கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 29ம் ஆண்டு விழா…

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 25ம் ஆண்டு விழா 06-04-2017 அன்று சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு மாணவி ரஷீதத் நலீஃபா கிராத்துடன் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர்.சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர்.நாதிரா பானு கமால் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மலேசிய அரசின் தென்னிந்திய தூதரக அதிகாரி அஹ்மத் பஸாரஜாம் பின் அப்துல் ஜலீல் மற்றும் அவரது துணைவியார் சித்தி நூர் மவர் பின்டி […]

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று (05-04-2017) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர்.சுமையா வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதல் நிர்வாகிகள் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா உறுதி மொழியுடன் பட்டமளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். கிருஷ்ண பாஸ்கர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்களை […]

கீழக்கரையில் ‘ஈ’ ஆடும் இ-சேவை மையம் – தொடர் சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி

கீழக்கரை நகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்திற்கு கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வருகின்றார்கள். அவர்களுள் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் பெறுவதற்காகவும் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் வாங்குவதற்காகவுமே பெரும்பாலான பொதுமக்கள் இங்கு வருகின்றனர். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். இது […]

கீழக்கரை நகருக்குள் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க வாடகைக்கு இடம் கொடுக்க கூடாது – கீழக்கரை மக்கள் களம் வேண்டுகோள்

உச்ச நீதிமன்றத்தின் மகத்தான உத்தரவை அடுத்து கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுமானக் கடை இழுத்து மூடப்பட்டது. அதே போல் தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே 500 மீட்டருக்குள் திறக்கப்பட்டிருந்த 3400 மதுக்கடைகளுக்கும் மூடுவிழா நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 90000 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. இந்த செய்திகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால், இந்த […]

கீழக்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் முறைகேடு – பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்

கீழக்கரையில் தனியார் கேஸ் ஏஜென்சி மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தரம் மற்றும் எடையில் குறைபாடு உடையதாக இருக்கிறது என்கிற பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து சமூக ஆர்வலர்களால் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து முத்துமாரி பிரின்டர்ஸ் நிறுவனர் சமூக ஆர்வலர் மலை ராஜா நம்மிடையே பேசுகையில் ”கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இது […]

கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – இஸ்லாமியா பள்ளியில் நகராட்சி ஆணையர் துவங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று 02.04.17 முதல் தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் பல்வேறு பள்ளிகளிலும், சமூக கூடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையேற்று போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா அரபி மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் […]

கீழக்கரையில் DSP மகேஸ்வரிக்கு பிரிவுபசார விழா – கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர்’ விருது வழங்கி கவுரவிப்பு

கீழக்கரை நகரில் சிறப்பாக பணியாற்றி தற்போது விருதுநகருக்கு பணியிட மாறுதலில் செல்லும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரிக்கு இன்று மாலை 5 மணியளவில் ஹுசைனியா மஹாலில் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது நேர்மையோடும், கொள்கை பிடிப்போடும் கீழக்கரை நகரில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதினை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஸ்டேஷன் மாஸ்டர் M.M.S.செய்யது இபுறாகீம் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் […]

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் மூடல் – ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – மக்கள் நல பாதுகாப்பு கழகம் கருத்து

தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நெடுஞ்சாலையில் உள்ள 3400 டாஸ்மாக் கடைகளை நடவடிக்கையில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 124 மதுக்கடைகள், நெல்லை மாவட்டத்தில் 166 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 கடைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடியில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 84 மதுக்கடைகள் மூடப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே […]

கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று 31.03.17 நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர் தலைமை […]

கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகே குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது

கீழக்கரை தாலுகா அலுவலகம், மலேரியா கிளினிக் அருகாமையில் அமைந்திருக்கும் குழந்தைகள் நல மையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி இன்று 30.03.17 காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெற்றோரோக்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்து வருகின்றனர். அதே போல் நாளைய தினமும் 31.03.17 காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இங்கு குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணி நடைபெறுவதாக […]

சேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா?? – ஆணையர் வேண்டுகோள்…

கீழக்கரை நகராட்சி கடந்த 6 மாத காலமாக அரசியல் வாதிகளின் கைகளில் பொறுப்புகள் இருந்த காலத்தை விட தற்போது துரிதமாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் நிச்சயமாக மிகையாகாது. ஆனால் பொது மக்களின் பார்வையில் பார்க்கும் பொழுது நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கையாள்கிறதோ என்ற எண்ணம் எழக்கூடும், ஆனால் பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்ந்து பார்க்கும பொழுது பிரச்சினையின் கோணமே வேறு விதமாக இருக்கிறது. இரு கைகள் சேர்ந்தால்தான் ஓசை எழுப்ப முடியும், அது போல் நகராட்சி […]

கீழக்கரையில் 100 ஆண்டுகள் பழமையான வணிக கட்டிடம் இடிப்பு – பேராபத்து ஏற்படும் முன் இடிக்கப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி

கீழக்கரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பழைய கட்டிடங்கள் பல இடங்களில் காணப்படுகிறது. பெரிய அளவில் வெடிப்புகளுடன் அதன் மதில் சுவர்களும், சாரமும் சிதலமடைந்து காணப்படுவதால் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக அரசு துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி வருகின்றனர் . இந்நிலையில் கீழக்கரை செக்கடி பகுதியில் வடக்கு தெருவை […]

