நோபல் பரிசு பெற்ற ச.வெ.இராமன் மகன், உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் இராதாகிருட்டிணன் பிறந்த தினம் இன்று (மே 18, 1929).

வெங்கடராமன் இராதாகிருட்டிணன் மே 18, 1929ல் சென்னைக்கு அருகே உள்ள தண்டையார்ப் பேட்டையில் பிறந்தார். தந்தை நோபல் பரிசு பெற்ற ச.வெ.இராமன். இராதாகிருட்டிணன் சென்னையில் கல்வி பயின்று, பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் பிரான்சுவா-தொமினீக்கு என்பாரைத் திருமணம் செய்துகொண்டார். இராதாகிருட்டிணனின் தந்தையார் நோபல் பரிசு பெற்ற ச.வெ.இராமன். தந்தையாரின் புகழின் நிழலில் தான் இருக்கக்கூடாது என்பதைக் கடைசிவரை உறுதியாகப் பின்பற்றிய அறிஞர். இராதாகிருட்டிணன் அனைத்துலக வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராக 1988-1994ம் ஆண்டுகளில் […]

கணினிகளில் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படும் காந்தமின்தடைமம் என்னும் இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம் இன்று (மே 18, 1939).

பீட்டர் குருன்பெர்க் (Peter Grunberg) மே 18, 1939ல் தற்கால செக் குடியரசு நாட்டில் உள்ள பில்சென் என்னும் ஊரில் பிறந்தார். உலகப்போர் முடிந்தபிறகு, பீட்டர் குருன்பெர்க் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்செ என்னும் மாவட்டத்தில் லௌட்டர்பாஃக் என்னும் ஊருக்குச் சென்று அங்கு உயர்நிலைப்பள்ளியில் ஜெர்மனியில் கிம்னேசியம் பயின்றார். குருன்பெர்க் 1962ல் யோஃகான் வுல்ஃவங்கு கொயெதெ பல்கலைக்கழகத்தில் இடைநிலை பட்டம் பெற்றார். பின்னர் டார்ம்ஸ்டட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1966ல் இயற்பியலுக்கான பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969ல் […]

புத்தனாம்பட்டி கல்லூரியில்,கணிதத் துறை சார்பில் கருத்தரங்கு கூட்டம் .

துறையூர் மே 12: துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணிதத் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் கருத்தரங்கு கூட்டம் (12/05/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதத்துறை பேராசிரியர் முனைவர் P.S.ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் எண்களின் அமைப்பு மற்றும் கணிதத்தேற்றங்கள் உருவான விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் இயற்கணித எண்களின் கோட்பாடுகள் உருவான விதம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.இந்நிகழ்வின் தொடக்கத்தில் கணிதத் துறை தலைவர் திருமதி P.பாக்கியலெட்சுமி அவர்கள் வரவேற்புரை […]

உயர் வெப்ப மிகுகடத்து திறன் (High-temperature superconductivity) கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம் இன்று (மே 16, 1950).

யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் மே 16, 1950ல் பெட்னோர்ஸ் ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் நியூயன்கிர்ச்சனில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பியானோ, ஆசிரியர் எலிசபெத் பெட்னோர்ஸ் ஆகியோருக்கு நான்கு குழந்தைகளில் இளையவராக பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் மத்திய ஐரோப்பாவில் சிலேசியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் இரண்டாம் உலகப் போரின் கொந்தளிப்பில் மேற்கு நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு குழந்தையாக இருந்தபோது, அவரது பெற்றோர் அவரை கிளாசிக்கல் இசையில் ஆர்வம் காட்ட முயன்றனர். ஆனால் அவர் நடைமுறையில். […]

அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவிய தொலைநோகியின் அன்னை, அமெரிக்க வானியலாளர் நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம் இன்று (மே 16, 1925).

நான்சி கிரேசு உரோமன் (Nancy Grace Roman) மே 16, 1925ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தாயார் இசையாசிரியர் ஜார்ஜியா சுமித் உரோமன். தந்தையார் இர்வின் உரோமன். உரோமன் பிறந்த்தும் அவரது தந்தையின் பணிக்காக குடும்பம் ஓக்லகோமாவுக்கு இடம்பெயர்ந்தது. பின்னர், உரோமனும் அவரது பெற்றோரும் அவுசுட்டன், நியூஜெர்சி, மிச்சிகானுக்குத் தொடர்ந்து இடம்பெயர்ந்தனர். 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாழ்சிங்டன் டி. சி. நகரில் வாழ்ந்தார். இவர் தனது அறிவியல் ஆர்வத்தைப் பெற்றோரே ஊட்டியதாக்க் கருதுகிறார். […]

இயற்பியலில் வெப்பவியல், கிரீன் ஹௌஸ் விளைவு மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர் ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் நினைவு நாள் இன்று (மே 16, 1830).

ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் (Jean Baptiste Joseph Fourier) மார்ச் 21, 1768ல் யோன் டெபார்டெமென்ட், பிரான்சில் ஒரு தையல்காரரின் மகனான பிறந்தார். அவர் தனது ஒன்பது வயதில் அனாதையாக இருந்தார். ஃபூரியர் ஆக்செர் பிஷப்புக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்த அறிமுகத்தின் மூலம், செயின்ட் மார்க் கான்வென்ட்டின் பெனடிக்டைன் ஆணை மூலம் கல்வி கற்றார். இராணுவத்தின் விஞ்ஞானப் படைகளில் தகுதியற்றவராக இருந்ததால் கமிஷன்கள் நல்ல பிறப்பிற்காக ஒதுக்கப்பட்டன. கணிதம் குறித்த இராணுவ விரிவுரையை ஏற்றுக்கொண்டார். பிரெஞ்சு புரட்சியை […]

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பியேர் கியூரி பிறந்த தினம் இன்று (மே 15, 1859).

பியேர் கியூரி (Pierre Curie) மே 15, 1859ல் பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது. தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார். ஆனால் […]

குடும்பங்களே கோவில்களாய் இருந்த தேசம், நம் தேசம் – குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக குடும்ப தினம் (மே 15).

உலக குடும்ப தினம் மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடும்ப அலகுகளின் ஸ்திரத்தன்மையையும் கட்டமைப்பையும் பாதிக்கும், மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தை […]

பிரபல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி அமெரிக்க மருத்துவக் கண்டுபிடிப்பாளர், ஜேம்ஸ் டேனியல் ஹார்டி பிறந்த தினம் இன்று (மே 14, 1918).

ஜேம்ஸ் டேனியல் ஹார்டி (James D.Hardy) மே 14, 1918ல் ஐக்கிய அமெரிக்காவின் தென் பிராந்திய மாநிலமான அலபாமாவின் நெவாலா எனும் நகரில் பிரெட், ஜூலியா தம்பதியருக்கு பிறந்தார். அவரது தந்தை பிரெட், சுண்ணாம்பு ஆலை அதிபராவார். ஹார்டி, பள்ளி மாணவனாக இருந்தபோது அந்நாட்டில் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவியதால், பணம் சம்பாதிப்பதற்காக தனது 2 இரட்டைச் சகோதரர்கள் ஜூலியன், டெய்லர், மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நடனக் குழு அமைத்தார். மேலும், மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து குழுவில் […]

சக்திவாய்ந்த மின்காந்தம் தயாரிக்கும் உத்தியைக் கண்டறிந்த, அமெரிக்க அறிவியல் விஞ்ஞானி ஜோசப் ஹென்றி (Joseph Henry) நினைவு நாள் இன்று (மே 13, 1878).

ஜோசஃப் ஹென்றி (Joseph Henry) டிசம்பர் 17, 1797ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். படகுகளில் கூலி வேலை செய்துவந்த தந்தை, இவரது 9-வது வயதில் இறந்துவிட்டார். பிறகு, கால்வே என்ற இடத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்குள்ள பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னாளில் இப்பள்ளிக்கு இவரது பெயரே சூட்டப்பட்டது. மீண்டும் தாயுடன் சொந்த ஊர் திரும்பினார். வறுமையால் படிப்பை நிறுத்திவிட்டு, மளிகைக் கடையில் வேலை செய்தார். கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் உதவியாளராக […]

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, 52 நாடுகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய பிரிட்ஜோப் நான்ஸன் நினைவு நாள் இன்று (மே 13, 1930).

