ஏபர் தவுசுட் கர்டிசு (Heber Doust Curtis) ஜூன் 27, 1872ல் மிச்சிகனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆர்சன் பிளேர் கர்டிசு. இவரது தாயார் சாரா எலிசா தவுசுட். கர்டிசு மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வானியல் பட்டம் பெற்றார். இவர் இலிக் வான்காணகத்தில் 1902 முதல் 1920 வரை பணிபுரிந்தார். இவர் ஜேம்சு எட்வார்டு கீலர் அவர்களின் ஒண்முகில்களின் அளக்கையைத் தொடர்ந்தார். இவர் 1912ல் பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் […]
Category: உலக செய்திகள்
நாசாவின் ஆறுக்கும் மேற்பட்ட கோளாய்வுத் திட்டங்களில் (நிலா, செவ்வாய், புதன்), பங்கேற்ற அமெரிக்க வானியலாளர் மரியா டி. சூபெர் பிறந்த தினம் இன்று (ஜூன் 27, 1958).
மரியா டி. சூபெர் (Maria D. Zuber) ஜூன் 27, 1958ல் பென்சில்வேனியா, அமெரிக்காவில் பிறந்தார். பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் வானியலிலும் புவியியலிலும் இளவல் பட்டம் பெற்றார். மேலும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் புவி இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழத்தில் பணிபுரிந்தார். அப்போது மேரிலாந்தில் இருந்த நாசாவின் கோடார்டு விண்வெளி பறத்தல் மையத்தில் ஆய்வு அறிவியலாளராகவும் இருந்துள்ளார். இவர் 1998ல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். அங்கு 2003 முதல் […]
உடுக்கணங்காணி எனும் விண்வெளித் தொலைநோக்கி உருவாக்கிய அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் பிறந்த தினம் இன்று (ஜூன் 26, 1914).
இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer) ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தைவழி பாட்டியால் இவர் புதுமைப்புனைவாளர் எலி விட்னெவின் உறவினர். ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் 1929ல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935ல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார். அப்போது […]
சந்திரனின் தன்மைகளைப் பற்றிய ஆய்வு செய்த இத்தாலிய வானவியலாளர் ஜியோவானி பாத்திஸ்டா ரிச்சியோலி நினைவு தினம் இன்று (ஜூன் 25, 1671)
ஜியோவானி பாத்திஸ்டா ரிச்சியோலி (Giovanni Battista Riccioli) 17 ஏப்ரல் 17, 1598ல் இத்தாலியின் ஃபெராராவில் பிறந்தார். அவர் அக்டோபர் 6, 1614 இல் இயேசு சொசைட்டியில் நுழைந்தார். தனது புதிய முடிவை முடித்த பின்னர், 1616 ஆம் ஆண்டில் மனிதநேயங்களைப் படிக்கத் தொடங்கினார். முதலில் ஃபெராராவிலும், பின்னர் பியாசென்சாவிலும் அந்த ஆய்வுகளைத் தொடர்ந்தார். 1620 முதல் 1628 வரை பர்மா கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றார். பர்மா ஜேசுயிட்ஸ் உடல்கள் விழுவது போன்ற ஒரு […]
முதல் மின்காந்த தந்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய இயற்பியலாளர் வில்கெம் எடுவர்டு வெபர் நினைவு தினம் இன்று (ஜூன் 23, 1891).
வில்கெம் எடுவர்டு வெபர் (Wilhelm Eduard Weber) அக்டோபர் 24, 1804ல் ஜெர்மனியின் விட்டென்பர்கில் இறையியல் பேராசிரியர் மைக்கேல் வெபருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று மக்களில் இரண்டாவதான வெபர், தனது மற்ற உடன்பிறப்புகளைப் போலவே அறிவியலில் நாட்டம் கொண்டார். விட்டென்பர்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதையொட்டி இவரது தந்தையாருக்கு 1815ல் ஹால் என்ற நகருக்கு மாற்றலாயிற்று. அங்கு முதலில் தந்தையிடமும் பின்னர் அனாதை இல்லம் மற்றும் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் பல்கலைகழகத்தில் இணைந்து இயற்பியலில் ஆழ்ந்தார். தமது […]
தன்னியக்க காசளிப்பு இயந்திரம்(ATM) கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் பிறந்த தினம் இன்று (ஜூன் 23, 1925).
