சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இலவச இயன்முறை மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவடைந்தது. கடந்த மூன்று நாட்களாக (நவம்பர் 2,3 மற்றும் 4 ம் தேதிகளில்) நடைபெற்ற இம்முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாம் சிறப்பாக நடைபெற இடம் வழங்கி ஆதரவு அளித்த வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகத்தினருக்கும், அத்துடன் ஊடக மற்றும் பத்திரிக்கைத் துறை நண்பர்களின் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த […]
Category: கீழக்கரை செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
ஜித்து எனும் ஆண் காட்டு யானை உயிரிழப்பு..
கோவை வனக்கோட்டம் மேட்டுப் பாளையம் வனசரகத்தில் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஜித்து என்னும் பேர் கொண்ட ஆண் காட்டு யானை உயிரிழந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி யானை இறந்த பகுதிக்கு விலங்குகள் உடற் கூறாய்வு மருத்துவ குழு வந்தடைந்தது. தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் கவனத்தை எதிர் நோக்கி பொது மக்கள்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் நிலையில் முதல்வரின் கவனத்தை சுரண்டை நகராட்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களுள் சுரண்டை நகராட்சி ஒன்றாகும். மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சுரண்டை நகராட்சியில் தற்போது சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமும், வர்த்தகமும் இப்பகுதி மக்களின் பிரதானமாக உள்ளது. மேலும் சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 40 ஊராட்சி 4 […]
“அன்பு” எனும் கரங்கள் தந்து அரவணைத்த முதல்வருக்கு மனதார நன்றி..
தமிழ்நாடு அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகள் 18-வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2025 அன்று அன்புக் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற […]
தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரம்..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். 12.10.2025 இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். நெல்லை, […]
உலக முதியோர் தினம் குறித்து கவிஞர் பேரா..
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே. இராஜேந்திரன் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில், “முதியோர்களை மதிப்பதும், அவர்களைக் காப்பதும் அவசியமானது என்பதை உணர்ந்த ஐக்கிய நாட்டு சபை 1990- ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் நாளை உலக முதியோர் நாளாக அறிவித்தது. அதன்படி 1991-ஆம் ஆண்டு முதல் அக்டோபர்-1 உலக முதியோர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதியோர்களின் அறிவு, அனுபவம் ஆகியவற்றை உணர்ந்து மதித்தல் இளைய சமுதாயத்தினருக்கு […]
வாகன விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு..
தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 22.09.25 அன்று இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி விபத்து ஏற்படுத்தியதில் விபத்தில் காயம் அடைந்த நபர் மரணம் அடைந்தார். இது குறித்து தென்காசி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டதில் […]
தென்காசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவருமான […]
மணிமுத்தாறு வன பகுதியில் விதைப் பந்து வீசும் பணி…
மணிமுத்தாறு மலை அடிவார பகுதியில் பசுமையை பாதுகாக்கும் விதமாக 9-வது போலீஸ் பட்டாலியன் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து 50,000 விதைப் பந்துகள் விதைக்கும் பசுமை பணி நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள் தயாரித்த ஒரு லட்சம் விதைப் பந்துகளில் பாதியான 50,000 பந்துகளை மாணவிகள், மணிமுத்தாறு மலைப்பகுதி வனத்திற்கு நேரடியாக சென்று அர்ப்பணித்தனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் இந்த பசுமை நிகழ்விற்கு மணிமுத்தாறு 9-வது போலீஸ் […]
மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 475 மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை […]
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழி முறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும், […]
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; பரிசு மற்றும் சான்று வழங்கல்..
தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (18.09.2025) இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி […]
40வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 40-வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இவ்விழாவின் ஒரு பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு.செல்வ பாலா ஆகியோர் தலைமையில், கண் மருத்துவர் ராஜலட்சுமி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில், மூத்த கண் மருத்துவர் மரு.ராஜலட்சுமி, மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் […]
மாதாந்திர மின் பராமரிப்பு பணி; செப்.06 (நாளை) மின்தடை
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் வரும் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 06.09.2025 அன்று பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி பகிராமான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் […]
இலஞ்சி பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..
இலஞ்சி பி.எட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய இரு பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலா வின்சிலா தலைமை வகித்தார். நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்களை மாணவ ஆசிரியர்கள் வாழ்த்தினர். தொடர்ந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. இதில் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், […]
புகையிலை பொருட்கள் கடத்திய நபர் கைது..
கேரள மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை புளியரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 496 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை […]
TNUSRB-TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..
தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத […]
தென்காசி செங்கோட்டை பகுதிகளில் காவல்துறை அணிவகுப்பு..
விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது மக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணமும் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், தென்காசி மற்றும் செங்கோட்டையில் காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி யானை பாலம் சிக்னல், மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காசி விஸ்வநாதர் கோவில், சுவாமி சன்னதி வீதி, ஜெமினி லாலா […]
தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் சங்கம் முக்கிய கோரிக்கை..
தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனக் கூறி, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் […]
You must be logged in to post a comment.