தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள Audiometric Assistant பணியிடத்தில் தற்காலிக பணியாளர் மாவட்ட நலச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். Audiometric Assistant – : One year Audiologist Diplomo Course. மேற்கண்ட பணி இடத்திற்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி […]
Category: உலக செய்திகள்
பொது மக்களை அச்சுறுத்தும் பைக் “வீலிங்” செய்தால் சட்ட நடவடிக்கை..
2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் “வீலிங்” செய்தல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பு: 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை […]
உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் நதிகள் அறக்கட்டளை மற்றும் JETLEE BOOK OF WORLD RECORD இணைந்து மாபெரும் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியில் 40 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை புரிந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில், புளியங்குடி காயிதே மில்லத் துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹரா நேரில் ஆய்வு..
தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்புத் தீவிர திருத்தம்-2026 இன் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025 அன்று […]
டீ கிளாசை திருடி சென்றார்; யூடிபர் மீது டீ கடையின் உரிமையாளர் புகார்..
டீ கிளாசை திருடி அதனை இன்ஸ்டாகிராம் வீடியோவாக பதிவிட்ட பிரபல யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி டீக்கடையில் யூடியூப்பர் ரவுடி பேபி, சூர்யா மற்றும் சோசியல் மீடியா நிறுவனர் சிக்கந்தர் மீது தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நெல்லை கருப்பட்டி டீக்கடை உரிமையாளர் பார்த்திபன் புகார் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த வாரத்தில் […]
மது கஞ்சாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை; மஜக சார்பில் வலியுறுத்தல்..
நெல்லை மாவட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மஜக மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், பாளையங்கோட்டை சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீருடை அணிந்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தக்கூடிய காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது, இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை […]
இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..
இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக் கோரி தென்காசியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ – பைலிங் முறையை நடைமுறை படுத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டமும் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி பார் அசோசியேசன் தலைவர் சிவக்குமார், தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் ஆர்.மாடக்கண் […]
தென்காசியில் ஜாக்டோ ஜியோ போராட்டம்..
தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி மாநில உயர் மட்டக்குழு முடிவின் அடிப் படையில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் உண்ணாவிரத போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. […]
SIR – விரிவான விளக்க கூட்டம்..
இந்திய தேர்தல் ஆணையம், 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 12 வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, அனைத்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் விரிவான விளக்க கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் டிச.12 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி, திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களின் […]
SIR-வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நியமனம்..
முக்கிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக, சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. 1. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை (SROs) நியமித்துள்ளது. 2. சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் (SRO) ஏற்கனவே தங்கள் […]
வாகனங்கள் பொது ஏலம்..
தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025 ஆம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03.00 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு […]
நல்லிணக்க விருதுடன் 1 கோடி பரிசு பெற்ற ஊராட்சிகள்..
தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ. 1 கோடி பரிசு பெற்ற கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சி அலுவலர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடை பிடித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சரால் 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலை தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை மாவட்ட […]
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும்..
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், வட இந்திய பகுதியில் இருந்து வீசும் வறண்ட வாடைக் காற்றானது தமிழகம் வரை ஊடுறுவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் குளிர் அதிகரிக்கும். தமிழகத்தின் வெப்ப நிலையானது இயல்பை விட 5°© வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 15°©- 20°© வரை குறைந்தப்பட்ச வெப்பநிலை […]
திமுக சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் ஆவுடையானூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கலை கதிரவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜே.கே.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் தொகுப்புரை ஆற்றினார். திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். […]
சைபர் கிரைம் ஆன்லைனில் மோசடி குறித்த விழிப்புணர்வு பேரணி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், 09.12.2025 அன்று கடையநல்லூர் பகுதியில் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் சோசியல் […]
டிரஸ்ட் மூதாளர் பேணலகத்தில் இருபெரும்விழா
வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் மற்றும் மூதாளர் இல்லத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் இந்தோ-இத்தாலியன் கௌரவ விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டவர் பங்கேற்று விருதுகள் வழங்கினர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம் பட்டியில் டிரஸ்ட் மூதாளர் பேணலகம் இயங்கி வருகிறது. இங்கு வி.ஜி.பி சார்பில் 190-வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக பணிகளில் உள்ளவர்கள் பலர் கெளரவிக்கப் பட்டனர். டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இருபெரும் விழாவில், சமூகத்தில் […]
உடல் நலம் குன்றி சுற்றித் திரிந்த யானை பத்திரமாக மீட்பு..
தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சுற்றித் திரிந்த 35 வயது உடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடி ஓர் இடத்தில் படுத்துக் கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டது. அத்துடன் யானையின் சாணம் சேகாரம் செய்யப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு […]
தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM)
தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM) வரும் 08.12.2025 அன்று திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகள். பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து […]
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மகளுக்கு அரசு பணி வழங்கிய முதலமைச்சர்..
தென்காசி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மகளுக்கு அரசு பணி வழங்கி உத்தரவு பிறப்பித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் உத்தரவுக்கு இணங்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி மாவட்டம் துரைசாமிபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மல்லிகா உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரும் மகளுமாகிய கீர்த்திகா (பார்வையற்ற மாற்றுத் திறனாளி) என்பவருக்கு புளியங்குடி நகராட்சியில் Data Entry Operator பணிக்கான ஆணையினை 26.11.2025 அன்று புளியங்குடி கற்பக வீதி தெற்கு […]
இலவச மின் இணைப்பிற்கு லஞ்சம்; மின்சார வாரிய JE கைது..
தென்காசி மாவட்டத்தில் விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்துவதற்கு ரூ.7000 பெற்ற மின்சார வாரிய JE தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகா, கீழ வீராணம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த K.செல்வகணேஷ் வயது-30, த/பெ கருப்பசாமி என்பவர், அவரது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு 2020 ஆம் ஆண்டு EB Pole நட ரூ.24,000 பணம் செலுத்தி இலவச விவசாய மின் இணைப்பு வாங்கி இருந்ததார். […]