கீழக்கரை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் – நகராட்சி ஆணையாளருக்கு ‘மக்கள் நல பாதுகாப்பு கழகம்’ பாராட்டு

கீழக்கரை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 2016 – 2017 ஆம் ஆண்டிற்குரிய பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் வழங்கினார். நகராட்சியில் முன் எப்போதும் இல்லாத வகையில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பாக வேலை செய்ய கையுறை, மாஸ்க், காலணி, தலைப்பாகை, ஒளிரும் சட்டை போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி நன்றி கூறினார். துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஹாஜா, சக்தி, மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த காலங்களில் துப்புரவு […]

தரமில்லாமல் கட்டப்பட்டு தேய்ந்து போன ஜெட்டி பாலம் – தெளிவாக தெரியும் ஊழல் பெருச்சாளிகளின் கால் தடம்

கீழக்கரையில் மீன் வள துறையின் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ஜெட்டி பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த புதிய பாலத்தின் கட்டுமானப் பணி 2011 ஆம் ஆண்டு துவக்கத்தில் முழுமையாக நிறைவடைந்து. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, சமூக ஆர்வலர்கள் பலரும், பாலத்தின் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டினார். ஆனால் அப்போதைக்கு […]

15000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நகராட்சி சார்பாக கொசு மருந்து புகை அடிக்கும் ‘தனி ஒருவன்’ – திருந்துமா நகராட்சி..? மாறுமா மக்களின் துயர காட்சி..??

கீழக்கரை நகரில் இருக்கும் மொத்தம் 21 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 35 க்கும் மேற்பட்ட தெருக்களை கொண்ட நான்கு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள கீழக்கரை நகர் முழுமைக்கும் கீழக்கரை நகராட்சி சார்பாக கணேசன் என்கிற ஒரே ஒரு ஒப்பந்த பணியாளர் மட்டும் தனி ஒருவனாக கொசு மருந்து புகை அடித்து சாதனை புரிந்து வருகிறார். இதனால் டெங்கு மற்றும் மலேரியா கொசுக்களின் அதிரடி அட்டகாசம் நகர் […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் சர்வதேச நுகர்வோர் தினம்..

இன்று (15-03-2017) உலகம் முழுவதும் சர்வதேச நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இது தொடர்மாக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் நுகர்வோரின் உரிமை மற்றும் அதன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். அதன் தொடர்பாக இன்று கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி சார்பில் சர்வதே நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்ந கருத்தரங்கு வணிகவியல் துறை ( Department of Business Administration) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் […]

கீழக்கரை நகரின் மத்திய பகுதியில் மிக விரைவில் கிளை நூலகம் – சட்டப் போராளிகள் தொடர் முயற்சி

கீழக்கரை நகரில் கடந்த 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கீழக்கரை கிளை நூலகம் முதலில் கிழக்குத் தெரு பகுதியில் அமைந்திருந்தது. பின்னர் முஸ்லீம் பஜாரில், கடந்த 2010 ஆம் ஆண்டு வரை அரசு பொது நூலகம் இயங்கி வந்தது. இது அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், ஊரின் மத்தியில் பிரதானமான இடத்தில் இருந்தது. பழைய படம் – அன்பு நகரில் செயல்பட்ட போது கிளை நூலகத்தின் அவல நிலை அதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு […]

ராமநாதபுரத்தில் வட்டியில்லா வங்கி – ‘ஜன் சேவா’ கூட்டுறவு சங்கம் துவக்க விழா நிகழ்ச்சி – சமுதாய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

வட்டியில்லாத வங்கி நடைமுறைகளை விரும்ப கூடியவர்களுக்கான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பாக ஜன் சேவா கூட்டுறவு சங்கம் இருக்கிறது. முற்றிலும் வட்டி இல்லாத நிலை, லாபத்தில் பங்கீடு மற்றும் சாமானிய மக்களின் பொருளாதார தேவைகளை சரி செய்து முன்னேற்றம் அடைய வழிவகைகளை செய்வது இந்த சங்கத்தின் முதன்மை நோக்கமாக கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 7 மாநிலங்களில் 31 கிளைகள் செயல்படுகிறது. 21000 வாடிக்கையாளர்களை கொண்டு சுமார் 450 கோடி […]

கீழக்கரை மேலத் தெருவில் மீண்டும் சுடர் விடும் ஹைமாஸ் விளக்குகள் – நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கு நன்றி

