தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் அனைவரும் தங்கள் முன்னேற்றத்திற்காக படிக்க வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடையலாம். […]
Category: உலக செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக்கொள்ளலாம்; நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல்..
நெல்லையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 17-12-2023, 18-12-2023 ஆகிய நாட்கள் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை தொலைந்து இருந்தாலும், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் புதிதாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். 29-12-2023 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான […]
கீழப்பாவூரில் இலவச கண் பரிசோதனை முகாம்; 46 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு..
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் 60-வது இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 46 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேட்டூர் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு, பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம், ரெடி கல்வி மையம் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புனித ஜோசப் […]
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் சிறப்பு போட்டிகள்..
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதலாவதாக ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய கொடி வண்ணம் தீட்டுதல் போட்டியும், வகுப்பு மூன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசபக்தி பாடல் போட்டியும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார். போட்டியில் கவிஞர் […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 139.15 அடி, கொள்ளளவு: 5259.00 மி.க.அடி, நீர் வரத்து : 389.22 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.98 அடி, கொள்ளளவு: 1062.52 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.83 அடி, கொள்ளளவு: 5494.00 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்; மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 24-01-2024 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 30-01-2024 செவ்வாய் கிழமை […]
தென்காசி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுக்கள் விற்ற நபர்கள் கைது..
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் சுதாகர் ரோந்து பணியில் இருந்தபோது சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்த தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சடாமுனி என்பவரின் மகன் சண்முகம்(77) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 139.60 அடி, கொள்ளளவு: 5286.00 மி.க.அடி, நீர் வரத்து : 442.222 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.27 அடி, கொள்ளளவு: 1052.72 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.85 அடி, கொள்ளளவு: 5496.00 மி.க.அடி, நீர் […]
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு
திருநெல்வேலி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.01.2024 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் வெளியிட திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் […]
தென்காசி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட்டார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 22-01-2024 திங்கள் கிழமையன்று மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வெளியிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தவின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், […]
ஜித்தா நகரத்தில் கீழக்கரை மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி !
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் கீழை சவுதி அமைப்பின் சார்பாக, கீழக்கரை மக்களின் ஒன்றுகூடல், சிறப்பு நிகழ்ச்சி அமைப்பின் கவுரவ தலைவர் முகைதீன் சீனி அலி தலைமையில் உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை கீழை. இர்ஃபான் கிராஅத் ஓத துவங்கி வைத்தார். முகைதீன் சீனி அலி நமது அமைப்பின் நோக்கம் மற்றும் ஊர் மக்கள் ஒற்றுமை பற்றி தலைமையுரை ஆற்றினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பாரம்பரிய மதிய […]
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா 05.01.2024 முதல் 14.02.2024 வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு நிகழ்வாக நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி பெரிய கோவில் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவள்ளி அனைவரையும் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி […]
சங்கரன்கோவில் அருகே அரிவாளை காட்டி தங்க செயின் பறித்த இருவர் சிறையிலடைப்பு..
சங்கரன்கோவில் அருகே அரிவாளை காட்டி மிரட்டி தங்க செயின் பறித்த இரண்டு நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கலப்பாங்குளம் காலனி அருகே கடந்த 07.01.24 அன்று காலை 06.00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அரிவாளை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு […]
காவலர்கள் உடல் நலனை பேணி காக்க வேண்டும்; மருத்துவ பரிசோதனை முகாமில் நெல்லை மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..
காவலர்கள் தங்களின் உடல் நலனை நல்ல முறையில் பேணி காக்க வேண்டும் என நெல்லை மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பகுதியிலும், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே தேவி மஹாலிலும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சீஷா தொண்டு நிறுவனம் மற்றும் திருநெல்வேலி கருண்யா மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் ஜன.20 அன்று மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் […]
தென்காசி மாவட்டத்தில் முஸ்லிம் யூத் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு; மாநில செயலாளர் வாழ்த்து..
தென்காசி மாவட்டத்தில் முஸ்லிம் யூத் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட முஸ்லிம் யூத் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எம். அப்துல் அஜீஸ் தலைமையில் தென்காசி விடிஎஸ்ஆர் மஹாலில் ஜன.20 அன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ. செய்யது பட்டாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 140.50 அடி, நீர் வரத்து : 883.403 கன அடி, வெளியேற்றம் : 1054.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 143.76 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 அடி, நீர் இருப்பு : 117.95 அடி, நீர் வரத்து : 650 […]
புளியங்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; நகராட்சி சேர்மன் காவல்துறை ஆய்வாளர் இணைந்து துவக்கி வைத்தனர்..
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புளியங்குடி மனோ கல்லூரி, மருதம் பயிற்சி மையம் மற்றும் மக்கள் உதவி கூட்டமைப்பு இணைந்து புளியங்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு […]
நெல்லை தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 140.50 அடி, கொள்ளளவு: 5340.00 மி.க.அடி, நீர் வரத்து : 435.096 கன அடி, வெளியேற்றம் : 1203.50 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 142.88 அடி, கொள்ளளவு: 983.95 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.73 அடி கொள்ளளவு: 5484.00 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேசிய குழந்தைகள் தின போட்டிகள்; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பேட்டி பச்சோ பேட்டி பதோ” திட்டத்தின் கீழ் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு Slogan writing, Posters, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “பேட்டி பச்சோ பேட்டி பதோ” திட்டத்தின் கீழ் ஜனவரி 24 அன்று […]
காவலர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நேர்மை ஆரோக்கியம் மகிழ்ச்சியை வலியுறுத்திய தென்காசி மாவட்ட எஸ்.பி..
தென்காசி மாவட்டத்தில் நடந்த காவலர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் நேர்மை, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவற்றை மாவட்ட எஸ்.பி. வலியுறுத்தினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரைகளை […]