தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு..

தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு.. தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் […]

வானத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்- 10 பேர் பரிதாபமாக பலி..

வானத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்- 10 பேர் பரிதாபமாக பலி.. மலேசியாவின் பெரக் பகுதியில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து.

கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..

கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு.. வீ.கே.புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் பின்வரும் 06 நபர்களை அப்போதைய […]

நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால பயிற்சி முகாம்..

நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் துவக்கம்.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை காலத்தினை பள்ளி மாணவ மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடக்க திட்டமிடப்பட்டிருந்தன. அப்பயிற்சி முகாமினை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் கவிஞர் சுப்பையா முன்னிலை வகித்தார். இன்றைய தினம் ஓவிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியினை கலை […]

நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவி; முக்கிய பிரமுகர்கள் பாராட்டு..

நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவி; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு.. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவியை கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த மாணவி இன்பா. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்று ஐஏஎஸ் தேர்வில் […]

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்..

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்.. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள டானா டோராஜா என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில் நேற்று (ஏப்.17) சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை ஐந்து முறை வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் எரிமலையை சுற்றி ஆறு கி.மீ […]

போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் […]

ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் […]

இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !

இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட […]

இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம்!- நேதன்யாகு அறிவிப்பு..

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானநிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் […]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்! பரபரப்பும் பதட்டமும் நிறைந்த சமீபத்திய தகவல்கள்..

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – பரபரப்பும் பதட்டமும் நிறைந்த சமீபத்திய தகவல்கள்.. ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருகிறோம் என இஸ்ரேல் ராணுவ தலைமையகம் தகவல்  இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன  அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன  ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம். மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய […]

மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்த கொடூர தந்தை! நாடு முழுவதும் பேரதிர்ச்சி..

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார். ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு […]

எந்நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம்: பதட்டத்தில் மேற்காசிய நாடுகள்..

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று உள்ளது. இதன் மீது, இஸ்ரேல் கடந்த வாரம் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்தனர். இதில், படையின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் […]

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போதை பொருளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ! கீழக்கரையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரட்டி டிஜிபி அலுவலகம் முற்றுகையிட படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை !!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பாக மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கண்டித்தும் , கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் 3 நபர் மீது கத்தியால் குத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் , கீழக்கரையில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் […]

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு..

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு.. தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சு.குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வே.கிருபா சம்பத், மாவட்ட பொருளாளர் வே.நல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் பட்டதாரி ஆசிரியர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டு. அது தொடர்பாக ஆசிரியர்கள் நலன் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் […]

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு..

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமத்துவ தின உறுதிமோழியை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 12 ஆம் நாள் ஆண்டு தோறும் சமத்துவ நாள் ஆக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை […]

தென்காசியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், தென்காசி பாறையடி தெரு, காயிதே மில்லத் நகரில் வைத்து, நோன்பு பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிஸான் அணி மாநிலச் செயலாளர் தென்காசி முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மின்சார வாரிய செயற்பொறியாளர் ரபீக் பின் உசைன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக் […]

முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..

முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.. கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக கிளைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு, திமுக கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் […]

தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..

தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி.. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை ராணி அண்ணா கல்லூரியை போன்ற மகளிர் […]

வாகனங்களில் ஸ்டிக்கர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி.. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல், ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து 09.04.2024 அன்று கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலும், கீழப்பாவூரில் உள்ள தனியார் பேருந்துகள், கார் மற்றும் தனியார் ஆட்டோக்களில் தேர்தல் திருவிழா-தேசத்தில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!