ஆட்டோ ஸ்டர்ன் (Otto Stern) பிப்ரவரி 17, 1888ல் ஜெர்மனியில் ஸோஹரா என்ற பகுதியில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆஸ்கர் ஸ்டெர்ன் ஒரு ஆலை உரிமையாளர். மகனுக்கு இருந்த கணித மற்றும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அவனுக்குத் தேவையான அத்தனை நூல்களையும் அப்பா வாங்கித் தந்தார். இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது பெற்றோர் பி ரெஸ்லவில் குடியேறினர். அங்கேதான் பள்ளிப் படிப்பு பயின்றார். மேற்படிப்புக்கான பாடங்களைத் தேர்வு செய்ய அறிவியலின் பல துறை நூல்களைப் […]
Category: உலக செய்திகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).
விக்ரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai) ஆகஸ்ட் 12, 1919ல் ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அம்பாலால் சாராபாய், சரளா தேவி, நூற்பாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும், இயற்பியலிலும் தான் இருந்தது. பெற்றோர் நடத்திய மாண்டிசோரி பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். சுதந்திரப் போராட்டத்தில் சாராபாய் குடும்பம் ஈடுபட்டிருந்ததால் காந்தி, நேரு, தாகூர், மெளலானா ஆசாத், சரோஜினி […]
ஜனாதிபதி பெற்றுக்கொண்ட அப்துல் கலாம் பற்றிய புத்தகம்..
இராமநாதபுரம், ஆக.11- புதுச்சேரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்திருந்தார். அங்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கலாமின் 92வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக முனைவர் ஒய்.எஸ்.ராஜன், முனைவர் ஏபிஜெ.எம்.நஜீமா மரைக்காயர் இருவரும் இணைந்து எழுதிய “Dr APJ Abdul Kalam Memories Never Die” என்ற புத்தகத்தை பெற்று கொண்டார். அப்துல் கலாமின் எண்ணங்களையும் இந்திய வளர்ச்சிக்கு அவர் அற்றிய பணிகளையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நினைவு கூர்ந்தார். இந்நிகழ்வில் முனைவர் […]
உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 10,1945).
இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் (Robert Hutchings Goddard) அக்டோபர் 5, 1882ல் மாசசூசெட்ஸில் உள்ள வோர்செஸ்டரில் நஹூம் டான்ஃபோர்ட் கோடார்ட் மற்றும் ஃபென்னி லூயிஸ் ஹோய்ட் ஆகியோருக்குப் பிறந்தார். ராபர்ட் அவர்களின் ஒரே குழந்தை. ஒரு இளைய மகன், ரிச்சர்ட் ஹென்றி, முதுகெலும்பு குறைபாட்டுடன் பிறந்தார், அவரது முதல் பிறந்தநாளுக்கு முன்பு இறந்தார். நஹூம் உற்பத்தியாளரக பல பயனுள்ள கருவிகளைக் கண்டுபிடித்தார். கோடார்ட் பிறந்த சிறிது நேரத்திலேயே, குடும்பம் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தது. இயற்கையைப் பற்றிய ஆர்வத்துடன், அவர் […]
மரம் நடுதல் அவசியம்… இலங்கையில் தொடங்கிய சைக்கிள் பயணம் குமரி வந்தது…
மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரி வந்தது. இலங்கை வடமகாணம் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் பிரதாபன் (47). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர்கள் கடந்த 1990 முதல் சென்னை கோவிலம்பாக்கம் முகாமில் வசித்து வருகின்றனர். சமூக ஆர்வலரான இவர் மரங்கள் நடுதல், மழைநீர் சேகரிப்பு, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஜூலை 23 ஆம் […]
ஜெர்மனியில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு உசலம்பட்டியில் உற்சாக வரவேற்பு..
