முகமது அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) ஜனவரி 29, 1926ல், பிரிக்கப்படாத இந்தியாவில் சாஹிவால் மாவட்டத்தில் சாண்டோக்தாஸ் எனும் ஊரில் சவுத்ரி முகமது ஹுசைன் மற்றும் ஹாஜிரா ஹுசைன் தம்பதியருக்கு பிறந்தார். இளம் வயதில் படிப்பில் சுட்டியாக இருந்த இவரை ஆசிரியர்கள், பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் எடுத்து ஆசிரியராக ஆகச் சொன்னார்கள். இவரோ தனக்குக் கணிதத்தில் ஆர்வம் என்று சொல்லி கணிதத்தைப் பாடமாக தேர்வு செய்தார். தனது 14 வயதில், சலாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் […]
Category: உலக செய்திகள்
முதலாவது நான்கு முழு இயக்க உள்ளெரி பொறியை (Four Stroke internal combustion engine) உருவாக்கிய நிக்கோலஸ் ஓட்டோ நினைவு தினம் இன்று (ஜனவரி 26, 1891).
நிக்கோலஸ் ஓட்டோ (Nikolaus Otto) ஜூன் 10, 1832ல் ஜெர்மனியில் உள்ள ஹால் ஷாசன் நகரில் பிறந்தார். இவர் தந்தை இவர் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். படிப்பிலும் பிறவற்றிலும் திறமைமிக்க மாணவராகத் திகழ்ந்தார். எனினும் பொருளாதார முட்டுப்பாட்டின் காரணமாக உயர் நிலைப்பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியவில்லை. பதினாறு வயது நிறைவதற்கு முன்பாக வணிக அனுபவம் பெறும் பொருட்டு ஒரு மளிகைக் கடையில் பணிக்கமர்ந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர் ஃபிராங்ஃபர்ட் நகரில் ஒரு அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். அதன்பின் […]
பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1627).
இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) ஜனவரி 25, 1627ல் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக பிறந்தார். இரிச்சர்டு பாயில் அயர்லாந்தில் உள்ள டூடர் தோட்டங்களில் துணை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக 1588ல் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்துக்கு வந்தார். இரிச்சர்ட்டு பாயில் நில சுவானாக இருந்த காலத்தில் தான் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது […]
இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த பிரான்ஸ் அறிவியலாளர் ஜோசப் லூயி லாக்ராஞ்சி பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1736).
ஜோசப் லூயி லாக்ராஞ்சி (Joseph Louis Lagrange) ஜனவரி 25, 1736ல் இத்தாலிய பெற்றோருக்கு ட்யூரின் என்ற ஊரில் பிறந்தார். செல்வம் பொருந்திய தாய் தந்தையருக்கு 11வது குழந்தையாகப் பிறந்து தான் ஒருவனே குழந்தைப் பருவத்தைத் தாண்டி ஆளாகியிருந்தும், செலவாளியான தந்தையின் செல்வம் ஒன்றும் தனக்கு மிஞ்சவில்லை. 17-வது வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது லாக்ராஞ்சியின் நாட்டமெல்லாம் பண்பாடு, இலக்கியம் இவைகளிலேயே இருந்தது. தற்செயலாக ஒரு சமயம் ஹாலியினுடைய ஒரு கட்டுரையில் கிரேக்கர்களுடைய வடிவியல் முறைகளைக் காட்டிலும் […]
அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்தத, நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1907).
ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை ‘டகுஜி ஒகாவா’ என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். 1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். […]
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி சுதந்திரப் போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1897).
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose) ஜனவரி 23, 1897ல் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது. இவரது தாயார் பிரபாவதிதேவி “தத்” எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். […]
இந்திய விஞ்ஞானி பத்மஸ்ரீ எம்.ஆர்.எஸ்.ராவ். பிறந்த தினம் இன்று (ஜனவரி 21, 1948).
இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் ஜனவரி 21, 1948ல் மைசூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் எம்.ரங்கசாமி சத்யநாராயண ராவ் ஆகும். இவர் நூற்றுக்கணக்கான சர்வதேச பத்திரிக்கை கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் குரோமாட்டின் உயிரியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார். 2003 ஆம் ஆண்டில், பெங்களூரின் ஜக்கூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மைய அறிவியல் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் (ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்) தலைவராக ஏற்றுக்கொண்டார். அவர் உயிர் வேதியியல் துறை, ஐ.ஐ.எஸ்.சி (1998-2003) மற்றும் […]
4K குறைவான வெப்பநிலை சூப்பர் திரவ ஹீலியம் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்ற டேவிட் மொரிஸ் லீ பிறந்த தினம் இன்று (ஜனவரி 20, 1931).
