பாதுகாப்பு கருதி சாலை விதி முறைகளில் அதிரடி மாற்றம் – அமீரக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

அமீரக தேசிய போக்குவரத்து அமைச்சகம் தற்போதுள்ள சாலை விதிகளின் சிலவற்றில் முக்கிய மாறுதல்களை செய்துள்ளது. அதன்படி, கீழ் வரும் நான்கு அம்ச சட்ட விதிமுறைகள் உடனடியாக அமீரகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. 1. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனங்களில் அவர்களுக்குரிய பிரத்தியேக இருக்கைகளிலேயே அமர வைக்க வேண்டும். 2. 145 செ.மீ உயரமுள்ள குறைந்தபட்சம் 10 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே காரின் முன்னிருக்கையில் அனுமதிக்கப்படுவர். (முன்பு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்னிருக்கையில் அமர வைத்தால் […]

ஜாமீன் வழங்கும் போது நூதன நிபந்தனைகள் கூடாது – கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

கடந்த வாரம் அரியலூர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான் ஒரு நூதன உத்தரவினை பிறப்பித்தார். ஜாமீன் வேண்டுமா..? 100 கருவேல மரங்களை வேரோடு வெட்ட வேண்டும் என்றும், ஜாமீனில் வெளியே வருபவர்கள் வெளிவரும் நாளில் இருந்து 20 நாள்களுக்குள் கருவேல மரங்களை வெட்டிய பிறகு அதற்கான சான்றிதழை விஏஓவிடம் சமர்பித்து ஓப்புதல் வாங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நூதன உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்நிலையில் ஜாமீன் வழங்கும்போது சீமைக் கருவேல மரங்களை வெட்ட வேண்டும், வனவிலங்குகளுக்காக […]

ஜாமீன் வேண்டுமா..? 100 கருவேல மரங்களை வேரோடு வெட்ட வேண்டும் – அரியலூர் நீதிமன்றம் அதிரடி

நம் மண்ணின் வளத்தை நாசமாக்கி உபயோகமற்றதாக மாற்றும் இந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் பல தன்னார்வ நிறுவனங்கள் பெரும் முயற்சியை எடுத்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், ஆசிரிய பெருமக்களும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நீதிமன்றம் இன்று இது தொடர்பாக ஜாமீனில் வெளியே வருபவர்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை அறிவித்துள்ளது. இனி ஜாமீனில் வெளியே வருபவர்கள் அவர்கள் வெளிவரும் நாளில் இருந்து 20 […]

துபாயில் அழகாக இருந்தால் அதிக சம்பளம் – பணியாளர்கள் இடையே பாரபட்சம் காட்டும் நிறுவனங்களுக்கு 2 மில்லியன் அபராதம் – 10 ஆண்டுகள் சிறை

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணி அமர்த்தும் முறையில் பாகுபாடு காட்டுவதாக முதலாளி மீது குற்றம் சுமத்தப்பட்டால், சட்ட விதி 13 படி குற்றம் சாட்டப்பட்டருக்கு 6 மாதம் முதல் 10 வருடம் வரை சிறை தண்டனையும், 50,000 திர்ஹம் முதல் 2 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படுவதாக துபாயை சார்ந்த சட்ட நிபுணர் எச்சரித்துள்ளார். தற்காலிக வெளி விளம்பர (Out door Marketing) வேலைக்கு சட்டபூர்வமாக சேர முடியும் என்பதால், பல்வேறு நட்டை சேர்ந்த படிக்கும் மாணவர்கள் […]

இனி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஓ.பி அடிக்க முடியாது – ஏப்ரல் 1 முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவை கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மருத்துவமனைக்கு டாக்டர்களின் தாமத வருகை, வருகைப் பதிவேட்டில் போலி கையெழுத்திடுதல், வேலை நேரத்தில் ஓ.பி அடித்தல் உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தனர். அதனை அடிப்படையாக கொண்டு சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்ற […]

கட்டப் பஞ்சாயத்து செய்து மனித உரிமை மீறும் தனியார் தொலை காட்சி நடிகைகள் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் வழக்கறிஞர் பாலாஜி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நிஜங்கள் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளில் மனித உரிமை மீறுதலும் மற்றும் நீதிமன்றங்களை அவமதிக்கும் விதமாக கட்ட பஞ்சாயத்தும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படங்களை […]

