மதுரையில் வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது !!!

மதுரை மாநகர் இ3.அண்ணாநகர் ( ச.ஓ ) காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மணிமாரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜு அழகுபாண்டி மற்றும் மதன்குமார் ஆகியோர் மதுரை வண்டியூர் சங்குநகர் பாலம் அருகே போதை பொருள்தடுப்பு சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது காலை 08.30 மணிக்கு அந்த வழியாக வந்த TN 59 BH 8518 என்ற பதிவெண் கொண்ட TATA Ace வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்து […]

கீழக்கரையில் நகர் திமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் (8.8.2020) இன்று நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஆன்லைன் வகுப்பு முறையை ஒழுங்கு படுத்தக் கோரியும் திமுக தலைவர் உத்தரவின் பேரில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி நகர் இளைஞர் அணி மற்றும் மாணவரணி இணைந்து நகர் செயலாளர் S.A.H பஷீர் அஹமது தலைமையில். வழக்கறிஞர் VS ஹமீது சுல்தான் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர் கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை உட்பட பல இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் இன்று  (07/09/2020) இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல. கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை முன்பு 5.9.2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில்  கீழ்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு  காண வலியுறுத்தி நடைபெற்றது. 1.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.2. புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு.3. நீண்ட காலமாக சிறைவாசிகள் ஆக இருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலை கோரி,4. மத்திய மாநில அரசுகளின் அடிமைத்தனம் அடக்குமுறை அரசியலை எதிர்த்தும்.5. இந்திய நாட்டின் அனைத்து மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் […]

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40ஆவது ஆண்டு விழா..

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40ஆவது ஆண்டு விழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது.  2018 – 2019 மற்றும் 2019 – 2020 கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயமும், ரொக்க பரிசு ரூ 5000/- 3000/- 2000/- வீதம் 12 மாணவர்களுக்கும் கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த சிராஜ்தீன் வழங்கினார். மேலும் அதிக மதிப்பெண்கள் எடுத்த மேலும் 12 மாணவர்களுக்கு […]

மதுரை விமான நிலையத்தில் 4 காற்று வகை துப்பாக்கி கொண்டு வந்த வாலிபரால் பரபரப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு இரண்டு சக்கர வாகனம் மூலம் வந்த வாலிபர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி விசாரணை செய்தனர். இது குறித்து அவர்கள் விசாரணை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் 3 துப்பாக்கி மற்றும் 4 செல்போன்கள் இருந்தன. அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வெங்கடசமுதிரம் பகுதியைச் சேர்ந்த […]

மதுரையில் பெய்த மழையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்தது….

மதுரை மாவட்டம் புறவழிச்சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையுல் இருந்த பழமையான மரம் ஒன்று சில நாட்களாக மதுரை மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் சுமார் 6 மணியளவில், அந்த மரம் சாலையில் விழுந்தது. இந்ம மரம் சேவை சாலையில் விழுந்ததால் உள்ள பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

மாயாகுளம் ஊராட்சியில் தமிழர் கட்சி சார்பில் புலிகொடி ஏற்றி கலந்தாய்வு நிகழ்வு..

இன்று 04.09.2020 வெள்ளிக்கிமை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில்  நாம் தமிழர் கட்சி சார்பில்  கண்.இளங்கோவன்(மாவட்டசெயலாளர்), நாகூர்கனி( தொகுதி தலைவர்) தலைமையில் புலிக்கொடி ஏற்றத்துடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய, நகர் பகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்தல், வரும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து கலந்தோசிக்கப்பட்டது. இதில் தொகுதி,  கீழக்கரை நகர் செயலாளர் வாசிம் அக்ரம்,நகர் இனை செயலாளர் முகம்மது ஹாதில், நகர் துணை செயலாளர் சபரி முருகன்,நகர் […]

கழிவுபொருட்களிலிருந்து எரிபொருள் விரைவில் அறிமுகம் இயற்கை விஞ்ஞாணி ராமர் பிள்ளை தகவல்..

விரைவில் கழிவுபொருட்களிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருட்கள் கிரீன் அங்காடிகள் மூலம் சந்தைப்படுத்தப்படும்.  தமிழகம், கேரளாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், ராமர்பிள்ளை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பொதும்பு கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில், டெக்ரீன் டிரான்ஸ்போர்ட் கார்பரேசன், எல்.எல்.பி. நிறுவனமும் இணைந்து எனது தலைமையில் பயோ எரிபொருள் தயாரித்து, முதற்கட்டமாக டிஜிடிசி பங்குதாரர்களுக்கு மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுநீர், விவசாயக் கழிவுகள், அழுகிய மாவுசத்து கொண்ட […]

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை…

  கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை கூட்டம் கூட்டமாக தேசிய கட்சியான எஸ்டிபிஐ கட்சியில் மக்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி மிகப்பெரிய ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

இருட்டில் மூழ்கி கிடக்கும் மாடக்குளம் பகுதி… ஆழ்ந்த உறக்கத்தில் மதுரை மாநகராட்சி..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ஆவது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் மற்றும் மேக்ஸ் அப்பார்ட்மெண்ட் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் மாநகராட்சியில் தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு. இருழ் சூழ்ந்து இருப்பதால் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு சாதகமாக உள்ளது. சமூக விரோதிகள் நடமாட்டம் […]

இராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும்…வீரகுல தமிழர் படை கோரிக்கை…

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம், சேதுக்கரை, வாலிநோக்கம் போன்ற புண்ணிய மற்றும் சுற்றுலா தலங்களாக உள்ளன. மேலும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் உள்ள மாவட்டமாகவும் விளங்கிகின்றது. மீன்புடி உள்ளிட்ட கடல் சார்ந்த தொழில்கள் நிறைந்த பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது. கீழடியை போன்றே அழகன்குளம் கிராமத்திலும் பழந்தமிழரின் நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. அங்கு பழங்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பாண்டங்கள், தங்க அணிகலன்கள், […]

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு….. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.. தொடர்ந்து கைது..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் ஆடிப்பூர கொட்டகை இருக்கின்றது. கடந்த வாரம் ஆடிப்பூர கொட்டகை பகுதியிலுள்ள, ஆண்டாள் கோவிலின் கோட்டைச்சுவர் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கோட்டைச் சுவர் அமைந்துள்ள பகுதி, வானமாமலை ஜீயர் மடத்தின் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக, தனியார் அமைப்பிடம் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது சோமாலியா பவன் என்ற அந்த கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நபர், வியாபார நோக்கில் செயல்பட்டு அதனை மாற்றி அமைக்க முடிவு செய்தார். அதன் […]

தொடர் மழை காரணமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மேற்கூரை இடிந்து வீடு சேதம்..

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் கீழே விழுந்ததோடு மட்டுமில்லாமல் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் திரிசூல காளியம்மன் தெருவில் மழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. அச்சமயம் வீட்டில் இருந்தவர்கள் குடிநீர் பிடிப்பதற்காக […]

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி 7 பேர் படுகாயம்..

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து என்ற சரக்கு வேன் மீது கோயம்புத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற சரக்கு வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார், வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் வேனில் வந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து […]

கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 2020- 2021ஆம் ஆண்டுக்கான பாட புத்தகத்தை விலையில்லாமல் 2.9.2020 இன்று வழங்கப்பட்டது. தற்சமயம் கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் பெருவாரியான மக்களுக்கு போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு முஹ்யித்தீனியா பள்ளியில் இந்த ஆண்டு 35% பள்ளி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கும் பாட புத்தகத்தை வழங்கினார். பள்ளி உபதலைவர் முகைதீன் இப்ராஹிம் தலைமை […]

சிவகாசி அருகே பேப்பர் மில் விபத்தில் காயமடைந்த வாலிபர் பரிதாப பலி…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது சுக்கிரவார்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான பேப்பர் தயாரிக்கும் ஆலை உள்ளது. ஆலையில் திருத்தங்கல், ஆலாவூரணியைச் சேர்ந்த அருண்பாண்டியன் எனபவர் உதவியாளராக வேலை பார்த்துவந்தார். நேற்று ஆலையில் ஒரு இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்து கொண்டிருந்த போது திடீர் விபத்து ஏற்பட்டதில், அருண்பாண்டியன் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனலிக்காமல் அருண்பாண்டியன் இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் […]

சாத்தூரில் உயர் கோபுர மின் விளக்கை எம்எல்ஏ ராஜவர்மன் துவக்கி வைத்தார்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட, எட்வார்டு ஸ்கூல் அருகில் உயர் கோபுர மின் விளக்கை சாத்தூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் ராஜவர்மன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வழக்கறிஞர் சேது ராமானுஜம், சாத்தூர் நகர செயலாளர் வாசன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியகழக செயலாளர் ராமராஜ் பாண்டியன், வெம்பக்கோட்டை சேர்மன் பஞ்சவர்ணம் அக்ரிகணேசன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், […]

புற்களை மேய்ந்த பசுவை அரிவாளால் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பசுவுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு பரபரப்பு….

மதுரை மாவட்டம், கல்மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி வளர்த்து பசுவானது அந்த பகுதிக்கு சென்று புற்களை மேயந்தபோது  ஜெயசீலன் என்பவர் பசுவை கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் பசு வேதனையில் துடிதுடித்த நிலையில் ஓடி மயங்கி விழுந்துள்ளது. இதனையடுத்து காயம்பட்ட பசுவை வாகனத்தில் ஏற்றியபடி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவந்து பசுவை தாக்கியவர் மீது கால்நடைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலிசார் நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல்துறையினர் […]

மாதாந்திர ஆயிரம் ரூபாய் சலுகை கட்டண பாஸ் செல்லுபடியாகும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு !!!!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மதுரை மண்டலம், மதுரை மூலமாக கடந்த ஜூன் மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ரூ .1,000 / – மாதாந்திர சலுகை கட்டண பாஸ் மற்றும் 1/3விகித சலுகை கட்டண பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பாஸ்கள் 16.06.2020 முதல் 15.07.2020 வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. கொரோனா Covid – 19 தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொதுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, தற்சமயம் தமிழக அரசு 01.09.2020 முதல் பொது போக்குவரத்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!