ஆர். எஸ். மங்கலம் ஜமாபந்தி: தாமதமாக வந்த அதிகாரியால் மக்கள் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளான இன்று, வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் ஜமாபந்தி நடந்து வரும் நிலையில், இறுதி நாளான இன்று அவர் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தங்கள் மனுக்களை அளிப்பதற்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த தாமதம் அப்பகுதியில் சலசலப்பை […]

திருவாடானையில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் உத்தரவின் பேரில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் […]

ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா .!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த கிராமப் பொதுமக்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வானத்தை வட்டமிட கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது. அதன்பிறகு […]

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை.!

திருவாடானை அருகே உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையில் 100 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பழங்குளம் ஊராட்சி கீழ்ப்புலி ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத கரகம் எடுப்பு உற்சவ திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி 4 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது, ஆண்டுதோறும் இக்கோவிலில் உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்,இந்த ஆண்டும் நடைபெற்றது இதில் கோவில் நிர்வாகம் சார்பில் […]

பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..

தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58). இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிலையில், இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து […]

ஆலங்குளத்தில் தொழிலாளர் சிறப்பு முகாம்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் 20.05.2025 செவ்வாய்க் கிழமை அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார்.   இது பற்றிய செய்திக் குறிப்பில் திருநெல்வேலி தொழிலாளர் நலத் துறை, தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் […]

ராமநாதபுரம் போலீசாரின் தரமான சம்பவம்.!

பூட்டிய வீட்டை உடைத்து தடையமின்றி தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளையன்.! ஊரு விட்டு ஊரு மாநிலம் வீட்டு மாநிலம் தேடி சென்று கைது செய்த போலீசாரின் தரமான சம்பவம்.!! ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அமிர்தா நகரில் தனது கணவர் அரபு நாட்டில் வேலை செய்வதால், தனது மகனுடன் ‘லோக அம்பாள்’ என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 12.04.2025-ம் தேதி இரவு 09.00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டில் இருவரும் […]

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது .!

*2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது* ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் தனது தந்தை பெயரில் உள்ள இடத்தை தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய சிவகங்கை மாவட்டம்   இளையான்குடி  தாலுகாவை   சேர்ந்தவர் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கீழக்கொடுமலூர் கிராம நிர்வாக அலுவலர் […]

மோர் பண்ணை கிராமத்தில் 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

ஆர்எஸ் மங்கலம் அடுத்த மோர் பண்ணை கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா மோர் பண்ணை மீனவ கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் […]

ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவியை தாக்கிய ஆறு பேர் கொண்ட கும்பல்.!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார். முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய வீட்டு ஒன்றை கட்டியுள்ளார். புதிய வீட்டை முரளி ஜெகன் பெரியப்பா ராமச்சந்திரன் அபகரிக்க முயற்சிப்பதாக முரளி ஜெகனின் தாய் […]

அதிகாரிகளின் அலட்சியம்.! நீதிமன்றத்தில் போராடி வெற்றி .!!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த களிமண் குண்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது மீன்பிடித் தொழிலாகும் நாட்டுப் படகு கரைவலை மீனவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கடற்கரையை ஒட்டிய சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பினை அந்தப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் சிலர் ஆக்கிரமித்து தோப்பு வைத்து அதன் பின்னர் அந்த வழியே மீனைப் பிடித்து கரைக்கு கொண்டு செல்லும் மீனவர்களுக்கு அதிக […]

தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம், புளியங்குடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தினசரி அங்காடி மற்றும் வாசுதேவ நல்லூரில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட […]

இன்ஸ்டால் பிரபலம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்.!போலீசார் பிடித்து விசாரணை.!!

நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்கள் மீது தொண்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என இன்ஸ்டால் பிரபலம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்: போலீசார் பிடித்து விசாரணை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பகுதியை சேர்ந்து சபீனா இவர் வீட்டில் இருந்த  கடந்த சில மாதங்களுக்கு முன் 6/12 சவரன் தங்கம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதாக தொண்டி காவல் […]

கைப்பிடி சுவற்றின் விளிம்பில் அமர்ந்து ஆபத்தை உணராமல் கைபேசியில் கவனமாக பேசிக் கொண்டிருந்த பெண்ணின் செயல்..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முதல் தளத்தில், கைபிடி சுவரின் விளிம்பில் ஒரு பெண் ஆபத்தான நிலையில் அமர்ந்து கைபேசியில் கவனமாக பேசிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கட்டிடத்தின் உயரத்தையும்,கைபிடி சுவற்றின் குறுகலான அமைப்பையும் கருத்தில் கொள்ளாமல், எந்தவிதமான பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் அவர் அமர்ந்திருந்தது பார்ப்பவர்களை அச்சத்தை ஏற்படுத்தியது. சிறிது நிலை தடுமாறினாலும் அவர் கீழே விழுந்து  பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்.நல் வாய்ப்பாக அவர் எந்தவித காயமும் இன்றி தப்பினார். இது போன்ற […]

மாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடத்தப்பட்ட பாய்மர படகு போட்டி..!

கடலில் படகுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு வகை பந்தயப் போட்டியான இப்போட்டியில், பாய்மரங்களின் உதவியுடன் படகுகளை இயக்கி, ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வீரர்கள் போட்டியிடுவர். இப்போட்டி பல இடங்களில், குறிப்பாக மீனவ கிராமங்களில் கோயில் திருவிழாக்கள், ஆடி பொங்கல் போன்ற விழாக்களின் போது நடத்தப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் 24 படகுகள் கலந்து கொண்டன. ஒரு […]

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் விண்ணைப் பிளந்த நமச்சிவாயா கோசத்தோடு வடமிலுத்து நெகிழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது ஆண்டுக்கு ஒரு முறை […]

வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு அதிமுக சார்பில் வீரவணக்கம்: போரில் வெற்றி பெறவும் சிறப்பு வழிபாடு..!

நேற்று, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார் அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் வீரவணக்கம் செய்து அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் […]

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணியினருக்கு முதல் பரிசு..

இராமநாதபுரத்தில் மல்லி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சார்பாக லிமிட்லெஸ் டர்ஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை பெரியபட்டினம் A அணியினரும் இரண்டாவது பரிசினை குப்பன் வலசை அணியினரும் மூன்றாவது பரிசினை கீழக்கரை அணியினரும் நான்காவது பரிசினை பெரியபட்டினம் B பெற்றனர். சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை PFC A அணியின் மசூத் குப்பன் வலசை அணியின் மாசானம் ஆகியோர் […]

கீழக்கரையில் சிசிடிவி கேமராக்கள் வழங்கிய செல்வந்தர்கள் .! சார்பு ஆய்வாளர் வேண்டுகோள்.!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீர கணேஷ் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து வருவதாகவும் கூடுதலாக கேமராக்கள் தேவைப்படுவதால் தங்கள் முன் வருமாறு தொழிலதிபர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும் தொழிலதிபருமான உமர் களஞ்சியம் மற்றும் ராமநாதபுரம் டுடேஸ் புட்வேர் உரிமையாளரும் தொழிலதிபருமான காசிம் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் வழங்கினர். இதனை அகமது அதில் முஹம்மது பிலால் அப்துல்லாஹ் ஆகியோர் […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா.! கொடியேற்றத்துடன் துவக்கம்.!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு இறை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!