இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட […]
Category: சட்டம்
அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் 50 ஆயிரம் குழந்தைகளின் கல்விக் கனவு பறிப்பு
RTE இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். RTE சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த வேண்டாம்.நடப்பாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் தொடங்கி மே 18 – ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை தமிழக […]
அறிவோம் – பட்டா வகைகள்…
*பட்டா* ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். *சிட்டா* குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். *அடங்கல்* நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். *கிராம நத்தம்* ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம். *கிராம தானம்* கிராமத்தின் பொது […]
அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!..
அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!.. 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, […]
துணை நிலை ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இணைப்புடன்…
டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் என்ன என்ன என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் முடிவுகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் உள்ளதா என்பதை விளக்க கோரி டெல்லி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக டெல்லி நிர்வாகத்தில் […]
அறிந்து கொள்வோம் சட்டம் – மன அழுத்தத்தை காரணம் காட்டி ராஜினாமா கடிதம் திரும்ப பெற முடியுமா?…
ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதத்தை பின்னர், அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெற முடியுமா??, ஒரு வழக்கு விபரம் கீழே.. பரமேஸ்வரி என்பவர் நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக 18.6.2008 ஆம் தேதி பணியில் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு பல இடங்களுக்கு பணிமாறுதல் 5.8.2013 ஆம் தேதி ஒரு பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதியிடம் கொடுத்தார். […]
சட்டம் படிக்க ஆசையா ..? சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 10 […]
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரகாரம் தனியார் பள்ளிகளில் சேர்க்க மே, 18க்குள் விண்ணப்பங்களை […]
‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..? ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் […]
‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி
கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கீழை நியூஸ் நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது. இந்த தளம் வாயிலாக அரசு சார்ந்த உள்ளூர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆன்லைன் […]
கீழக்கரை பொதுமக்கள் சார்பாக மதுரை சென்று மறுவரையறை ஆணையரிடம் முறையிட்ட மனுதாரர்கள் – மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடிகள், கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையில் குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான கீழக்கரை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள், அரசியல் கட்சி அமைப்பினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், கீழக்கரை நகராட்சி ஆணையருக்கும் ஆட்சேபனை மனுக்களை மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும், பதிவுத் தபால் மூலமும் அளித்து இருந்தனர். இந்நிலையில் மனுக்களை அளித்திருந்த அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு […]
கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு
கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் […]
தமிழகத்தில் ‘மக்கள் நீதி மன்றம்’ மூலம் ஒரே நாளில் 83000 வழக்குகள் விசாரணை – 52000 வழக்குகளுக்கு தீர்வு
இந்தியா முழுமையும் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது சனிக்கிழமை ‘லோக் அதாலத்’ என்கிற பெயரில் ‘மக்கள் நீதிமன்றம்’ நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத்தில் இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதால், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதே நேரம், வழக்குகளும் நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படாமல், விரைவாக முடிவுக்கு வரும். […]
இனி கைதானால் ரத்த சொந்தங்களின் மொபைலுக்கு SMS வரும் – சைபர் நெட்வொர்க்கில் வெற்றி கண்டு வரும் தமிழக காவல் துறை
நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தடயஅறிவியல் ஆகிய துறைகளை சைபர் நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்கும் புதுவித முயற்சியில் தமிழக காவல் துறை தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது. நாடு முழுவதும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘CCTNS’ எனப்படும் கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட் வொர்க் சிஸ்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் […]
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் மூடல் – ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – மக்கள் நல பாதுகாப்பு கழகம் கருத்து
தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நெடுஞ்சாலையில் உள்ள 3400 டாஸ்மாக் கடைகளை நடவடிக்கையில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 124 மதுக்கடைகள், நெல்லை மாவட்டத்தில் 166 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 கடைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடியில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 84 மதுக்கடைகள் மூடப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே […]
தகுதியான ஒப்பந்ததாரர்கள் பாதிக்கும் வகையில் தெரு விளக்குகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்புக்கு ஐகோர்ட்டு தடை உததரவு
சென்னை ஐகோர்ட்டில், தியாகராய நகரை சேர்ந்த சி.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்க மத்திய அரசு ரூ.329 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு, தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட ஆட்சியர்களும், 9 லட்சத்து 6 ஆயிரத்து 310 எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்கு ‘செட்டுகளை’ கொள்முதல் செய்ய ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதில் தேவையில்லாத ஒரு நிபந்தனையை விதித்துள்ளனர். இந்த எல்.இ.டி.பல்புடன் […]
கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு – மீறுவோர் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை
கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர் வீடுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மேம்படுத்தி கீழக்கரை நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் கெற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படியும், தமிழ் நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 சட்டப் பிரிவுகள் 153, 156, 157, 160 மற்றும் 161 ன் […]
நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை – கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் இழுத்து மூட உத்தரவு வருமா..?
கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையால் (கடை எண் : 6983), இந்தப் பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 16.12.2016 அன்று உச்ச நீதிமன்றமும் மார்ச் 31 க்குள் மாநில நெடுசாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது. அதே போல் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனுக்களை சமூக ஆர்வலர்கள் பலரும் செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை […]
‘அக்டோபர் 23’-ம் தேதிக்கு முன்பு வாங்கிய வீட்டு மனை நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கான பத்திரப்பதிவுக்கு தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு லைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாதி ஜி.ரமேஷ் மற்றும் டீக்கா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று 28.03.17 விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் […]
‘சீமைக் கருவேல மரம் நிதி’ என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு துவக்கம் – முதல் ஆளாக உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.10 ஆயிரம் டெபாசிட்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான அமர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்ததோடு நின்றுவிடாமல், கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாவட்டம் தோறும் நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, பெரும்பாலான மாவட்டங்களில் கருவேல மரங்களை அகற்றுவதற்கு போதிய நிதி வசதியில்லை என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் […]
You must be logged in to post a comment.