ஜான் ஷெப்பர்ட் பேரோன் (John Adrian Shepherd Barron) ஜூன் 23, 1925ல் இந்தியாவின் மேகாலயாவில் சில்லாங் என்ற இடத்தில் இந்திய-இங்கிலாந்தியப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ‘வில்பிரெட் பெரோன்’ ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். வங்காள தேசத்தின் சிட்டகொங் துறைமுகப் பகுதியில் தலைமைப் பொறியாளராக இருந்தார். பின்பு இங்கிலாந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொறியாளராக உயர் பதவியில் இருந்தார். தாய் டோரத்தி ஒலிம்பிக்கில் புகழ்பெற்ற ஓர் டென்னிசு விளையாட்டு வீராங்கனையாவார். இவர் விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் […]
உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் யோகா- சர்வதேச யோகா தினம் (International Yoga Day) இன்று (ஜூன் 21).
சர்வதேச யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். ஜூன் 21 […]
தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது – உலக காற்று தினம் இன்று (ஜூன் 15).
காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது. உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். மூச்சு விடுவதில் […]
உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் உலகக் குருதிக் கொடையாளர் தினம் இன்று (ஜூன் 14).
உலக சுகாதார நிறுவனம், உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும். கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner)( ஜூன் 14, 1868 ) ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உயிரியல் வல்லுநரும் மருத்துவரும் […]
நிலைமின்னியலை வரையறுக்கும் கூலும் விதியை உருவாக்கிய சார்லசு அகஸ்டின் டெ கூலும் பிறந்த நாள் இன்று (ஜூன் 14, 1736).
சார்லசு அகஸ்டின் டெ கூலும் (Charles-Augustin de Coulomb) ஜூன் 14, 1736ல் பிரான்சின் ஆங்கூலேமில் என்றி கூலும், கத்தரீன் பாஜெ இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாரிசிலுள்ள காத்தர்-நாசியோன் கல்லூரியில் (நான்கு நாடுகள் கல்லூரி) மெய்யியல், மொழி, இலக்கியம் பயின்றார். தவிரவும் கணிதம், வேதியியல், வானியல், தாவரவியல் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார். இவர் மிகுந்த சுட்டியான, செயலாற்றல் மிக்க இளைஞராக இவரது பேராசிரியர்கள் விவரிக்கின்றனர். 1761ல் பட்டம் பெற்று பல இடங்களில் அடுத்த இருபதாண்டுகளுக்கு பொறியியலாளராகப் பணியாற்றினார். […]
சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில் பங்கு கொண்ட, பத்ம பூசன் விருது பெற்ற, சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).
கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4, 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி. எஸ். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1920ல், கிருஷ்ணன், கொல்கத்தாவின் சி.வி.ராமன் அறிவியல் சாகுபடிக்கான இந்திய சங்கத்தில் ஏராளமான திரவங்களில் ஒளி சிதறல் மற்றும் அதன் […]
யங் இரட்டை-பிளவு குறுக்கீடு சோதனை பரிசோதனை மூலம், ஒளி அலைகளால் என்று கண்டறிந்த தாமசு யங் பிறந்த நாள் இன்று (ஜூன் 13, 1773).
தாமசு யங் (Thomas Young) ஜூன் 13, 1773ல் இங்கிலாந்தின் சாமர்செட்டிலுள்ள மில்வெர்டனில் நண்பர் கழகக் கோட்பாட்டை பின்பற்றுபவர்களின் குடும்பமொன்றில் பிறந்தார். இவர் குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளில் மூத்த குழந்தை இவரேயாவார். தனது பதினானகாம் வயதில் யங் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளைக் கற்றார். பிரெஞ்சு, இத்தாலி, ஹெப்ரூ, செருமானியம், அராமைக், சிரியாக், சமாரிடன், அராபியம், பெர்சியன், துருக்கி, அமாரிக் ஆகிய மொழிகளுடன் நன்கு பழக்கப்பட்டவரானார். 1792 ஆம் ஆண்டில், யங் இலண்டனில் புனித பார்த்தோலோமீவ் […]
ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் இன்று (ஜூன் 13, 1911).
