கடையம் சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆதாய கொலை, திருட்டு மற்றும் 72க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கடையம் கல்யாணிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகனான பாலமுருகன்(36). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் […]

முதலியார்பட்டி அரசு பள்ளிக்கு விரைவில் கூடுதல் கட்டிடம்; வட்டாட்சியர் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு..

முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் பள்ளியை நேரில் ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், சீட்டு கொட்டகைகளிலும், மர நிழலிலும், தரையிலும், அமர்ந்து மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு […]

கோ-ஆப்டெக்ஸ் திபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட கலெக்டர்..

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கோ- ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், 21.09.2024 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை […]

வடகரையில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டு யானை; பொதுமக்கள் பீதி..

வடகரையில் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென காட்டு யானைகள் வந்து சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் அவ்வப்போது யானைகள் வந்து செல்வதால் இப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். […]

தென்காசியில் கழிவு நீர் ஓடையை சீரமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..

தென்காசியில் முக்கிய சாலையில் செல்லும் கழிவு நீர் ஓடையை சீரமைத்து சுகாதாரம் காக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி ரயில் நிலையம் வடபகுதி மற்றும் ஐசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி, எம்.கே.வி.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் கழிவு நீர் ஓடை சென்று கொண்டிருக்கிறது.  துர்நாற்றம் வீசும் இந்த கழிவு நீர் ஓடையால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள், பள்ளி பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்கள் […]

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலையம் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான தென்காசி பாறையடி மேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரின் மகனான முகமது மைதீன் @ நாகராஜன்(28). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் […]

தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை; தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்..

தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைத்திட வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நெல்லை ரயில் நிலையத்தில் 20.09.24 மாலை 6.30 மணிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், நெல்லை – தென்காசி […]

சுரண்டையிலிருந்து சென்னைக்கு மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்; பொது மக்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சென்னைக்கு இயக்கி நிறுத்தப்பட்ட இரண்டு அரசு பேருந்துகளையும் நவீன புதிய ரக பச்சை வண்ண பேருந்து அல்லது வெள்ளை வண்ண பேருந்தாக மீண்டும் இயக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை, வீ.கே.புதூர், சாம்பவர் வடகரை, சேர்ந்தமரம், வீரசிகாமணி பகுதியை சேர்ந்த பயணிகளில் சுமார் 200 பேர் தினமும் விழுப்புரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், சென்னை என சென்று வருகின்றனர். இவர்களது வசதிக்காக […]

காமராஜர் அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்; பரிசுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் 20.09.2024 அன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தலைமையேற்று கல்லூரி முதல்வர் (பொ) ரா.ஜெயா தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டார்கள். முதல் அமர்வில் துபாய் ஆகாஷ் பிளான்டேஷன் முதன்மை விஞ்ஞானி முனைவர் ரவிந்தர் சிங் உயிரியல் துறையில் வேலை வாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார். 2வது அமர்வில் […]

விவசாய பயிர்களை அழித்து வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் விவசாய பயிர்களை அழித்து வரும் வனவிலங்குகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. வடகரை நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் 20-09-2024 அன்று கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகர தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சமூக ஊடக அணி செயலாளர் வாவை சேக் முகம்மது, தொகுதி தலைவர் சேக்முகம்மது ஒலி மற்றும் தொகுதி இணைச் செயலாளர் சாஜித் ஒலி […]

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், சின்னக் கோவிலாங்குளம் காவல் நிலையம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சின்னக் கோவிலாங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் கார்த்திக் (24). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் […]

கோவில் பாதுகாப்பு படை ஆளினர்களுக்கு பணி நியமன ஆணை; தென்காசி மாவட்ட எஸ்.பி வழங்கினார்..

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோவில் பாதுகாப்பு படை ஆளினர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 11 முன்னாள் ராணுவப்படை வீரர்கள் / ஓய்வு பெற்ற காவல்துறை ஆளினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. சீனிவாசன் வழங்கினார். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

நெல்லையில் “இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு” எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை..

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம் சார்பாக “இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு” என்னும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பயிற்சி பட்டறை தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் உஷா காட்வின் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சா. தேவநேசம் மேபல் வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக முனைவர் ஜா. சாந்தி பாய் இறை வார்த்தையும், முனைவர் பா.ஹெலன் சோபியா ஐயன் உரையும் வழங்கினர்.  அடுத்ததாக பொதிகைத் […]

நீர்த்தேக்க பகுதிகளை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிகளை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் எனவும், ராமநதி, கடனாநதி நீரோடைகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்குள் அமைந்திருக்கும் கடையம் யூனியன் சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய பகுதியாகும். இதில் 23 ஊராட்சி மன்றங்களும் ஒரு பேரூராட்சியும் அமைந்துள்ளது. இந்த பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் பாய் தயாரிப்பு தொழில் அமைந்திருந்தது. தற்போது விவசாயம் மற்றும் பாய்த்தொழில் நலிவடைந்த […]

தமிழ்நாடு முதலமைச்சரின் அமெரிக்க வெற்றி பயணம்..

1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய முதலமைச்சரின் அமெரிக்க வெற்றி பயணம்!  வெளியீடு : செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை.

இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் முன்னாள் மாணவ ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவ ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏஞ்சலின் வரவேற்றார். முன்னாள் முதல்வர் முனைவர் சகுந்தலா இஸ்ரேல், முன்னாள் பொறுப்பு முதல்வர் சில்வியா கேத்தரின், முன்னாள் பேராசிரியர்கள் ஜான்சி தேவநேசம், மெர்சி ஜோகன்னா, அலுவலக முன்னாள் அலுவலர்கள் வெற்றி, பிரிசில்லா சுகி ஆகியோர் […]

அரசியல் வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பதா?; டிஜிபி தேவாரம் எழுதிய நூலில்..

தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், தம் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் குறிப்புகள் பற்றிய நூல் ஒன்றினை எழுதியுள்ளார். “மூணாறிலிருந்து மெரினா வரை” எனும் தலைப்பில் எழுதிய அந்த நூலில் “அரசியல்வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பது சரியில்லை” என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டிஜிபி வால்டர் தேவாரம். அவர் எழுதிய புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வால்டர் தேவாரம் என்ற பெயரைக் கேட்டாலே கூன் விழுந்த முதுகும் நிமிர்ந்து நேராகும். […]

நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று மின்தடை..

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உபமின் நிலையங்களில் 10.09.2024 செவ்வாய்க் கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் […]

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் – உயர்வுக்குப் படி 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் – உயர்வுக்குப் படி 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இதில் தென்காசி மண்டலத்தில் வரும் […]

சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்; தமிழ்செல்வன் எம்எல்ஏ மற்றும் விழித்தெழு இயக்கம் வலியுறுத்தல்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பை – தென் தமிழகம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் மற்றும் ரயில் எண் 11021 தாதர் – நெல்லை சாளுக்கியா எஸ்பிரஸ் ரயிலை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சீயோன் – கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன் மற்றும் மும்பை விழித்தெழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் ஆகியோர் கூடுதல் பொது மேலாளர் பிரபாத் ரஞ்சனை நேரில் சந்தித்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!