மகளிர் தினமான இன்று கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம்

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் காணொளி திரை காட்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று 08.03.17 மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள ஏர்வாடி காவல் நிலையம், கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பல்லாண்டு காலமாக, தனியார் இடங்களில் உள்ள வாடகை கட்டிடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டதால் காவலர்களும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் மகளிர் […]

கீழக்கரையில் இன்று புதிய DSP அலுவலகம் திறப்பு – தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

கீழக்கரை நகர் வடக்கு தெரு பகுதியில் BSNL அலுவலகம் அருகாமையில் புதிதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த வருடம் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இன்று 08.03.17 இந்த காவல் துறை அலுவலகத்தை முறைப்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி திரை காட்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் பிரிவு DSP மல்லிகா மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் தலைமையேற்று விழாவினை சிறப்பித்தனர். கீழக்கரையில் காவல் துறை […]

வங்கிகளில் இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து முறையான பதில் அளிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை உறுதி – வருமான வரித்துறை அறிவிப்பு

இந்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பிற்கு பின்னர் வங்கிகளில் ஏகத்துக்கு இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தவறும் போது அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக வருமான வரித்துறை அலுவலகம் நேற்று 07.03.17 செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் தங்கள் கணக்கில், பெருந்தொகையை செலுத்தியவர்கள் அது குறித்து வருமான வரித் துறைக்கு http://incometaxindiaefiling.gov.in என்ற […]

தமிழகத்தில் 325 மதுக்கடைகளை மூடி விட்டதாக டாஸ்மாக் நிறுவனம் உயர் நீதி மன்றத்தில் பதில் மனுதாக்கல்

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ‘மாற்றம் இந்தியா’ அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மனு நேற்று 03.03,17 சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகாமையில் செயல்பட்டு வந்த 325 மதுக்கடைகள் மூடிப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் டாஸ்மாக் மதுபான நிறுவனம் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த […]

சீமைக் கருவேல மரங்களை அகற்ற 2 மாதத்திற்குள் சிறப்புச் சட்டம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற இரண்டு மாதத்திற்குள் தமிழக அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதிமுக தலைவர் வைகோ விளைநிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதே போல் பல்வேறு சமூக ஆர்வலர்களும் பொது நல வழக்குகளை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்தனர்.  இந்த வழக்குகள் பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு கடந்த […]

பத்திர பதிவுக்கு தடை நீடிப்பு – பொதுமக்கள் அவதி

விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதனால் பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். விளை நிலங்கள், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரப் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு, அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளையும், விளை நிலங்களையும் வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப் பதிவு செய்ய தடை […]

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்..

இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக அமைப்பினர் ஒரு படி மேல் சென்று தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இந்திய ஜனாதிபதிக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.  அந்த வகையில் கீழக்கரையில் மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் மூலம் கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப் போராளிகள் குழுமம் தங்களுடைய கோரிக்கையை […]

காப்போம் கீழக்கரையை..

கீழக்கரை நகர் இராமநாதபுர மாவட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த நகராக கருதப்படுகிறது. கீழக்கரை காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் மாயாகுளம், காஞ்சிரங்குடி உட்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகள் வருகிறது. ஆனால் இங்கு உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 20க்கும் குறைவான காவலர்களே உள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு பல சமுக அமைப்புகளின் முயற்சிக்கு பின்னர் ஒரு சில காவலர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை வேறு எந்த பணியிடங்களும் நிரப்பபடாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய […]

காப்போம் கீழக்கரையை.. உயர்த்துவோம் காவலர்களை…

கீழக்கரை நகர் இராமநாதபுர மாவட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த நகராக கருதப்படுகிறது. கீழக்கரை காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் மாயாகுளம், காஞ்சிரங்குடி உட்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகள் வருகிறது. ஆனால் இங்கு உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 20க்கும் குறைவான காவலர்களே உள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு பல சமுக அமைப்புகளின் முயற்சிக்கு பின்னர் ஒரு சில காவலர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை வேறு எந்த பணியிடங்களும் நிரப்பபடாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!