தென்காசி மாவட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருட்டு, வழிப்பறி, போக்சோ தொடர்புடைய பின்வரும் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான கரிவலம்வந்தநல்லூர் பெரியூர் […]

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு (Spot Admission) 31.07.2024 வரை இணையதளம் (www.skilltraining.tn.gov.in) வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான Fitter (பொருத்துநர்), Electrician (மின்சாரப்பணியாளர்), […]

திருப்புல்லாணி வேளாண்மை துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், கழிவு வைக்கோல் மற்றும் இதர பால் கழிவுகளைப் பயன்படுத்தி […]

நல்லிருக்கை கிராமத்தில் ரசாயன உரங்கள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் பேசுகையில் விவசாயிகள் மண் பரிசோதனை […]

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான (15.07.2024) அன்று உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை […]

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி டிஎஸ்பியிடம் திமுகவினர் புகார்..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினரால் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலைஞரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடம் தென்காசி நகர திமுக செயலாளர் ஆர்.சாதிர் மனு அளித்தார்.    அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் […]

தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டம்; நாளை துவக்கம்..

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 354 அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் 17,349 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது 15.07.2024 முதல் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் கீழச்சேரி கிராமத்தில் உள்ள […]

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவுடையானூர், பொடியனூர், சின்னநாடானூர், சாலடியூர், கோட்டை விளையூர் ஆகிய பகுதிகளில் 15 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சீரான குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி முருகன், வார்டு உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்கள் பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு […]

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கல்..

மதுரை மாவட்டம் சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், போதை பொருட்களின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசை கண்டித்தும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் பொதுமக்களிடம் […]

ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்று சுவர்; விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை..

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்று சுவர் உள்ளது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிபள்ளம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்று சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் ஒருவித அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். […]

கலைஞர் குறித்த அவதூறு பாடல்; சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே-டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை..

கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி, அவதூறுப் பாடல் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை; அதன் தொனி, சாதாரண மனிதர்களின் தொனியல்ல! அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே.! என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், கலைஞர் கருணாநிதி அவர்களை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவோ புனையப்பட்டதாகக் கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது […]

கடையம் பகுதியில் விவசாய சேவை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள கடையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையத்தை 13.07.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்து விவசாயிகளுக்கு கால்நடை தீவன விற்பனையை தொடங்கி வைத்தார்.    தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் தயாரிப்புகளான […]

தென்காசி மாவட்டத்தில் யானை மிதித்து தோட்ட காவலாளி உயிரிழப்பு..

தென்காசி மாவட்டத்தில் யானை மிதித்து தோட்ட காவலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த குருவையா என்பவரின் மகனான மூக்கையா (வயது 60). சொக்கம்பட்டி பிள்ளையார் பாண்டி என்பவரது தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், மூக்கையா மற்றும் பிள்ளையார் பாண்டி […]

சங்கரன்கோவில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு; பசியில்லா தமிழகம் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு..

சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சாலையோரம் ஆதரவின்றி எந்தவித பராமரிப்பும் இன்றி சுற்றித் திரிவதாக சங்கரன்கோவில் கோட்டாட்சியர் மூலம் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷூக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் […]

தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண். 168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் […]

தென்காசியில் அண்ணாமலையை கண்டித்து காங்கிரசார் சாலை மறியல் போராட்டம்..

காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப் பெருந்தகையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் அவதூறு பேச்சை கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்த இப்போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை […]

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கட்டாய வசூல்; மஜக துணைச் செயலாளர் குற்றச்சாட்டு..

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் என்ற பெயரில் குத்தகைதாரர்கள் சிறார்கள் மூலம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் குத்தகைதாரர்கள், ரயில்வே நிலையத்திற்கு பயணிகளை வழியனுப்பவும், அழைத்துச் செல்லவும் வருபவர்களிடம் கட்டாய பார்க்கிங் கட்டணம் வசூலிக்கின்றனர். வாகனங்களை ரயில்வே பார்க்கிங் வளாகத்தில் நிறுத்தும் வாகனத்தில் மட்டும் தான் […]

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான கீழப்பாவூர் தமிழர் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகனான ராமலிங்கம் @ முத்துராஜ் (35) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் […]

சங்கரன்கோவில் பகுதியில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் திட்ட முகாம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாமினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் திட்ட […]

கனிம வள வாகனங்களால் தொடரும் விபத்துகள்; மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தொடர் விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும், இதனை தடுத்து மக்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. இந்த கனிமவள வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுனர்கள் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!