குவாண்டம் இயக்கவியலில் சுரோடிங்கர் அலை சமன்பாடு மூலம் ஒரு புரட்சியை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற எர்வின் சுரோடிங்கர் நினைவு தினம் இன்று (ஜனவரி 4, 1961).

எர்வின் சுரோடிங்கர் (Erwin Schrödinger) ஆகஸ்ட் 12, 1887ல் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். இவரது தந்தையார் ருடோல்ஃப் சுரோடிங்கர், தாய் ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். 1898 ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். 1906 ஆம் ஆண்டுக்கும் 1910 ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் “பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்” […]

பால்வெளி விண்மீன்களின் புறவடிவ வகைபாட்டு அமைப்புகளை உருவாக்கிய வில்லியம் வில்சன் மார்கன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1906).

வில்லியம் வில்சன் மார்கன் (William Wilson Morgan) ஜனவரி 3, 1906ல் அமெரிக்காவில் பிறந்தார். மார்கன் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்திலும் இலீ பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து கலி பயின்றாலும் இறுதி ஆண்டில் வெளியேறி விட்டுள்ளார். இவர் யெர்க்கேசு வான்காணகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகத் தன் பணியை தொடங்கியுள்ளார். அங்கே மாணவருக்கு வகுப்புகளும் எடுத்துள்ளார். இந்த வான்காணகம் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த்தாகும். இவர் அப்பல்கலைக்கழகத்தில் 1927ல் பட்டப் படிப்பை முடித்து அறிவியல் இளவல் பட்டம் பெற்றுள்ளார். இதற்கு இவர் பயின்ற இரு பல்கலைக்கழக […]

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1831).

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) ஜனவரி 3, 1831ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840ல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து […]

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).

சத்தியேந்திர நாத் போஸ் (Satyendra Nath Bose) ஜனவரி 1, 1894ல் கொல்கத்தாவில் பிறந்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் பெற்றிருந்தார். காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான். பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார். இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம். ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. […]

ஆல்பா செண்டாரியின் (Alpha Centauri) தொலைவை முதன்முதலில் கண்டறிந்த தாமசு ஜேம்சு எண்டர்சன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 28, 1798).

தாமசு ஜேம்சு ஆலன் எண்டர்சன் (Thomas James Alan Henderson) டிசம்பர் 28, 1798ல் டண்டீ நகரில் பிறந்தார். தாமசு எண்டர்சன் டண்டீ உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு வழக்கறிஞராகி உதவியாளரிலிருந்து பல்வேறு உயர்நிலைகளை அடைந்தார். என்றாலும் அவரது கவனம் எப்போதும் வானியலிலும் கணிதத்திலுமே கவிந்திருந்தது. நிலா இடைமறைவைப் பயன்படுத்திப் புவியின் நெட்டாங்கைக் (longitude) காணும் புதிய முறையைக் கண்டறிந்ததும் அப்போது அரச கடற்படைத் துறையின் கடலளவை வரைபடக் கண்காணிப்பளராக இருந்த தாமசு யங்கின் கவனத்துக்கு […]

ஒரு இலட்ச ரூபாய் நானோ கார் தயாரித்த மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர், பத்ம பூஷண் ரத்தன் டாட்டா பிறந்த தினம் இன்று (டிசம்பர் 28, 1937).

ரத்தன் நவால் டாட்டா (Ratan Naval Tata) டிசம்பர் 28, 1937ல் மும்பையின் வளமும் புகழும் மிகுந்த டாட்டா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாட்டா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாட்டா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாட்டா வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு […]

வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த, நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்ச்சர் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 27, 1822).

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur) டிசம்பர் 27, 1822 கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் பிறந்தார். ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி ரெளகியினதும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவரது குடும்பம் 1826 ஆம் ஆண்டில் மார்ன்சுக்கும் 1827 ஆம் ஆண்டில் அர்பாய்சுக்கும் இடம்பெயர்ந்தது. பாஸ்ச்சர் 1831ல் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தார். ஆரம்ப பள்ளி காலங்களில் ஆர்வம் மீன் பிடித்தல், வரைதல் போன்றவற்றில் இருந்ததுடன், […]

அறிவியல் புரட்சியில் முக்கியமான கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்ட தத்துவஞானி ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 25, 1642).

ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton) டிசம்பர் 25, 1642ல் கிரிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார். இவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் இருந்தது. தனது 12வது வயதில் […]

தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 24, 1987).

எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன், சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் […]

வெப்பத்திற்கும் இயந்திர வேலைக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்த ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 24, 1818).

ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் (James Prescott Joule) டிசம்பர் 24, 1818ல்சால்போர்ட்ல் பெஞ்சமின் ஜூலின் மகனாக பிறந்தார். பெஞ்சமின் ஒரு பணக்கார மது தயாரிப்பாளர். ஜூலின் இளம் வயதில் அவருக்கு பிரபலமான விஞ்ஞானி ஜான் டால்ட்டன்னால் பயிற்சி அளிக்கப்பட்டது. பின் வேதியியலாளர் வில்லியம் ஹென்றி மற்றும் மான்செஸ்டர் பொறியாளர்களான பீட்டர் எவர்ட் மற்றும் ஈடன் ஹோட்கின்சோன் ஆகியோர் ஜூலுக்கு பயிற்று வித்தனர். அவர் மின்சாரத்தை பார்த்து ஆச்சரியத்துக்குள்ளானார். மேலும் அவர் தனக்கும் மற்றும் அவரது சகோதரருக்கும் ஒருவருக்கொருவரும் […]

தந்தை பெரியார், வைக்கம் வீரர், ஈ.வெ.இராமசாமி நினைவு தினம் இன்று (டிசம்பர் 24, 1973).

ஈரோடு வெங்கட்ட இராமசாமி (E.V. Ramasamy) செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர்கள் ஆவர். 1929ல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் […]

உயர் தொழில்நுட்ப உடனொளிர்வு நுண்ணோக்கி (Super Resolution Microscope) மேம்படுத்திய நோபல் பரிசு பெற்ற இசுடீபன் டபுள்யூ. ஹெல் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 23, 1962).

இசுடீபன் டபுள்யூ. ஹெல் (Stefan W. Hell) டிசம்பர் 23, 1962ல் உருமேனியாவின் அராட் நகரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் 1990ல் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1991 முதல் 1993 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் சோதனைக் கூடத்தில் பணிபுரிந்தார். அங்கு 4-Pi மைக்ரோஸ்கோப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். அடுத்த 3 ஆண்டுகள் பின்லாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவ இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தூண்டப்பட்ட வெளியேற்ற சிதைவு (STED […]

உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 18, 1890).

எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (Edwin Howard Armstrong) (டிசம்பர் 18, 1890ல் அமெரிக்காவின் நியூயார்க், செல்சியா என்ற இடத்தில் பிறந்தார். இவரின் அப்பா பெயர் ஜான், அம்மாவின் பெயர் எமிலி ஆகும். இவரின் அப்பா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் வேலை செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தீட்டா ஜி பற்றிய பாடத்தை எடுத்துப்படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழக்கத்திலேயே முதலில் பேராசிரியராகப் பணிபுரிந்தர். அதன் பின்பு முதல் உலகப்போரின் போது சமிக்ஞை […]

வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் துல்லிய ஆய்வு செய்த பிரபல வானியலாளர் டைக்கோ பிராகி பிறந்த தினம் இன்று (டிசம்பர் 14, 1546).

டைக்கோ ஆட்டசென் பிராகி (Tycho Ottesen Brahe) டிசம்பர் 14, 1546ல் டென்மார்க்கின் பல செல்வாக்குமிக்க உன்னத குடும்பங்களின் வாரிசாகப் பிறந்தார். விஞ்ஞானத்தைப் பற்றிய டைகோவின் பார்வை துல்லியமான அவதானிப்புகளுக்கான ஆர்வத்தால் உந்தப்பட்டது. மேலும் அளவீட்டுக்கான மேம்பட்ட கருவிகளுக்கான தேடலானது அவரது வாழ்க்கையின் பணியைத் தூண்டியது. டைகோ ஒரு தொலைநோக்கியின் உதவியின்றி பணிபுரிந்த கடைசி பெரிய வானியலாளர் ஆவார். விரைவில் கலிலியோ கலீலி மற்றும் பிறரால் வானத்தை நோக்கி திரும்பினார். துல்லியமான அவதானிப்புகளை மேற்கொள்வதற்கு நிர்வாணக் கண்ணின் […]

