கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கீழக்கரை ‘சட்ட விழிப்புணர்வு இயக்கம்’ சார்பாக 65 க்கும் மேற்பட்ட சட்டப் போராளிகள் மனு செய்திருந்தனர். அதே போல் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் […]
Category: சந்திப்பு
கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)
கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் பொருள்களுடன், கை தேர்ந்த சமையல் கலைஞர்களின் கண்காணிப்பில், பக்குவமாக தயாரிக்கப்படும் மாசிப் பொரியல், இறால் பொரியல், நெத்திலி பொரியல், சென்னா கூனி பொரியல் உள்ளிட்ட அசத்தும் பொரியல் வகையறாக்களை வாங்கி ருசிக்கும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள், இந்த பொரியல் வகைகள் தங்கள் […]
கேஸ் சிலிண்டர் வினியோக குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.03.2018) எரிவாயு உருளை விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி (D R O) முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், கீழக்கரை சட்ட போராளிகள் தளத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹூசைன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு […]
கீழக்கரை பகுதிகளில் பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தஞ்சை தொல்லியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆனா மூனா சுல்த்தான் அவர்களுடன் இணைந்து பழங்கால கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் உலக வரலாற்று அரங்கில் ஒரு மைல் கல்லாக வரலாற்று ஆசிரியர்களால் இன்றும் பார்க்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் சிறப்புடன் ஆட்சி செய்து வந்துள்ளனர். இதற்கு முத்தாய்ப்பாக இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தமிழக வரலாற்றில் ஒரு மணிமகுடமாக விளங்கும் பகுதியாகும். இப்பகுதியில் வரலாற்றுச்சிறப்புமிக்க […]
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில தலைவருடன் ‘கீழை நியூஸ்’ நிர்வாகிகள் சந்திப்பு
ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் சிறப்புடன் செய்வதற்கு பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் போன்றோரின் அர்ப்பணிப்பு எழுத்துக்களால் சொல்லி விட முடியாது. இந்த பத்திரிகை துறை நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (தமிழ்நாடு பத்திரிகை ஊடகவியலாளர் யூனியன்) என்கிற […]
‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி
கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கீழை நியூஸ் நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது. இந்த தளம் வாயிலாக அரசு சார்ந்த உள்ளூர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆன்லைன் […]
தமுமுக நிர்வாகிகள் – கீழக்கரை புதிய ஆணையர் சந்திப்பு..
கீழக்கரை நகராட்சிக்கு சில வாரங்களுக்கு முன்பு வசந்தி என்பவர் நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய நகராட்சி ஆணையாளர் வசந்தியை பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று கீழக்கரை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆணையரை சந்தித்து அவருடைய பணி சிறக்க வாழ்த்து கூறியதுடன், வாழ்கை நெறியான திருக்குர்ஆனும் பரிசளித்தார்கள். இச்சந்திப்பில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் சிராஜ், நசீர், தாகா, சுல்தான், காசிம் […]
மலேசிய தூதரக அதிகாரிகள் கீழக்கரையை ரசித்து.. ரசித்து .. பார்த்து மகிழ்ந்தனர்…
கீழக்கரையில் கடந்த சில தினங்களாக மலேசிய தூதரக அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இச்சுற்றுப்பயணத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். அவர்களுடைய பயணத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் அபூ சாலிஹ் கூறுகையில், கீழக்கரையில் இரவு நேரங்களில் நடந்தே சென்று கடைகளயும், உண்பண்டங்களையும் மிகவும் ரசித்ததோடு இல்லாமல், மலேசியாவின் சாயல் அதிகமாக இருப்பதாக வியந்தனர். மேலும் கீழக்கரை வரலாற்று அம்சங்கள் அடங்கிய புத்தகத்தை கீழக்கரை ஆர்வலர்களின் மலேசியா அதிகாரிகள் ஆர்வத்துடன் வேண்டுகோள் வைத்தனர். மேலும் மலேசியா […]
கீழக்கரை தாலுகாவிற்கு நேரடி பஸ் வசதி கோரி மனு – எக்ககுடி கிராம மக்கள் சார்பாக முஸ்லீம் ஜமாத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை சந்தித்து கோரிக்கை
கீழக்கரை தாலுகா அலுவலம் வந்து செல்வதற்கு பேருந்து வசதி செய்து தரப்படாததால் எக்கக்குடி பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நேரடி பஸ் வசதி இல்லாததால் பெண்களும், முதியவர்களும் கடுமையான மன உளைச்சலில் இருக்கின்றனர். கீழக்கரைக்கும் எக்ககுடி கிராமத்திற்கும் இடையே நேரடி பேருந்து வசதியினை உடனடியாக ஏற்படுத்த கோரி எக்ககுடி கிராம பொதுக்கள் சார்பாக எக்ககுடி ஜமாஅத் நிர்வாகிகள் முஹம்மது சிராஜுதீன், அஸ்கர் அலி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். […]
இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு
பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தாய்-சபை யினர் கீழக்கரை நகருக்கு வருகை தந்து அதன் தொன்மையை பற்றி ஆய்வு செய்தனர். மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா அமைப்புகளின் தாய் சபையான பெர்மிம் பேரவை, மலேசிய […]
