கோர விபத்து; முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு..

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், நிதியுதவியும் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஐந்து […]

காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆற்றிய உரை.!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாக இருந்தார்” அப்படி எம்ஜிஆர் ஒரு பாடல் பாடியதைக் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நம்ம காஞ்சித் தலைவர் பிறந்த மாவட்டம் இது. தன்னுடைய வழிகாட்டு என்பதாலேயே தான் ஆரம்பித்த கட்சிக் கொடியில் அறிஞர் அண்ணா அவர்களை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் ஆரம்பித்த […]

தென் மாவட்ட பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிக்கையில், தெற்கு இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. (23.11.2025) இன்று மாலை அல்லது இரவு முதல் மீண்டும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும். வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலூர், நாகை, மயிலாடுதுறை, இராமநாதபுரம்,, தூத்துக்குடி, […]

அரசு பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு..

தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22.11.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இஸ்ரோ விஞ்ஞானி (முன்னாள் மாணவி 1974-1981) நிகர்ஷாஜி ரூ. 24 இலட்சம் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் 2 கூடுதல் வகுப்பறை […]

SIR: தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் முக்கிய தகவல்..

தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் SIR-படிவம் தொடர்பாக முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர். பொது (தேர்தல்) அறிவுரையின் படியும், தென்காசி மாவட்டத்தில், 01.01.2026 ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு […]

தவ்ஹீத் ஜமாத் சார்பில் S.I.R விழிப்புணர்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் சார்பாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள தீவிர வாக்காளர் திருத்த நடைமுறைகள் SIR குறித்த கருத்தரங்க கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் கடையநல்லூர் தவ்ஹீத் நகர் மர்கஸ் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் SIR-ன் நடைமுறைகள் குறித்தும் அதில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பின்வருமாறு எடுத்துரைத்தார்.   SIR படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருந்து […]

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு.!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குள் உள்ள வனப்பகுதியில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வன […]

பெரியநாயக்கன்பாளையத்தில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் மக்களின் அடிப்படை வசதிகளை கோரி பெரிய அளவில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மற்றும் தமிழக அரசு இரண்டும் இணைந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சாலை, சாக்கடை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சியின் பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் பெரும் […]

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]

ஜித்து எனும் ஆண் காட்டு யானை உயிரிழப்பு..

கோவை வனக்கோட்டம் மேட்டுப் பாளையம் வனசரகத்தில் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஜித்து என்னும் பேர் கொண்ட ஆண் காட்டு யானை உயிரிழந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி யானை இறந்த பகுதிக்கு விலங்குகள் உடற் கூறாய்வு மருத்துவ குழு வந்தடைந்தது. தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் கவனத்தை எதிர் நோக்கி பொது மக்கள்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் நிலையில் முதல்வரின் கவனத்தை சுரண்டை நகராட்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களுள் சுரண்டை நகராட்சி ஒன்றாகும். மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சுரண்டை நகராட்சியில் தற்போது சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமும், வர்த்தகமும் இப்பகுதி மக்களின் பிரதானமாக உள்ளது. மேலும் சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 40 ஊராட்சி 4 […]

“அன்பு” எனும் கரங்கள் தந்து அரவணைத்த முதல்வருக்கு மனதார நன்றி..

தமிழ்நாடு அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகள் 18-வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2025 அன்று அன்புக் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.   தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற […]

தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரம்..

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.   12.10.2025 இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். நெல்லை, […]

மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகப்பயிற்சி தொடக்கம்

மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அகப்பயிற்சி தொடக்கம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி  மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான பத்து நாள் அகப்பயிற்சி (Internship Programme) மாநிலம் முழுவதும் இன்று துவங்கியது. அதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான அகப்பயிற்சி  காலை சுபா மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் சுபா மருத்துவமனை உரிமையாளரும் மருத்துவருமான மகேஸ்வரன்  பயிற்சியைத் துவக்கி வைத்து, “மாணவிகள் கல்வியறிவை நடைமுறை வழியில் சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்” எனக் […]

உலக முதியோர் தினம் குறித்து கவிஞர் பேரா..

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே. இராஜேந்திரன் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில், “முதியோர்களை மதிப்பதும், அவர்களைக் காப்பதும் அவசியமானது என்பதை உணர்ந்த ஐக்கிய நாட்டு சபை 1990- ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் நாளை உலக முதியோர் நாளாக அறிவித்தது. அதன்படி 1991-ஆம் ஆண்டு முதல் அக்டோபர்-1 உலக முதியோர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   முதியோர்களின் அறிவு, அனுபவம் ஆகியவற்றை உணர்ந்து மதித்தல் இளைய சமுதாயத்தினருக்கு […]

மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு.!

சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு – மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சாலையோர சிறு வியாபாரிகளுக்காக புதியதாக கட்டப்பட்ட கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களுக்கு இன்று மனு வழங்கப்பட்டது. மார்க்கெட் பகுதியில் நீண்ட காலமாக தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்து வரும் ஏழை மக்களுக்கு, நகராட்சி கட்டியுள்ள புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகள் ஒதுக்கப்பட்டால், அவர்கள் […]

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இருக்கைகள் வழங்கிய ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழு.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அமர்வதற்காக ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் சார்பில் இருக்கைகள் வழங்கப்பட்டன. அத்துடன், ஹஜ் பயணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்தும் குழுவினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திக் மகாராஜா, டாக்டர் விஜய், ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

வாகன விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு..

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 22.09.25 அன்று இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி விபத்து ஏற்படுத்தியதில் விபத்தில் காயம் அடைந்த நபர் மரணம் அடைந்தார்.   இது குறித்து தென்காசி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டதில் […]

மேட்டுப்பாளையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் – மரக்கன்றுகள் நடும் விழா

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படியும், உதவி வனப்பாதுகாவலர் அறிவுறுத்தலின் படியும், மேட்டுப்பாளையம் வனச்சரகர் அலுவலர் ஆலோசனையின் படியும், இன்று மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் […]

தென்காசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவருமான […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!