்பிடி வேலைக்காக பணியில் இருந்தனர் அவர்கள் கடல் பகுதியில் […]
கீழக்கரை “CROWN TRADING AGENCY”ன் தொடரும் வெற்றி பயணம்..புதிய கிளை துவக்கம்..
கீழக்கரை கிரௌன் குழுமம் பல்லாண்டு காலமாக பல்வேறு வியாபார துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு இளைய தலைமுறையினரால் தொடங்கப்பட்டது “CROWN TRADING AGENCY”. இந்நிறுவனம் கீழக்கரையை சார்ந்த KEEGGI நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு பொருட்களை வழங்கி வருகின்றனர். CROWN TRADING AGENCYல் ஒரு குறிப்பிட்ட பொருள்தான் என எல்லை வகுக்காமல், பொதுமக்களுக்கு தேவையான மசாலா பொருட்கள், தேங்காய், இனிப்பு வகைகள், வெளிநாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், பள்ளி கூட பொருட்கள், விளையாட்டு பொருட்கள் […]
மதுரையில் வாடகை கார் ஓட்டுனர்கள் உரிமையாளர் நலசங்கம் சார்பாக தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காலவரையற்ற முற்றுகை போராட்டம்….
மதுரை மாவட்டம் வாடகைக் கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று காலவரையற்ற முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் 350 வாகனங்களில் வந்த ஓட்டுனர்களும் மற்றும் உரிமையாளர்கள் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர் கோரிக்கையானது 6 மாத காலத்திற்கு இன்சுரசை நீடிப்பு செய்ய வேண்டும், சாலை வரியும் ரத்து செய்யவேண்டும் கார்களுக்கு கட்டவேண்டிய தவணையை […]
இன்று உலகப் புகைப்பட நாள் ஆகஸ்ட் 19..
உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லுயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது. […]
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!.. வைகோ அறிக்கை.. வீடியோ..
தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியசரர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 2018 மே 22 ஆம் தேதிக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலையை தமிழ்நாடு அரசு எடுக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்காது. 13 பேர் காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள். 13 பேர் சிந்திய இரத்தம், அவர்களின் […]
கீழக்கரையில் புதுகிழக்குதெரு குப்பைமேடு பகுதிகளுக்கு விஜயம்செய்யும் MLA MP அரசியல்கட்சி தலைவர்களுக்கு SDPI கோரிக்கை!!
கீழக்கரையில் 3_வது வார்டுகுட்பட்ட புதுகிழக்கு தெரு குப்பை மேடுபகுதியில் பூங்கா மற்றும் நடைபயிற்சி அமைக்க வேண்டும் என்று கீழக்கரைநகர் SDPI_கட்சி சார்பாக 2012 முதல் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு முறை மனுக்கள் கொடுக்க பட்டு இன்று 18/08/2020 வரை தொடர்ந்து போராடி வருகின்றது. குப்பை மேடு பகுதியில் சுற்று சுவர் விரிசல் விட்டு மக்கள் மேலும் விழகூடிய அபாய நிலையில் இருந்தது அதை SDPI_கட்சி சார்பாக நகராட்சி நிர்வாகதிடம் மனு கொடுக்க பட்டு அந்த சுவர் இடித்து தள்ளபட்டது.. […]
கீழக்கரையில் பொறுப்பேற்றுள்ள சார்பு ஆய்வாளர் பணி சிறக்க வாழ்த்துக்கள்….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் புதிய சார்பு ஆய்வாளராக பதவி ஏற்கும் திரு. சரவணன் பணி சிறக்க கீழை நியூஸ் இணையதளம் மற்றும் சத்திய பாதை மாத இதழ் சார்பாக வாழ்த்துக்கள். கீழை நீயூஸுக்காக..SKV. சுஐபு..
கீழக்கரையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம்……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இன்று 18.8.2020 மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்திற்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் வள்ளல் சீதக்காதி சாலையில் ஜும்மா பள்ளி அருகில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நகர் தலைவர் காதர் முகைதீன் தலைமையில் மாநில பொருளாளர் ரியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. ஆரம்பித்த இந்த ஆர்ப்பட்டதில் நகர தலைவர் கண்டன உரையாற்றினார். இதில் திரளான […]
கீழக்கரையில் தொகுதி குப்பைக் கிடங்கை பார்வையிட வந்த எம்எல்ஏ..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பெரிய காட்டு பகுதியில் உள்ள குப்பை மறுசுழற்சி உரம் தயாரிக்கும் இடத்தை மாற்றி அங்கு பூங்கா, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி ஜமாத்தார்கள் சில நாட்களுக்கு முன்பு ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டனை சந்தித்து மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து இன்று எம்எல்ஏ அந்த இடத்தை பார்வையிட கீழக்கரைக்கு வருகை தந்தார் அவரை கீழக்கரை ஜமாத்தார்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இப்பகுதிக்கு குப்பை உரமாக்கும் […]
கீழக்கரையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல்ஜதீத் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி கீழக்கரை வடக்குத் தெரு மணமேடு திடலில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது . முதல் பரிசுகளை வென்ற மீரான் குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் பரிசு வழங்கி கவுரவித்தார், சிறந்த ஆட்டநாயகனுக்கான பரிசை பாரிஸ்க்கு கீழக்கரை மக்தூமிய பள்ளியின் தாளாளர் இப்த்திக்கார் ஹசன் வழங்கி கௌரவப் படுத்தினார். சிறந்த பந்து வீச்சாளர்கான பரிசை சீனி கருணைக்கு சமூக ஆர்வலர் நசுருதீன் […]
கீழக்கரை பேர்ல் (Pearl) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..
கீழக்கரை பேர்ல் (Pearl) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 74 வது சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தங்கையா கிருஷ்ணன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி.ந வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் ஷரீபா அஜீஸ், முதல்வர் சாகிரா பானு , சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஷேக் தாவுத் கான் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து சமூக […]
கீழக்கரை நகராட்சியில் புதிதாக உருவாகும் அவசியமற்ற உரக்கிடங்கினால் அபாயம் – சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியீடு !
கீழக்கரை புதுக் கிழக்குத் தெருவில் மக்கிளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்படும் உரக்கிடங்கினை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் சட்ட ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ”ஊரடங்கில் உருவெடுக்கும் உயிர்க்கொல்லி ‘உரக்கிடங்கு’ கீழக்கரை பொதுமக்களே.. உஷார்..!” என்கிற தலைப்பில் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பரப்புரையில் பின்வரும் விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. கொரானா ஊரடங்கால் நமது பொருளாதாரத்தை இழந்து, வாழ்வாதாரத்தை தொலைத்து துவண்டு போயிருக்கும் நம்முடைய கவலைகள் எல்லாம், கேள்விக்குறியாகி […]
கீழக்கரை புதுகிழக்கு தெரு குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காண எம்.பி ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 3வது வார்டுக்கு உட்பட்ட புது கிழக்குத் தெருபகுதியில் குப்பை மறுசுழற்சி உரம் தயாரிக்கும் அரசு கிடங்கை ஆய்வு செய்ய ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் கீழக்கரை நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்போது சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்து இப்பகுதியில் உரை உரக்கிடங்கு எங்ளுக்கு அதன்மூலம் சுற்றுப்புற சூழல் மாசு படுவதோடு அதிக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் […]
You must be logged in to post a comment.