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினரால் ஏர்வாடி விலக்கு, VAO ஆபீஸ் அருகாமை, தட்டாந்தோப்பு, புதிய பேருந்து நிலையம், பழைய மீன் மார்க்கெட், கட்டாலிம்சா பங்களா, மேலத் தெரு பள்ளிவாசல், கிழக்குத் தெரு ஆட்டோ ஸ்டான்ட், கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட மொத்தம் 9 இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை சரியாக பல இடங்களில் எரியாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்டப் போராளிகள் தளம் […]

கீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து

கீழக்கரை தாலுகாவிற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக B உமா ராணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறுப்பேற்றிருக்கும் இவரை இன்று 08.03.17 கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் சார்பாக நேரடியாக சந்தித்து வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. கீழை நியூஸ் வலை தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ”கீழக்கரை நகருக்கு சிறந்த முறையில் பணியாற்ற காத்திருக்கிறேன். ரேஷன் […]

வள்ளல் சீதக்காதி சாலையில் வேகத் தடை அமைத்திடுக – இஸ்லாமிய கல்வி சங்கம் ‘கையெழுத்து இயக்கம்’ துவங்கியது.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை நெய்னா மாட்டு இறைச்சிக்கடை அருகே நான்கு வழி சாலையில் ஏற்கனவே வேகத் தடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நெடுஞ்சாலை துறையினரால் புதிய சாலை அமைக்கப்பட்ட போது, இந்த இடத்தில வேகத் தடை அமைக்காமல் விடுபட்டுள்ளது. இது சம்பந்தமாக இஸ்லாமிய கல்வி சங்கம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் பல்வேறு மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் கடந்த மாதம் அனுப்பியுள்ளனர். ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் […]

கீழக்கரை நடுத் தெருவில் வழிந்தோடும் சாக்கடை நதி – பொதுமக்கள் நிலை தடுமாறி நீந்தி செல்லும் அவலம்

கீழக்கரை 18 வது வார்டு நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் பின் புற பகுதியில் இன்று 05.03.17 அதிகாலை முதல் சாக்கடை நதி பெருக்கெடுக்க துவங்கியுள்ளது. கமகமக்கும் வாசனையோடு வழிந்தோடும் இந்த சாக்கடை நதியினை கடந்து செல்லும் முதியவர்களும், பள்ளிக் குழந்தைகளும், பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி இது போன்று தொடரும் சாக்கடை நீரோட்டத்தால் பகுதி மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே மலேரியா, […]

கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை… ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]

கீழக்கரை சாலைகளில் ‘ஹாயாக’ உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, செக்கடி மார்க்கெட் பகுதி, முஸ்லீம் பஜார் லெப்பை ஹோட்டல் பகுதி, புதிய பேருந்து நிலையம், சேரான் தெரு, நடுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சுதந்திரமாக மாடுகள் ‘ஹாயாக’ சுற்றித் திரிகின்றன. கீழக்கரை சாலைகளில் மக்களோடு மக்களாக மாடுகளும் வலம் வருகிறது. இவைகள் கீழக்கரை குப்பை மேடுகளில் கிடைக்கும் கழிவு பொருள்களையும், பிளாஸ்டிக் பைகளையும், சாலைகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் முன் போடும் இலைகளையும், தின்றுவிட்டு சாலைகளில் படுத்து கிடக்கின்றன. […]

நீச்சல் குளத்தை துரித நடவடிக்கை எடுத்து துப்புரவு செய்த நகராட்சி நண்பர்களுக்கு நன்றி – நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகோள்

சின்னக்கடை தெருவில் கீழக்கரை நகராட்சி சார்பாக நீச்சல் குளம் என்கிற தலைப்பில் சற்று முன் நம் கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், சமூக ஆர்வலர்கள் பலர், இது சம்பந்தமான புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். உடனடியாக கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் துரித முயற்சி எடுத்த சுகாதார மேற்பார்வையாளர் ஹாஜா உள்ளிட்ட நண்பர்களுக்கு கீழை நியூஸ் வலை தளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அதே […]

சின்னக்கடை தெருவில் அபாய மின் கம்பம் அகற்றப்பட்டது – தொடர் முயற்சி எடுத்த கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு பகுதி மக்கள் பாராட்டு

கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு முறித்து விழும் நிலையில் அபாய மின் கம்பம் ஒன்று ஓராண்டு காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அதே போல நகரின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற அபாய கம்பங்கள் காணப்படுகிறது. இது குறித்து மக்கள் களத்தின் அங்கமான சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும், மக்கள் நல பாதுகாப்பு கழகம் மூலமாகவும் 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும், மின்சார வாரியத்தினருக்கும் தொடர்ச்சியாக […]

சின்னக்கடை தெருவில் நகராட்சி சார்பாக ‘நீச்சல் குளம்’ – சாலை அமைக்காததால் சிறு மழைக்கே பொதுமக்கள் சிரமம்

