புதிய தேசிய கல்விக் கொள்கையை(NEP) உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை SDPI கட்சி ஆர்ப்பாட்டம்..

புதிய தேசிய கல்விக் கொள்கையை(NEP) ரத்து செய்ய வலியுறுத்தியும்,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு(EIA) அறிக்கையை கைவிடக் கோரியும்,   கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தம் செய்வதை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய பிரச்சாரம்! SDPI கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 25-முதல்-31 வரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக இன்று(31/08/20) முஸ்லிம் பஜார்(லெப்பை கடை அருகில்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் வீரகுல தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கண்டன […]

மதுரை சோழவந்தான் கீழ மாத்தூர் பகுதியில் மழையால் பாதித்த குடும்பத்தினருக்கு உதவி கரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சி ..!

மதுரை சோழவந்தான் கீழ மாத்தூர் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பத்தினர் சமீபத்தில் கொட்டிய மழையால் பாதிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவலாக பரவி இருந்தது. அதற்கு முன்னதாகவே எஸ்.டி.பி.ஐ கட்சி கீழ மாத்தூர் கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து மூன்று […]

மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சமுதாய சேவகர்களுக்கு விருது…

திமுக தலைவரின் அறிவுரையின்படி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருதை கொரரோனா காலத்தில் அன்று முதல் இன்று வரை கொரோனாவால் ஜாதி மதம் பேதமின்றி உயிரிழந்தவர்களை 15 நபருக்கு மேல் நல்லடக்கம் செய்திருக்கிறார்கள் இரட்டை சகோதரர்கள் அசாருதீன், நசுருதீன் இவர்களுக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞரின் இரண்டாம்ஆண்டு நினைவுநான் விருதாக வழங்கப்பட்டது. இந்த  சமுக சேவைக்கான விருதை […]

மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்-நீட் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்…

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,நீட்,ஜே இ இ தேர்வை ரத்து செய்யக்கோரியும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சோனியா காந்தி ஆணையின் படியும், மாநில தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின் படியும், மாணவர்கள் நலன் கருதி நீட் மற்றும் ஜே இ இ போன்ற நுழைவுத் தேர்வு ரத்து செய்திட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளின் செயலை கண்டித்து சுரண்டையில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் […]

மதுரையில் தேநீர் கடை உரிமையாளர் தலையை துண்டித்து படுகொலை-போலீசார் விசாரணை..

மதுரை கே. புதூர் பேருந்து நிலையம் அருகே ஆயர் பிரான் என்னும் டீக்கடை மற்றும் எண்ணெய் கடை நடத்தி வருபவர் மதுரை சூர்யா நகர் பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் முருகன். இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து கடையை திறப்பதற்கு இரு சக்கர வாகனத்தில் சக்தி நகர் பகுதிக்கு கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முருகனை வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர […]

10வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பூல் பாண்டி…

10வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பூல் பாண்டி. யாசகம் பெற்ற 1லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கியதற்கு பாராட்டு குவிந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் 10வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். இதுவரை தலா 10ஆயிரம் வீதம் 10முறை என 1லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு பல இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. செய்தியாளர் […]

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து!!!!

மதுரை ரயில் நிலையத்தில். பிரதான நுழைவாயிலில் உள்ள மின் கம்பியில் இன்று (26/08/2020) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீ எரிவதை பார்த்து உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த, நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை யிலான தீயணைப்பு துறையினர் மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த தீ அணைத்தனர். கொரொண வைரஸ் தொற்று காரணமாக அனைத்து ரயில்களும் […]

அமைச்சர் ஆர் பி உதயகுமார் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் மதுரையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் பேட்டி..

மதுரை காளவாசல் பகுதியில் மீண்டும் நிறுவப்பட்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க சிலைக்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ,அவர் செய்தியாளர்களும் கூறும்போது: திருவிக வின் சிலை மதுரை காளவாசல் இந்த மேம்பாலம் கட்டும் முன்னே இருந்தது,  மதுரையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உலக தமிழ் மாநாடு அப்பொழுது திருவிழாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பால பணிகள் முடிந்தவுடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நான் கோரிக்கை விடுத்தேன் […]

இராஜபாளையத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சத்துமிக்க தானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது…

இராஜபாளையம் வட்டாரத்தில் மேலராஜகுலராமன் கிராமத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சத்துமிக்க தானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் திரு உத்தன்டராமன், வேளாண்மை துணை இயக்குனர்( மத்திய திட்டம் திரு திருமதி வனஜா , வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா , வேளாண்மை அலுவலர் பாக்யராஜ் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு சிறு தானிய உற்பத்தி சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மக்காச்சோளத்தில் படை தாக்குதல் […]

இராஜபாளையத்தில் பல ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் திருட்டு..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 630 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். மேலும் கடையில் பாதுகாப்பிற்க்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, காட்சிப் பதிவு பெட்டியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். விற்பனையாளர் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் இராஜபாளையம் […]

இராஜபாளையம் அருகே முகவூர் தொண்டைமான் குளத்தில் மீண்டும் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.. பொதுமக்கள் அச்சம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் தொண்டமான் குளத்தில் அப்பகுதியில் சிலர் மீன் பிடிப்பதற்காக இரவு நேரத்தில் மீன்வலை போட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை சென்று பார்த்த பொழுது மீன் வலையில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்தது கண்டு பொதுமக்கள் வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வந்த வனத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை உயிருடன் மீட்டனர் பின் மேற்கு தொடர்ச்சி […]

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மூலம் போர்வெல் திறப்பு..

