தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, சுதந்திர தினமான 15.08.2024 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கிராம சபை […]
Category: உலக செய்திகள்
நெல்லையில் அனைத்து கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு..
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஆன்லைன் சென்டர் நடத்தி வந்த இளைஞரை சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், சென்டருக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்நிலையில், நெல்லை மேலப்பாளையத்தில் படுகொலை செய்யப்பட்ட செய்யது தாமீன் என்பவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரியும் இன்று (12.08.2024) மேலப்பாளையம் அனைத்து கட்சிகள் மற்றும் வியாபாரிகள், ஜமாத்துகள் சார்பில் கடையடைப்பு நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அதனை ஏற்று நெல்லை மேலப்பாளையத்தில் […]
துணிச்சல் மிக்க செவிலியர் சபீனா; கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி தமிழக அரசு பாராட்டு..
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயர்மட்ட கயிறு வழியாக (Zip line ) ஆற்றைக் கடந்து சென்று தன்னலம் பாராமல் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காப்பாற்றிய கூடலூரைச் சேர்ந்த துணிச்சல் மிக்க செவிலியர் சபீனா மற்றும் மருத்துவ குழுவினரை பாராட்டி தமிழ்நாடு அரசு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி கெளரவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு […]
தென்காசியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய […]
தென்காசி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் முக்கியச் செய்தி..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தனக்கு இரு சக்கர வாகனம் வழங்கவில்லை எனவும், பலமுறை மாற்றுத்திறனாளி அலுவலரிடம் நேரில் சென்று கேட்ட போதும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் கூறியதாக தென்காசி மாவட்ட வாட்ஸப் குழுக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி வைரலானது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்ரோல் வாகனம் கேட்டு 20 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் அளித்துள்ளார். பெட்ரோல் […]
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம்; ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் துவங்கி வைத்தனர்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 09.08.2024 அன்று தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, […]
உயர்கல்வி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்..
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் […]
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்;
தென்காசி மாவட்டம் கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சேர்ந்தமரம் நிலைய வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமயிலான சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள், கலந்து கொண்டு அனைத்து நோய்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பாக இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர். நீர், இரத்த பரிசோதனை, ஸ்கேன், ஈசிஜி, எக்ஸ்ரே, இயன்முறை மருத்துவம், தொற்றா நோய்களை கண்டறிதல், கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், தோல் […]
மதுரை முள்ளிபள்ளம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை..
முள்ளிபள்ளம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது. இதன் மூலம் வீடுகளை இழந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உணவு இருப்பிடம் இன்றி தவித்து வந்தனர். அவர்களுக்கு தனி நபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தற்போது வரை உதவி […]
குற்றாலம் சாரல் விழாவில் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..
தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டுத் துறை சார்பில் சதுரங்கம் (ம) கையுந்துப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சார்பாக சதுரங்கம் (ம) கையுந்துப்பந்து விளையாட்டு போட்டியானது 17.08.2024 அன்று காலை 7 மணிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. […]
தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி; தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; தமிழக அரசு உத்தரவு..
தென்காசி மாவட்ட புதிய எஸ்.பியாக சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதன் படி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கண்காணிப்பு பிரிவு தலைமை இயக்குனர் சக்தி கணேசன், சென்னை புலனாய்வு பிரிவு-1 துணை காவல் ஆணையராகவும், மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி. சுஜித் குமார், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், வண்டலூர் […]
தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு..
தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (06.08.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் […]
தென்காசி உழவர் சந்தை அருகே கழிவுநீர் அகற்றும் வாகனங்களால் சுகாதாரக்கேடு..
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் நள்ளிரவில் பல இடங்களில் சேகரித்து வந்த கழிவுநீரை தென்காசி உழவர் சந்தை எதிரே உள்ள குளத்தில் விட்டு விடுவதால் பெரும் சுகாதாரக் கேடும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் அப்பகுதியை கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. நேற்று இரவு மேற்கண்ட இரு வாகனமும் சுமார் 11:30 மணியளவில் பல இடங்களில் அகற்றி […]
தென்காசியில் முடநீக்கியல் மருத்துவர் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தென்காசியில் இந்திய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட முடநீக்கியல் மருத்துவர் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கம், நெல்லை முடநீக்கியல் மருத்துவர் சங்கம், மற்றும் ரோட்டரி கிளப் குற்றாலம் சாரல் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. […]
முதலியார் பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு..
தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் அமைந்திருக்கும் கடையம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, 12ஆம் வகுப்பில், சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆயத்தக் கூட்டம் நடந்தது, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் […]
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்..
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.1,00,680 மதிப்பில், மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் ஆகியோர் வழங்கினர். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் […]
மேலூர் சுங்கச்சாவடி அருகே கோர விபத்து; மதிமுக நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு..
மேலூர் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில், மதிமுக மாநில நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பெண்கள் உட்பட இரண்டு பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய நிலையில் இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து, இவர் மதிமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் இவரது சகோதரர் […]
தென்காசியில் நடைபயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்றான “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதை அடிப்படையாக கொண்டு 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மையம் தென்காசி குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்நகர் பகுதியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் போன்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் […]
மதுரையில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகை மூட்டத்தால் பரபரப்பு..
மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட இந்த புகையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மதுரை அவனியாபுரம் பகுதியை அடுத்துள்ள வெள்ளைக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு தீ எரிந்த நிலையில் போராடி தீயணைப்பு துறையினர் அனைத்தனர். இந்த நிலையில் வெள்ளைக்கல் குப்பை கிடங்கு அருகே […]
மதுரையில் ஆன்லைனில் மோசடி; வாங்காத லோனிற்கு பணத்தை கட்டக்கூறி இளம் பெண்ணை மிரட்டிய கும்பல்..
மதுரையில் ஆன்லைன் லோன் எனும் பெயரில் வாங்காத லோனிற்கு பணத்தை கட்டகூறி, வாட்ஸ்அப்பில் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக படம் அனுப்பி இளம்பெண்ணை மிரட்டிய கும்பல் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 42வயது நிரம்பிய பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் Kredit bee app என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் முழுவதுமாக லோனை கட்டி முடித்துள்ளார். […]