இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் நவீன முறையில் பருத்தி எடுக்கும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நவீன பருத்தி எடுக்கும் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் இதனைப் பயன்படுத்துவதனால் வேலையாட்கள் கூலி, போக்குவரத்துக் கூலி முதலான செலவுகள் குறைந்து, […]
Category: உலக செய்திகள்
செவிலியர் தின விழாவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு..
மதுரை தோப்பூரில் அமைந்துள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கண்காணிப்பாளர் கனகவேலம்மாள் விழாவிற்கு தலைமை வகித்தார். ஜான்சிராணி, பாத்திமா ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெல்லா பிரசில்லா தனலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் செவிலியர் கோமதி சுற்றுச்சூழல் மேம்படுத்தவும் மருத்துவமனை பசுமை வளாகத்தில் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பச்சை மற்றும் நீல நிறம் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தை வழங்கி நோய்கள் குணமாகும். அதே போல் நமது சுற்றுச்சூழல் […]
மகப்பேறு காலத்தில் மரணம் அடைந்த மருத்துவர் அஞ்சுதாவின் குடும்பத்திற்கு நிதி உதவி !
. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த மருத்துவர் அஞ்சுதா கடந்த 30.04.2024 அன்று மகப்பேறு காலத்தில் துயர மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக திரட்டப்பட்ட ரூபாய் 7,25,000/- ஏழு இலடத்து இருபத்தி ஐந்தாயிரம் காசோலையை மருத்துவர் அஞ்சுதாவின் தாயார் தமிழரசி, கணவர் கார்த்திக் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதார மாவட்டம் […]
சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி..
சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் தற்போது பெய்து வரும் மழைக்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தச்சம்பத்து திருவேடகம் பகுதியில் அதிக அளவில் பள்ளங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்து […]
குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு..
கனமழை எச்சரிக்கை எதிரொலி: குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டத்திற்கு 17.05.2024, 18.05.2024, 19.04.2024, 20.05.2024 மற்றும் 21.05.2024 ஆகிய தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange […]
குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு..
குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் அஸ்வினை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் […]
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். […]
திருவாடானை அருகே வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மீது மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் புகார் தாரரை ஜாமீனில் விடுவித்ததற்கும் மற்றொரு புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கும் தொண்டி காவல் நிலையத்தில் […]
தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை; நகராட்சி தலைவருக்கு பாராட்டு..
தென்காசி நகராட்சிக்கு அஞ்சலில் வந்த மக்கள் கோரிக்கை; நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு.. தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் அட்டை மூலம் வந்த மக்கள் கோரிக்கையின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவரை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தென்காசி நகராட்சி தலைவராக ஆர். சாதிர் இருந்து வருகிறார். தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வாறுகால்களை தூய்மைப்படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என அஞ்சல் அட்டை மூலம் தென்காசி […]
ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் தேலி மீன் பறிமுதல் !
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் மற்றும் ஜெயராஜ் முன்னிலையில் நேற்று நள்ளிரவு வாகன சோதனை நடைபெற்றது . அப்போது அவ்வழியாக உச்சிப்புளி நோக்கி சந்தேகப்படும்படி சென்ற சரக்கு வாகனத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லிங்கவேல் நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு லிங்க வேல் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் உச்சிப்புளி ஆய்வாளர் தலைமையிலான […]
மதுரை கள்ளழகர் கோவில் மலைப்பாதை திடீரென மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி..
மதுரை கள்ளழகர் கோவில் மலைப்பாதை திடீரென மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி.. மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கள்ளழகர் திருக்கோவில். மலைமீது முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் மலைப்பாதையில் பாலம் வேலை நடைபெறுவதால் இன்று ஒரு நாள் பக்தர்கள் மலை மீது வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் […]
ராமநாதபுரத்தில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் விருது விழா !
ராமநாதபுரம் தனியார் மஹாலில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சேர்மன் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட தலைவர் பரூக் அப்துல்லா முன்னிலை வகித்தார். இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மாரீஸ்வரன், மாற்றுத்திறன் கிரிக்கெட் […]
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை; பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பின்வரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு 15.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய தினங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், 16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தினங்களில் கனமழையும் பெய்ய […]
கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயலிகள் பற்றி வேளாண்மை கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி தலைமையில் விவசாயிகளுக்கு செயலியின் முக்கியத்துவம் பற்றியும் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் ; இன்றைய காலகட்டத்தில் கிராமமக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள். அரசால் […]
மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..
இந்திய பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்.. இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பணியில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி தென்காசி எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் […]
தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி 16.05.2024 வியாழக்கிழமை சங்கரன்கோவில், […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலைமச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது (குறள் -102) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும். மகளிருக்கு சொத்துரிமையும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி […]
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு (2024) எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் […]
தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா..
பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ.. கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார். அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடியாரின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் மாவட்ட கழகம் சார்பில் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் முன்னாள் எம்பி முருகேசன் […]
பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி குறித்து செய்முறை விளக்கம் ! விவசாயிகள் பங்கேற்பு !!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் […]