நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரும் தமிழும் – கலைஞர் கண்ட தமிழ்நாடு சிறப்பு சொற்பொழிவு; நினைவுப்பரிசு வழங்கல் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 32வது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரும் தமிழும்’ எனும் தலைப்பில் சுப்புலட்சுமியும், ‘கலைஞர் கண்ட தமிழ்நாடு’ எனும் தலைப்பில் […]
Category: உலக செய்திகள்
கடையநல்லூர் பகுதியில் ஜெயலலிதா 76வது பிறந்த தினவிழா; அதிமுகவினர் உறுதி மொழி ஏற்பு..
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே இந்நாளின் நோக்கம்; ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் உறுதி ஏற்பு.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே நோக்கம் என்பதை மொழிந்து ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. கடையநல்லூர் நகர அதிமுக 1-வது வார்டு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா குமந்தாபுரம் பகுதியில் கொடியேற்றத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினவிழா..
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர, அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர்கள் முருகேசன், தலைமையில் குமரன் தெரு MGR சிலை அருகில் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி […]
கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு..
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு.. மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக […]
3 லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு..
மூன்று லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு.. இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மதுரையின் பரபரப்பான பகுதி. அங்கு கார் ஒன்று வருகிறது. அதன் வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்தது போல செல்கிறார்கள் சிலர். அதிலிருந்து இறங்கும் ஒரு நபர் காரில் அடுக்கி வைத்திருக்கும் உணவு டப்பாக்களை கொடுக்கிறார். வாஞ்சையோடும் கண்களில் நன்றியோடும் பசி தீர்ந்த மகிழ்வோடும் வாங்கி செல்கிறார்கள் அந்த மக்கள். உணவைக் கொடுத்த அந்த நபர் […]
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலி பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்..
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலியாக பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி பங்களா. இங்கு செல்லையா மகன் மூர்த்தி என்ற பங்களா C.மூர்த்தி என்பவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நிலத்தை வாங்கி விற்கும் தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட அதிசயம் தீம் பார்க் அருகில் மதுரையைச் சேர்ந்த சொக்கலிங்கம் […]
பரவை பேரூராட்சியில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி..
பரவை பேரூராட்சியில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி.. மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி சமுதாய கூடத்தில் ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் பெட்கிராட் இணைந்து பெண்களுக்கு சணல் பைகள் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். பரவை பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து […]
வாசன் கண் மருத்துவ மனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை வசதிகள் துவக்கம்..
திருப்பரங்குன்றம் அருகே ஹார்வி பட்டியில் செயல்படும் வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இங்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய அதிநவீன லேசர் இயந்திரம் மூலம் 2 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்வி பட்டி வாசன் ஐ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த புதிய அதி நவீன லேசர் வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை […]
மாநில அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்பு; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..
திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளில் விருதுகளை தட்டிச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்; டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு.. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய நிர்வாக இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன் பரிசுகளை வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், கல்லூரி முதல்வர் […]
நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; அரசாணை வெளியீடு..
நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் […]
தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பில் கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்..
தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை 24.02.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, நெம்மேலியில் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா; 1008 தேங்காய் உடைத்து வழிபாடு..
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகவும் ,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கீகாரம் செய்யப்பட்டதை முன்னிட்டும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முப்பெரும் விழாவாக கொண்டாடும் வகையில் அதிமுகவினர் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழகத்தில் ஐந்து முறை […]
கோ – ஆப் டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் அறிமுகம்..
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் அறிமுகம்.. கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருட்களின் விலையில் மூன்று பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இத்திட்டமானது கோ-ஆப்டெக்ஸ் அனைத்து […]
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை எனவும், மக்களை ஏமாற்றும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறி தமிழகம் […]
தென்காசி மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்; மாவட்ட கலெக்டர் நேரில் கள ஆய்வு..
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து 21.02.2024 அன்று […]
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்..
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அகத்தாப்பட்டி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து தற்போது மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், குடங்களில் […]
சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடம்; ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்.
அலங்காநல்லூர் அருகே சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு தொகுதி திட்டம் 2021- 2022 ஆண்டுக்கான 25.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினை, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி […]
கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள்..
திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர், செவிலியருக்கு 6 மாத காலமாக உதவித் தொகை வழங்கப்படாததை அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி பயின்று பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 50க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில், பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் […]
கடையநல்லூர் பகுதியில் வருவாய்த் துறையினர் அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்..
கடையநல்லூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு, வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பாக வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கான மூன்று கட்ட போராட்டத்தின் இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அலுவலர்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அந்தந்த […]
தறி கெட்டு ஓடிய ரோடு லோடர்; ட்ரை சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதி எலக்ட்ரிக்கல் கடைக்குள் சென்றதால் பரபரப்பு..
தறி கேட்டு ஓடிய ரோடு லோடர்; ட்ரை சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மோதி எலக்ட்ரிக்கல் கடைக்குள் சென்றதால் பரபரப்பு.. மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு அதிக அளவு ஆள் நடமாட்டம் உள்ள எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் டிவிஎஸ் நகர் பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் சாலை போடும் பணியை முடித்துவிட்டு டிவிஎஸ் நகர் மேம்பாலம் வழியாக பழங்காநத்தம் வழியாக ரோடு ரோலர் […]