பிரிட்ஜோப் நான்ஸன் (Fridjof Nansen) அக்டோபர் 10, 1861ல் நார்வேயில் பிறந்தார். உலகின் தலை சிறந்த கடல் மற்றும் பிராணி ஆராய்ச்சியாளர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட ஒரு மேதை. இந்த உலகில் எந்த நாடு அடிமைப்படுத்தப்பட்டாலும் அந்த நாடு என் நாடு என்ற சேகுவேரா போல், இவர் உலகில் அன்று பிரிட்டிஷ், ஃப்ரென்ச், ரஷ்ய என்று பல நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் இவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. 1888 […]

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியர் இன்னொரு தாய் – சர்வதேச செவிலியர் தினம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று (மே 12, 1820).

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். 1965ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதத் தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக […]

குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு பங்காற்றி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1918).

ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman) மே 11, 1918ல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் லூசில்லே அவருடைய தொழில் வீடு நிர்மாணித்தல் ஆகும். ரிச்சர்டின் தாயின் பெயர் மெல்வில் ஆர்தர் ஃபேய்ன்மேன், அவர் ஒரு விற்பனை மேலாளர் ஆவார். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவருடைய பிறப்பிடங்களும் முறையே உருசியா மற்றும் போலந்து ஆகும். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவரும் அஸ்கினாஜி யூதர்கள் ஆவர். அவர்கள் இருவரும் மதவாதிகள் அல்லர். ரிச்சட்டும் கூட தன்னை வெளிப்படையாக ஒரு நாத்திகர் […]

ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788).

அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ல் நார்மண்டியின் ப்ரோக்லியில் பிறந்தார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது. கட்டிடக் கலைஞர் ஜாக் ஃப்ரெஸ்னலின் நான்கு மகன்களில் இரண்டாவதாக இருந்தார். அவரது மனைவி அகஸ்டின், நீ மேரிமி. 1790 ஆம் ஆண்டில், புரட்சியைத் தொடர்ந்து, ப்ரோக்லி யூரின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். குடும்பம் இரண்டு முறை இல் செர்பர்க் மற்றும் ஜாக்ஸின் சொந்த ஊரான […]

வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கு புகழ்பெற்ற டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், வில்லெம் தெ சிட்டர் பிறந்த தினம் இன்று (மே 6, 1872).

வில்லெம் தெ சிட்டர் (Willem de Sitter) மே 6, 1872ல் சுனீக்கில் பிறந்தார். இவர், கணிதவியலைக் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். குரோனிங்கன் வானியல் ஆய்வகத்தில் பிறகு சேர்ந்தார். தென்னாப்பிரிக்கா, நன்னம்பிக்கை முனையில் உள்ள அரசு வான்காணகத்தில் 1897 முதல் 1899 வரை பணிபுரிந்தார். பின்னர், 1908ல் இலெய்டன் பல்கலைக்கழக வானியல் கட்டிலில் பணியமர்த்தப்பட்டார். 1919ல் இருந்து தனது இறப்பு வரை இலெய்டன் பல்கலைக்கழக இயக்குநராக இருந்தார். இவரது மகன்களில் ஒருவரான உல்போ தெ சிட்டர் ஒரு […]

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).

யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். மேயரின் பத்தாம் அகவையிலேயே தந்தையார் இறந்து விட்டார். 1769ல் கோட்டிங்கன், ஜார்ஜ் ஆகத்து பல்கலைக்கழகத்தில் இறையியலும் மெய்யியலும் கற்றார். இது அப்போது தான் ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னரின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகமாகும். காசுட்னருக்குப் பின்னர், இது ஜார்ஜ் கிறித்தோப் இல்ச்டென்பர்கின் […]

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912).

நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார் மறுமணம் செய்துகொண்டு மாசாச்சுசெட்சு மாநிலத்தில் உள்ள வெசுட்டுஃபோர்டு என்னும் இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே நெட்டி மரியா 1880ல் வெசுட்டுஃபோர்டு அகாதெமியில் பட்டம் பெற்றார். நெட்டி இசுட்டீவன்சு அங்கே பள்ளியில் ஆசிரியராகவும் நூலகராகவும் பணிபுரிந்தார். படிப்பிப்பதில் […]

பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD).

ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது. தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை. இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் […]

உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள், மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம் (Labour Day) (மே 1)

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day) என்பது மே 1ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன. இந்தியாவில் தமிழகத்தில்தான் […]

டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 29, 1893).

அரால்டு கிளேட்டன் யுரே (Harold Clayton Urey) ஏப்ரல் 29, 1893ல் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் யுரே மற்றும் கோரா இரெபெக்கா இரைநோல்க்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!