டேவிட் மொரிஸ் லீ (David Lee) ஜனவரி 20, 1931ல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை மார்வின் லீ மின்சாரப் பொறியியலாளரும், தாய் அனெட் பிராங்ஸ் ஆசிரியரும் ஆவார். இவர்கள் இங்கிலாந்து மற்றும் லித்துவேனியாவில் இருந்து குடியேறிய யூதர்கள். 1952 ஆம் ஆண்டு லீ ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்பு ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் இணைந்து 22 மாதங்கள் பணி புரிந்தார். இராணுவத்தில் இருந்து வெளியேறிய பின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். […]
மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 20, 1775).
ஆந்த்ரே-மாரி ஆம்பியர் (Andre-Marie Ampere) ஜனவரி 20, 1775ல் பிரான்சின் லியோனில் பிறந்தார். சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் கற்றுக் கொடுத்தார். கணிதத்தில் நாட்டம் மிக்க ஆம்பியர் லியோனார்டு ஆய்லர், பெர்னோலி போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்தார். பிற்காலத்தில் இதனால் ஆம்பியர் கணிதத்தில் மட்டுமன்றி வரலாறு, பயணங்கள், கவிதை, மெய்யியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளில், ஆம்பியரின் தந்தையை புரட்சியாளர்கள் கொன்றனர். இது ஆம்பியர் மீது மிகுந்த […]
முதல் நீராவி இயந்திரம் உருவாக்கி தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட் பிறந்த தினம் இன்று (ஜனவரி 19, 1736).
ஜேம்ஸ் வாட் (James Watt) ஜனவரி 19, 1736ல் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் கப்பல் கட்டுனராகவும், கப்பல் உரிமையாளராகவும், ஒப்பந்தகாரராகவும் இருந்தார். ஜேம்ஸ் வாட்டின் தாயார் அக்னஸ் முயிர்ஹெட், மதிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்றாகப் படித்திருந்தார். வாட் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லவில்லை. சிறு வயதில் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். காகிதம் வாங்க காசு இருக்காது என்பதால், வீட்டுத் தரையிலேயே வரைவார். இவரது ஓவியங்களில் வட்டம், […]
இயற்பியல் சரித்திரத்தில் முக்கிமான இடிதாங்கியைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியலாளர், பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1706).
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) ஜனவரி 17, 1706ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தாயரித்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் குடும்ப ஏழ்மையின் காரணமாக பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் […]
புளூட்டோ கோளை கண்டுபிடித்த கிளைட் டோம்பா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 1997).
கிளைட் வில்லியம் டோம்பா (Clyde .W. Tombaughugh) பிப்ரவரி 4, 1906ல் அமேரிக்கா, இல்லினாய்ஸில் பிறந்தார். 1922 ஆம் ஆண்டில் அவரது குடும்பம் கன்சாஸின் புர்டெட்டுக்குச் சென்ற பிறகு, ஆலங்கட்டி மழை அவரது குடும்பத்தின் பண்ணை பயிர்களை நாசமாக்கியபோது கல்லூரியில் சேருவதற்கான டோம்பாக் திட்டங்கள் விரக்தியடைந்தன. 1926ல் தொடங்கி, லென்ஸ்கள் மற்றும் கண்ணாடியுடன் பல தொலைநோக்கிகளை அவர் தானே கட்டினார். அவரது தொலைநோக்கி கண்ணாடியை சிறப்பாக சோதிக்க, டோம்பாக், ஒரு தேர்வு மற்றும் திண்ணை கொண்டு, 24 […]
ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்த இந்தியாவின் கருந்துளை மனிதர் சி.வி.விசுவேசுவரா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 2017).
சி. வி. விசுவேசுவரா (C.V. Vishveshwara) மார்ச் 6, 1938ல் பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பத்மசிறீ சி.வி.வெங்கடராமையா ஒரு கல்வியாளர். விசுவேசுவரா சிறுவராக இருக்கும்போது இலக்கியம் இசை ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அணுத் துகள் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற சி.வி.விசுவேசுவரா, மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் கருந்துளைகள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். நியூயார்க்கு பல்கலைக்கழகம், பாசுடன் பல்கலைக்கழகம், பிட்சுபர்க் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கற்பிக்கும் துறையில் பணி செய்தார். பின்னர் […]
கணிதப் பகுப்பாய்விலும் வகைநுண் கலனத்திலும் பங்களிப்புகளைச் செலுத்திய, வட ஐரோப்பாவில் முதல் பெண் பேராசிரியரான சோஃபியா கோவலெவ்சுகாயா பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1850).