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த […]
பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர், வி.கணபதி அய்யர் நினைவு நாள் இன்று (ஜூன் 13, 1987).
வி.கணபதி அய்யர் நவம்பர் 10, 1906ல் கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில் வெங்கடாசலம்-லட்சுமி தம்பதியினருக்குப் புதல்வராகப் பிறந்தார். உள்ளூரிலேயே பள்ளியிறுதியையை முடித்து சென்னை மாநிலக் கல்லூரி யில் படித்து 1927ல் பி.ஏ. ஆனர்ஸ் தேர்வில் கணிதப் பிரிவில் முதல் வகுப்பில் தேறினார். 1938ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் டி.எஸ்.ஸி பட்டம் பெற்றார். முனைவர்கள் கே.ஆனந்த ராவ், ஆர்.வைத்தியநாதசுவாமி முதலியோர் அவரைக் கணித வழி நடத்தினர். மசூலிப்பட்டணத்தில் அரசாங்கக்கல்லூரியில் விரிவுரையாளராக இரண்டாண்டுகள் இருந்தபின், 1939ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் […]
முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1900).
டென்னிஸ் கபார் (Dennis Gabor) ஜூன் 5, 1900ல் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918ல் இவர் குடும்பம் லூதரனிய கிருத்துவத்துக்கு மதம் மாறியது. இவர் பெற்றோருக்கு இவர்தான் முதல் மகனாவார். இறை நம்பிக்கையோடு வளர்ந்தவர், பிற்காலத்தில் தன்னை நாத்திகவாதி என்று கூறிக் கொண்டார். முதல் உலகப் போரின்போது, வட இத்தாலியில் அங்கேரி நாட்டு பீரங்கிப் படையில் பணிபுரிந்தார். 1918ல் இருந்து புடாபெஸ்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பெர்லினில் உள்ள சார்லோட்டன்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் […]
பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) இன்று (ஜூன் 5).
உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் […]
HPSAA (ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணாக்கர் சங்கம்) மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து பேரிடர் கால நிவாரண பொருட்கள..
மெரினா அசோசியேஷன் கட்டுமான நிறுவனம் சார்பாக HPSAA (ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணாக்கர் சங்கம்) நற்தொண்டு நிறுவனம் மூலமாக ராமநாதபுரம் அருகே (பட்டினம்காத்தான்) ECR ரோட்டில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 150 ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பேரிடர் கால நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. கடந்த வருடம் கரோனா கால பேரிடரின் போது சுமார் ஆயிரம் பேருக்கு கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரங்களில் வழங்கப்பட்டது. இன்று (4/6/2021-வெள்ளிக்கிழமை) நடைபெற்ற உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் […]
இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் இன்று (ஜூன் 3, 1990).
ராபர்ட் நாய்சு (Robert Noyce) டிசம்பர் 12, 1927ல் பர்லிங்டன், அயோவாவில் பிறந்தார். அயோவா, கிரினெல்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வமாக பயின்றார். 1945ல் கிரின்னல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1949ல் இயற்பியல் மற்றும் கணிதத்தில் பி.ஏ. உடன் பி.ஏ. பீட்டா கப்பா பட்டம் பெற்றார். பிறகு 1953ல் எம்ஐடியிலிருந்து இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். 1947 ஆம் ஆண்டு பெல் ஆய்வகங்கள் உருவாக்கபட்டது. மேலும் டிரான்சிஸ்டர் உருவாக்க கல்லூரி […]
மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) இன்று (ஜூன் 3).
உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் ஜூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் “இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி” என்பதை அங்கீகரித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி […]
தனது வாழ்வினை தியாகம் செய்து பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள்- உலக பெற்றோர் தினம் இன்று (ஜூன் 1).
உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இரண்டையும் சேர்த்து தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக […]
You must be logged in to post a comment.