மதுரை வந்தடைந்த இராணுவ வீரரின் உடல்.. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆட்டோ விபத்தில் பலியான முள்ளிப்பள்ளம் ராணுவ வீரரின் உடல் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் நாகரத்தினம் (வயது 28) இவர் ராஜஸ்தான் (டெல்லி ) ஆறாவது கார்டு ரெஜிமென்ட் படை பிரிவில் லேன்ஸ் நாயக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அலுவல் பணி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள […]
Category: உலக செய்திகள்
கனிமவள வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தமுமுக-மமக கூட்டத்தில் தீர்மானம்..
கனிமவள வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தமுமுக-மமக வலியுறுத்தல்.. பொட்டல்புதூர் கடையம் வழியாக கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்லும் ராட்சத கனரக லாரிகளால் விபத்துக்களும், போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டு வருவதால், கனிமவள லாரிகள் கடையம் பொட்டல்புதூர் சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுமுக-மமக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தமுமுக-மமக பொட்டல் புதூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் பொட்டல்புதூர் அலுவலகத்தில் மமக மாவட்ட செயலாளர் சலீம் […]
கலைஞர் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்..
கலைஞர் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.. தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி மேலபட்டமுடையார்புரம் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வழங்கினார். தென்காசி கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலபட்டமுடையார்புரத்தில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த […]
சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்..
சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்குட்பட்ட சூரங்குடியில் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தையும், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் கால் மற்றும் வாய்நோய், கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டத்தையும் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாடுகளின் உரிமையாளரின் ஆதார் கார்டு […]
ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு..
ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு.. இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் கல்வி கற்பித்தலில் 17 ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்றுள்ளது எனவும், இக்கல்லூரியில் பயின்ற பலர் அரசு அதிகாரிகளாக மாறி வருவதாகவும் கூறி நெல்லை பேராயர் பர்னபாஸ் கல்லூரி நிர்வாகத்தை பாராட்டினார். கல்லூரியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் […]
ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி, தந்தை இறந்த சோகத்திலும் + 2 அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் […]
தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்..
தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்.. கலைஞர் ஆட்சியின் நீட்சியாகத் தமிழகத்தில் முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்தியதன் மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது என சுயமரியாதை திருமண விழாவில் பேசிய எம்.பி. கனிமொழி கருணாநிதி புகழாரம் சூட்டினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் நடைபெற்ற மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் த.செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் திமுக துணைப் […]
திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18.06.2024 இன்று சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வுப்பணிகளை காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் […]
டூவீலர்கள் தொடர் திருட்டு ! 3 வாலிபர்கள் அதிரடி கைது..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக, கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தொண்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் 21, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் 25, எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு முகமது முஸ்தபா 19, ஆகியோர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மூன்று வாலிபர்களையும் ஏர்வாடியில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்தனர். மேலும், […]
வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தென்காசி மாவட்ட கலெக்டர் மரியாதை..
தென்காசி மாவட்டத்தில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை.. வீர வாஞ்சிநாதன் 113வது நினைவு நாளினை முன்னிட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கோட்டை நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி, நகர் மன்ற உறுப்பினர்கள் ரஹீம், மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, செங்கோட்டை நூலகர் ராமசாமி, வீர வாஞ்சிநாதன் வாரிசு ஹரிஹர சுப்ரமணியன், வாஞ்சி கோபால கிருஷ்ணன், சுதந்திர […]
தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடிய மாணவ மாணவிகள்..
தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடிய மாணவ மாணவிகள்.. “நான் முதல்வன்” மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய SCOUT திட்டத்தில் இங்கிலாந்தின் டர்ஹம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று தாயகம் திரும்பிய 25 மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது ஈரோடு, எம்.பி.நாச்சிமுத்து ஜெகன்நாதன் பொறியியில் கல்லூரியில் ECE துறையில், மூன்றாவது வருடம் படித்து வரும் மாணவி பேசியதாவது: நான் அரசு பள்ளியில் படித்ததால், புதுமைப்பெண் திட்டத்தின் […]
ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்த இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள்..!
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்.அப்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி துவங்கப்படும் என்றும் அரசு பஸ்களில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். […]
மதுரையில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
மதுரையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கல். மதுரை மாநகர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி முருகன் என்பவரின் மகளான ரம்யா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்று தற்போது […]
மதுரையில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை..
மதுரையில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “நபி வழி திடல் தொழுகை நடத்தினர். 300 பெண்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ ஸ் மகால் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ” பக்ரீத் பண்டிகையை ” முன்னிட்டு […]
நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா; நினைவு பரிசுகள் வழங்கல்..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா; நினைவு பரிசுகள் வழங்கல்.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் கலை பதிப்பகம் இணைந்து பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையிலான 50 இலக்கிய கூட்டங்கள் பள்ளிக் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் வகையிலான கூட்டங்கள் என 100 கூட்டங்களை நடத்தி முடித்தனர். அந்நிகழ்வில் நிறைவு விழா […]
நபிகளாரின் போதனைகள் அறவழிக்கான அறிவுரைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாக பெருநாள் வாழ்த்து..
நபிகளாரின் போதனைகள் அறவழிக்கான அறிவுரைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாக திருநாள் வாழ்த்து.. நபிகளாரின் போதனைகள் மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் தியாக திருநாள் வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்! ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி […]
கீழக்கரையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை ! உலக மக்கள் அமைதிக்காக கூட்டுப் பிராத்தனை !
, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஓடக்கரை பள்ளி ஜமாத் சார்பில் 18 வாலிபர்கள் தர்கா அருகில் அமைந்துள்ள திடலில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டனர். பக்ரீத் திருநாள் என்பது இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் […]
பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை..
பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை.. பெத்தநாடார்பட்டியில் அரவிந்த் கண் மருத்துவமனை பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்பு விழிப்புணர்வு குழு இணைந்து கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 93 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பெத்தநாடார்பட்டி தொழிலதிபர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனர் இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் ஆகியோர் […]
பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க தென்காசி மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை..
பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி தெற்கு திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி திருநெல்வேலி நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், […]
தென்காசி மாவட்டத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் […]