கீழக்கரையில் மதுக் கடைகளை அகற்றக் கோரி SDPI மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அகற்றக் கோரி, இன்று 20.03.17 SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும், பேருந்து நிலையம் செல்லும் பொதுமக்களுக்கும், கோயிலுக்கும், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் மக்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை […]
தங்கச்சிமடம் வந்தார் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் – மீனவர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் 6-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தினந்தோறும் பல்வேறு கட்சியின் தலைவர்கள், அமைப்பினர் தங்கச்சிமடத்துக்கு வந்து செல்கின்றனர். நேற்று நேற்று முன் தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமை […]
தங்கச்சிமடம் மீனவ மக்களின் நீதிக்கான போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு ஆதரவு
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த 22 வயது இளைஞர் பிரிட்சோ இலங்கை கடற் படையினரால் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தும், அந்த இளைஞரின் படுகொலைக்கு நியாயம் கேட்டும் தங்கச்சி மடத்தில் இன்று 11.03.17 ஐந்தாவது நாளாக தொடரும் மீனவ மக்களின் நீதிக்கான போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். முன்னதாக நேற்று முன் தினம் இலங்கை கடல்படையினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு […]
திருமாவளவனுடன் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
இன்று 09.03.17 இராமநாதபுரம் வந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். அவருடன் மாநில துணை செயலாளர் கனியமுதன் உடனிருந்தார் இந்த சந்திப்பில் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் இராமநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் செய்யது யாசீன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் நகர் செயலாளர் ஹமீது யூசுப், கட்சியின் நிர்வாகிகள் நெய்னா அசாருதீன், ஜெய்னுலாப்தீன், […]
திருமாவளவன் தலைமையில் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தை கட்சியினர் மீனவர் படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன் தினம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற் படையினரால் சுட்டு கொல்லப்பட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது இளைஞரின் படுகொலைக்கு நியாயம் கேட்டு தங்கச்சி மடத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இராமநாதபுரம் வந்துள்ளார். அவரை கீழக்கரை நிர்வாகிகள் சந்தித்தனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தங்கச்சி மடம் சென்ற கட்சியின் […]
கீழக்கரை DSP அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்க கோரி ‘கீழக்கரை நகர் நல இயக்கம்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை DSP அலுவலகம் அருகே இருக்கும் நான்கு வழி சாலை சந்திப்பில் நிரந்தர வேகத் தடை ஏதும் அமைப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலையில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது கூறுகையில் ”இந்த சாலை போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையாக இருக்கிறது. 3000 க்கும் […]
கீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து
கீழக்கரை தாலுகாவிற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக B உமா ராணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறுப்பேற்றிருக்கும் இவரை இன்று 08.03.17 கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் சார்பாக நேரடியாக சந்தித்து வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. கீழை நியூஸ் வலை தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ”கீழக்கரை நகருக்கு சிறந்த முறையில் பணியாற்ற காத்திருக்கிறேன். ரேஷன் […]
தேர்தலில் வென்ற கீழக்கரை துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருடன் மரியாதை நிமித்த சந்திப்பு
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. அத்தேர்தலில் கீழக்கரை வழங்கல் வட்ட அலுவலர், துணை வட்டாட்சியர் தமீம் ராசா இரண்டாவது முறையாக மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் மாவட்ட வருவாய் துறை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக மரியாதை நிமித்தமாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரை தமீம் ராசா சந்தித்தார். கீழை நியூஸ் நிர்வாகக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஜல்லிகட்டுக்கு தடை.. மல்லுக்கட்டும் இளைஞர் சமுதாயம்.. வெல்லும் இந்த இளைய சமுதாயம்.. சக்தியை காட்டும் கீழக்கரை கல்லூரி மாணவர்கள்..
கடந்த இருவாரங்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு கரகோஷங்களும் அறவழிப்போராட்டங்களும் வலுத்து வருகின்றது. நேற்று முதல் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தால் வாக்கு வங்கி அரசியல்வாதிகளும், அரசாங்கமும் திகைத்துப் போய் நிற்கின்றனர். இன்று காலையில் கீழக்கரையில் உள்ள கல்லூரி மாணவர்களும் காலை முதலே வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராடும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்திலட் PETA வெளியே போ, தடை செய் என்ற கோஷமே ஓங்கி ஒலித்த வண்ணம் […]
You must be logged in to post a comment.