ஜெர்மனி நாட்டின் காலணே நகரில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது., இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் 7 தடகள வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்., இந்த ஏழு பேருக்கும் தமிழ்நாடு அரசு இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான ஊக்கத் தொகையையும் வழங்கி அனுப்பி வைத்திருந்தது.எடை, வயது, உடல்வாகு உள்ளிட்ட மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த போட்டியில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற வீரர் மூன்றாவது பிரிவில் […]
நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 8, 1901)…
எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் (Ernest Orlando Lawrence) ஆகஸ்ட் 8, 1901ல் தெற்கு டகோட்டாவின் கேன்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்களான கார்ல் குஸ்டாவஸ் மற்றும் குண்டா (நீ ஜேக்கப்சன்) லாரன்ஸ். இருவரும் நோர்வே குடியேறியவர்களின் சந்ததியினர். அவர்கள் கேன்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கற்பிக்கும் போது சந்தித்தனர். தந்தை பள்ளிகளின் கண்காணிப்பாளராகவும் இருந்தார். அவருக்கு ஒரு தம்பி, ஜான் எச். லாரன்ஸ் இருந்தார். அவர் ஒரு மருத்துவர் ஆவார். மேலும் அணு மருத்துவத் துறையில் முன்னோடியாக இருந்தார். […]
இந்தியாவின் தேசிய கீதம் இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர், இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். இவரின் தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு சென்றதால் பெரும்பானமையான நேரங்களில் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார். வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு […]
உலகின் முதல் அணுகுண்டு லிட்டில்பாய், ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட தினம் இன்று (ஆகஸ்ட் 6, 1945)…
1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆரம்பத்தில் ஈடுபடாமல் இருந்த ஜப்பான், பின்னர் ஆசிய பகுதியில் தனது வலிமையை நிரூபிக்கும் பொருட்டு 1941ம் ஆண்டு இப்போரில் இணைந்தது. இத்தாலி மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஜப்பானிய படைகள், இந்தியாவின் கிழக்கு எல்லை வரை முன்னேறின. இப்போரில் 1942ம் ஆண்டுவரை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கைதான் ஓங்கி இருந்தது. ஆனால், அதன்பிறகு நிலைமை […]
ஜெர்மனி நாட்டில் நடந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் சாதனை…
ஜெர்மனி நாட்டில் உலக அளவில் உயரம் குறைந்த மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் 29 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டி ஜூலை 28ம் தேதி முதல் நாளை ஆகஸ்ட் 6 ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 700 உயரம் குறைந்த மாற்றுத்திறன் வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தமிழக மாற்றுத்திறன் வீரர் வீராங்கனைகள் 7 பேர் கலந்து கொண்டனர். தமிழக வீரர்கள் […]
மண்டபம் முகாமில் ஆக.18ல் மீனவர் சந்திப்பு மாநாடு… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..
ராமநாதபுரம், ஆக.4 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கேட்டறிந்தார். அவர் தெரிவிக்கையில், ஆக. 18ல் நடைபெறவுள்ள மீனவர் மாநாட்டில் பங்கேற்று மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் வருகிறார். அன்றைய தினம் மீனவர்களுக்கான […]
அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் பெருமைப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of United Nations Peacekeepers) (மே 29).
ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் (International Day of United Nations Peacekeepers) எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் பெருமைப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை நினைவூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். இத்தினம் மே 29ஆம் நாள் அனுட்டிக்கப்படுகிறது. முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே […]
பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள் இன்று (மே 28, 1969).
சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் (Sivaramakrishnan Pancharatnam) பிப்ரவரி 9, 1934ல் கல்கத்தாவில் பிறந்தார். இவரது 25ஆவது அகவையில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக சேர்ந்தார். 1961 முதல் 1964 வரை மைசூர் பல்கலைக்கழகம் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் ஆய்வுகள் சி. வி. இராமனின் மேற்பார்வையில் பெரும்பாலும் நடைபெற்றன. இராமன் பஞ்சரத்தினத்தின் திறமையினை மிக நன்றாக உணர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு முறை ஜவகர்லால் நேரு இராமனைச் சந்திக்க இராமன் ஆய்வகத்திற்கு வந்த போது நேருவிடம் அந்த இளைஞன் […]
நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா அறிக்கை.
நேரு நினைவு கல்லூரியின் கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை “C++ புரோகிராமிங்” குறித்த ஆன்லைன் மின்-வினாடி வினாவை 18-05-2022 முதல் 25-05-2022 வரை Code Venture கிளப்பின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்தது. Code Venture கிளப்பானது மாணவர்களின் நிரலாக்கம் திறன்களை மேம்படுத்துவதற்கான உருவாக்கபட்டது. UG/PG மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், விரிவுரையாளர்கள், புரோகிராமர்கள், உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். 60 கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் […]
விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் இன்று (மே 26, 1951).
