தென்காசி மாவட்டம், செங்கோட்டை பூலாங்குடியிருப்பு பகுதியில் உள்ள S.S.ஆர்கானிக் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணைக்கு கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ மாணவியர் கல்வி சுற்றுலா மேற்கொண்டனர். அங்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரம் நடவு, வீட்டுத் தோட்டம் & மூலிகை கொத்து (பொக்கே) பற்றிய செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. S.S.ஆர்கானிக் பண்ணை நிர்வாக இயக்குனரும், ஓய்வு பெற்ற வேளாண் அலுவலருமான மு.சேக் முகைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கொண்டலூர் […]
Category: கீழக்கரை செய்திகள்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ! தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு .!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றைப் பார்த்து அதனை சுற்றி வளைத்து சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்து கடத்தலில் ஈடுபட முயன்ற கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடி விட்டனர் . உடனே […]
தமிழகத்தில் கொத்தடிமை தொழில் அகற்றப்படும் – மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் பேட்டி !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கொத்தடிமை தொழிலை அகற்றுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மற்றும் தொழிலாளர் துறை […]
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா.!
மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அவரின திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேரன் சீவாபாவாணர் […]
தென்காசியில் சுகாதாரத்துறை மாதாந்திர ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 05.02.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவது, புகையிலை தடுப்பு பணி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வது, பருவ கால நோய்கள் தடுப்பு பற்றிய நடவடிக்கைகள், இள வயது திருமணம் மற்றும் இள வயது கர்ப்ப தடுப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பொது […]
கீழக்கரையில் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அல் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா நிறுவனர் வழக்கறிஞர் நஃபீல் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஹஜ் உம்ரா சேவை மற்றும் ஹலால் ஷாப்பி மற்றும் டவுன்ஷோர் கார்மெண்ட்ஸ் என்ற ஆண்கள் ஆடையகம் போன்றவை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கு கீழக்கரை துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் , திமுக அயலக அணி மாவட்ட தலைவர் ஹனீஃபா ,தமுமுக மாநில துணை செயலாளர் சலிமுல்லாஹ் […]
ஹைதராபாத் நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷன்; கீழக்கரை மாணவன் சாதனை
ஹைதராபாத்தில் நடந்த நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷனில் மூன்றாவது இடம் பெற்று கீழக்கரை மாணவன் அப்துல்லா சாதனை படைத்துள்ளார். நேஷனல் அகாடமி பள்ளியில் பயிலும் ஷகீல் மைதீன் என்பவரது மகன் அப்துல்லா என்ற மாணவன் 24 பள்ளிகளுக்கு இடையே நடந்த குவிஸ் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து இரு பள்ளிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேஷனல் அகாடமி பள்ளி மற்றும் மதுரையைச் சார்ந்த மற்றொரு […]
செங்கோட்டை அரசு பள்ளியில் அழகிய ஓவிய கண்காட்சி..
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியரின் அழகிய ஓவியப் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி 05.02.2025 புதன் கிழமை நடைபெற்றது. மின்நகா் ஹியூமன் அப்லிப்ட் டிரஸ்ட் இயக்குநா் ரெங்கநாதன் தலைமை தாங்கி ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்தார். மின்நகா் சுற்றுச் சூழல் விஞ்ஞானி விஜய லெட்சுமி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்ல இயக்குநா் திருமாறன் மற்றும் தேசிய பசுமைப் படையின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி […]
டெல்லியை நோக்கிய பயணத்தில் திமுக மாணவரணி..
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்கலைக் கழக நிதிக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறி முறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக […]
ஆதாய கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அடிதடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..
சிவகிரியில் ஆதாய கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் செங்கோட்டையில் அடிதடி வழக்கின் இரண்டு குற்றவாளிகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குமரபுரம் சமுத்திரவேல் என்பவரின் மகன் தங்கமாரி (34) என்பவரை சிவகிரி காவல் துறையினர் […]
ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . ! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]
வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதாகவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங்களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு […]
திருவாடானை வட்டச்சட்ட பணிகள் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி .! நீதி அரசர்கள் பங்கேற்பு .!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்டப் பணிகள் பற்றியும் வழக்கறிஞர்கள் செய்த தொண்டுகளை பற்றியும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது புகைப்படக்கண்காட்சியில் நீதிபதி மனிஷ்குமார் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிசாட் சேவ் கலந்து கொண்டு சட்டம் பற்றியும், வட்டச் சட்டப் பணிகள் குழு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் இலவசமாக வழக்குகள் நடத்தி […]
மேட்டுப்பாளையம்தலைமை அஞ்சல் நிலையத்தில்அஞ்சல் சமூக வளர்ச்சி விழா.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் வளாகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து தலைமை அதிகாரி விளங்கிக் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு அஞ்சல் துறை சேவைகளையும் தாங்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைத்தனர் மேலும் பொதுமக்கள் சேமிக்க அஞ்சலகம் மட்டுமே சிறந்தது […]
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசை டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் .!
ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் நாடார்வலசையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊருக்குள் செயல்படும் அந்த டாஸ்மாக் மதுபான கடையால் பலரின் குடும்பம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் கோயிலுக்கு செல்வோருக்கும் இடையராக இருந்து வருவதாகவும் இதற்காக ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும் மதுபான கடையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இன்று வரை அந்த டாஸ்மாக் மதுபான கடையை அங்கிருந்து அகற்றவில்லை […]
பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல்; கனிமொழி எம்.பி பேச்சு..
“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” என தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு […]
பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.!
அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் கண்டித்து பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருங்கவயல் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் சுமார் மூன்று ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அந்த இடத்தை யாரும் ஆrக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டு இருந்த நிலையில் கடந்த காலங்களில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் யாரும் ஆக்கிரமிக்காத அளவில் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது […]
தாய்க்கு மணிமண்டபம் கட்டிய மகன்கள்.! ராமநாதபுரத்தில் மனம் நெகிழவைத்த சம்பவம்..!!
ராமநாதபுரம் வ.உ.சி நகர் கணிக்கர் தெருவைச் சேர்ந்த முத்து மனைவி ராஜாத்தி (55). இவர் கடந்தாண்டு ஜன.26 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது மகன்கள் ரவி ராவுஜி, ஹரி ராவுஜி, சுதன் ராவுஜி ஆகிய 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ராஜாத்தி தனது பிள்ளைகளுடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாத்தியின் மூன்று மகன்களும் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்கின்றனர். இவர்கள் தாயின் நினைவாகவும், தாய் இந்த இவ்வுலகில் எவ்வளவு முக்கியமானவர் […]
அரசு பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி கற்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை முத்து லட்சுமி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துராஜா அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஃபரீதா அப்துல் காதர், தென் பொதிகை […]
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 153 மாணவர்கள் தேர்வு.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒசுரில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான அசோக் லேலாண்ட் லிமிடெட் மற்றும் கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அ.சேக்தாவுது தலைமையுரையாற்றி பேசுகையில் கடந்த 10 வருடமாக 100%வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் […]