90 ஆடுகள் உயிரிழந்த பெரும் சோகம்; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஆட்டுப் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 90 ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி கம்பிளி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரின் தோப்பில், கம்பிளி பகுதியை சேர்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சேர்ந்த குத்தால ராமன் ஆகிய இருவரும் ஆட்டு பண்ணைகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இரண்டு […]

ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது; கனிமொழி எம்.பி பேட்டி..

ஒன்றிய அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும், மக்களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக […]

தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தென்காசி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் சாதனை..

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்கூல் கேம்ஸ் பெட்ரேஷன் ஆப் இந்தியா சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிவகங்கையில் நடந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மு.சந்தியா மற்றும் சி.யோக தர்ஷினி […]

ராமநாதபுரத்தில்  25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு..

ராமநாதபுரம், டிச.16 – ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சுந்தரம் செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை […]

சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்க! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..

டங்ஸ்டன் கனிம சுரங்கம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது எனவும், மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்தால், கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. எனவே கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! என்றும் மக்களவையில் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.  மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கனிமொழி எம்.பி பேசியதாவது: “தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் […]

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..

சாம்பவர் வடகரை பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் சாம்பவர் வடகரை மூக்கன் என்பவரின் மகன் மாடசாமி @ சங்கிலி மாடன் (48)  என்பவரை சாம்பவர் வடகரை காவல் […]

இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்…

இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சாரபாக விழிப்புணர்வு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய தினம் உலகில் மனித நேயம் தழைத்தோங்கவும், மனித நேயம் காக்கப்படவும், மனித குலத்தின் மாண்புகள் உயரவும், மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயர்ந்த சிந்தனை அனைவரின் மனதிலும் […]

தாயாரை மீட்டு தரக்கோரி மகள் கண்ணீர் மல்க மனு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆ. புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்ரகாளி. இவரை வீட்டு வேலைக்காக ஏஜன்ட்கள் கொக்கா டி இருளாண்டி, திருச்சி நாசர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பினர். அங்கு பத்ரகாளி தொடர் சித்ரவதையால் தற்போது மிகவும் உடல் நலம் பாதித்துள்ளார். இதனால் பத்ரகாளியை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் நபியா மக்கள் குறை தீர் […]

காசநோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..

தென்காசியில் “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 07.12.2024 அன்று “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் […]

கடையம் அருகே இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 5 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருமலையப்பபுரம் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் […]

ஆன்லைனில் முதலீடா? மோசடி!! காவல்துறை எச்சரிக்கை..

மொபைல் மூலம் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் இணையதளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக முதலீடு எனும் பெயரில் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் “உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்” இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருகின்றனர்.  இதனை […]

சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 05.12.2024 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், அரசு கூடுதல் செயலாளர் / பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முனைவர் […]

பட்டா பெயர் சேர்ப்பு விவகாரம்; தென்காசி கோட்டாட்சியர் விளக்கம்..

பட்டாவில் பெயர் சேர்க்கும் விவகாரத்தில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணையா பட்டாவில் தனது மனைவி பெயரை சேர்ப்பது தொடர்பாக ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறி கோட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தென்காசி […]

உலக சாதனை விருது பெற்ற நான்கு மாத குழந்தை; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

ஐந்து உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்த நான்கு மாத குழந்தைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த குழந்தையிடம் இரண்டு புகைப்படங்களை காட்டி அதில் உள்ள பெயர்களை சொல்லி எடுக்க சொல்லும் போது சரியாக எடுத்தும், உலக அதிசயங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களை […]

தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி..

பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி விவசாயி கண்ணையா தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. விவசாயியான இவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தன்னுடைய மனைவியான கோமதி அம்மாள் பெயரை பட்டாவில் சேர்ப்பதற்காக மனுநீதி நாள் முகாமில் மனு அளித்ததாகவும், அந்த மனு மீதான விசாரணையானது தற்போது […]

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையின் வழிகாட்டுதல்கள்..

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை பக்தர்கள் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனால் சபரிமலையில் அதிக நெரிசலைத் தவிர்க்கலாம் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து […]

தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்; காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..

தமிழ்நாட்டிற்கான இடைக்கால நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெஞ்சல் புயலால் செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடும் மழையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. […]

தென் மாவட்டங்களில் பலத்த காற்று: செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி வெதர்மேன் ராஜா தகவல்..

தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 […]

பகுதி நேர வேலை (PART TIME JOB) எனும் பெயரில் மோசடி; இருவர் கைது..

ஆன்லைன், சமூக வலைதளங்கள் மற்றும் போலியான இணையதளங்கள் மூலம் ஆஃபர் எனும் பெயரில் தினமும் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் விளம்பர ஆஃபர்களை நம்பி பலர் மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்வதும், தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவில் புகாரளிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மோசடி குறித்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்ய […]

சட்ட விதிகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆறு கால்நடை சந்தைகளும், இரண்டு சோதனை சாவடிகள் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மாவட்டத்திலுள்ள கால்நடை சந்தைகளில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!