சாலி கிறிஸ்டென் ரைடு மே 26, 1951ல் டேல் பர்டெல் ரைடு மற்றும் கரோல் ஜாய்ஸ் ரைடு ஆகியோரின் மூத்த குழந்தையாக லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார். நோர்வே வம்சாவளியைச் சேர்ந்த ரைட்டின் தாய், பெண்கள் திருத்தும் வசதியில் தன்னார்வ ஆலோசகராக பணிபுரிந்தார். அவரது தந்தை சாண்டா மோனிகா கல்லூரியில் அரசியல் அறிவியல் பேராசிரியராக இருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் வெஸ்ட்லேக் பெண்கள் பள்ளியில் இருந்து உதவித்தொகையில் பட்டம் பெறுவதற்கு முன்பு ரைட் போர்டோலா ஜூனியர் உயர்நிலைப் […]
ஒளி மூலத்தில் காந்தப்புலங்களின் தாக்கம் குறித்த ஜீமன் விளைவிற்கு நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஜீமன் பிறந்த தினம் இன்று (மே 25, 1865)
பீட்டர் ஜீமன் (Pieter Zeeman) மே 25, 1865ல் நெதர்லாந்தின் சிறிய நகரமான சோனேமெயரில் பிறந்தார். தந்தை டச்சு சீர்திருத்த தேவாலயத்தின் மந்திரி ரெவ் கேதரினஸ் ஃபோராண்டினஸ், தாய், வில்லெமினா வோர்ஸ். பீட்டர் சிறு வயதிலேயே இயற்பியலில் ஆர்வம் காட்டினார். 1883 ஆம் ஆண்டில், அரோரா பொரியாலிஸ் நெதர்லாந்தில் தெரியும். ஜீரிக்ஸியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரான ஜீமன், இந்த நிகழ்வின் வரைபடத்தையும் விளக்கத்தையும் உருவாக்கி அதை நேச்சரிடம் சமர்ப்பித்தார். அங்கு அது வெளியிடப்பட்டது. ஆசிரியர் […]
சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு நாள் இன்று (மே 24, 1543).
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (Nikolaus Kopernikus) பிப்ரவரி 19, 1473ல் போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன், நகரின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள். இத்தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் நிக்கோலாஸ். இவரது தந்தை கிராக்கொவ் நகரிலிருந்து தோர்ன் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செம்பு வியாபாரம் செய்து செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கோலாசுக்குப் […]
மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் நினைவு நாள் இன்று (மே 23, 1895).
பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann)1798, செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் பிறந்தார். நியூமேனின் தந்தை விவசாயியாவார். அவரின் சிறு வயதிலேயே அவரது அம்மா பிரிந்து சென்றுவிட அதன்பிறகு, தாத்தா வீட்டில் வளர்ந்தார். கணிதத்தில் சிறந்து விளங்கிய எர்ன்ஸ்ட் நியூமன், அக்காலத்தில் அடிக்கடி போர் நடந்ததால் கல்வி தடைபட்டது. இந்நிலையில், படிப்பை 16 வயதிலேயே நிறுத்தியவர், அந்நாட்டு இராணுவத்தில் இணைந்தார். 1815 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு எதிராக, […]
திரிதடையம் கண்டுபிடிப்பு மற்றும் மீக்கடத்துதிறன் கோட்பாட்டினை சீர்செய்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை இரு தடவைகள் வென்ற ஜான் பார்டீன் பிறந்த தினம் இன்று (மே 23, 1908).
ஜான் பார்டீன் (John Bardeen) மே 23, 1908ல் விஸ்கான்சின் மாடிசனில் பிறந்தார். அவர் விஸ்கான்சின் மருத்துவப் பள்ளியின் முதல் டீன் சார்லஸ் பார்டீனின் மகன். பார்டீன் மாடிசனில் உள்ள பல்கலைக்கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1923ல் 15 வயதில் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றிருக்கலாம், ஆனால் அவர் வேறொரு உயர்நிலைப் பள்ளியில் படிப்புகள் எடுத்ததாலும், அவரது தாயார் இறந்ததாலும் இது ஒத்திவைக்கப்பட்டது. அவர் 1923ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். […]
ஃபிராங்க்-ஹெர்ட்ஸ் பரிசோதனை மூலம் அணுவின் மீது எலக்ட்ரானின் தாக்கத்தை நிர்வகிக்கும் சட்டங்களை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர், ஜேம்ஸ் ஃபிராங்க் நினைவு நாள் இன்று (மே 21, 1964).
ஜேம்ஸ் ஃபிராங்க் ஆகஸ்ட் 26, 1882ல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜேக்கப் ஃபிராங்க் ஒரு வங்கியாளர். ஒரு பக்தியுள்ள மற்றும் மத மனிதர், அதே நேரத்தில் அவரது தாயார் ரபீஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். ஃபிராங்க் ஹாம்பர்க்கில் ஆரம்ப பள்ளியில் பயின்றார். 1891 ஆம் ஆண்டு தொடங்கி அவர் வில்ஹெல்ம் ஜிம்னாசியத்தில் பயின்றார். அது அப்போது சிறுவர்கள் பள்ளியாக மட்டுமே இருந்தது. அப்போது ஹாம்பர்க்கிற்கு எந்த பல்கலைக்கழகமும் இல்லை. எனவே வருங்கால […]
You must be logged in to post a comment.