இன்று (06/10/20) காலை 12 மணியளவில் இராமநாதபுரம் சந்தை திடலில் கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட குழு உறுப்பினர் காதர் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் அதிக்குர் ரகுமான் கைது செய்ததை வன்மாயாக கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் உத்திரபிரதேச அரசாங்கத்தின் மதவிரோத போக்கை கண்டித்தும், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மீது முறையான நடவடிக்கை எடுக்காத யோகி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Category: கீழக்கரை செய்திகள்
ஊரகவளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கலந்தாய்வு கூட்டம்….
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரகவளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் திருப்புல்லாணியில் உள்ள வீனஸ் மஹாலில் 4.10.2020 தேதி மாவட்டத் தலைவர் க. ரவி (தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம்) மற்றும் ஜெயபரதன் (ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம்) மாநிலத் துணைத் தலைவர் நாகேந்திரன் (தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம்) மற்றும் மாநில இணைச் செயலாளர் ஜெயபாரதன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் தலைமையிலும். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ஜெயபால், […]
தலைக்கவசம்… உயிர்க்கவசம்… கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் நலப்பணி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வாகன விழிப்புணர்வு முகாம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி கீழக்கரை சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் இன்று 5.10.2020 கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் தலைக்கவசம் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர் முனீஸ்வரன், தலைமை காவலர் இளமுருகன் […]
ஏர்வாடி அருகே கடல்நீரை வீட்டு தேவைக்கு உபயோகிக்கும் அவலம்.. குடத்துடன் பொதுமக்கள் போராட்டம்..
கடல் தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் அவலம். மூன்று மாதமாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் குழந்தைகள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம். ஏர்வாடி அருகே உள்ள சடைமுனிவலசை கிராம மக்கள் மூன்று மாதங்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது சடைமுனிவலசை. கடற்கரை கிராமமான இங்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் சரி செய்யப்படாததால் […]
பாசிசத்தின் பிடியிலிருந்து நம் இந்திய நாட்டை விடுவிப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல் பட ஜித்தா தமுமுக வேண்டுகோள்..
காந்திஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஜித்தா பன்னாட்டு இந்திய காங்கிரஸ் சார்பாக கடந்த (2-10-20) அன்று ஸ்டார் உணவகத்தில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமுமுக ஜித்தா மேற்கு மண்டல பொறுப்பாளர் அப்துல் மஜீத், இந்தியாவிற்கு உமர் (ரலி) அவர்களைப் போன்ற தலைவரே தேவை என்று காந்திஜி தனது கட்டுரையில் எழுதியிருந்ததை நினைவு படுத்தினார். மேலும் பாசிசத்தின் பிடியிலிருந்து நம் இந்திய நாட்டை விடுவிப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயல்பட வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியை […]
கீழக்கரையில் திமுக சார்பில் இணையவழி உறுப்பினர் சேர்க்கை..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எல்லோரும் நம்முடன் என்கிற இணையவழி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கீழக்கரையில் நகர கழக செயலாளர் பஷீர் அகமது மற்றும் கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர், வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா(எ) முத்துராமலிங்கம் முன்னிலையிலும் “எல்லோரும் நம்முடன்” என்கின்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கீழக்கரை பகுதி மக்கள் ஏராளமான ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொண்டு […]
பாபரி மசூதி இடிப்பில் குற்றவாளிகள் விடுதலை செய்ததை கண்டித்து கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்..
பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விடுதலை செய்த லக்னோ சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நகர தலைவர் அஹமது நதீர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கண்டன பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு சம்பந்தமான தீர்ப்பை கண்டித்து.. கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட அத்துணை குற்றவாளிகளையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதை கண்டித்து கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் நகர சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் இணைச் செயலாளர் தாஜூல் அமீன் வரவேற்புரையுடன் தொகுதி துணைத் தலைவர் நூருல் ஜமான் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர், நகர தலைவர் ஹமீது பைசல் ஆகியோர் கண்டன உரை […]
உப்பூர் அருகே பரிதாபம்.. பைக்குகள் நேருக்கு நேர் மோதல்…. 3 பேர் பலி…
இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே நாகனேந்தல் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படு காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். கருங்குடி காளீஸ்வரன் மகன் டிரைவர் பாண்டித்துரை 32 சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருடன் டூவீலரில் சென்ற அத்தானூர் கார்மேகம் மகன் உதயக்குமார் 37 படுகாயமடைந்தார். மற்றொரு டூவீலரில் […]
வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமையிலும், கீழக்கரை நகர் இளைஞரணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் அனைத்து தோழமைக் […]
SDTU தொழிற் சங்கம் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்…
SDTU தொழிற் சங்கம் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் நேற்று 26/09/2020 பொது மக்களுக்கு கபசூராகுடிநீர் மற்றும் முககவசம் மாநில தலைவர் முஹம்மது பாரூக் பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்டதுணை செயலாளர் காதர்கனி ஏற்பாடு செய்து இருந்தார். அதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களுக்கு தொழிற் சங்ககார்டு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹமது இல்லத்திற்கு சென்று மனமக்களை வாழ்த்தி மணமகனுக்கு மாநில தலைவர் முஹம்மது முபாரக் பொன்னாடை போர்த்திகவுரவவித்தார். அதனை தொடர்ந்து SDPI கட்சியின் முன்னாள் […]
வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்த கீழக்கரை பெண்மணிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த “MASA” நிர்வாகிகள்..
கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த நாதியாஹனிபா என்ற பெண்மணி கடந்த வாரம் கீழக்கரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இவரை பாராட்டும் வண்ணம் மாசா நிறுவனர் இப்திகார் ஹசன் அறிவுறுத்தல்படி தலைவர் அகமது முகைதீன் செயலாளர் சிராஜ் தீன் மற்றும் உறுப்பினர்கள் ஹமிது சித்திக், சிமுர், சேகு ஜலால்தீன், மீரா சாகிர், அகமது ஜுமல், அகமது சுகைல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். […]
பொதுமக்கள் நலன் கருதி தனியார் இடத்தை தூய்மை செய்யும் பணியில் இறங்கிய மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA)…
கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியல் தனியாருக்கு சொந்தமான இடம் பராமரிப்பு இல்லாமல் சுகாதார கேடு விளைவிக்கும் வண்ணம் இருந்துள்ளது. இது சம்பந்தமாக சம்பந்தமாக நகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மஹ்தூமியா சமூக நல அமைப்பினர் (Masa Acitvities) இடத்தின் உரிமையாளரை அணுகியுள்ளனர். இதை தொடர்ந்து அவ்விடத்தின் உரிமையாளர் மஹ்தூமியா அமைப்பினரை அவ்விடத்தை சுத்தம் செய்து கொள்ள அனுமதியளித்துள்ளார். இதை தொடர்ந்து இன்று (25/09/2020) இரவே மஹ்தூமியா அமைப்பின் தலைவர் அஹமது முகைதீன் முன்னிலையில் […]
கீழக்கரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது.. காவல்துறை அதிரடி..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில நாட்களாக கடைகளை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையனை என்று கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையிலான தனிப்படை சார்ந்த சார்பு ஆய்வாளர் சரவணன், குற்றப்பிரிவு தலைமை காவலர் கலைமன்னன், தலைமைக் காவலர் இளமுருகன், காவலர் சவுந்தரபாண்டி, காவலர் ஜெய கனேஷ், திருமுருகன், தினகரன், ஆகியோர் கீழக்கரை சேர்ந்த முகைதீன் மதார் சாகிபு மகன் பாரிஸ் கான் என்பவரை கைது செய்தனர். கொள்ளையனிடமிருந்து 21 செல்போன்கள், 1வாட்ச், 1சைக்கிள், கடையை உடைப்பதற்கு பயன்படுத்திய இரண்டு ஆயுதங்களையும் கைப்பற்றினர். […]
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவியேற்று பெருமை சேர்த்த கீழக்கரை பெண்மணி..
கீழக்கரையை சேர்ந்த பழைய கொத்துபா பள்ளி தெருவை சேர்ந்த M.நாதியா ஹனிபா என்ற பெண்மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (24/09/2020) கானொளி மூலம் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். இவர் கீழக்கரையில் உள்ள தாசீம் பீவி அப்துல்காதர் கல்லூரியில் B.Sc.,(IT) பட்டபடிப்பை முடித்து, தனது முதுகலை படிப்பை MSEC கல்லூரியில் MBA (வணிகவியல்) முடித்து, கர்நாடக சட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
இராமநாதபுரத்தில் உள்ள பிரபல இரண்டு பள்ளிகள் உட்பட 9 பள்ளிகள் மீது அதிக கட்டணம் வசூல் செய்வதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…
தமிழக அரசு கொரோனோ தொற்று காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் கல்வி பயிலும் பெற்றோர்களிடம் கட்டண தொகை பெறுவது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால் பல் வேறு பள்ளிகள் அரசு விதிகளை மீறி முறையற்ற வகையில் கட்டணம் வசூலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி The Tamil Nadu Nursery Primary Matriculation Higher Secondary Schools Association, State Secretary Mr.K.R.Nandakumar […]
கீழக்கரையில் பருத்திகார தெரு உட்பட பல் வேறு பகுதிகளில் நகராட்சி சார்பாக மருந்து தெளிப்பு..
கீழக்கரையில் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நோய் கிருமிகளை தடுக்கும் விதமாக மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (21/09/2020) பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் தெருவின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு மருந்துகளை தெளித்தனர்.
கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் பல் வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை மனு…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி கீழக்கரை நகராட்சி ஆணையாளரிடம் வடக்கு தெரு சமூக நல அமைப்பு, கீழக்கரை தவ்ஹீத் ஜமாத், விடுதலை சிறுத்தை கட்சி, கீழக்கரை நகர் திமுக, கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம், பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் சார்பாக கடந்த சில நாட்களாக கோரிக்கை மனு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கீழக்கரை ஜெட்டி பாலம் அருகே […]
தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிளான கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கீழக்கரை MIF அணியினர்..
தொண்டியில் இன்று (20/09/2020) நடைபெற்ற மாநில அளவிளான கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கீழக்கரை MIF அணியினர் வென்றனர். இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து பல் வேறு அணியினர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசை தொண்டியை சார்ந்த அணி வென்றது, இரண்டாம் இடத்தை கீழக்கரை MIF அணியினர் பிடித்தனர்.
கீழக்கரை பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் சார்பாக மோர் பந்தல்..
கீழக்கரை பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் சார்பாக மோர் பந்தல் இன்று (20/09/2020) அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை சங்கத்தின் தலைவர் செய்யது இபுராஹீம் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
You must be logged in to post a comment.