சோஃபியா வாசிலியேவ்னா கோவலெவ்சுகாயா (Sofia Vasilyevna Kovalevskaya) ஜனவரி 15, 1850ல் மாஸ்கோவில் பிறந்தார். அவரது தந்தை, லெப்டினன்ட் ஜெனரல் வாசிலி வாசிலியேவிச் கோர்வின்-க்ருகோவ்ஸ்கி, இம்பீரியல் ரஷ்ய இராணுவத்தில் மாஸ்கோ பீரங்கியின் தலைவராக பணியாற்றினார். கணிதத்தில் அவரது வெளிப்படையான திறமை இருந்தபோதிலும், அவளால் ரஷ்யாவில் தனது கல்வியை முடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில், ரஷ்யாவிலும் பிற நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளிநாட்டில் படிப்பதற்கு, கோவலெவ்ஸ்கயாவுக்கு அவரது தந்தையிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்பட்டது. அதன்படி, […]
தேசிய இளைஞர் தினம், உலகப்புகழ் பெற்ற பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ள, பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 12, 1863).
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ல் தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஐ தேசிய இளைஞர்களின் நாளாக (National Youth Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு ஜனவரி 12ல் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப்பிறந்தநாள் விழாவை, இவ்வாண்டு முழுவதும் […]
மின்னியல், காந்தவியல் துறைகளில் புகழ் பெற்ற தற்கால மின்னியலின் காப்பாளர், நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிக்கொலா தெஸ்லா நினைவு தினம் இன்று (ஜனவரி 7, 1943).
நிக்கொலா தெஸ்லா (Nikola Tesla) ஜூலை 10, 1856ல் குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெஸ்லாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும், பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை […]
யுரேனியக் கனிமத் தாதுவினை முதன்முதலில் கண்டுபிடித்த, உயிரின் சாத்திய கூறுகளை ஆராய்ந்த விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி நினைவு தினம் இன்று (ஜனவரி 6, 1945).
விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி (Vladimir Ivanovich Vernadsky) மார்ச் 12, 1863ல் புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார். தனது பதினேழாவது பிறந்தநாள் பரிசாக சிறுவனான வெர்னத்ஸ்கி தன் தந்தையிடம் டார்வினின் நூல்களை பரிசாக கேட்டதிலிருந்து அவரது தேடல் தொடங்கிவிட்டது எனலாம். வெர்னத்ஸ்கியின் தந்தையால் எனது அன்பு மகனுக்கு என கையெழுத்திடப்பட்ட அந்நூல் இன்று மாஸ்கோவில் வெர்னத்ஸ்கியின் நூலக அறையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. வெர்னத்ஸ்கியின் இல்லமே காட்சியகமாக உள்ளது. இளைஞன் வெர்னத்ஸ்கி தன் 21 ஆம் வயதில் பீட்டர்சுபர்க் […]
திடநிலை இயற்பியல், மற்றும் ஒளியியல் போன்றவற்றிலும் இவர் பெரும் பங்காற்றிய நோபல் பரிசு பெற்ற மாக்ஸ் போர்ன் நினைவு தினம் இன்று (ஜனவரி 5, 1970).
மாக்ஸ் போர்ன் (Max Born) டிசம்பர் 11, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். 1904 ஆம் ஆண்டில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மூன்று புகழ்பெற்ற கணிதவியலாளர்களான பெலிக்ஸ் க்ளீன், டேவிட் ஹில்பர்ட் மற்றும் ஹெர்மன் மின்கோவ்ஸ்கி ஆகியோரைக் கண்டார். அவர் தனது பி.எச்.டி. “ஒரு விமானம் மற்றும் விண்வெளியில் எலாஸ்டிகாவின் ஸ்திரத்தன்மை” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை, பல்கலைக்கழகத்தின் தத்துவ ஆசிரிய பரிசை வென்றது. 1905 ஆம் ஆண்டில், அவர் மின்கோவ்ஸ்கியுடன் சிறப்பு சார்பியல் குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். பின்னர் […]
டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே நினைவு தினம் இன்று (ஜனவரி 5, 1981).
அரால்டு கிளேட்டன் யுரே (Harold Clayton Urey) ஏப்ரல் 29, 1893ல் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் யுரே மற்றும் கோரா இரெபெக்கா இரைநோல்க்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் […]
முதல் மின்சார மோட்டாரை தயாரித்த இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை, ஜி.டி. நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி 4, 1974).
முதல் மின்சார மோட்டாரை தயாரித்த இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை, ஜி.டி. நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி 4, 1974).கோபால்சாமி துரைசாமி நாயுடு (Gopalswamy Doraiswamy Naidu) கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் மார்ச் 23, 1893ல் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி […]
You must be logged in to post a comment.