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் 87 வது வார்டு சுப்பிரமணியபுரம் தெற்கு சண்முகநாதபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 76வது திட்டப்பணியாக 4.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 32வது போர்வெல்லை திறந்து வைத்தார். மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்77 வது வார்டு வசந்தநகர் பகுதியில் மறு சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள போர்வெல்லை ஆய்வு செய்து ,நலத்திட்ட உதவிகள் வழங்கினார். செய்தியாளர் வி காளமேகம் […]

இராஜபாளையம் அருகே விறகு வெட்டும் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை சேத்தூர் போலிசார் விசாரணை..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் இசக்கி முத்து என்பவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது இவர்கள் இருவரும் விறகு வெட்டும் கூலித் தொழிலாளி விறகு வெட்டுவதில் இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது இந்நிலையில் இன்று இசக்கிமுத்துவை மாடசாமி அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார் இச் சம்பவம் […]

நெல்லையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

நெல்லையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வசூலிக்கும் உத்தரவை ஊரடங்கு முடியும் வரை நீட்டிக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் சேரை மற்றும் அம்பை தாலுகா பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நுண் நிதி நிறுவனங்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்களில் ஆகஸ்ட் 31 வரை கடன் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவை ஊரடங்கு முடியும் காலம் (2021) வரை நீட்டிக்க வேண்டும், 2020 மார்ச் முதல் ஊரடங்கு முடியும் வரை உள்ள வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய […]

குடிபோதையில் மோதல் வாலிபர் கொலையில் கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் 5 பேர் கைது…..

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் வயது 30 இவர் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரப்பாளையம் பிள்ளைமார் தெரு வைகை ஆற்று ஓரத்தில் பொது கழிப்பறை வாயிலில் நண்பர்கள் பொன்னாங்கண்ணி உள்ளிட்டோர் 6 பேர். மது அருந்தி கொண்டு இருந்தார்… அப்பொழுது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பார்த்திபனை கொலை செய்துவிட்டு தப்பினர் இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரிமேடு காவல் ஆய்வாளர், […]

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருப்புல்லாணி ஒன்றிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டினார்..

இராமநாதபுரம் மாவட்டம் 24.8.2020 திருப்புல்லாணி  ஒன்றியத்துக்குட்பட்ட மாவிளா தோப்பு அரசு நடுநிலை பள்ளியில் மேலும் இரு வகுப்பறைகள் கட்டிடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சத்தை ஒதுக்கீடு செய்து இன்று (24/08/2020) இராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வின் போது நிருபர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், “உள்ளாட்சித் தேர்தலின்போது கிராம மக்கள் இப்பகுதிக்கு பள்ளிக்கூடம் தேவை என்று கூறினார்கள் அதை ஏற்று இன்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து, 6 மாத […]

சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டுவது குறிப்பிட்ட சமுதாய பள்ளியா அல்லது அரசு பள்ளியா??.. குழப்பும் சுவரொட்டிகள்..

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் நாளை (24/08/2020) திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிக்கு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். இது சம்பந்தமாக ஊர் முழுவதும் இரண்டு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. ஒன்றில் நாடார் நடுநிலை பள்ளி என நாடார் உறிவின் முறை சமுதாயத்தினரும், அரசு பள்ளி என நகர் அஇஅதிமுகவும் சுவரொட்டி ஓட்டியுள்ளனர். இதில் எது உண்மை… கட்சிகாரர்கள் விளக்கம் அளிப்பார்களா??.

இராஜபாளையம் அருகே சங்கரலிங்கபுரம் பகுதியைச் சார்ந்தவர் சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வீடியோ பதிவிட்டதால் கைது..

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிக்கச் சென்ற பொழுது ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவல்துறை சேர்ந்த ஒருவர் பலியானார் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கை கார்த்திக் என்ற இளைஞர் சமூகவலைதளத்தில் துரை முத்து என்ற ரவுடியை பிடிப்பதற்கு போலீசார் அவர்களுக்கு கொடுத்த சீருடை அணியாமல் சென்றதால் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் போலீசாருக்கு சீருடை […]

திராவிட இயக்கம் இருந்தால் தான் தமிழகம் முன்னேற முடியும். தமிழனின் பெருமை தெரிய வேண்டுமென்றால் திராவிட இயக்கங்கள் இருக்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு.

மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டதால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. மேலும் பலர் முகக்கவசம் அணியாமலும் இருந்ததால் அரசின் விதிமுறைகள் கேள்விக்குறியானது.அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தடை அமலில் இருக்கும் பொழுது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் சாமி தரிசனம்…..

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டு ஆலயத்திலுள்ள விக்கிரகங்களுக்கு ஆறுகால பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் தமிழக அரசு ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் கீழுள்ள வழிபாட்டு ஸ்தலங்களை திறக்க அனுமதி அளித்தது. ஆனால் அதிக வருமானம் உள்ள மற்றும் அதிக கூட்டம் வரக்கூடிய திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!