தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் மேலதாளங்கள் முழங்க காவல் துறையினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் பகுதியில் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், […]
Category: உலக செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் !
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டுமென பேசினர்.
ஐ.நா சபையின் பாராட்டு சான்று பெற்ற சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்கள்..
சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு ஐ.நா சபை பாராட்டு சான்று; பொதுமக்கள் பாராட்டு.. சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் சேவையை பாராட்டி ஐ.நா. சபையின் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் பால அருணாசலபுரம் சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய பசுமை படையுடன் இணைந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி, தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஸ்ரீ பவானி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, கடையநல்லூர் நகர் பகுதி மற்றும் சுற்று […]
தம்பி அண்ணாமலை எனது வெற்றிக்காக பாடுபடுகிறார்; சீமான் பரப்புரையில் பேச்சு..
பாஜகவில் இருந்து கொண்டு எனது வெற்றிக்காக மறைமுகமாக பாடுபடுகிறார் அண்ணாமலை; கடையநல்லூரில் சீமான் பேச்சு.. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடையநல்லூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும், நேர்மை என்பது உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைப்பதற்கு சமமாக இருக்கும் என்கிறார் நபிகள் நாயகம். அந்த காலம் இந்த காலம் தான் என் அன்பு மக்களே. […]
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை.. ராஜபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் முகவூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆண்டாள் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக […]
தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் பேச்சு..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணமான ஆட்களும் பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் ராணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்தியாவுடைய தலையெழுத்தை மாற்றி […]
அதிமுக பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா; மதுரையில் பரபரப்பு..
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததால் பரபரப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரச்சாரம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா நூறு ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் நாராயணசாமி. இவர் தேனி […]
தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் இருசக்கர வாகன பேரணியும், மனிதச்சங்கிலி பேரணியும், ஆய்க்குடி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி […]
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை..
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை.. கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் கடையம் காவல் துறையினர் மற்றும் ஆலங்குளம் […]
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு.. தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் நடந்தது. இதில் 37 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 28.03.2024 அன்று […]
பட்டதாரிகளே மிஸ் பண்ணிடாதீங்க! குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு..
குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதன்படி, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்கள் குரூப்-1 பதவிகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது. 16 துணை கலெக்டர்கள், 23 துணை போலீஸ் […]
கீழக்கரையில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பம் !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கு ரோட்டில் இருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக நடை பயணம் மேற்கொண்டு தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து ஆட்டோக்களில் பதாகை வைத்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை […]
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் முன் ஊடக கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு.. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது […]
சிவகங்கையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 13 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை..
சிவகங்கையில் 13 லட்சம் பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து விசாரணை.. சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு இன்று சிவகங்கை சிவன் கோவில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 சக்கர வாகனத்தில் வந்த மானாகுடியைச் சேர்ந்த பில்லத்திகுமார் மற்றும் அவரது கார் டிரைவர் பாலமுருகன் செக்கியூரட்டி அடைக்கலராஜ் ஆகியோர் காரில் சோதனை மேற்கொண்டதில் 13 லட்சம் ரூபாய் பணம் ( 500 x 2600) […]
கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு..
கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு.. ராஜபாளையத்தில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 2013ம் வருடம் பரவிய டெங்கு காய்ச்சல் மூலம் 20க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பலியாகினர். இதனை தொடர்ந்து 42 வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புக்காக ஒப்பந்த முறையில் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது […]
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்; தனியார் பள்ளி தமிழ் ஆசிரியை தமிழக முதல்வருக்கு கோரிக்கை..
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்; தமிழ் ஆசிரியை தமிழக முதல்வருக்கு கோரிக்கை.. மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). பஞ்சாலை தொழிலாளி. மதுரை விளாங்குடி விசாலாட்சி மில்லில் வேலை பார்த்து வந்த இவர் மில் ஏலம் போய்விட்டபின் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகள் கார்த்திகா (வயது 34) எம்.ஏ.பி.எட் எம்.பில் வரை படித்தபின் மதுரை அனுப்பானடியில் உள்ள […]
தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவி செய்த மனித நேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.. தள்ளாடிய நிலையில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மூதாட்டிக்கு உதவும் விதமாக அவரை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்ட ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன். ஆலங்குளத்தில் இன்று (26.03.2024) பாதுகாப்பு பணியை முடித்து விட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். […]
ராமநாதபுரம் தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் !!
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே நாளில் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்த நிலையில் இன்று( 26.03.2024 )தெற்கு காட்டூரை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்ற 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். […]
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் !
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் பாரதி நகர் பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியின் தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கண். இளங்கோ மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொகுதி பொறுப்பாளர் வெண்குளம் ராஜு உட்பட கட்சி நிர்வாகிகள் […]
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்..
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்.. INDIA கூட்டணியின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், […]