தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு, ஒரே தொழில் செய்யக்கூடிய மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குறுந்தொழில் தொகுப்புகளாக உருவாக்கி மேம்படுத்தப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் […]
Category: உலக செய்திகள்
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.95 அடி, கொள்ளளவு: 5127.00 மி.க.அடி, நீர் வரத்து : 248.831 கன அடி வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.34 அடி, கொள்ளளவு: 1053.70 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.19 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்டத்தில் நடந்த கோர விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதிஉதவி..
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதிஉதவி அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 28-01-2024 அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த தென்காசி […]
கலைஞரின் புகழுக்கு காரணம் பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? : சிறப்பு பட்டிமன்றம்..
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடத்தப்படும் இலக்கிய கூட்டங்கள் வரிசையில் கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி நிகழ்விற்கு தலைமை தாங்கினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் […]
தென்காசி தொகுதி ராஜகோபாலப்பேரி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி; பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தென்காசி தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய […]
புளியங்குடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் ஆறுதல்..
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வேல் மனோஜ், போத்திராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் இன்று அதிகாலை குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் திரும்பும் வழியில் புன்னையாபுரம் அருகே லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதிகாலை 3:30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை […]
மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம்; தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார்..
சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகளை தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால், ஜன.24 ஆம் தேதி வேப்பேரி கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்தார். சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள “பருந்து”, ஒருங்கிணைந்த […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 137.40 அடி, கொள்ளளவு: 5154.00 மி.க.அடி, நீர் வரத்து : 329.398 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.70 அடி, கொள்ளளவு: 1026.09 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.36 அடி, கொள்ளளவு: 5447.00 மி.க.அடி, நீர் […]
புளியங்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஆறு பேர் பலி; மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு..
புளியங்குடி அருகே சிமெண்ட் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டு ஆறு பேர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல், மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று இரவு ஷிப்ட் டிசைர் காரில் குற்றாலத்திற்கு குளிக்க புறப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை 3.30 மணி அளவில் புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது புளியங்குடி […]
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டும்; தென்காசி மாவட்ட சங்கத்தினர் வலியுறுத்தல்..
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கருதி பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தென்காசி மாவட்ட கிளை சார்பில் பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு. இராசேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் எம். முத்துசாமி, முன்னிலை வகித்தார். தென்காசி […]
தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் இராஜகோபாலப்பேரி ஊராட்சியில் குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் முதல் 3 காலாண்டிற்கு வரவு செலவு மற்றும் கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் ஜல்ஜீவன் மிசன் திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம், பிரதமமந்திரி ஊரக குடியிருப்புத்திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டம், அமைப்பு […]
தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம்; தமிழக அரசு உத்தரவு..
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தற்போதைய தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் உயர் கல்வித்துறை இணை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் இயக்குனராக இருந்தவர் ஏ.கே. கமல் கிஷோர். இதேபோன்று தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். […]
போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை; தலைமை காவலர் பொன். சிவபெருமானின் போதை விழிப்புணர்வு பாடல்..
போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. புகை! புகை! புகை! இது மனிதனுக்கு பகை. தவறான வழியிலே நீயும் செல்கிறாய், தன்னைத்தானே அழித்து கொள்கிறாய். விளையாட்டாய் ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும். போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. பள்ளிப்படிப்பை பாதியில் விடுவாய், மூளை செயலிழந்து முட்டாளாய் அலைவாய். போதை என்பது மாயவலை, மீள முடியாமல் திணறுவாய் நாளை. போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை. -கடலூர் மாவட்டம் சிதம்பரம் […]
தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 75வது குடியரசு தினவிழா; நலத்திட்ட உதவிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற 75-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 242 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகி கி. […]
தென்காசி தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநிலத்தில் சிறந்த மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில், மருத்துவ சேவை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதான மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய சேவைகளில் முதல் இடத்தில் சிறந்து விளங்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். அப்போது இணை […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா..
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் நாட்டுப்பற்றுடனும், சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் தென்காசி மருத்துவமனை உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மூத்த மருத்துவர் […]
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், தென்காசியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊடகத்தினர் பங்கேற்று பத்திரிகையாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் […]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நற்சான்று மற்றும் பரிசுகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் 14வது தேசிய வாக்காளர் தினம் 2024 நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நற்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஜன.24 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், மாவட்ட […]
குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்..
தென்காசி ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பயணிகள் அறை, பார்சல் ஆபீஸ், மற்றும் தண்டவாள பாதைகளில் வெடிகுண்டு சோதனை மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசியில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் டி. செந்தில் குமார் உத்தரவின் பேரில், மதுரை உட்கோட்ட ரயில்வே பொறுப்பு திருநெல்வேலி துணைக் கண்காணிப்பாளர் […]
நெல்லை – தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 138.70 அடி, கொள்ளளவு: 5232.00 மி.க.அடி, நீர் வரத்து : 458.77 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 146.16 அடி, கொள்ளளவு: 1032.95 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.78 அடி, கொள்ளளவு: 5489.00 மி.க.அடி, நீர் […]