கீழக்கரை 12 வது வார்டு சின்னக்கடை தெரு நெய்னா முஹம்மது தண்டையல் தெருவிலிருந்து நடுத் தெரு செல்லும் சாலை போடும் பணிக்காக கடந்த நகர் மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் ஏதும் இன்று வரை நடைபெறாமல் நிலுவையில் உள்ளது. இதனால் சிறு சாரல் மழை பெய்தாலும் கூட தண்ணீர் நிரம்பி நீச்சல் குளமாய் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் முதியவர்களும், பள்ளி சிறுவர்களும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் […]

இராமநாதபுரத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளை மற்றும் ‘மாற்றம் முன்னேற்றம்’ இளைஞர் பொது நல சங்கம் சமூக சேவை..

இன்று 26.02.2017 இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த பகுதியினை செய்யது அம்மாள் அறக்கட்டளை மற்றும் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொதுநலச்சங்கத்தினர் சுத்தம் செய்தனர். பின்னர் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொது நலச்சங்கத்தின் தலைவர் பிரபு தலைமையில் வண்டிக்காரத்தெரு மற்றும் வண்டிக்காரப்பிள்ளையார் கோவில் தெரு சார்பில் மரங்கள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகபாஸ்கர், பாலா, கார்த்திக்,  சுரேஷ்மேத்தா, ராஜசேகரன், ஜெய்பாரத், சகுபர்சாதிக் ராஜேந்திரன், மாணிக்கம், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்களே […]

விடிவு காலம் பிறக்குமா..? வருடம் முழுதும் வற்றாத ஜீவ நதியாய் சாக்கடை ஓடும் வடக்கு தெரு பகுதிக்கு…

செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட விளங்கி விடும். ஆனால் கீழக்கரை நகராட்சிக்கு மட்டும் செவியிருந்தும் விளங்காத நிலைதான். வடக்குத் தெரு CSI பள்ளி அருகாமையில் வசிக்கும் பொது மக்கள் உண்மையிலேயே பாவம் செய்தவர்கள் தான் போலும். வடக்குத் நெரு நபர் சேர்மனாக இருந்த காலத்திலும் சரி, இன்று சொந்த செலவில் தெருவை சுத்தம் செய்யும் அரசியல்வாதிகள் இருந்தும் இந்த தெருவின் அவல நிலை மட்டும் யாருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. இது சம்பந்தமாக நம்முடைய இணையதளத்தில் செய்தியும் […]

சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுவதை உறுதி செய்ய ‘நீதிபதிகள் குழு’ கீழக்கரையில் ஆய்வு செய்ய வேண்டும் – சட்டப் போராளிகள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட உயர் நீதி மன்ற நீதிபதிகள், தங்களின் உத்தரவுப்படி கருவேல மரங்கள் முறையாக அகற்றப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள தற்போது கள ஆய்விலும் இறங்கியுள்ளனர். நச்சு தாவரமான சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதில் உயர் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. இதனால் உத்தரவிட்டதுடன் இருந்துவிடாமல் கள ஆய்விலும் இறங்கியுள்ளனர். விவசாயத்துக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும், கால்நடைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும் என […]

கீழக்கரை நகரில் எலும்புக் கூடாய் காட்சியளிக்கும் அபாய மின் கம்பங்கள் – உடனடி நடவடிக்கை கோரி ‘சட்டப் போராளிகள்’ மனு

கீழக்கரை நகரில் மக்கள் நெருக்கமாக வாழும் பல்வேறு தெருக்களில் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களால் உயிர் பலி ஏற்படும் அபாய சூழல் நிலவுகிறது. 35 ஆண்டுகள் பழமையான பல மின் கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சின்னக்கடை தெருவில் இருந்து கோக்கா அஹமது தெரு செல்லும் சாலையில், வீட்டின் முன்னதாக முறிந்து விழும் நிலையில் நிற்கும் ஆபத்தான மின்கம்பம், லெப்பை தெரு பெண்கள் மதரஸா செல்லும் சாலையில் இருக்கும் அபாய […]

கீழக்கரையில் மூன்று சிறந்த பெண்மணிகளுக்கு சாதனையாளர் விருது

கீழக்கரையில் நேற்று 17.02.2017 அன்று நடைபெற்ற மாற்றுத் திறனானிகளுக்கான விழிப்புணர்வு விழாவில் மூன்று பெண்மணிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து வழங்கியது. இந்த விருதுகளை இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரி தங்கவேலு வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற சாதனையாளர்களின் விபரம் : சாதனை பெண்மணி : 1 கீழக்கரை காவல் நிலையத்தில் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கும் கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு 68 வது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!