இளைஞர்களின் அரசு பணி கனவை நனவாக்க அறிவுசார் மையத்தை அமைத்த ஆற்றல்மிகு அரசு; தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி..

இளைஞர்களின் அரசு பணி கனவை நனவாக்க அறிவுசார் மையத்தை அமைத்த ஆற்றல்மிகு அரசு; தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி.. “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” (குறள் 396,) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க மணலின் கண் உள்ள கேணியிலே ஆழமாகத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். அது போல மக்கள் நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக 05.01.2024 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் […]

அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு..

அகில இந்திய துணைத் தேர்வு; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு.. அகில இந்திய துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தேர்வு 2024- ல் […]

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.9.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்..

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.9.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.9.41 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி தலைமையில் 07.02.2024 […]

ரேபிஸ் தடுப்பூசி மையம் தெரு நாய்கள் கருத்தடை மையம் அமைத்திட ஆட்சியரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மையம் அமைத்திட வேண்டும்; மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டத்தில் தெரு நாய்கள் கருத்தடை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மையம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், கடையம் யூனியனுக்குட்பட்ட, சுமார் 80 பேருக்கு தகுதி இருந்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை […]

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்; முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்..

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்; முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்.. தென்காசி மாவட்டம் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேர நிரந்தர மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடையம் அருகிலுள்ள, இரவணசமுத்திரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலங்குளம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளி […]

வீரவநல்லூர் அருகே கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..

வீரவநல்லூர் அருகே கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு… வீரவநல்லூர் அருகே கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற நல்லதம்பி (52) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(34) என்பவருக்கும் இடையே கோவில் கொடையில் பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. […]

இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் ரெவ சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் ரெவ். பாஸ்கர் கனகராஜ், சாந்தபுரம் சேகர தலைவர் ஸ்டேன்லி இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பொ.தங்கம் வரவேற்று பேசினார். திருநெல்வேலி திருமண்டல பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் மாணவ ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். […]

தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..

தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.. தென்காசி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மீது பள்ளி மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் வல்லம் பகுதியை சேர்ந்த மம்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 11-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை […]

தென்காசி மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பில் அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் திறப்பு..

தென்காசி மாவட்டத்தில் ரூ.6.60 கோடி மதிப்பில் அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் திறப்பு.. தென்காசி மாவட்டம் சோலைசேரி அரசு கல்லூரி மாணவிகள் விடுதி கட்டடம் மற்றும் அரசு சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் […]

நெல்லை – தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதா? வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

நெல்லை – தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதா? வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.. திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் சுங்க சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் கன்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சுங்கச்சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தி […]

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவிகள்; சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வழங்கினார்..

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவிகள்; மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வழங்கினார்.. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் காது கேட்கும் கருவி வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கபட்டது. இம்முகாமிற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கண்காணிப்பாளர் மரு.ஆர். ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். உறைவிட […]

தென்காசி தலைமை மருத்துவமனையில் ரூ.50,000 மதிப்புள்ள வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் வழங்கல்..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 50,000 மதிப்புள்ள வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் வழங்கல்.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ரூ.50,000 மதிப்பு கொண்ட வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) மருந்துகள் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தளிர் கிளினிக் (DEIC) மூலம் குழந்தைகளின் பேச்சுத்திறன், செவித்திறன், வளர்ச்சி குறைபாடுகள் போன்றவை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தென்காசி […]

தென்காசி மாவட்டத்தில் நில அளவை செய்ய இணைய வழி சேவை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நில அளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்” இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நில அளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் “இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சரால் […]

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 133.05 அடி, கொள்ளளவு: 4893.00 மி.க.அடி, நீர் வரத்து : 159.653 கன அடி, வெளியேற்றம் : 1204.75 கன அடி சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 138.61 அடி, கொள்ளளவு: 920.25 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 115.10 அடி, கொள்ளளவு: 5222.10 மி.க.அடி, நீர் […]

பார்ட் பயிற்சி மைய மாணவர்கள் காவலர் உடற்தகுதி தேர்வுக்கு நெல்லை பயணம்..

புளியங்குடி பார்ட் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தமிழக அரசின் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வுக்கு நெல்லை செல்கின்றனர். புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளை அரசு போட்டித்தேர்வு உள்ளிட்ட பல்வேறு கல்விப்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 06-02-2024 […]

தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்; போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு..

தட்கல் டிக்கெட் எடுப்பதில் பொதுமக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும், ரயில்வே நிர்வாகம் தமிழ் தெரிந்த அனுபவம் வாய்ந்த நபர்களை பணியமர்த்தி மக்களின் சிரமத்தை போக்கிட வலியுறுத்தி சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர், பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் அறிக்கையில், தென்காசி மாவட்டம், இரவணசமுத்திரம் ரயில்வே ஸ்டேசனில் தட்கல் டிக்கெட் வசதி கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு இரவணசமுத்திரம் மக்கள் மட்டும் இல்லாமல் அருகிலுள்ள பொட்டல்புதூர், […]

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஸ்மார்ட்போன் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்று; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஸ்மார்ட்போன் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்று; மாவட்ட கலெக்டர் வழங்கினார்.. தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஸ்மார்ட்போன், வெள்ளி பதக்கம், பாராட்டு சான்று ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 05.02.2024 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் […]

ஊர்காவல் படைக்கு ஐசிஐ பள்ளியில் தேர்வு; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு..

ஊர்காவல் படைக்கு ஐசிஐ பள்ளியில் தேர்வு; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு.. தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஊர்க்காவல் பணியினரை தேர்வு செய்வதற்கு தென்காசி I.C.I பள்ளி மைதானத்தில் 11.02.2024 அன்று தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார். இது தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவிப்பில், தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அதன் விபரம் பின்வருமாறு, இடம் […]

தென்காசியில் AICCTU-TNCSC சார்பில் மாநிலம் தழுவிய விடுப்பு-மறியல் போராட்டம்..

தென்காசியில் AICCTU-TNCSC சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் மாநிலம் தழுவிய விடுப்பு-மறியல் போராட்டம் நடந்தது. சிவில் சப்ளை சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு உடனடியாக பச்சை அட்டை வழங்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமை பணிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது. அட்டி கூலி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். பி எஃப் பிடித்தம் செய்திட வேண்டும். சுமைப் பணியில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை […]

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ! 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் அறிவிப்பை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம்  கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் அலுவலகங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர்  செந்தில் விநாயகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது கண்டித்தும் , வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்குவதில் முதுநிலைப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது விரும்பும் நபர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய கோரியும் , […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!