தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு..

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன், அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணாபுகழ் ஓங்குக!, அண்ணாவழியில் அயராது உழைப்போம், […]

சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண நிதி உதவி திட்டம் சார்பில் தாலிக்குத் தங்கம் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.1.53 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவித் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா […]

இராமநாதபுரத்தில் 6-வது புத்தக திருவிழா ! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டுகோள் !!

இராமநாதபுரம் மாவட்டம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 6வது புத்தக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தனர்.துவக்க நாள் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காணொளிக்காட்சி வாயிலாக பங்கேற்று விழாப்பேருரை வழங்கினார்அவர் கூறியதாவது :-இராமநாதபுரத்தில் 6வது புத்தக திருவிழா […]

கடையம் ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள் வேண்டும்; மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைத்திட வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன், தமிழக உணவு (ம) உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜாங்கபுரம், வாகைக்குளம், பாப்பான்குளம், பெரியத்தெரு, […]

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மக்களின் குறைகள் மீது விரைவில் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் உறுதி..

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். பின்பு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொதுமக்கள் குறைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை அறிவித்து அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு […]

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!!

ராமநாதபுரம்  மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த  16 ந்தேதி மீன்பிடிக்க சென்று மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களின்  வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது மன்னார்  மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால்  மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார  நீதிமன்ற நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து பாம்பன்   மீனவர்கள் 18 பேரும் யாழ்பாணத்தில் உள்ள […]

தவறவிட்ட செல்போனை முப்பது நிமிடத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை..

கடையநல்லூர் பகுதியில் தவறவிட்ட செல்போனை 30 நிமிடத்தில் காவல்துறையினர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ். இவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கடையநல்லூர் வந்த போது வழியில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது தொலைந்து விட்டதாகவும், தொலைந்த செல்போனை மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜா […]

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை நிலவரம்..

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 135.65 அடி, கொள்ளளவு: 5049.00, மி.க.அடி, நீர் வரத்து : 273.241 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.03 அடி, கொள்ளளவு: 1001.10 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.48 அடி, கொள்ளளவு: 5360.04 மி.க.அடி, நீர் […]

நெல்லை இராதாபுரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; பிப் 01 இன்று துவங்குகிறது..

நெல்லையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் பிப். 01 இன்று துவங்கி பிப். 02 நாளை வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, மக்களைத் தேடி பல்வேறு அரசு திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதிசெய்ய அரசுத் துறை அலுவலர்கள் […]

சிவகிரி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, 31-01-2024 புதன்கிழமை நடைமுறைக்கு வந்தது. உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற […]

மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் மீட்பு; உதவிடும் பணியில் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்..

தென்காசி பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உரிய ஏற்பாடுகளை செய்து, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர் மீட்டு அவருக்கு உரிய முதலுதவி செய்து பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகவும், குடிகாரர்களால் அந்த […]

மகாத்மா காந்தி பற்றிய ஆளுநரின் சர்ச்சை பேச்சு; காந்திய அமைப்புகள் கடும் கண்டனம்; ஆளுநர் உரையை திரும்ப பெற வலியுறுத்தல்..

ஆளுநர் ஆர்.என். ரவியின் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை பேச்சுக்கு காந்தியவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநர் தனது உரையை திரும்பப்பெற வேண்டும் என காந்திய அமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை வி. விவேகானந்தன், N.M பெருமாள் I.A.S தென்காசி, பூ. திருமாறன் சமூக நல ஆர்வலர், வெங்கடாம்பட்டி, Dr. G.S. விஜயலட்சுமி சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மின்நகர்,  Dr. தி. ஏகலைவன் பல் மருத்துவர், […]

தென்காசியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்..

தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வலம் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த […]

ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள்; பொருநை இலக்கிய வட்டத்தில் கவிஞர் பேரா பேச்சு..

திருநெல்வேலியில் நடந்த பொருநை இலக்கிய வட்ட நிகழ்வில் பேசிய கவிஞர் பேரா ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள் எனக் குறிப்பிட்டார். நெல்லையில் பொருநை இலக்கிய வட்டத்தின் 2049-வது வார நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுக்கு புரவலர் அருணாசல காந்தி தலைமை வகித்தார். மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா “ஹைக்கூ பூக்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இந்நிகழ்வில், கோவில்பட்டியில் […]

சிவகிரி வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; தென்காசி கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் தமிழ்நாடு அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்ட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்ட முகாம் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01.02.2024 காலை 9.00 மணி வரை ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. […]

சட்டவிரோத புகையிலை பொருட்கள்; பதுக்கி வைத்திருந்த இருவர் கைது..

சங்கரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை அருகே சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த K. ரெட்டியார்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் மணிகண்டன் (41) மற்றும் கீழக்கலங்கல் பேட்டை […]

புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும்; சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் அமைச்சரிடம் வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட மாஞ்சோலைதெரு அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிவாசல் தெரு அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருந்தது. ஆகையால் அந்த கட்டிடங்கள் குழந்தைகளின் நலன் […]

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.45 அடி, கொள்ளளவு: 5097.00 மி.க.அடி, நீர் வரத்து : 225.93 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.98 அடி, கொள்ளளவு: 1015.31 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.99 அடி, கொள்ளளவு: 5410.02 மி.க.அடி, நீர் […]

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாற்றுத் திறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கல்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் […]

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பொறுப்பேற்பு..

தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே.கமல் கிஷோர் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஜன.27 அன்று பிறப்பித்திருந்தார். இந்நிலையில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!