இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த 7வயது சிறுமி உறவினருடன் கீழக்கரை கடற்கரைக்கு சென்று விளையாடிகொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் கடித்து குதறியுள்ளது. அச்சமயத்தில் அங்கிருந்தவர்கள் சிறுமியை வெறி நாய்களிடம் இருந்து காப்பாற்றி கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதே போல் இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் நாய் கடியால் உயிர் இழந்ததை மறந்து நித்திரையில் இருக்கும் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொண்டு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் […]
Category: கீழக்கரை செய்திகள்
மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…
சகாயம் IAS வழிகாட்டுதலின் படி இயங்கும் மக்கள் பாதை சார்பாக இன்று 19.9.2020 இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மக்கள் பாதை இயக்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மக்கள் பாதை இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பூத் முகவர்கள் கூட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வீர ராஜா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று 18.9.2020 தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு சாவடி நிலையை முகவர்களின் பெயர் முகவரி மற்றும் கட்சியின் பெயர் போன்ற விவரங்களை சேகரித்து அனுப்புமாறு கோரப்பட்டது. இதில் கீழக்கரை திமுக நகர் செயலாளர் SAH பஷீர் அஹமது மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர். […]
கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…
கீழக்கரையில் இன்று (18/09/2020) சேரான் தெருவில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக சேரான் தெருவில் மஸ்ஜிதுல் ஜலால் பெண்கள் தொழுகை பள்ளி மற்றும் மதரஸத்து ஹதீஜா அரபி பாடக சாலை மக்ரீப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழுவுடன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை தலைவர் நூர்ஜமான், செயலாளர் அஸ்பக் மீரான், பொருளாளர் அயூப்கான், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை நகராட்சி அலுவலகமா?? இல்லை நாய்களின் கூடாரமா….வீடியோ காட்சிகள்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் நாய்கள் நகராட்சி அலுவலகத்திலேயே கூடாரம் இட்டு அப்பகுதியில் வரும் பொது மக்களை அச்சுறுத்த செய்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்து கீழக்கரையை சேர்ந்த பச்சிளம் பாலகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீண்டும் கீழக்கரை பகுதி முழுவதும் அதிக அளவில் குறிப்பாக நோயுற்ற நாய்கள் […]
கீழக்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய நாம்தமிழர்..
நீட் என்னும் கொடிய தேர்வு முறைக்கு எதிராக மாநில முழுவதும் நாம்தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கீழக்கரை நாம்தமிழர் கட்சி சார்பாக பல் வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் கைப்பதாகை ஏந்தி தங்களது எதிர்பை வெளிக்காட்டினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த A.மனாஸ் என்பவர் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பலமுறை வார்டு உறுப்பினராக பதவி வகித்த அன்வர் அலி என்பவருடைய மகன் என்பது குறிப்பிடதக்கது.
இணையதள செய்தி எதிரொலி…சீரமைப்பு பணி தீவிரம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 20 நாட்களாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி அபாயகரமான வகையில் திறந்து கிடந்தது. இது சம்பந்தமாக கடந்த 13.9.2020ம் தேதி கீழை நியூஸ் இனையதளதில் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக இன்று (15/09/2020) போர்க்கால அடிப்படையில் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திமுக சார்பில் கீழக்கரையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112ம் பிறந்த தினத்தை முன்னிட்டுஇராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி கீழக்கரை நகர் செயலாளர் SAH பசீர் அஹமது தலைமையில் இளைஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான் முன்னிலையில் அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் துணைச் செயலாளர் ஜமால் பாரூக்,கென்னடி, மாணவர் அணி இப்திகார் ஹசன், மாவட்ட பிரதிநிதிகள் மரைக்காயர், ஜபாருல்லா, ராஜா, அக்பர், […]
முகக்கவசம் அணியாதவர்களுக்கு கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அபராதம்…
தமிழகத்தில் கொரோணா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கால் கட்டுபாடுடன் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இதில் குறிப்பாக அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் பின்பற்ற. வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்று 14.9.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி , தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, […]
கீழக்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு வியாபாரிகள் அச்சம்….
இராமநதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக பல கடைகளை உடைத்து சுமார் லட்ச கணக்கான பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் வியாபாரிகள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவங்கள் 11.9.2020 அன்று இரவு 12 மணிக்குமேல் வள்ளல் சீதக்காதி சாலை இந்தியன் வங்கி எதிரில் உள்ள மாஷா அல்லாஹ் மொபைல் கடையில் சுமார் ஒரு லட்சத்தில் அறுபதாயிரம் ரூபாய் […]
கீழக்கரை நகராட்சியின் மெத்தனப்போக்கு.. பொதுமக்கள் அவதி…
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். கீழக்கரையில் பொதுமக்கள் மற்றும் வாகனம் அதிகம் செல்லும் பிரதான சாலையான வடக்குத்தெரு சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள சாலையில் அரசு மருத்துவமனை குழந்தைகள் மருத்துவமனை பல் மருத்துவமனை என பல மருத்துவமனைகளும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் கடைகளில் உள்ள பகுதியாகும் பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் குழாய் அமைப்பதாக கூறி சாலையைத் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு […]
கீழக்கரையில் புதிதாக உதயமான பருத்திக்காரத்தெரு பொது நலச் (சேவை) சங்கம்…!!
