அலங்காநல்லூர் அருகே சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு தொகுதி திட்டம் 2021- 2022 ஆண்டுக்கான 25.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினை, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி […]
Category: உலக செய்திகள்
கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள்..
திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியருக்கு 6 மாத காலமாக உதவித் தொகை வழங்கப்படாததை அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயின்று பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 50க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில், பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் […]
கடையநல்லூர் பகுதியில் வருவாய்த் துறையினர் அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்..
கடையநல்லூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு, வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பாக வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கான மூன்று கட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அலுவலர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அந்தந்த […]
தறி கெட்டு ஓடிய ரோடு லோடர்; ட்ரை சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதி எலக்ட்ரிக்கல் கடைக்குள் சென்றதால் பரபரப்பு..
தறி கேட்டு ஓடிய ரோடு லோடர்; ட்ரை சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதி எலக்ட்ரிக்கல் கடைக்குள் சென்றதால் பரபரப்பு.. மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு அதிக அளவு ஆள் நடமாட்டம் உள்ள எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் டிவிஎஸ் நகர் பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் சாலை போடும் பணியை முடித்துவிட்டு டிவிஎஸ் நகர் மேம்பாலம் வழியாக பழங்காநத்தம் வழியாக ரோடு ரோலர் […]
சாம்பவர் வடகரையில் சிந்தனை நாள் பேரணி; போதை பொருள் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..
சாம்பவர் வடகரையில் சிந்தனை நாள் பேரணி; போதை பொருள் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் சாரணர் சாரணியர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவுலா பிறந்த நாளை முன்னிட்டு சிந்தனை நாள் பேரணி (போதைப் பொருள் ஒழிப்பு) நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பிரபாவதி தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். பேரணி காவல் நிலையத்தில் தொடங்கி மெயின் ரோடு வழியாக சென்று இராமசாமி கோவில் பகுதியில் முடிவடைந்தது. பேரணியில் […]
நெல்லையில் உலக தாய்மொழி தின கவியரங்கம்; தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக தாய்மொழி தின கவியரங்கம் நடந்தது. அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ஆம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளும் விதமாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் கவிதை வாசிக்கும் கவியரங்கம் நடத்தப்பட்டது. நிகழ்வில் அனைவரையும் கற்ப […]
மதுரையில் இரு சக்கர வாகனம் பட்டப்பகலில் திருட்டு..
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அரசு அலுவலரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருட்டு.. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் கண்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை, ஆட்சியரகத்தின் வளாகத்தின் உள்ளே வட்ட வழங்கல் அலுவலகத்தின் வெளியே நிறுத்தி விட்டு, அலுவலகத்துக்கு சென்று விட்டார். பணி முடிந்து மதியம் வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் […]
அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் தேசியத் துணைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ பிவி கதிரவன் தேர்வு..
அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் தேசியத் துணைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ பிவி கதிரவன் தேர்வு செய்யப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் மற்றும் தேசிய துணைத்தலைவராக உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பிவி கதிரவன் கலந்து கொண்டு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். […]
மதுரை வலையங்குளம் நான்கு வழிச்சாலையில் குறுக்கே ஓடிய புள்ளி மான்கள்; நிலைதடுமாறி இருவர் காயம்..
மதுரை வலையங்குளம் நான்கு வழிச்சாலையில் குறுக்கே புள்ளி மான்கள் பாய்ந்து ஓடியதில் நிலை தடுமாறி இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு சக்கர வாகனம் மோதியதில் மானுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மதுரை வளையங்குளம் நான்கு வழி சாலையில் பால்ராஜ், சேகர், இருவரும் இருசக்கர வாகனத்தில் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று இரண்டு புள்ளிமான்கள் குறுக்கே பாய்ந்து ஓடி வந்ததால் அதிர்ச்சி அடைந்த இருவரும் நிலை தடுமாறி புள்ளிமான் […]
கல்விக்கூட வாசலை மதுபாராக மாற்றிய அவலம்; மது அருந்தும் வீடியோ வைரல்..
கல்விக்கூட வாசலை மதுபாராக மாற்றிய அவலம்; பள்ளியின் முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.. பள்ளி கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் மதுரை கோச்சடை பகுதியில் சில தினங்களுக்கு முன் 5105 என்ற எண் கொண்ட, பார் இல்லாத டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் மிக அருகில் தனியார் பள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட […]
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அன்னதானம்..
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் பத்ம ஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கட்சியின் நிறுவனராக கமலஹாசன் செயல்பட்டு வருகிறார். இந்த கட்சியின் 7 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவர்களது கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் வழங்கி […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 114.60 அடி, கொள்ளளவு:, 3830.00 மி.க.அடி, நீர் வரத்து : 82.87 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி,, நீர் இருப்பு : 103.44 அடி, கொள்ளளவு: 486.49 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 109.46 அடி, கொள்ளளவு: 4664.78 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசு, அரசு உதவி […]
இராமநாதபுரத்தில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்ப குழும போலீசார்கள் இணைந்து சஜாக் பாதுகாப்பு ஒத்திகை !
இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்ப குழும போலீசார் இணைந்து சஜாக் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடுக்கடலில் மீன் பிடிக்கம் மீனவர்கள் உரிய அடையாள அட்டைகள் மற்றும் படகின் ஆவணங்களை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். பாதுகாப்பு ஒத்திகையின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நிய படகுகளின் ஊடுருவல் குறித்த தகவல்களை 1093 அவசர எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தாபட்டு வருகின்றனர். அதனை […]
திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி..
திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. – மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி. முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதற்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. மதுரை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம்., மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரைக்கு குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட […]
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம்..
திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி திருக்கோவில் பிரதிஷ்டை நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு வருட அபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உச்சப்பட்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் […]
இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பாலி நரிமன் மறைவு; தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்..
இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பாலி நரிமன் மறைவு; தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்.. புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதும், […]
வாடிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா கலைச் சங்கமம் நிகழ்ச்சி..
வாடிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா கலைச்சங்கமம் நிகழ்ச்சி.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தை திடலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இசை நாடக கலைஞர்கள் பேரவை மாநில தலைவர் எம்.ஆர். எம்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன், செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை […]
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஸ்ரீ பரந்தாங்கி அய்யன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் நாள் மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட […]
தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 20.02.2024 அன்று நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் […]