பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann) செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் பிறந்தார். நியூமனின் தந்தை விவசாயியாவார். அவரின் சிறு வயதிலேயே அவரது அம்மா பிரிந்து சென்றுவிட அதன்பிறகு, தாத்தா வீட்டில் வளர்ந்தார். கணிதத்தில் சிறந்து விளங்கிய எர்ன்ஸ்ட் நியூமன், அக்காலத்தில் அடிக்கடி போர் நடந்ததால் கல்வி தடைபட்டது. இந்நிலையில், படிப்பை 16 வயதிலேயே நிறுத்தியவர், அந்நாட்டு இராணுவத்தில் இணைந்தார். 1815 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு எதிராக, […]
Category: உலக செய்திகள்
தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11,1921).
சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati) டிசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை […]
சூரிய இயற்பியல், காற்றியல், வானியல் ஆகிய அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய எர்பெர்ட் ஃபிரீடுமேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 09,2000).
எர்பெர்ட் ஃபிரீடுமேன் (Herbert Friedman) ஜூன் 21, 1916ல் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் சாமுவேல் என்பவருக்கும் இரெபாக்கா ஃபிரீட்மேனுக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் மரபுவழி யூதர். இவர் நியூயார்க் நகருக்கு இந்தியானாவில் உள்ள எவான்சுவில்லியில் இருந்து புலம்பெயர்ந்தவர். நியூயார்க்கில் இவர் கலைப்படச் சட்டக்க் கடையை மன்ஃஆட்டனில் நிறுவினார். ஃபிரீடுமேனின் தாயார் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர். இளமையில் இவர் ஓர் ஏதிலிச் சிறுவனாக ஓவியராகத் தனது படங்களை விற்றே பிழைத்துள்ளார். இவர் 1932ல் புரூக்ளின் கல்லூரியில் […]
வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்தத, நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 08,1981).
ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை ‘டகுஜி ஒகாவா’ என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். 1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். […]
எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனைத்துலக எழுத்தறிவு தினம் இன்று (செப்டம்பர் 8)
அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965ல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், […]
அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906).
லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்சுமானுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் […]
மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).
ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஜனவரி 24, 1922ல் கர்நாடகாவில் பிறந்தார். மைசூரிலிருந்து வந்த முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவரான அவரது பாட்டி கமலாம தசப்பாவால் நிறுவப்பட்ட ஒரு “சிறப்பு ஆங்கிலப் பள்ளியில்” தனது முதன்மை கல்வியைப் பெற்றார். கல்வித் துறையில் (குறிப்பாக விதவைகள்) மிகவும் தீவிரமாக செயல்பட்டவர். பள்ளி இறுதிப் போட்டிகளுக்குப் பிறகு, வரலாற்றை எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் இறுதியில் இயற்பியல் மற்றும் கணிதத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் பெங்களூரு மத்திய கல்லூரியில் பயின்றார். கணிதத்தில் பி.எஸ்சி (ஹான்ஸ்) மற்றும் […]
மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தென்னை – உலகத் தேங்காய் நாள் (world coconut day) (செப்டம்பர் 2)
உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது. தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் […]
சீரொளி இடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்த, சீரொளி இடுக்கியின் தந்தை ஆர்தர் ஆசுக்கின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2, 1922).
ஆர்தர் ஆசுக்கின் (Arthur Ashkin) செப்டம்பர் 2, 1922ல் நியூயார்க்கின் புரூக்கிலின் பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்தார். இவருடைய பெற்றோர்கள் இசடோர் ஆசுக்கின், அன்னா ஆசுக்கின் ஆவர். தந்தை இசடோர் ஒடெசாவில் (உக்ரைனில்) இருந்து, தனது 18-வது அகவையில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். தாயார் அன்னா உக்ரைனில் இருந்து குடிபெயர்ந்தவர் ஆவார். ஆர்தர் ஆசுக்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு ஆய்வுக்கூடத்தில் தொழினுட்ப உதவியாளராகவும் இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது அமெரிக்கப் படைத்துறைக்கான இரேடார் […]
ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).
எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட நீதிபதி. இதனால், பல ஊர்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தது குடும்பம். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடர்ந்து பயின்றார். 1942ல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். இளம் வயதில் தந்தையுடன் சென்று சர். சி.வி.ராமனைச் சந்தித்த பிறகு, அவரை ஆதர்ஷ நாயகனாகக் […]
அன்புக்கும் கருணைக்கும் புகழ் பெற்ற, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1910).
அன்னை தெரேசா (Mother Teresa) ஆகஸ்ட் 26, 1910ல் மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும். சிறுவயது முதல் ஆழ்ந்த இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்ட இவர், தனது 18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினரானார். கல்கத்தாவில் இந்திய […]
ஃபிராங்க்-ஹெர்ட்ஸ் பரிசோதனை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1882).
ஜேம்ஸ் ஃபிராங்க் ஆகஸ்ட் 26, 1882ல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜேக்கப் ஃபிராங்க் ஒரு வங்கியாளர். ஒரு பக்தியுள்ள மற்றும் மத மனிதர், அதே நேரத்தில் அவரது தாயார் ரபீஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். ஃபிராங்க் ஹாம்பர்க்கில் ஆரம்ப பள்ளியில் பயின்றார். 1891 ஆம் ஆண்டு தொடங்கி அவர் வில்ஹெல்ம் ஜிம்னாசியத்தில் பயின்றார். அது அப்போது சிறுவர்கள் பள்ளியாக மட்டுமே இருந்தது. அப்போது ஹாம்பர்க்கிற்கு எந்த பல்கலைக்கழகமும் இல்லை. எனவே வருங்கால […]
மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஹெர்த்தா அயர்ட்டன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1923).
ஹெர்த்தா அயர்ட்டன் (Hertha Ayrton) ஏப்ரல் 28, 1854ல் இங்கிலாந்து, ஹேம்ப்சைர், போபி சாரா மார்க்ஸ் என்னும் இடத்தில் பிறந்தார். லிவி மார்க்ஸ் என்ற போலந்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்த கடிகாரம் செய்து வாழ்க்கை நடத்திய யூதருக்கும் அலைஸ் தெரசா மோஸ் என்னும் தாயாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். ஏழு குழந்தைகளையும் கருவுற்றுருந்த மனைவியையும் விட்டுவிட்டு இவர் தந்தை 1861ம் ஆண்டு காலமாகிவிட்டார். சாரா அதன்பின் தமது இளைய சகோதர சகோதரிகளைப் பாா்க்கும் பணியையும் செய்துவந்தார். இவருக்கு 9 […]
டைனமோவை கண்டுபிடித்த, சிறந்த சோதனையாளர், மைக்கேல் பாரடே நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 1867).
மைக்கேல் பாரடே (Michael Faraday) செப்டம்பர் 22, 1791ல் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய எலிபண்ட் அண்ட் காசில் என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு […]
கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹென்றி பெக்கெரல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 1908).
அந்துவான் என்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel) டிசம்பர் 15, 1852ல் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவர் மற்றும் இவரது மகன் சீன் உட்பட நான்கு தலைமுறை அறிவியலாளர்களை இவரது குடும்பம் பெற்றுள்ளது. 1892 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் இயற்பியல் பிரிவின் தலைவராகவும், பின்னர் 1894ல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் ஆனார். பெக்கெரல் 1896ல் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence) ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்லெம் […]
நிலவில் தரையிறங்கிய முதல் மனிதர், அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 2012).
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) ஆகஸ்ட் 5, 1930ல் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக பணிபுரிந்தார். அதனால் அவர் மாநிலத்திற்குள் 20 நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஆம்ஸ்ட்ராங் இரண்டு வயதாக இருந்தபோது க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங்கின் பறக்கும் ஆசைகள் இந்த நேரத்தில் […]
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய இந்திய இயற்பியலாளர், அன்னா மாணி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 23, 1918).
அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, அவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். அவர் நடனத்தைத் தொடர விரும்பினார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், […]
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22).
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை […]
சிறிய நட்சத்திரம் வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர், சுப்பிரமணியன் சந்திரசேகர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 21, 1995).
சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல் பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த […]
You must be logged in to post a comment.