கீழக்கரை எப்பொழுதுமே மக்கள் சேவைக்கும், தான தர்மத்திற்கும் பெயர் பெற்ற இடம். இவ்வூரில் பல இயக்கங்கள், அமைப்புகள், பொதுநல சேவை அமைப்புகள என பொதுமக்களுக்கான சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையின் பருத்திக்கார தெருவில் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு பருத்திக்காரத் தெரு பொது நல சங்கம் துவங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் நிர்வாகிகள்:- தலைவர் :எம்.செய்யது இபுராஹீம்… அலைபேசி…9894103613 செயலாளர் :அ.அஸ்லம் ஃபாரீஸ். அலைபேசி:9940986740 பொருளாளர்: நூருல் மஃபாஸ் அதேபோல் பல இளைஞர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவ்விழாவினை பெருவாரியான பொதுமக்கள் […]
மதுரையில் நீட் தேர்வால் மனம் உடைந்து- வலி நிறைந்த வார்த்தைகளால் கடிதம் எழுதி தற்கொலை செய்த மாணவிக்கு நீதி கோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்..
மதுரையில் நீட் தேர்வால் மனம் உடைந்து- வலி நிறைந்த வார்த்தைகளால் கடிதம் எழுதி தற்கொலை செய்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா அவர்களுக்கு நீதி வழங்கக்கோரியும்! தொடர்ந்து மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரை கீழ வெளிவீதி அண்ணா சிலை முன்பாக 12, செப்டம்பர் மாலை மதுரை மாவட்ட தலைவி-கதிஜா பீவி தலைமையில் நடைபெற்றது.. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது […]
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலதலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு..
கீழக்கரை செப். 11- கீழக்கரைக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் கீழக்கரை நகருக்கு வருகைதந்து புதிதாக உருவாக்கப்பட்ட 12 கிளைகளைகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாகவும் கட்சியை பலப்படுத்தக் கூடிய வியூகங்கள் சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுகள் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, கீழக்கரை மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துள்ளாஹ் தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான், […]
மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட செயலாளர் S.காஜா மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் வடக்கு பகுதி தலைவர் S.செய்யது இஸ்ஹாக் வரவேற்புரை நிகழ்த்தினார்.SDPI- கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் A.முஜிபூர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி அமைப்பாளர் பூபாலன், […]
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் இன்று (10.09.2020) நகராட்சி முன்பு பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரிசங்க தலைவர் ஹசனுதீன் முன்னிலையில் நடைபெற்றது. சங்க பட்டயத்தலைவர் டாக்டர் அலாவுதீன், செயலாளர் எபன், பொருளாளர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசீக்தீன், டாக்டர் சுந்தரம், முன்னாள் செயலாளர் தர்மராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கினார்கள். கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
உங்கள் பெயருக்கு கார் பரிசு என ரிஜிஸ்டர் தபாலில் கூப்பன் – ஆதார் கார்டு எண், பான் கார்டு எண் அனுப்பினால் கார் உடனே உங்களுக்கு… என நடக்கும் நூதன மோசடி .
தமிழகம் முழுவதும் 15 இடங்களில் நான்கு சக்கர வாகன டயர் டீலராக இருப்பவர் பழனிகுமார் சுவாமி. இவருக்கு வெஸ்ட் பெங்கால், கொல்கட்டா, VIP ரோடு, நஸ்ருல் இஸ்லாம் அவென்யூ, ஸ்வஸ்டிக் பில்டிங் – ல் இயங்கிவரும் நாப்டால் கம்பெனியில் இருந்து பழனிகுமார் சுவாமி பெயருக்கு தபால் ஒன்று வந்துள்ளது. அதை பிரித்து பார்த்ததில் அதில் ஏடிஎம் கார்டு போன்று ஒரு ஸ்கிராச் கார்டு இருந்துள்ளது, மேலும் அதை சுரண்டினால் அதில் தெரியும் பரிஸ் உங்களுக்கு காத்திருக்கிறது என அதில் பிரிண்ட் போட்டு […]
மதுரையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மரணம்..
மதுரை சுப்ரமணியபுரம் C2 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றுபவர் சந்தானபாண்டியன், இவர் 1988 வருட அணியை சேர்ந்தவர். சமீபகாலமாக அரசு அதிகாரிகள், காவலர்கள் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரானா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமதுரை சுப்ரமணியபுரம் C2 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிவரும் சந்தானபாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து சிறப்பு […]
கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின் 17 வது ஆண்டு விழா மற்றும் நல திட்ட உதவிகள்..
கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின் 17 வது ஆண்டு விழா மற்றும் நல திட்ட உதவிகள் நிகழ்வு பல்லாக்கு ஒலியுல்லாஹ் தர்ஹா அருகில் அறக்கட்டளையின் நிறுவனர் MKE.உமர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழா முகம்மது சிராஜுதீன் வரவேற்புரையுடன் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன், இராமநாதபுரம் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட அரசு காஜி மௌலானா சலாஹுத்தீன் ஆலிம் ஆகியோர் முன்னிலையில் தையல் இயந்திரம், அரிசி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் தேவையுடையோருக்கு வழங்கப்பட்டது. பரமக்குடியை சேர்ந்த மாரியம்மாள், பழனியம்மாள்,கோமதி இவர்களுக்கு […]
You must be logged in to post a comment.