சாதாரணமாக ‘சிட்டிசன்கள்’ செய்ய முடியாத வேலைகளை பல நேரம் ‘பெட்டிஷன்கள்’ தான் செய்து முடிக்கிறது – கீழக்கரை சட்டப் போராளிகள் கருத்து

கீழக்கரை நகராட்சியில் டெங்கு, மர்ம காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் தீவிரம் அடைந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சகம், நகராட்சிகள் இயக்குனரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும் ஏராளமான மனுக்களை முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் […]

கஸ்டம்ஸ் ரோடு பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கிய நகராட்சிக்கு நன்றி

கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் சாலையின் நடுவே போடப்பட்ட கழிவுநீர் ஜங்க்சன் மூடி உடைந்து 3 மாதங்களுக்கும் மேலாக புதிய மூடி போடப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் பலமுறை இந்த பள்ளத்தில் விழுந்து அடிபட்டு செல்வது தொடர்கதையாகி வந்தது. இது குறித்து நம் கீழை நியூஸ் வலை தளம் சார்பாக கடந்த வாரம் ”கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் […]

சகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – ‘ஏப்ரல் 2’ சென்னையில் நடைபெறுகிறது

சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம், தமிழர் கலாச்சார பாதுகாப்பு என்று பல்வேறு அறவழி போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது. இந்நிலையில் சகாயம் […]

சிங்க கொடியுடன் பல நாடுகளுக்கு கப்பலோட்டிய ‘கீழை மன்னர்கள்’ வாழ்ந்த வீடுகளில் குப்பை மேடுகளா..? – அதிர்ச்சியில் உறைந்த மலேசிய வரலாற்று ஆய்வாளர்கள்

கீழக்கரை நகருக்கு மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையினர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நகரின் பழமை வாய்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதன் தொன்மையை அறிந்து வியந்து குறிப்பெடுத்து வருகின்றனர். வள்ளல் சீதக்காதியின் முன்னோர் வீட்டினை பார்வையிட்ட மலேசிய இந்திய முஸ்லீம் பேரவையினர் அங்கு மக்கள் கொட்டும் குப்பைகளை பார்த்து மன வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் பெரிய தம்பி மரைக்காவின் வீடு இருக்கும் நிலையையும் கண்டு வருந்தினர். உலகத்தின் பல மூலைகளுக்கும் கடல் வழி மார்க்கமாக […]

வள்ளல் சீதக்காதி சாலையில் கேட்பாரற்று பல நாள்களாக ‘படுத்துக் கிடக்கும்’ மின் கம்பம் – நிலை நிறுத்த மின்சார வாரியம் முன் வருமா..?

கீழக்கரை நகரில் பல இடங்களில் சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றிடக் கோரி கீழக்கரை சட்டப் போராளிகள் தளம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தொடர்ந்தது மனுக்கள் வாயிலாக கடந்த 3 மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் லெப்பை தெரு மதரஸா அருகாமையில் உள்ள மின் கம்பமும் ஒன்றாகும். மனுவில் சுட்டிக் காட்டப்பட்ட பல்வேறு அபாய மின் கம்பங்களுள் ஒரு சில […]

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் வேகத் தடைகளுக்கு ஒளிரும் பெயிண்ட் – தொடர் முயற்சி எடுத்த ‘இஸ்லாமிய கல்வி சங்கம்’

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை துறையினரால் செப்பனிடும் போது தேவையான பல இடங்களில் வேகத் தடை அமைக்காமலும், கரீம் ஸ்டோர் அருகாமை, நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி சமீபம் மற்றும் முக்கு ரோடு நுழைவு பகுதிகளில் அமைத்த வேகத் தடைகள் மீது ஒளிரும் பெயிண்ட் அடிக்காமலும் விடுபட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத் தடை இருப்பது தெரியாமல் தொடர்ச்சியாக விபத்துகளில் சிக்கினர். இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் விபத்துக்களை தவிர்க்கும் முகமாக […]

கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் மூடி ரெடியா ..?

கீழக்கரை நகரராட்சி பகுதிகளில் சாக்கடை வாருகால் மூடி போடுவதற்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததார்கள் தரமற்ற பணிகளை செய்ததால் பல்வேறு இடங்களில் மூடிகள் உடைந்து போயுள்ளது. இது குறித்து சட்டப் போராளிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு இனி நகராட்சியில் எந்த ஒரு ஒப்பந்த பணியும் வழங்க கூடாது என மனு கொடுக்கப்பட்டு நகராட்சியிடம் இருந்து பதிலும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக புதிதாக ‘உலகத் தரத்துடன்..??’ கழிவு நீர் ஜங்க்சன் மூடி […]

மர்ம காய்ச்சல், டெங்கு பாதிப்பில் சிக்கி தவிக்கும் கீழக்கரை மக்கள் – உடனடி நடவடிக்கை கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு

கீழக்கரை நகராட்சி பகுதியில் அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல், மலேரியா என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் தாலியை அடமானம் வைத்து தங்கள் பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்க்கும் நிலைக்கு நடுத்தர மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் நான்கு நாள் சிகிச்சைக்கு ரூ.20000 பில் தீட்டுகின்றனர். இதுவே மதுரை என்றால் பில் தொகை ரூ.30000 […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!