நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்த, நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி நினைவு தினம் இன்று (ஜூலை 20, 1937).

ஆகாசவானி செய்திகள் வாசிப்பது” 80,90களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்க்கோனி ஆவார். குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) ஏப்ரல் 25, 1874ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன் அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ, […]

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் நினைவு தினம் இன்று (ஜுலை 15, 1919).

எர்மான் எமில் லுாயிசு பிசர் (Hermann Emil Fischer, அக்டோபர் 9, 1852ல் கோலோன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள உசுகிர்சென் எனுமிடத்தில் லாரன்சு பிசர் என்ற வணிகருக்கும், அவரது மனைவி சூலி போயென்சுகென் என்போருக்கும் பிறந்தார். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் இயலறிவியலைப் படிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரது தந்தை அவரை குடும்பத் தொழிலான வணிகத்தில் ஈடுபட வலியுறுத்தினார். பிசர் இத்துறைக்கு பொருத்தமானவர் இல்லை என்பதை கண்டறியும் வரை இது தொடர்ந்தது. பிறகு, பிசர் […]

குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு செயல்படுத்தி காட்டிய, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் நினைவு தினம் இன்று (ஜூலை 13, 1921).

காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஆகஸ்ட் 16,1845ல் பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய குடும்பம் பாரிசில் குடியேறியது. இவர் சிறு வயதில் வீட்டில் இருந்த படியே தன்னுடைய ஆரம்பக்க் கல்வியைப் பெற்றார். 1858ல் லைசி நெப்போலியன் என்ற இடத்தில் தன்னுடைய படிப்பை ஆரம்பித்த இவர் பத்து வருடங்களுக்குப் பின் நார்மலே என்ற ஊரில் தன்னுடைய மேற்படிப்பைத் தொடர்ந்தார். சிறு வயதில் இவருடைய கல்வி சிறப்பாக […]

பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி பிறந்த தினம் இன்று (ஜூலை 13, 1854).

அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி (Aristarkh Apollonovich Belopolsky) ஜூலை 13, 1854ல் மாஸ்கோவில் பிறந்தார். ஆனால் இவரது தந்தையின் முன்னோர்கள் செர்பிய நகரமான பெலோபோல்யேவை சேர்ந்தவர்கள் ஆவர். பெலோபோல்சுகி 1876ல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1878ல் மாஸ்கோ வான்காணகத்தில் பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிக்கின் அவர்களின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், புல்கோவ் வான்காணகத்தில் 1888ல் பணியாளராக வேலையில் சேர்ந்தார். இவர் கதிர்நிரலியலில் பணிபுரிந்து, பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்தார். இவற்றில் இவர் கண்டுபிடித்த காச்டர் […]

சிறுவயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாய் பிறந்த தினம் இன்று (ஜூலை 12, 1997).

மலாலா யூசப்சாய் (Malala Yousafzai) ஜூலை 12, 1997ல் பாக்கிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில், ஒரு கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவர் ஜியாவுதீன் யூசப்சாய் மற்றும் டோர் பெக்காய் யூசப்சாய் ஆகியோரின் மகள். அவரது குடும்பம் யூசுப்சாய் பழங்குடியினத்தைச் சேர்ந்த பஷ்டூன் இனத்தைச் சேர்ந்த சன்னி முஸ்லிம். மருத்துவமனையில் பிறப்பதற்கு குடும்பத்திற்கு போதுமான பணம் இல்லை. இதன் விளைவாக, யூசுப்சாய் அண்டை வீட்டாரின் உதவியுடன் வீட்டில் பிறந்தார். தெற்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல […]

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் இராமநாதபுரம் மாவட்ட வீரருக்கு கீழக்கரை உஸ்வதுன் ஹசனா சங்கம் சார்பாக பாராட்டு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 2021 யல் ஜப்பான்-டோக்கியோவில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் நாகநாதன் பாண்டியை வாழ்த்தி ஊக்குவிக்கும் முகமாக கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பாக சென்னையில் உள்ள UHMS கம்யூனிட்டி ஹாலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவர் யூசுப் சாகிபு,  சதக் அன்சாரி, முஜீப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில்  நாகநாதன் பாண்டியின் பெற்றோரிடம் விளையாட்டுதுறை இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் […]

பத்ம ஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர், பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று (ஜூலை 7, 2006).

கோவிந்தப்ப வெங்கடசாமி (Govindappa Venkataswamy) அக்டோபர் 1, 1918ல் தமிழ்நாட்டில் எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். அவரது ஆரம்ப பாடங்கள் ஆற்றங்கரையிலிருந்து மணலில் எழுதப்பட்டன. அவரது கிராமத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை. மேலும் 10 வயதிற்குள் அவர் கர்ப்பம் தொடர்பான சிக்கல்களால் மூன்று உறவினர்களை இழந்தார். அகால மரணங்கள் ஒரு டாக்டராகும் முடிவை தூண்டின. ஒரு இளைஞனாக, […]

ஆண்-பெண் வேறுபாட்டை XY குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி, நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று (ஜூலை 7, 1861).

நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார் மறுமணம் செய்துகொண்டு மாசாச்சுசெட்சு மாநிலத்தில் உள்ள வெசுட்டுஃபோர்டு என்னும் இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே நெட்டி மரியா 1880ல் வெசுட்டுஃபோர்டு அகாதெமியில் பட்டம் பெற்றார். நெட்டி இசுட்டீவன்சு அங்கே பள்ளியில் ஆசிரியராகவும் நூலகராகவும் பணிபுரிந்தார். படிப்பிப்பதில் […]

ஓமின் விதி கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர், கணிதவியலாளர், ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று (ஜூலை 6, 1854).

ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார். தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என […]

ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்த, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற, மேரி கியூரி நினைவு தினம் இன்று (ஜூலை 4, 1934).

மரியா மேரி ஸ்லொடஸ்கா கியூரி (Marie Salomea Skłodowska-Curie) நவம்பர் 7, 1867ல் போலாந்தின் வார்சாவில் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்பட்டனர். மரியாவின் தந்தை வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பித்தார். அவர் இரண்டு வார்சா பள்ளிகளுக்கு இயக்குனராக […]

படிகங்களின் அமைப்பு மற்றும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானி கண்டுபிடித்தத, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற சர் வில்லியம் ஹென்றி பிராக் பிறந்தநாள் இன்று (ஜூலை 2, 1862).

வில்லியம் ஹென்றி பிராக் (Sir William Henry Bragg) ஜூலை 2, 1862ல் விக்ட்டன், கம்பர்லேண்ட், இங்கிலாந்தில் பிறந்தார். கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில், ஸ்காலர்ஷிப் வென்ற இவர், கிராண்ட் பள்ளியில் கல்வி கற்றார். 1884 ஆம் ஆண்டில் மூன்றாம் நபராக பட்டம் பெற்றார். 1885 ஆம் ஆண்டில் கணித ஆராய்ச்சிகளில் முதல் வகுப்பு கௌரவ விருது வழங்கப்பட்டது. படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காககவும், 1915 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினைத் தனது […]

கார்பன் டையாக்சைடு லேசரை வடிவமைத்த இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர் சந்திர குமார் நாரன்பாய் படேல் பிறந்தநாள் இன்று (ஜூலை 2, 1938).

சந்திர குமார் நாரன்பாய் படேல் ஜூலை 2, 1938ல் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலம், பாரமதியில் பிறந்தார். இந்திய பொறியியல் கல்லூரி, இந்தியாவின் புனே பல்கலைக்கழகம் மற்றும் எம்.எஸ்., ஆகியவற்றிலிருந்து இளங்கலை பொறியியல் (பி.இ) பட்டம் பெற்றார். 1961 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பிஎச்டி பட்டம் பெற்றார். 1961ல் பெல் ஆய்வகங்களில் சேர்ந்தார். பின்னர் நியூ ஜெர்சியிலுள்ள முர்ரே ஹில்லில் உள்ள ஏடி அண்ட் டி பெல் ஆய்வகங்களில் ஆராய்ச்சி, பொருட்கள் அறிவியல், பொறியியல் […]

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று (ஜூலை 1, 1961).

கல்பனா சாவ்லா (Kalpana Chawla) ஜூலை 1, 1961ல் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர். கல்பானா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு […]

எக்ஸ் கதிர்கள் மூலமாகப் படிகங்களின் அமைப்பை ஆய்வு செய்த, நோபல் பரிசு பெற்ற வில்லியம் லாரன்சு பிராக் நினைவு தினம் இன்று (ஜூலை 1, 1971).

வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg) மார்ச் 1, 1890 தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவளி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி பிராக் பணியின் காரணமாக ஆஸ்திரேலியாவில் வசித்த போது அங்கு பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் குவெண்டோலின் பிராக். இவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. 1921ல் ‘ஆலிசு கிரேசு ஹாப்கின்சன்’ என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு ஆண், […]

ஆர்கன் என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டு பிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, சான் வில்லியம் ஸ்ட்ரட் நினைவு தினம் இன்று (ஜூன் 30, 1919).

சான் வில்லியம் ஸ்ட்ரட் (John William Strutt, 3rd Baron Rayleigh), நவம்பர் 12, 1842ல் இங்கிலாந்தில் எசெக்சு என்ற ஊரில் உள்ள லாங்க்போர்டு குரோவ் என்ற இடத்தில் பிறந்தார். மூத்த மகனாகப் பிறந்த இவருடைய தந்தை இரண்டாவது பாரன் ராலே ஆவார். இவர் உழவரும் நிலக்கிழாரும் ஆவார். சான் ஸ்ட்ரட் இளம் வயதிலேயே கணிதத்தில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இவர் சிறுவனாயிருந்த போது இவரின் உடல் நலம் அடிக்கடி சீர்கேடு அடைந்தது. பத்து வயதான போது […]

செவ்வாய் சுற்றுகலன் திட்டம் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவிய பாரத C.N.R.ராவ் (C. N. R. Rao) பிறந்த தினம் இன்று (ஜூன் 30, 1934).

சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் (C. N. R. Rao) ஜூன் 30, 1934ல் பெங்களூரில் கன்னட மாதவ பிராமண குடும்பத்தில் ஹனுமந்த நாகேசா ராவ் மற்றும் நாகம்மா நாகேசா ராவ் ஆகியோருக்கு பிறந்தார். தந்தை பள்ளிகளின் ஆய்வாளராக இருந்தார். அவர் ஒரே குழந்தை, மற்றும் அவரது கற்றறிந்த பெற்றோர் ஒரு கல்விச் சூழலை உருவாக்கினர். அவர் தனது தாயிடமிருந்து இந்து இலக்கியத்திலும், சிறு வயதிலேயே தனது தந்தையிடமிருந்து ஆங்கிலத்திலும் நன்கு அறிந்தவர். அவர் தொடக்கப் பள்ளியில் […]

மக்களுக்கு வானத்தில் இருந்து விழும் சிறு சிறுகோள்கள் (கற்கள்) பற்றிய விழிப்புணர்வு தேவை -, சர்வதேச சிறுகோள்கள் தினம் (World Asteroid day) இன்று (தினம் ஜூன் 30).

ஜூன் 30, 1908ல் ரஸ்சியாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று காலைவேளை வானில் கடந்தது. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின. பூமி நடுங்கியது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, 60 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர். நல்லவேளையாக இந்த வெடிப்பு நிகழ்ந்த பிரதேசம் மக்கள் […]

பத்ம பூஷண் விருது பெற்ற, புகழ்பெற்ற போக்ரான் அணுசக்தி விஞ்ஞானி, பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் பிறந்த தினம் இன்று (ஜூன் 29, 1931).

பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் (Padmanabhan Krishnagopalan Iyengar) ஜூன் 29, 1931ல் திருநெல்வேலி, தமிழ்நாட்டில் பிறந்தார். ஐயங்கார் 1952 ஆம் ஆண்டில் டாடா அடிப்படை ஆராய்ச்சிக்கான நிறுவனம் (TIFR) அணுசக்தித் துறையில் இளைய ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார். நியூட்ரான் சிதறலில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் 1954 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அணுசக்தி ஸ்தாபனத்திற்கு மாற்றப்பட்டார். பாபா அணு ஆராய்ச்சி மையம் என மறுபெயரிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டில், ஐயங்கார் கனடாவில் பயிற்சி பெற்றார். […]

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்ற நினைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) பிறந்த தினம் இன்று (ஜூன் 28, 1971).

எலான் மஸ்க் (Elon Musk) ஜூன் 28, 1971ல் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர். தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். பன்னிரண்டு அகவையில் இருக்கும்போதே கணினியில் ஈர்ப்புக் கொண்டு ‘Blaster’ என்ற வீடியோ கேமை வடிவமைத்தார். அதை PC and Office Technology என்ற இதழிடம் 500 டாலருக்கு விற்றார்.தம்முடைய வீடியோ விளையாட்டுக்கு அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைந்தார். கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும் பின்னர் […]

மேரி கியூரிக்குப் பிறகு அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் இயற்பியல் அறிஞர் மரியா கோயெப்பெர்ட் மேயர் பிறந்த தினம் இன்று (ஜூன் 28 1906).

மரியா கோயெப்பெர்ட் மேயர் (Maria Goeppert Meyer) ஜூன் 28 1906ல் ஜெர்மனியில் மேல் சைலேசியா (போலந்து) பகுதியில் கட்டோவிட்சு என்ற ஊரில் பிறந்தார். பிரெடெரிக் கோயெப்பெர்ட்-மரியா நீ உல்ப் என்ற இணையரின் ஒரே மகளாகப் பிறந்தார். ஆறு தலைமுறைகளாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்டு சிறப்புற்ற குடும்பம் இவருடையது. 1910ல் இவருடைய தந்தை கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றச் சென்றதால் இவருக்குத் திருமணம் ஆகும்வரை இவருடைய வாழ்க்கை அதே ஊரிலேயே கழிந்தது. தனியார் பொதுப்பள்ளிகளில் இவருடைய இடைநிலைக் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!