இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான் உத்தரவின்படி பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார். மேலும் 112 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 1,83,62,412/-ஒரு கோடியே எண்பத்தி மூன்று லட்சத்து அறுபத்தி இரண்டு ஆயிரத்து நானூற்றி பன்னிரெண்டு அறிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த இளம் வழக்கறிஞர்கள் […]
Category: உலக செய்திகள்
தொண்டியில் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் .!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அழகப்ப பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை இணைந்து நடத்தும் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் சமகால சுற்றுச்சூழல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜெ.ஜே. லியோன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலர் புல்லூர் ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் போது ராஜா ஆகியோர் முன்னிலை […]
18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மூத்த உறுப்பினர்கள் க.கு ஜப்பார், இபுறாஹிம் முஹம்மது முபாரக் ஆகியோர் தலைமையில் காதர் சாஹிப் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலி அஹமது கிராத் ஓதி துவக்கி வைத்தனர். மன்சூர் ஆலிம் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களிடையே கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு ஊர் சார்ந்து சுகாதாரம் மரங்களை நட்டு அதனை பராமரித்தல் போக்குவரத்து […]
குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை உழவர் நல துறையின் கீழ் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று பற்றி விளக்க உரையாற்றினார். உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் […]
கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பொதுமக்களின் குறைகளை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேற்படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாகவும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோன்று சிசிடிவி […]
கெமிக்கல் பால்; மூவர் கைது..
தென்காசி அருகே கெமிக்கல் பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பகுதியை சேர்ந்த நபர் பாலில் கெமிக்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து பால் தயாரித்து அது […]
ராமநாதபுரத்தில் கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் : தொடரும் சட்டவிரோத செயல்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே டாட்டா சுமோ காரில் கடத்தி வரப்பட்ட 2,659 கிலோ (58 மூட்டைகள்) ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் தமீம் ராஜா மற்றும் ஆர்.ஐ முத்துராமலிங்கம் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெறுவது கவலை அளிக்கிறது. இதற்கு முன்பு, ராமநாதபுரம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்டம் முழுவதும் […]
ஏர்வாடியில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா முத்தரையர் நகரில் கட்டிட தொழிலாளியான செல்வராஜ் (விழுப்புரத்தைச் சேர்ந்தவர்) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது முதல் மனைவியின் மகன் மணிகண்டன் (வயது 22) மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜுக்கு முதல் மனைவி முனியம்மாள், மகன் மணிகண்டன் மற்றும் மகள் கோமதியும், இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் மகன் சுரேஷ், மகள் தேவி ஆகியோர் உள்ளனர். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.இதனிடையே […]
குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு..
தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்து உள்ளார். இது பற்றிய முழுமையான வானிலை அறிவிப்பில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், ஆகிய 4 தாலுகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா ஒரிசா ஒட்டிய வங்க கடல் […]
தொண்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டியில் உள்ள மகாசக்திபுரம் பகுதியில், அருள்மிகு கடல் சூழ்ந்த மாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா மற்றும் கங்காதேவி பொங்கல் விழாவை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி 16 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 25 படகுகள் பங்கேற்றன. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய போட்டி மாலை வரை நீடித்தது. போட்டியின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு […]
திருவாடானை பெரிய சிவன் கோயிலில் சப்தாவர்ணம் விழா:
ராமநாதபுரம் மாவட்டம்: திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. 10 நாள் திருவிழா மற்றும் தேரோட்டம்: கடந்த மே 31 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய 10 நாள் திருவிழா, தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான அன்று, இரண்டு தேர்கள் ஓடும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான […]
பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: விவசாயிகள் குற்றச்சாட்டு.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா புல்லந்தை கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் பூர்வீக விவசாய குடிகளாக இருந்து வருகிறார்கள் . கிராமத்தை சுற்றிலும் சுமார் 300 ஏக்கர் நெல் விவசாயம் செய்ததில் பருவமழை தவறி பெய்த காரணத்தினால் கடந்த 2023 24 மற்றும் 202425 25 ஆம் ஆண்டு நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்நிலையில் இவர்கள் பயிர் காப்பீடு செய்ததால் அதற்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டது. இது அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சியை […]
கொலை வழக்கு குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் சிறை..
வாசுதேவ நல்லூரில் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அவரின் மனைவியான மகேஸ்வரி, மற்றும் பசும்பொன் தெருவை சேர்ந்த பொன்னையா என்பவர் மகன் மாரியப்பன் @ மாரிசாமி (70), இல்லத்துப் பிள்ளைமார் […]
கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை .!
பக்ரீத் பண்டிகை தியாகப் திருநாள் கொண்டாட்டம். ! இஸ்லாமியர்கள் இறைவனை வணங்கி ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.!! ஹஜ் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள், ‘ஹஜ்’ செய்வது என்பது, இஸ்லாத்தின் […]
சிவகங்கை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகையை மௌலானா முஹம்மது அன்சர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் சிறப்பு சொற்பொழிவை மௌலானா பிலால் முஹம்மது அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் கூட்டுப் […]
மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் 26 கூட்டமைப்பு இணைந்து ஈதிக மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை நடத்தினர் தமிழகம் முழுவதும் இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள் பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் […]
காவலர்களுக்கு கீழை நியூஸ் பாராட்டு..
விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு தடுப்பை முறைப்படுத்திய தென்காசி மாவட்ட காவல் துறையினரை கீழை நியூஸ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது. தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், (இ.விலக்கு ரவுண்டானா அருகில்) வைக்கப்பட்ட பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் விழுந்து காணப்படுகிறது என்றும், விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கீழை நியூஸில் 06.06.2025 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி சமூக ஆர்வலரால் தென்காசி மாவட்ட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு […]
தென்காசி இ.விலக்கு பகுதியில் ஆபத்தான நிலையில் பேரிகார்டு..
தென்காசி இ.விலக்கு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சாய்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இ.விலக்கு ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு சாலையில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. தென்காசி பகுதியில் இ.விலக்கு சாலை அதிக போக்குவரத்து நிறைந்த முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் […]
தென்காசி மாவட்டத்தில் (ஜூன்-04) மின்தடை..
திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் மற்றும் தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஊத்து மலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஊத்து மலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்பபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலி யூத்து, கல்லத்திக்குளம், […]
வீரவநல்லூர் நூலகத்தில் பாராட்டு விழா..
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழகம் இணைந்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வாசகர் வட்ட தலைவர் ஆதம் இல்யாஸ் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். இசக்கி சரவணன், அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுழற்கழக தலைவர் நவமணி எழுச்சி உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சுழற் கழக செயலாளர் (தேர்வு) பரமசிவன் […]