மார்ச் 08 ஈஷா மஹாசிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்; குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு.. உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு […]
Category: உலக செய்திகள்
மதுரை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு..
மதுரை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு.. மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தையும், ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித் […]
முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..
முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக பெண்கள் தினம் முன்னிட்டு மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பின் மூலமாக உணவு வழங்கி பேசுகையில், உலகில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்கள் நினைத்தால் முதியோர்களை அரவணைத்து காப்பகங்களே தேவையில்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார். நிகழ்ச்சியில் சமூக […]
மதுரையில் மத்திய பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி; மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது..
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற 23 போட்டிகளில் மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது. ஏர் இந்தியா அணி 2வது இடம் பெற்றது. மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் குழுமம் சார்பாக மத்திய தொழில் பாதுகாப்புத் துறை படை உருவான உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் […]
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம்-2013 பற்றிய விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு.. தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பணியிடத்தில் பாலியல் வன்முறை சட்டம் -2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் உள்ளக புகார் குழு அமைத்தல், புகார் பெட்டி வைத்தல் மற்றும் அதன் நோக்கங்கள் பற்றியும், அனைத்து பணிபுரியும் […]
மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளை சுற்றுலா அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்..
மாற்றுத்திறன் படைத்த சிறப்பு பள்ளி குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்.. தென்காசி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளை திருநெல்வேலி அறிவியல் மையத்திற்கு சுற்றுலாவிற்கு அனுப்பி தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் குழந்தைகளை மகிழ்வித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட […]
தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசு !! இராமநாதபுரத்தில் அதிமுக குற்றச்சாட்டு !!
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுத்தியதாகவும் விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டபம் மேற்கு […]
புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடல் மீட்பு; உதவும் பணியில் தமுமுகவினர்..
புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடல் மீட்பு; உதவும் பணியில் தமுமுகவினர்.. புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடலை தமுமுகவினர் மீட்டனர். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 வயதான கோபால் என்ற முதியவர் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக காணவில்லை என்ற செய்தி வெளியானது. பின்பு நான்கு நாட்களுக்குப் பிறகு புளியங்குடி மேற்கு பகுதியில் வீரமுடையார் கோவில் அருகே உள்ள மலை அடிவாரத்தில் கிடப்பதாக அங்குள்ள விவசாயிகள் தென்காசி […]
உலகின் மிகப் பிரம்மாண்ட மஹா சிவராத்திரி விழா; மார்ச் 08 ஈஷாவில் கோலாகலம்..
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மஹாசிவராத்திரி விழா நம் […]
சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம்; முக்கிய தீர்மானம்..
திருப்பரங்குன்றத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 15 இடங்கள் போட்டியிடுவது குறித்து ஆலோசனை மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மண்டபத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் காமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் சாலை முத்து மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயா வரவேற்றனர். மாநில முதன்மைச் செயலாளர் தண்டபாணி, மாநில பொதுச்செயலாளர் […]
மதுரை அவனியாபுரத்தில் அனுமதியின்றி செயல்படும் வார சந்தையால் போக்கு வரத்து நெரிசல்..
மதுரை அவனியாபுரத்தில் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி.. மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா அவனியாபுரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் அவனியாபுரம் விமான நிலையம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அவனியாபுரம் தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கூறிய போது, அவனியாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இதில் […]
மதுரையில் 1,000 ஆண்டு பழமையான கற்சிலை கண்டெடுப்பு..
மதுரை அவனியாபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு; பிற்கால பாண்டியர்கள் காலத்திய 11 ஆம் நூற்றாண்டு கால சிலையாக இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் த.வினோத் அவனியாபுரம் பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த முருகன் சிலையை கண்டுபிடித்துள்ளார். குறிஞ்சி நிலத் தலைவனான முருகனுக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. பல தனிச் சிலைகளும் உள்ளன. மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலையின் மேற்குப் புறமாக […]
மதுரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு..
மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு.. மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மல்லிகை ரோட்டரி சங்கம் சார்பில் நறுமணம் என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மல்லிகை ரோட்டரி சங்க தலைவர் உமாராணி தனசேகரன் தலைமை தாங்கினார். சர்வதேச ரோட்டரி இயக்குனர் முருகானந்தம், ரோட்டரி கவர்னர் ஆனந்த ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி […]
செங்கோட்டை நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்; உறுதி மொழி ஏற்பு..
செங்கோட்டை நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது. இதில் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். மத்திய விளையாட்டுத் துறை, நேரு யுவகேந்திரா மற்றும் செங்கோட்டை வருவாய்த்துறை, செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் ஆகியோர் இணைந்து நூலகத்தில் வைத்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு செங்கோட்டை வருவாய் துறை தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் பிரிவு அலுவலர் சிவன் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]
17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த காவல் துறை; தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு..
17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த நபரை கைது செய்த காவல் துறை; தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு.. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல் துறையினருக்கு தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ஆம் […]
முதலியார் பட்டி அரசு மேல் நிலை பள்ளிக்கு புதிய இருக்கைகள் அன்பளிப்பு..
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முதலியார் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் புதிய இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, துணைத் தலைவர் பாசுல் அஷ்ரப், எஸ்எம்சி தலைவி ஜன்னத், விஜயலஷ்மி, வார்டு உறுப்பினர் காலித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துராஜா […]
இராஜபாளையம் திமுக இளைஞர் அணி சார்பில் இரத்த தானம்..
முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையத்தில் திமுக இளைஞர் அணியினர் இரத்த தானம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை, அன்னதானம் வழங்குதல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு வகைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் நகர திமுக இளைஞர் அணி சார்பில், தமிழக முதல்வர் […]
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்.. மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகிறார் பாத்திமா மேரி. அண்ணன் அந்தோணி செல்வராஜ் உடன் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க கைரேகை வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி பஜார் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது நான்கு சக்கர வாகனத்தில் ராஜசேகர் என்பவர் தனக்கன்குளம் பகுதியில் இருந்து […]
மதுரையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து; இருசக்கர வாகனங்கள் சேதம்..
மதுரையில் நள்ளிரவில் தீவிபத்து; சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன; போலீசார் விசாரணை மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ் (வயது 26) லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் முத்து ராஜ் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டின் அருகே நின்று சிகிரெட் குடித்து […]
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்..
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்.. மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம் வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ” தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பங்குன்றம் பகுதிகளில் தேசிய போலியோ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் அறிவுறுத்தலின் […]