கீழக்கரையில் அஹமது தெரு பொதுநல சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் அதிக நபர்களுக்கு பரவிவரும் காரணத்தினால் அஹ்மது தெரு பொதுநல சங்கம் சார்பில்  என்.எம்.டி தெரு, சொக்கநாதர் கோயில் தெரு, அகமது தெரு, மேலத்தெரு, பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்பு அவர்கள் இன்றிலிருந்து மூன்று நாட்கள், அதாவது  14/12/2021 வரை நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். என் நிகழ்ச்சியில் அகமது தெரு பொது நல சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் […]

இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் (Computer Chips (CPU)) செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்ஸ் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 12, 1927).

ராபர்ட் நாய்ஸ் (Robert Noyce) டிசம்பர் 12, 1927ல் பர்லிங்டன், அயோவாவில் பிறந்தார். அயோவா, கிரினெல்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோதுகணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வமாக பயின்றார். 1945ல் கிரின்னல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1949ல் இயற்பியல் மற்றும் கணிதத்தில் பி.ஏ. உடன் பி.ஏ. பீட்டா கப்பா பட்டம் பெற்றார். பிறகு 1953ல் எம்ஐடியிலிருந்து இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். 1947 ஆம் ஆண்டு பெல் ஆய்வகங்கள் உருவாக்கபட்டது. மேலும் டிரான்சிஸ்டர் உருவாக்க கல்லூரி இயற்பியல் […]

புவியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள பால்வெளிகளின் தொலைவைப் துல்லியமாகக் கண்டறிந்த ஹென்ரியேட்டா சுவான் நினைவு தினம் இன்று (டிசம்பர் 12, 1921).

ஹென்ரியேட்டா சுவான் லீவிட் (Henrietta Swan Leavitt) ஜூலை 4, 1868ல் மசாசூசட்டில் இருந்த இலங்காசுட்டரில் பிறந்தார். இவர் பேராலய அமைச்சராக இருந்த ஜார்ஜ் உரோசுவெல் இலீவிட்டின் மகளாவார். இலீவிட்டின் தாயார் என்றியேட்ட சுவான் கெந்திரிக் ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் மசாசூசட் பே குடியிருப்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த ஓர் ஆங்கிலேயத் தூய்மைவாத்த் தையல்கார்ராகிய தெயாக்கோன் ஜான் இலீவிட்டின் வழித்தோன்றல் ஆவார். இவர் ஓபர்லின் பள்ளியில் பயின்றார். பின் இரெட்கிளிப் கல்லுரியில் சேர்ந்து 1892ல் இளவல் […]

பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 6, 1956).

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14, 1891ல் மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். […]

குவாண்டம் இயக்கவியலை உருவாக்கும், ஹைசன்பர்க் நிலையில்லா (Uncertainty) கோட்பாட்டைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற வெர்னர் ஹைசன்பர்க் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 5, 1901).

வெர்னர் ஹைசன்பர்க் (Werner Heisenberg) டிசம்பர் 5, 1901ல் ஜெர்மனியின் வர்ஸ்பர்க் நகரில் பிறந்தார். தந்தை கிரேக்க மொழி மற்றும் கிரேக்க வரலாற்றியல் அறிஞர். பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றியவர். மூனிச் நகரில் உள்ள மாக்ஸ் மில்லன் பள்ளியில் படித்த வெர்னர், தன் கணித ஆற்றலால் ஆசிரியர்களைக் கவர்ந்தார். மூனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் மாக்ஸ் போர்னிடம் இயற்பியல் பயில்வதற்காக, கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மூனிச் பல்கலைக்கழகத்தில் நீர் இயக்கவியலில் ஆய்வுக் […]

முதலில் மின்னஞ்சல் (MAIL) என்பதைக் கண்டுபிடித்த, மின்னஞ்சலின் தந்தை தமிழரின் பெருமைக்குரியவர் சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2, 1963).

வி.ஏ.சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) டிசம்பர் 2, 1963ல் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். தனக்கு அகவை 7 இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் படங்களுக்கு இயக்கமூட்டல் (அசைபடமாக்கல் animation) துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!